இனிப்புகள்இனிப்புகள் உண்ணும் பொழுது சர்க்கரை அளவு இரத்தத்தில் உயர்கின்றது. அதனால் தான் உற்சாகம் பிறக்கின்றது. உடல் சத்துக்களை செல்களில் சர்க்கரையாகத் தான் சேமித்து வைக்கின்றது. அவ்வாறு சேமித்த சர்க்கரையை உடல் தேவைப்படும் பொழுது இன்சுலின் எனும் சுரப்பு மூலமாக மீண்டும் உபயோகப்படுத்திக் கொள்கின்றது. இனிப்புகளில் சர்க்கரை இருப்பதால் அவை சர்க்கரையின் உடல் பெட்டகம். சர்க்கரைக் கூறுகளில் விதவிதமான சர்க்கரைகள் உள்ளன. அவற்றில் சில நாக்கில் பட்டவுடனேயே உடலில் புகுந்து இரத்தத்தில் உயர்ந்து விடுகின்றன. இன்னும் சில வயிற்றில் சென்று ஜீரணமாகும் சமயத்தில் உடலின் சர்க்கரை அளவை உயர்த்துகின்றன.

எனக்கு இனிப்பு பிடிக்காது என்று கூறும் சிலரையும் நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கத் தானே செய்கின்றோம். அவர்களின் இரத்த சர்க்கரை அளவு தான் என்ன? இனிப்பு பிடிக்காது என்று கூறுபவர்களின் உடலுக்கு என்றுமே உடனடி சர்க்கரைக் கூறுகள் கிடைப்பதில்லை அவர்களுக்கு உடல் எப்பொழுதுமே ஜீரணமாகி பின் உடலிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சர்க்கரை கூறுகள் மட்டுமே கிடைக்கும். இவர்களுக்கு உடல் மெலிவாக இருக்கும் நீண்ட நேரம் சத்துக்கள் கிடைக்கும் (Stamina) ஆனால் சோர்வடைந்து விட்டால் மீண்டும் சர்க்கரை அளவு உயர் சத்துக்கள் கிடைக்க அதிக நேரம் எடுக்கும்.

அதிக சர்க்கரை உற்பத்தி செய்து அதிக சர்க்கரை உபயோகிக்கும் நாடான இந்தியாவில் தான் அதிக சர்க்கரை நோயாளிகள் (சுமார் 5 கோடி) உள்ளனர். எனவே தான் இந்தியா சர்க்கரை வியாதியின் தலைநகர் என கருதப்படுகின்றது.

சர்க்கரை உண்பதற்கும் சர்க்கரை வியாதி வருவதற்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தமும் இல்லை! உன் அப்பாவிற்கு சர்க்கரை வியாதி எனவே நீ சர்க்கரை சாப்பிடாதே என்றும் சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வந்து விடும் என்றும் என் அம்மாவிற்கு சர்க்கரை வியாதி எனவே நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை என்றும் நாம் அன்றாடம் கேள்விப்படுகின்றோம். தனது சிறு வயதில் சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது.

சர்க்கரை அதிகம் சாப்பிட்டாலும் குறைவாக சாப்பிட்டாலும் சர்க்கரையை உடல் கிரகித்து உபயோகிக்க இன்சுலின் இருந்தால் மட்டுமே அந்த சர்க்கரையை உபயோகிக்க இயலும். சர்க்கரை நோயுடைய அப்பா அம்மாவை உடைய குழந்தைகளுக்கு 60 சதவிகிதம் சர்க்கரை வர வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதே நேரம் சர்க்கரை வியாதி உடைய அப்பா அல்லது அம்மாவை உடைய குழந்தைகளுக்கு 40 சதவிகிதம் சர்க்கரை வியாதி வர வாய்ப்புள்ளது.

அப்பா அம்மாவிற்கு சர்க்கரை வியாதியில்லாமலும் இப்பொழுது 25, 30 வயதுகளிலேயே சர்க்கரை வியாதி வந்து விடுகின்றதே இது ஏன்? இதற்கும் அப்பா அம்மாவிற்கும் அவர்களது சர்க்கரை வியாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர்களுக்கு தவறான வாழ்க்கை முறை மட்டுமே காரணம்.

இவர்கள் வாழ்வில் நீரிழிவு நோய் வருவதற்கு சர்க்கரை ஒரு காரணம் அல்ல. சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை, அதிக உடல் எடை, தவறான உணவு முறை, அதிகமான உளைச்சல், மனத்தொய்வு, மன அழுத்தம் போன்றவையே காரணம். இந்த பிரச்சனைகளால் அவர்களது இன்சுலின் ஹார்மோன் சுரப்பு குறைந்து அவர்களது இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்து விடுகின்றது. ஆனால் அவர்களால் இரத்த சர்க்கரையை பயன்படுத்த முடியாத நிலை.

சர்க்கரையை அளவுடன் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இனிப்பு வகைகளை மிதமாக சேர்த்துக் கொள்வதும் மிக்க நல்லது. சர்க்கரை வியாதியுடையவர்கள் அல்ல மற்றவர்கள் மட்டுமே சர்க்கரையால் மன அழுத்தத்தை போக்க முடியும். உற்சாகத்தைத் தர முடியும். இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். சுவீட் எடு கொண்டாடு என்பது போல சுவீட்டை அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக்கிக் கொள்வது நல்லதே! இது நீரிழிவு நோயாளிகளுக்கு பொருந்தாது.

Similar Threads: