Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 3 Post By soniyaraja
  • 1 Post By jv_66

Health benefits of Ground nut


Discussions on "Health benefits of Ground nut" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    soniyaraja is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    Rajapalayam
    Posts
    38

    Health benefits of Ground nut

    வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..!
    பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :

    நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.
    நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    நீரழிவு நோயைத் தடுக்கும் :
    நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
    பித்தப்பைக் கல்லைக் கரைக்கும் :
    நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
    இதயம் காக்கும் :
    நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகத் திகழ்கிறது.
    இளமையைப் பராமரிக்கும் :
    இது இளமையைப் பராமரிக்கப் பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையால் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
    ஞாபக சக்தி அதிகரிக்கும் :
    நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
    மன அழுத்தம் போக்கும் :
    நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.
    கொழுப்பைக் குறைக்கும் :
    ஆம், உண்மைதான். நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
    கருப்பைக் கோளாறுக்கு முற்றுப்புள்ளி :
    பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்குப் பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. இதன் காரணமாகப் பெண்களுக்குக் கருப்பைக்கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, jv_66 and sumitra like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Ground nut

    Hi Soniya, you have brought out a detailed message on வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..! thank you!


  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Ground nut

    Thanks for sharing.

    Jayanthy





  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health benefits of Ground nut

    உலகின் சத்து மிகுந்த
    உணவுப்பொருள் பட்டியலில்
    முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை. இது
    நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்னைகள்,
    கேன்சர் மற்றும் உடல் பருமனையும்
    கட்டுப்படுத்தும். நிலக்கடலையில் போலிக் ஆசிட்
    அதிகம் உள்ளது.

    நிலக்கடலையை

    தொடர்ந்து சாப்பிடும்
    பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக
    செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள்,
    நீர்க்கட்டிகள், குழந்தை பேறு இன்மை பிரச்னை
    இருக்காது.

    இதில் உள்ள மாங்கனீஸ், ரத்தத்தில்

    உள்ள மாவுச்சத்து மற்றும்
    கொழுப்பு மாற்றத்தில் முக்கிய
    பங்கு வகிக்கிறது. இது நீரழிவு
    நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை
    கட்டுப்படுத்துகிறது. எனவே நீரழிவு
    நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு
    நிலக்கடலை உண்பது நல்லது.

    நம் உணவில்

    இருக்கும் கால்சியம் உடலுக்கு கிடைக்க
    உதவுகிறது. குறிப்பாக பெண்கள்,
    முதியவர்கள் நிலக்கடலை சாப்பிட்டு
    வந்தால் ஆஸ்டியோ போரோசிஸ் என்னும்
    எலும்புத்துளை நோய் வராமல்
    பாதுகாக்கலாம்.


    தினமும் 30 கிராம் நிலக்கடலை சாப்பிட்டு

    வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க
    முடியும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
    நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால்
    என்ற சத்து நிறைந்துள்ளது.

    இது இதய

    வால்வுகளை பாதுகாக்கிறது. இதயநோயை
    தடுக்கிறது. இது மிகச்சிறந்த ஆண்டி
    ஆக்சிடெண்டாகவும் உள்ளது. ஸ்ட்ரோக்
    அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.
    நிலக்கடலையில் உள்ள
    தாமிரம் மற்றும் துத்தநாக சத்து உடலில்
    உள்ள தீமை செய்யும் கொழுப்பை
    குறைத்து நன்மை செய்யும்
    கொழுப்பை அதிகமாக்குகிறது.


    நிலக்கடலையில் உள்ள பாலிபனீல்ஸ் என்ற

    ஆன்டிஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை
    அதிகரித்து, இளமையை பராமரிக்க
    உதவுகிறது. இதில் உள்ள நியாசின் மூளை
    வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், ரத்த
    ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.பபிப்டோபான்
    என்ற அமினோஅமிலம் செரட்டோனின்
    என்ற மூளையை உற்சாகப்படுத்தும்
    வேதிப்பொருள் உற்பத்திக்கு
    பயன்படுகிறது. செரட்டோனின் மன
    அழுத்ததை போக்குகிறது.


    நாம் மிகவும் சத்தானவை என கருதும்

    பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பை விட
    வேர்கடலை அதிக சத்து மிக்கது ஆகும்.
    பெண்களுக்கு தேவையான போலிக்
    அமிலம், பாஸ்பரஸ், கால்சியம்,
    பொட்டா சியம், துத்தநாகம்,
    இரும்புச்சத்து, வைட்டமின்கள் இ 1, இ 12,
    நியாசின், புரதம், நார்ச்சத்து உள்ளிட்டவை
    இதில் ஏராளம் உள்ளன. பாலூட்டும்
    பெண்களுக்கு சிறந்த உணவாகும்.

    By
    Ilaiyor Kalam





    sumathisrini likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter