Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

உணவும் உறக்கமும் - Food & Sleep


Discussions on "உணவும் உறக்கமும் - Food & Sleep" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    உணவும் உறக்கமும் - Food & Sleep

    உணவும் உறக்கமும்

    ஆரோக்யமான உணவும் உறக்கமும் ஆரோக்யமான வாழ்க்கைக்கான தினசரி வழிமுறைகளாகக் கூறப்படுவன. ஒருவன் தூங்கும்போது இடதுபுறமாகத் தூங்குவது, இருமுறையாவது உணவு உண்பது, ஆறுமுறை சிறுநீர் கழிப்பது, இருமுறை மலம் கழிப்பது, உடல் உறவில் அதிக ஆர்வமின்றி மிதமான உடல் உறவு போன்றவற்றை கடைப்பிடித்தால், நூறு ஆண்டுகள் உயிர் வாழலாம் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. உணவு, உறக்கம், முறையான வாழ்க்கை முறை ஆகியவைதான் ஆரோக்கியமான வாழ்க்கையின் தூண்களாக கருதப் படுபவை.

    ஒருவரது உடல் நலனிலும், வியாதிகளிலும், உணவு, நடத்தை, போன்றவற்றின் பங்கு இருக்கின்றது.

    உணவு

    உண்ணும் உணவு திட ரூபத்தில் அல்லது திரவ ரூபத்தில் இருப்பின் அது தான் உணவு என்று கூறப்படுகிறது. இது உடனடி திருப்தி, பலம், ஒருவரின் உடல் திடகாத்திரம் இவற்றிற்கு காரணமாகிறது.

    நேரத்துடன் உண்ணும், பொருத்தமான, சுத்தமான உணவு, உடல் ஆரோக்கியத்தின் முக்கிய தூண்களாகிறது. இதில் அடங்கிய சத்துக்கள், முக்கிய வேலைகளான ஜீரணம் அதாவது உணவு செரிமானம், அத்துடன் செரித்த உணவின் சக்தியை உள்வாங்குவது இவற்றிற்கு காரணமாகிறது.
    உணவு என்பது புரோட்டீன் கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின் கள் அடங்கியது மட்டுமல்ல, மனது, ஆத்மா இவற்றை சீராக்குவதும் ஆகும். ஆகவே உடல் நலனில் அக்கறையுள்ள மனிதன் சத்துள்ள அறுசுவை உணவை, சரியான அளவில் உண்ண வேண்டும்.

    முழுமையான உணவு மனிதனை சம நிலையில் வைப்பது மட்டுமல்லாமல் எல்லா குறைபாடுகளையும் களைகிறது. ஆகவே சரியான உணவு, சரியான விகிதத்தில் உண்ணப்படும்போது, ஆரோக்கியமான உடல் நலன் தருவது மட்டுமல்லாமல் உடலையும், மனதையும் எந்த தொந்தரவும் இல்லாமல் பாதுகாக்கிறது.

    ஆரோக்கியமான உணவு, தவறாமல், இருமுறையாவது உண்ணும்போது, நல்ல உடல் நிலையையும், மனநிலையையும் தருகிறது. உணவுப் பழக்கத்திற்கு கடைப்பிடிக்க வேண்டிய எளிய கொளகை என்னவெனில், முழு உணவை உண்டபின் ஆறுமணி நேரத்திற்கு மேல் வயிற்றை காலியாக விடக் கூடாது. மறுமுறை சாப்பிட வேண்டியிருப்பின் குறைந்தது 3 மணி நேரம் கழித்து உண்ண வேண்டும். அதாவது நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கும் பட்சத்தில் ஒரு உணவிற்கும், மறு முறை உண்ணுவதற்கும் இடையே நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இடைவெளி அவசியம்)

    ஒரு நாளில் இருமுறைக்கும் குறைவாக உண்ணகூடாது.

    உணவு எப்படி இருக்க வேண்டுமெனில்
    1) பிடித்தமானதாக,
    2) சுத்தம்
    3) முழுமையான உணவு (சத்துக்கள் நிறைந்தது)
    4) புதியதாக சமைக்கப்பட்டது
    5) மிதமான சூடு
    6) சிறிதளவு எண்ணெய் சேர்க்கப்பட்டதாக அமைய வேண்டும்.


    குளிர்ந்த உணவு, பழையது, காய்ந்தது, தவிர்க்கப்பட வேண்டும்.

    மிகவும் குளிர்ந்த, மிகவும் சூடான, மசாலாக்கள் மிகுந்தது, கசப்பானது, உப்பு அதிகமுள்ளது போன்றவற்றை தவிர்ப்பது நலம். உணவு உண்ணும்போது அன்பானவர்கள், நெருங்கியவர்களுடன் சேர்ந்து உண்ணுவது சிறந்தது. உணவை மிகவும் வேகமாகவோ, மிகுந்த நேரம் எடுத்துக் கொண்டோ உண்ணக் கூடாது.

    உணவின் அளவைப் பொறுத்து ஒருவர் வயிறு முட்டவோ அல்லது வயிறு காலியாக இருக்கும்படியோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுமாராக வயிற்றில் அரை பங்கு மட்டுமே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் மீதி அரை பங்கில் சம அளவு நீரும் காற்றும் இருக்க வசதியாக இருக்க வேண்டும்.

    உணவிற்கு இடையே சிறுக நீர் பருகலாம். உண்ணும்போது நிறைய நீர் பருகுவதால் சத்துக்களை நீர்த்துவிட செய்வதோடு ஜீரணத்தையும் பாதிக்கும். உணவு உண்டு 1 மணி நேரம் கழித்து நிறைய நீர் பருகலாம். உணவை மிக நிதானமாகவோ, மிக வேகமாகவோ சாப்பிடக் கூடாது. உணவை விழுங்குவதற்கு முன் நன்றாகமென்று, உமிழ்நீர் கலக்கும் விதத்தில் நன்கு மென்று உண்ண வேண்டும்.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails உணவும் உறக்கமும் - Food & Sleep-arogkiyama-unavu212.gif  
    kkmathy likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter