இறைவன், எந்நோயையும்
அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
ஆனால், நாம் தான் கண்ணுக்கு
மிக அருகில் இருக்கும் எளிய
வழிமுறைகளை கண்டுக் கொள்வதில், அக்கறை காட்டுவதில்லை.
இறைத்துாதர் (ஸல்)

நம் நாயகியர் நினைத்தால் முடியாதது என்று ஒன்று இருக்க முடியுமா?
எதுவுமே முடியும்! தேர்வு நடந்து கொண்டிருக்கிறது; விடுமுறை வரப் போகிறது. அவதி அவதியாக சோற்றை அள்ளித் திணித்து, பிள்ளைகளை தயார்படுத்தி, நாமும் ஓட வேண்டியதில்லை.
பொறுமையாக எவ்வளவோ வேலைகளை செய்ய திட்டமிடலாம். அதில் மிக முக்கியம், இந்த காலத்தின் கட்டாயம், வீட்டில் முடிந்த வரை செடி, கொடிகளை வைத்து பராமரிக்க ஆரம்பிப்பது.
'எவ்வளவோ வேலைகள் காத்துக் கிடக்கும்போது, இது என்ன புது கதையாய் இருக்கு?' என்று யோசித்து தாண்டி போய் விடாதீர்கள்; மீண்டும் முதல் வரிகளை படித்துக் கொள்ளுங்கள்.
உணவில் கவனம் தேவை ஆண்டு முழுவதும் நாம் இப்படி இயந்திரத்தனமாக ஓடியபடி தான் இருக்கப் போகிறோம். இதை யார் என்ன சொன்னாலும் நிறுத்த முடியாது. ஆனால், இப்படி ஓடிக் கொண்டேயிருக்க நம் உடல், மன வண்டி சரியாக இருக்க வேண்டும் இல்லையா?
அதற்காக மாய ஜாலம் எல்லாம் பண்ண சொல்லவில்லை; நம்மால் முடிந்த ஒரு சில வழிகளை அப்படியே போகிற போக்கில் செய்தபடியே ஓடுங்கள் என்று தான் சொல்கிறேன். நாயகியர் ஓர் இல்லத்தில் ஆரோக்கியமாக, துடிதுடிப்புடன், இன்ஜின் மாதிரி இருந்தால் தான், அந்த வீட்டிலுள்ள மற்ற பெட்டிகளை இழுத்துச் செல்ல முடியும்.நாம் உண்ணும் உணவில் கவனம் வைத்தாலே, பாதிக்கு மேல் பிரச்னை ஓடிவிடும். இப்படி சொன்னதும், ஊட்டச்சத்து பானங்கள், சத்துமாவு, வைட்டமின் மாத்திரைகள் என்று 'பளிச்'சென்று கண்ணில் ஓடி மறையுமே! ஆனால்,
மிக சாதாரணமாக, எளிமையாக நம்மைச் சுற்றியிருக்கின்ற சில விஷயங்கள் நம்
கண்களில் படுவதில்லை.அவற்றில் ஒன்று, உணவு பழக்கம். முன்பெல்லாம், எல்லார் வீட்டிலும் கண்டிப்பாக இரண்டு மரங்கள் இருக்கும்; ஒன்று முருங்கை, மற்றொன்று பப்பாளி...
உண்மை தானே?முருங்கைக் கீரைக்கு ஈடு வேறில்லை
நாயகியர்களின் சோர்வுக்கு காரணமான ஹார்மோன் குறைபாட்டை சரி செய்ய, இந்த முருங்கைக் கீரைக்கு ஈடு வேறில்லை.வாரம் ஒருமுறை இந்த கீரையும், தினமும் பப்பாளி பழமும் சாப்பிட்டு வந்தாலே, ஆயிரக்கணக்கில் டாக்டருக்கு பணம் செலவழிக்கத் தேவையில்லை. முருங்கையின் தாயகம் இந்தியா தான் என்றாலும், நம்மை விட, ஆப்ரிக்க நாடுகளில் தான், அதிகமாக உணவாய், மருந்தாய் அவர்கள்
பயன்படுத்துகின்றனர்.பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகள் மட்டுமல்லாமல், மூலம், குழந்தையின்மை, படபடப்பு, மயக்கம் போன்ற, 300 வகை நோய்களை, இந்த கீரை குணப்படுத்துகிறது. இந்த நோய்கள் எல்லாம் வந்த பின், டாக்டரிடம் போவதை விட, இந்த நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்துவது தான், இந்தக் கீரையின் முதல் பணி.
கீரை வகைகளை கடைகளில்
வாங்குவதை விட, வீட்டிலேயே வளர்த்தால் நல்லது. இந்த முருங்கை மரம் வளர்ப்பது, மிகவும் எளிது. இதன் விதையை, ஒரு மண் ஜாடியில் நட்டு, தினமும் தண்ணீர் விட்டு வந்தாலே, தினமும் கீரை கிடைக்கும்.
உடனடியாக பலன் வேண்டும் எனில், ஒரு சின்ன கிளையை ஊன்றினாலே,
உடனடியாக துளிர் விட ஆரம்பித்து விடும். அதனால் தான் நாம் இதை மதிப்பதே இல்லை!
இதேபோல் தான் பப்பாளி பழமும்; மரத்தை வளர்த்து பராமரிப்பது எளிது. பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம். யார் வீட்டிற்காகவது நாம் பழம் வாங்கிக் கொண்டு போவதென்றால், ஸ்டைலாக ஆரஞ்சு, ஆப்பிள் என்று தான் வாங்கிப் போவோம். ஆனால், ஆப்பிள் பழத்தை விட சிறந்த, ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்த பழம், பப்பாளி தான். ஆப்பிள் கிலோ, 150 ரூபாய் என்றால், பப்பாளி, 40 ரூபாய் தான். நாம் இதை மதிக்காததற்கு,
இதுவும் ஒரு காரணம்.கலோரி பயம் வேண்டாம்தினமும் பப்பாளி சாப்பிட்டால், கலோரி பயம் தேவையில்லை. பழங்களில் மிக மிக குறைவான கலோரி கொண்டது, இது தான்.
தென் அமெரிக்காவில்,
பப்பாளி மரத்தின் பெயர் ஆரோக்கிய மரம்; பப்பாளி பழத்தின் பெயர், ஆரோக்கிய பழம்.
நம்மால் முடிந்த வரை, நோய்கள் வருவதற்கு முன்பே அதை தடுக்க முயலும் வழிகளை, அதுவும் இயற்கையான முறையில் நாமே ஏற்படுத்திக் கொள்வது, நமக்கு நல்லது.

Similar Threads: