Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

நலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்


Discussions on "நலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்

    ஹெல்தி நட்ஸ் லட்டு

    தேவையானவை: சம்பா கோதுமை மாவு ஒரு கப், நெய் 6 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை முக்கால் கப், ஏலக்காய்த்தூள் சிட்டிகை.துண்டுகளாக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா இரண்டரை கப்.


    செய்முறை:
    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் சம்பா கோதுமை மாவைக் கொட்டி, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நெய்யை லேசாக உருக்கி சேர்த்து, பாதாம், பிஸ்தா, முந்திரி துண்டுகளை நெய்யில் வறுத்து சேர்த்து கலந்து இறக்கி, சூடாக இருக்கும்போதே லட்டுகளாகப் பிடிக்கவும்.

    பலன்கள்: அனைத்துச் சத்துக்களும் இதில் இருப்பதால், உடல் உறுதியாக இருக்கும். சர்க்கரைக்குப் பதிலாக மாவில் வெல்லம் சேர்த்துச் செய்யலாம். வளரும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.


    Sponsored Links

  2. #12
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்

    நட்ஸ் கார போளி

    தேவையானவை: மேல்மாவுக்கு கோதுமை மாவு, மைதாமாவு தலா ஒரு கப், எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

    பூரணத்துக்கு: பாதாம் 15, முந்திரி 4, தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலை அரை கப், துருவிய தேங்காய் 6 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, பொடியாக நறுக்கிய மல்லித்தழை 6 டீஸ்பூன், பெருங்காயம் சிட்டிகை, உப்பு தேவையான அளவுக்கு, எண்ணெய்நெய் கலவை 4 டீஸ்பூன்.
    செய்முறை: மேல் மாவுக்குக் கொடுத்துள்ளவற்றை, சப்பாத்தி மாவை விட சற்றுத் தளர்த்தியாக, போளி பதத்துக்கு தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். பாதாமின் தோலை சுரண்டிவிட்டு, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். தேங்காய் துருவல், மல்லித்தழை, பெருங்காயம், உப்பு, பச்சை மிளகாயை தண்ணீர் விடாமல் லேசாக ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பூரணம் ரெடி!

    பிசைந்த மாவை எடுத்து வாழை இலையில் உருண்டையாகப் போட்டு உள்ளங்கையால் தட்டி, இரண்டு ஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி உருண்டையாக்கி, மறுபடியும் போளியாகத் தட்டவும். காயும் தோசைக்கல்லில் போட்டு ஓரங்களில் நெய் எண்ணெய் கலவையை விட்டு, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

    பலன்கள்: குழந்தைகளுக்கு மதிய லஞ்ச் பாக்ஸிலும் கொடுக்கலாம். உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். வயிறும் நிறைவாக இருக்கும்.


  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: நலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்

    நட்ஸ் சீடை

    தேவையானவை: பச்சரிசி ஒரு கிலோ, பொட்டுக்கடலை, உளுந்து தலா 2 கைப்பிடி, வெல்லம் 2 கப், மெல்லிய கீற்றுகளாக நறுக்கிய தேங்காய் 4 டேபிள்ஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய பாதாம் 6 டேபிள்ஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய பிஸ்தா, முந்திரி தலா 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.


    செய்முறை
    :
    பச்சரிசியைக் கழுவிக் களைந்து நிழலில் உலரவிடவும். பாதியாக உலர்ந்ததும் பொட்டுக்கடலை, உளுந்து சேர்த்து மாவு மெஷினில் கொடுத்து அரைக்கவும். இதனை வெறும் கடாயில் லேசாக வறுத்து, ஆறியதும் சல்லடையால் சலித்து, காற்றுப் புகாத டப்பாவில் வைத்துவிடலாம். இதுதான் சீடை மாவு. ஒரு மாதம் வரை கெடாது. தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். வெல்லத்தை சீவி, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கல், மண் போக வடிகட்டிக் கொதிக்கவிடவும். தேங்காய் கீற்று, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தாவைப் போட்டு ஒரு கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கவும். இதில் செய்துவைத்த மாவினைக் கொட்டி, சீடைகளாக உருட்டவும். காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    இதே மாவில் வெல்லத்துக்குப் பதிலாக தேங்காய், நட்ஸ், மிளகு, சீரகம் சேர்த்து நைஸாக உடைத்து சேர்த்து, உப்பு, தண்ணீர் விட்டுப் பிசைந்து சீடைகளாக உருட்டிப் பொரித்தெடுத்தால், நட்ஸ் காரச் சீடை ரெடி!

    பலன்கள்: புரதச்சத்து, நார்ச்சத்தும் நிறைந்து இருப்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது. அதிகம் எண்ணெய் உறிஞ்சாது. சுவையும் அருமையாக இருக்கும்.




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter