Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 6 Post By chan
  • 1 Post By sumathisrini
  • 1 Post By gkarti
  • 1 Post By Dangu

Heart strengthening fruits - இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!


Discussions on "Heart strengthening fruits - இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Heart strengthening fruits - இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!

    இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!

    மனித உடலின் என்ஜின் எனக் கருதப்படுவது இதயம். இதயத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் உடல் பருமன் அதிகரித்தல், இரத்தக் கொதிப்பு, இரத்த கொழுப்பு, இரத்த சர்க்கரை என எது அதிகரித்தாலும் இதயம் பாதிக்கப்படும்.

    எனவே நாம் உட்கொள்ளும் உணவை சரியான முறையில் தேர்வு செய்து, அதை சரியான அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாகவே நாம் இன்றளவில் அதிக ரெடிமேட் உணவுகளையும், மைதா கலந்த உணவுகளையும் அதிகம் உட்கொள்கிறோம். இவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை ஆகும்.

    முடிந்த வரையிலும் இதய நலத்தை பாதுகாக்க காய்கறிகளும், பழங்களும் உட்கொள்வது நன்மை விளைவிக்கும். பொதுவாக காலை நேர உணவுகளில் கடின உணவுகளை தவிர்த்துவிட்டு பழங்களை சாப்பிடுவது இதய நலத்திற்கு நல்ல பயனளிக்கும்.

    பழங்களிலும் தேர்வு செய்யப்பட்ட, இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் பழங்களை உட்கொள்வது மிகவும் சிறந்தது. இதய நோயில் இருந்து இதயத்தை வலுவடைய உதவும் 13 பழங்களைப் பற்றி இனி தெரிந்துக் கொள்ளலாம்...

    மாதுளம் பழம் மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.

    திராட்சை திராட்சைப் பழங்களை வெந்நீரில் ஊற வைத்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு துளசி சாற்றை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறையும்.

    கிஸ்மஸ் பழம் சிறிதளவு கிஸ்மஸ் பழம் மற்றும் கொத்தமல்லியை தண்ணீரில் இரவு முழுவதும் சுட வைத்து காலையில் அரைத்து வடிகட்டி குடித்தால், மார்பு படபடப்பு மற்றும் மார்பு வலி குணமாகும்.

    ஆரஞ்சுப் பழம் ஆரஞ்சுப் பழம் தினசரி உணவுடன் சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாக இருக்கும்.

    ஆப்பிள் ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டுக்கள் இதயத் தமனிகளைப் பாதுகாக்க உதவுகிறது. மற்றும் கொழுப்பினை குறைக்கும், இலகுவடைய செய்யவும் ஆப்பிள் பயன் தருகிறது.

    வாழைப்பழம் வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உடலில் இரத்த்க்கொதிப்பை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மற்றும் இதில் இருக்கும் வைட்டமின் பி 6 மற்றும் சி, நார்ச்சத்துகள் இதயத்தைப் படபடப்பின்றி வைத்திட உதவுகிறது.

    பப்பாளி பப்பாளியில் உயர்ரக வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, கால்சியம், பொட்டாசியம், மக்நீசியும், மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. முக்கிடமாக பப்பாளியில் இருக்கும் ஃபோலேட்டின் சத்து இதயத்திற்கு நல்ல அர்ரோகியத்தை அளிக்கிறது.

    தக்காளிப் பழம் தக்காளியில் இருக்கும் வைட்டமின் சி, ஈ, பொட்டாசியம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துகள் இதயத்தை கார்டியோவாஸ்குலர் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Heart strengthening fruits - இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!-images.jpg  

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Heart strengthening fruits - இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!

    Very useful article Lakshmi, thanks for sharing.

    chan likes this.

  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Heart strengthening fruits - இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!

    Good Sharing Lakshmi

    Dangu likes this.

  4. #4
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Heart strengthening fruits - இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!

    Very useful information.

    chan likes this.

  5. #5
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Heart strengthening fruits - இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!

    தேங்க்ஸ் Chan........

    Priya


  6. #6
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter