Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By chan
  • 1 Post By spmeyyammaisp06

பசுநெய் உண்பதில் பழுதில்லை


Discussions on "பசுநெய் உண்பதில் பழுதில்லை" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    பசுநெய் உண்பதில் பழுதில்லை

    பசுநெய் உண்பதில் பழுதில்லை




    பால் பொருட்களிலேயே (Milk Products) அதிக சுவையையும், இனிய நறுமணத்தையும் கொண்டது நெய்தான். தனியாகப் பிரித்தெடுக்கப்பட்ட வெண்ணெய் அல்லது பால் கொழுப்பு உருக்கப்படும்பொழுது நெய்யாகிறது. வெண்ணெய்யைச் சுமார் 100 நீ வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் கிடைக்கிறது.

    நெய் வெள்ளை நிறத்திலிருந்து, இளமஞ்சள் நிறம் வரை அதிலுள்ள கரோட்டின் அளவைப் பொறுத்து அமைகிறது. நெய்யில் ஏறத்தாழ 8 சதவிகித அளவு தாழ்சிலை செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் (Lower saturated fatty acids) இருப்பதனால் நெய் எளிதாக செரிமானம் ஆகிறது. இவ்வமிலங்கள் மிகச்சிறந்த உண்ணத்தக்க கொழுப்புகள் (Edible fats) மேலும் நெய்யைத் தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இவை காணப்படுவதில்லை. இது குறித்தே பண்டைய ஆயுர்வேத ஆசிரியர் பவபிரகாசர்.

    நெய் ஒரு இனிய இரசாயனம். சுவை மிக்க நெய் ஜுரணத்தைக் கூட்டிக் கண்களை ஒளிபெறச் செய்கிறது. உடலுக்கு வலிவையும் பொலிவையும் தந்து நோய் பலவற்றிலிருந்து காக்க வல்லது. நினைவாற்றலையும், வாழ்நாளையும் உயர்த்தவல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.

    நெய்யில் A. D. E. K ஆகிய விட்டமின்கள் உள்ளன.இதில் வைட்டமின் A_யும், E_யும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளாக (antioxidant) இருப்பதனால் ஆக்ஸிஜனேற்றத்தால் நேரும் தீய விளைவுகளை (oxidative injury) தடுக்க உதவுகின்றன. நெய் மற்றும் மீன் எண்ணெய்யைத் தவிர வேறு எந்த தாவர எண்ணெய்களிலும், வைட்டமின் A காணப்படுவதில்லை. வைட்டமின் A உடலில் உள்ள எபிதீலியல் திசுக்களை கட்டுக் குலையாமல் பாதுகாக்கிறது. மேலும் இது கண்ணின் கருவிழியைச் சுற்றிலும் அதிக ஈரப்பசையை அளித்து பார்வையிழப்பு நேராமல் பாதுகாக்கிறது. இன்றியமையாத கொழுப்பு அமிலமான லினோலிக் அமிலம் நெய்யில் 4 _ 5% வரை காணப்படுகிறது. இது ஒழுங்கான உடல் வளர்ச்சிக்குத் துணை புரிகிறது.

    நெய் தயாரிப்பின் போது, அதிலுள்ள கேஸீன் புரதம் (casein) கழிவுறச் செய்யப்படுகிறது. ஆனால் இந்த கேஸீனால் எவ்வித நன்மையுமில்லை. மிருகங்களில் இப்புரதத்தை உட்செலுத்தி ஆய்வு செய்த போது, அவற்றின் பொலஸ்ட்ரால் அளவு அதிகமானதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நெய்யில் வேதிப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகளை எதிர்க்கக்கூடிய ஆற்றல் இருப்பதால் இவற்றினால் நெய் கெட்டுப்போவதில்லை.

    நெய், 35 நீ வெப்பத்திலேயே அதாவது மனிதனின் உடல் வெப்ப நிலையை விட குறைவான வெப்பதிலேயே உருகிவிடக்கூடியது. மேலும் நெய், மற்ற எண்ணெய்கள், கொழுப்புகளைக் காட்டிலும் உயர்ந்த அளவு அதாவது 96% செரிமான விகிதத்தைப் பெற்றிருக்கிறது.

    ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் நெய் மிகுதியும் பயன் படுத்தப்படுகிறது. செரித்தல் (digestion) உட்கிரகித்தல் (absorption) உறுப்புகளில் மருந்தினை சேர்ப்பித்தல் (delivery) என்ற மூன்று முக்கிய பணிகளும் சரிவர அமைந்திருப்பது ஒரு மருந்துக் கலவைக்கு மிக மிக இன்றியமையாதது. நெய்க்கு இம்மூன்றையும் செயல்படுத்தக்கூடிய பண்புள்ளது. ஆயுர்வேதக் கலவைகளில் நெய்யுடன் வேறு சில செயல்திறக்க ஆக்கக் கூறுகளும் (active ingredients) சேர்க்கப்படுவதால் மேற்குறிப்பிட்ட மூன்று பணிகளுமே செம்மையாக நடைபெற உதவுகிறது.

    லிப்பிட் நிறைந்த செல்களை நோக்கி ஈர்க்கப்படக்கூடிய பண்பு நெய்க்கு (Lipophilic action) இருப்பதால், சிகிச்சை தேவைப்படும்.

    உறுப்புகளில் உள்ள செல்களை எளிதாகச் சென்றடைகின்றது. நெய்யின் இதே பண்பு மருந்துக் கலவையானது செல்லுக்கும் செல் உள்ளிருக்கும் உறுப்புக்களான மைட்டோகான்ட்ரியா (Mitochondria) மைக்ரோஸோம் (Microsome)மற்றும் நியூக்ளியர் சவ்வுகளிலும் எளிதாக சென்று சேர உதவுகிறது.

    நெய்யில் செறிவாக காணப்படும் வைட்டமின் ணி _யும், பீட்டா கரோட்டினும், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் எனப்படும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளாகச் செயல்படுகின்றன. Degenerative diseases என்று சொப்படும் முதுமை காரணமாக ஏற்படும் நோய்களில் 80 முதல் 90% நோய்கள் வினைத்திறன் கொண்ட ஆக்ஸிஜன் இனங்களில் (reactive oxygen species) இருந்து வெளிவரும் தனிம அணுக்களினால் (free radicals) தான் ஏற்படுகிறது.

    இவ்வாறு வெளிவரும் தனிம அணுக்கள் இரத்தத்திலுள்ள கொழுப்புகளிலும், செல்சவ்வுகளிலும் ஒட்டிக் கொள்வதால், உறுப்புகளில் ஆக்ஸிஜனேற்றம் ஏற்பட்டு உறுப்புகளுக்கு கேடு நேர்கின்றது, இதனால் அத்தெரோஸ் கிளிரோஸிஸ் (atherosclerosis) எனப்படும் இரத்தக் குழாய் தடிப்பு மேலும் தீவிரமடைகிறது. ஆயுர்வேத மருந்துகளில் பெரும்பான்மையானவை இந்தத்தனிம அணுக்களைப்பிரித்து வெளியேற்றுகின்ற முறையினாலேயே நோயைக் குணப்படுத்துகின்றன. நெய்யிலுள்ள இப்பண்பு, ஆயுர்வேத மருந்துகளை உட்கிரகித்தல் (absorption) கடத்துதல் (transport) மற்றும் உறுப்புகளில் மருந்தை சேர்ப்பித்தல் ஆகிய மூன்று இன்றியமையாத பணிகளிலும் உதவி மருந்துகள் செயல்பட நல்ல அடித்தளத்தை அமைக்கிறது. தினசரி ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய்யை உணவுடன் சேர்த்துக்கொண்டால் அது செரிமானத்தை விரைவுபடுத்தி உணவு உட்கிரகிப்பில் துணைபுரிகின்றது.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    spmeyyammaisp06 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    663

    Re: பசுநெய் உண்பதில் பழுதில்லை

    thank you for the infos frnd.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter