காய்கறிகளையும், பழங்களையும் சமைக்கும் முறைகாய்கறிகளை நறுக்கும் முன்பு நன்றாகக் கழுவவும். நறுக்கிய பிறகு காய்களை கழுவினால் முக்கிய ஊட்டச்சத்துக்கள் கரைந்து விடும். சமைப்பதற்கு சற்று முன்பே காய்கறிகளை நறுக்கவும். துண்டுகளை தண்ணீரில் 5 நிமிடத்திற்கு மேல் போட்டு வைக்கக் கூடாது.

காய்கறிகளை குளிர்ந்த தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டாம். முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் காய்கறி துண்டுகளை போடுவது நல்லது. இதற்கு உருளைக்கிழங்கு விதிவிலக்கு. சிறந்த முறை பிரஷர் குக்கரில் வேக வைப்பது.

காய்கறி, பழங்களின் தோலை ஆழமாக சீவி எடுக்காதீர்கள். ஆப்பிள், வெள்ளரிக்காய் இவற்றின் தோலின் அடியிலேயே சத்துக்கள் நிறைந்திருக்கும். இவற்றை பச்சையாக சாப்பிடவும்.

காய்கறிகளை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டாம். கூடிய மட்டும் மிகப் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

காய்கறிகளை தேவைக்கதிகமாக வேக வைக்க வேண்டாம்.
உருளைக்கிழங்கை வாங்கும் பொழுது பச்சை நிறம் மற்றும் முளைகள் இருந்தால் வாங்க வேண்டாம்.

மஞ்சள், சிவப்பு பரங்கிக்காய் பூசணிக்காய் அதிக நாள் வைத்திருந்து உபயோகிப்பது நல்லது. அதிக நாட்கள் இருந்தால் அவற்றின் மருத்துவப் பலன் அதிகரிக்கும்.

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து ரத்த கொலஸ்ட்ரால அளவை குறைக்கும். ஆப்பிளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

அதே போல் ஆரஞ்சு பழங்களும் மாங்காய் மற்றும் எலுமிச்சம் பழங்கள் ரத்த கொலஸ்ட்ராலை குறைக்கும்.

ஆரஞ்சு பழங்கள் கொலஸ்ட்ராலை குறைப்பதும் மட்டுமன்றி புற்றுநோயை தவிர்க்கும். பழங்களை சாறு பிழிவதை விட அப்படியே உண்பது நல்லது.

அரை வேக்காடு செய்யப்பட்ட முட்டைகளை அவித்த உடனே உண்பது நல்லது. முட்டைகளை பால் அல்லது தயிர் அல்லது மோருடன் சேர்த்துக் கலந்து உண்ணக் கூடாது.

கோழி, வாத்து போன்றவற்றை சமைக்காமல் பச்சையாக ஒரு போதும் உண்ணக் கூடாது.

Similar Threads: