மூட்டையும் கொஞ்சம் கவனிங்க!


சமீபகாலமாக மூட்டு வலிகளால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வைரஸ் கிருமியை விட அதிகமாக உயர்ந்து வருகிறது. மூட்டு வலிகள் பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஏற்படுகிறது. சரியான ஊட்டச் சத்தில்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி, உடல் எடையை சரியான அளவில் வைக்காமல் இருப்பது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவை மூட்டு வலிக்கு முக்கிய காரணமாகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலில் எந்த ஒரு வலியும் இல்லாமல், அனைத்து வேலைகளையும் பயப்படாமல், சுறுசுறுப்போடு செய்யலாம்.உடலில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் குறைவாக இருந்தால், மூட்டு வலிகள் ஏற்படும். ஆகவே அவற்றை சரிசெய்ய அதிக அளவில் காய்கறிகளான கீரை, ப்ராக்கோலி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை சாப்பிட வேண்டும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான பாஸ்தா, பிரட், ஜங்க் ஃபுட் போன்றவற்றை தவிர்த்தால், மூட்டு வலிகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேகா 3 உள்ளது. அதிலும் சாலமன் மீனில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. இதனை அடிக்கடி உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலிகள் குறைந்து சரியாகிவிடும்.


ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரிகள் மருத்துவ குணம் நிறைந்த பழங்கள். இவை மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கு சிறந்தது என்று அமெரிக்கன் கல்லூரியில் உள்ள நியூட்ரிசன் டிபார்ட்மெண்ட் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. பாதாம், வால்நட் மற்றும் பூசணிக்காய் விதை போன்றவற்றை சாப்பிட்டால் நல்லது.

பால் பொருட்களான வெண்ணெய், பால், சீஸ் போன்றவைகளை அதிகம் உடலில் சேர்க்க வேண்டும். அதிலும் ஸ்கிம்ட் மில்க்கை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்காமலும், உடலில் நீரிழிவு ஏற்படாமலும் தடுக்கலாம்.