உள்ளே...வெளியே.. பால்
தினமும் பால் குடிப்பதால்...

கால்சியம் சத்து நிறைந்த பால், எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவும்.

பாலில் உள்ள புரதச் சத்து, தசைகளின் கட்டுமானத்துக்கு உதவும்.

பொலிவான சருமம் கிடைக்க, பாலில் உள்ள லாக்டிக் அமிலம் உதவும்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிக அளவில் இருப்பதால், முழுமையான
ஆரோக்கியத்தைஅளிக்கும்.

பாலை சருமத்தில் தடவிவந்தால்...

சருமத்தின் பொலிவை மேம்படுத்தும்.

இயற்கையான மாய்ஸ்ச்சரைசராக செயல்படும்.

வெடிப்புகள் மற்றும் குழிவுகளைப் போக்கும்.

கருவளையம் மறையும்.

முடியின் வறட்சி நீங்கும்.

பால் டிப்ஸ்... பளிச் டிப்ஸ்...

தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சைச் சாறுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசலாம். இந்த பேக், சருமத்துக்கு மென்மையான பிளீச்சிங்காக செயல்பட்டு, பொலிவைக் கூட்டும்.

பஞ்சை பாலில் நனைத்து முகத்தில் துடைத்த பின் ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால், முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றிவிடலாம். தினமும் இதைச் செய்தால் முகம் பளிச்சென இருக்கும்Similar Threads: