Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4Likes
 • 1 Post By chan
 • 1 Post By chan
 • 1 Post By chan
 • 1 Post By chan

ஜெனரல் மோட்டார்ஸ் டயட்


Discussions on "ஜெனரல் மோட்டார்ஸ் டயட்" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  ஜெனரல் மோட்டார்ஸ் டயட்

  ஜெனரல் மோட்டார்ஸ் டயட்

  உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்

  உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு `டயட்' என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம். நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள், பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.

  எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது. இந்தியாவிலும் எடைகூடியவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒர ு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.

  7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது. அந்த ஆய்வின்படி

  முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும். ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

  இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.

  மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

  நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

  ஐந்தாம் நாள் சிறிதளவு (ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர் (மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

  ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.

  ஏழாவது நாள் ஒரு கப் சாதம் - காய்கறிகளுடன், பழ ஜூஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.

  இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான். எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.

  3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. 5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.

  அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது `ஜெனரல் மோட்டார்ஸ் டயட்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: ஜெனரல் மோட்டார்ஸ் டயட்

  7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய இத ஃபாலோ பண்ணுங்க...

  உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? அதற்கு ஆரோக்கியமான வழியை பின்பற்ற ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஏழே நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய மிகவும் பிரபலமான ஒரு டயட் முறையை உங்களுக்காக கொடுத்துள்ளது. கஷ்டப்பட்டு குறைத்த உடல் எடையை பராமரிக்க சில வழிகள்!!!

  மேலும் இந்த முறையை படிக்கும் போது நீங்கள் இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, நிச்சயம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தான் விளையும் என்று நினைப்பீர்கள். ஆனால் அது தான் பொய்.

  ஏனெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி ஒரு வாரம் பின்பற்றி வந்தால், நிச்சயம் 7 நாட்களுக்கு பின்னர் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதை காண்பீர்கள்.

  அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்! குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை தவறாமல் நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். இதனால் உங்களை 'குண்டுமணி' என்று கிண்டல் செய்தவர்கள், ஒரு வாரம் கழித்து கிண்டல் செய்யாத வகையில் மாற்றத்தைக் காணலாம்.


 3. #3
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: ஜெனரல் மோட்டார்ஸ் டயட்

  7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய இத ஃபாலோ பண்ணுங்க...

  டே 1: சூப் டயட் முதல் நாளில் சூப் டயட்டை பின்பற்ற வேண்டும். நாள் முழுவதும் உங்களுக்கு பிடித்த எந்த சூப்பை வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் அசைவ சூப் குடிக்கும் போது மட்டன் சூப் மட்டும் குடிக்க வேண்டும். குறிப்பாக சூப்பில் உப்பை அதிகம் சேர்க்காமல், முடிந்தால் உப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது  டே 2: முட்டைக்கோஸ் டயட் உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே இரண்டாம் நாளில் முட்டைக்கோஸை பலவாறு செய்து சாப்பிட வேண்டும். இதனால் முட்டைக்கோஸ் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
 4. #4
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: ஜெனரல் மோட்டார்ஸ் டயட்

  டே 3: கிரேப் ஃபுரூட் டயட்கிரேப் ஃபுரூட்டில் கொழுப்புக்களை கரைக்கும் நொதிகள் அதிகம் இருப்பதால், மூன்றாம் நாளில் கிரேப்ஃபுரூட் டயட்டை பின்பற்றுங்கள். இதனை அப்படியே அல்லது ஜூஸ் என்று எப்படிவேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்  Prabha RK likes this.

 5. #5
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: ஜெனரல் மோட்டார்ஸ் டயட்

  டே 4: ஜூஸ் டயட் ஆம், வெறும் பழங்களை சாப்பிட்டாலும் உடல் எடையில் மாற்றம் தெரியும். அதற்கு நான்காம் நாளில் விருப்பமான பழங்களை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு நாள் முழுவதும் சாப்பிடுங்கள்.

  டே
  5:
  காய்கறி டயட்காய்கறிகளில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. எனவே ஐந்தாம்நாளில் பசலைக்கீரை, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு என்று வெறும் காய்கறிகளை விரும்பியவாறு செய்துசாப்பிடுங்கள். குறிப்பாக அப்படி சமைத்து சாப்பிடும் போது உப்பை அதிகம் சேர்க்கவேண்டாம். மேலும் வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ தான் சாப்பிட வேண்டும்.
  Prabha RK likes this.

 6. #6
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: ஜெனரல் மோட்டார்ஸ் டயட்

  டே 6: தண்ணீர் டயட் ஆறாம் நாளில் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். எனவே ஆறாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன், சுடுநீரை குறைந்தது 6-8 லிட்டராவது குடித்து விட வேண்டும். இதனால் சுடுநீரானது கொழுப்புக்களை கரைத்துவிடும்.  டே 7: விருந்துணவு ஏழாம் நாளில் நல்ல விருந்துணவு சாப்பிட வேண்டும். முக்கியமாக அப்படி விருப்பமான உணவுகளை உட்கொள்ளும் போது, அளவுக்கு அதிகமாக வயிறு நிறைந்து வழியும் அளவு சாப்பிட வேண்டாம். மேலும் உப்பு, எண்ணெய் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டாம்.
  Prabha RK likes this.

 7. #7
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: ஜெனரல் மோட்டார்ஸ் டயட்

  குறிப்பு

  மேற்கூறியவாறு ஒரு வாரம் செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். ஆனால் எந்த ஒரு செயலை செய்யும் போது, நம்பிக்கை வைத்து மேற்கொண்டால், அந்த செயல் வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

  அதுமட்டுமட்டுமின்றி பலருக்கு இந்த டயட் ஒர்க் அவுட் ஆகாது, ஏனெனில் இதை மட்டும் எப்படி சாப்பிட்டால் எப்படி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கேட்கலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கக்கூடியவை. எனவே நம்பி மேற்கொள்ளலாம்.

  Prabha RK likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter