உடலுக்கு குளுமை தரும் சப்ஜா விதைகுளிர் பானங்களுக்கு பயன்படுத்தப்படும் “கருப்பு கசகசா” வைப் பொருத்த வரையில் அது “கசகசா” இனத்தைச் சேர்ந்த ஒன்றல்ல அதன் பெயர் “சப்ஜா” (basil seeds) என்பதாகும். துளசி செடி வகைகளில் இனிப்புத் துளசி என்ற வகையைச் சேர்ந்த தாவரத்தினால் இந்த சப்ஜா என்ற பதார்த்தம் தயாரிக்கப்படுகின்றது.

இந்த சப்ஜா வைப் பொருத்த வரையில் இதுவொரு சுவை சேர்க்கும் பதார்த்தமாகும். பெரும்பாலும் இதற்கு பாலுடா விதை (faluda seeds) என்ற பெயரையே பயன்படுத்துவார்கள். இலங்கையில் சில இடங்களிலும் தமிழகத்தில் சில பகுதிகளிலும் மாத்திரம் இதற்கு கருப்பு கசகசா என்ற பெயர் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இதன் உண்மையான பெயர் “சப்ஜா” என்பதாகும். இந்த “சப்ஜா” என்ற பதார்த்தம் உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும். அதே போல் இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் இது நிவாரணி என்று சொல்லப்படுகின்றது. அத்துடன் வாந்தி ஏற்படும் தன்மையை இது இல்லாமலாக்கவும் செய்யும்.

அதனால் இந்த கருப்பு கசகசா (சப்ஜாவை) வை பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. தற்கால வெப்ப நிலை மாற்றம், அம்மை நோய் வர சாதகமாக அமையலாம்.

அதை தவிர்க்க... நாட்டு மருந்து கடையில் கிடைக்கக்கூடிய பாதாம் பிசின், சப்ஜா விதை இவைகளை வாங்கி தேவையான அளவில் தண்ணீர் எடுத்து அதில் பாதாம் பிசின், சப்ஜா விதை இரண்டும் சம அளவில் எடுத்து போட்டு ஓர் இரவு ஊறவைத்து காலையில் அது ஜெல் போல இருக்கும் அதில் சிறிது நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

சிறுவர்களுக்கு மூன்று ஸ்பூன், பெரியவர்கள் ஒரு டம்ளர் சாப்பிடவும். இரண்டாம் நிலை நீரிழிவு நோயளிகளின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த சப்ஜா விதை மிகவும் பலனை அளிக்கிறது.

வயிற்று தொந்தரவுகளை கட்டுப்படுத்துகிறது இந்த சப்ஜா விதை. சமீபத்திய ஆய்வுகள் படி, சுவாச நோய் சிகிச்சை, ஆஸ்துமா, இருமல் போன்றவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கும். மூச்சுக்குழாய் அழற்சிக்கு தீர்வு தருகிறது. ஊறவைத்து சப்ஜா விதையுடன் இஞ்சி சாறு, தேன், 1 கப் தண்ணீர் சேர்த்து அருந்தி வரலாம்.Similar Threads: