Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 4 Post By chan
  • 2 Post By gkarti
  • 2 Post By RathideviDeva
  • 1 Post By gkarti

பனைநுங்கு


Discussions on "பனைநுங்கு" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    பனைநுங்கு

    பனைநுங்கு


    இவ்வளவு பயன் இருக்கின்றதா பனை நுங்கில்...
    அப்பப்பா... பொக்கிஷம்...பொக்கிஷம்...

    இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும்.
    கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

    குளுமை தரும் நுங்கு...
    கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

    துவர்ப்பு சுவை...
    பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள்.

    இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும்.
    முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

    அம்மைநோய்...
    அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.

    பதநீரும் நுங்கும்...
    பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.

    வேர்குரு போக்கும் நுங்கு கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும்.
    தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.

    பெண் பனையின் பாளையிலிருந்து இளம் பனங்காய்கள் உண்டாகும், இவை கொத்தாக குலைகளில் தோன்றும். இக்காய்கள் சில குறித்த மாதங்களிலேயே தோன்றும். இக் காய்கள் பொதுவாக மூன்று கண் கள் என்று அழைக்கப்படும் குழிகளைக் கொண்டிருக்கும். ஒரு சில காய்கள் இரண்டு கண்கள் கொண் டிருக்கும். பனங்காய்களை வெட்டி நுங்கை தனியாக எடுக்கலாம் அல்லது நுங்கை உறிஞ்சிக் குடிக்கலாம்.

    நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண்டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன. மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டீ காம்ப்ளக்ஸில் உள்ள தையாமின், ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

    பனையின் இளங்காயிலுள்ள நுங்கின் நீரானது வியர்வைக்குருவை (வேர்க்குரு) நீக்கும். பசியைத் தரும். தோலுடன் இருக்கும் நுங்கு சீதக்கழிச்சலைப் போக்கும். நுங்கு சாப்பிட்டால் சிறுநீர் நன்கு பிரியும். மேலும் இது உடலுக்கு பலத்தை கொடுக்கும்.

    * நுங்கின் மேல் தோல் துவர்ப்பாக இருக்கும். அதனை நீக்கி விட்டு பலர் சாப்பிடுவர். அந்த மேல் தோல் துவர்ப்போடு சாப்பிட்டால் நுங்கு வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.

    * அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.

    * கோடையில் ஏற்படும் வேர்க்குரு நீங்க நுங்கை தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து வேர்க்குரு பட்டுப் போகும்.

    * நுங்கை பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நுங்கை சர்பத்தில் இட்டு சிலர் சாப்பிடுவர். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு சுவையான பானமாகவும் கருதப்படுகிறது.

    * தாய்லாந்தில் பனை மரங்கள் அதிகம். அங்குள்ளவர்கள் நுங்கை எடுத்து பாட்டில்களில் பதப்படுத்தி உலகம் எங்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
    நாமும் நுங்கின் பயனை உணர்ந்து கோடை காலத்தில் உண்டு நம் உஷ்ணத்தை குறைப்போம்.

    மேலும்
    மருத்துவப் பயன்கள்- பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

    பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

    நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

    பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

    பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

    பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

    பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

    கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.

    அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

    பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

    எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

    வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள்.

    இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்.

    சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.
    தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

    பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

    கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

    இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

    இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

    மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 4th May 2015 at 07:35 PM.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: பனைநுங்கு

    THanks for the Info Lakshmi.. But Ippolam Ithoda Price Romba Jasthi.. :(

    chan and RathideviDeva like this.

  3. #3
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: பனைநுங்கு

    அருமையான பகிர்வு, லக்ஷ்மி சிஸ். நான் நுங்கு சாப்பிட்டே ரொம்ப நாளாச்சு. இந்த முறை கோடை விடுமுறைக்கு எங்க ஊருக்கு போகும்போது மறக்காம சாப்பிட வேண்டிய லிஸ்ட்ல சேர்த்துட்டேன். அதுவும் தோலோடு சாப்பிட முயற்சிக்கிறேன்.

    Quote Originally Posted by gkarti View Post
    THanks for the Info Lakshmi.. But Ippolam Ithoda Price Romba Jasthi.. :(
    Enna pandradhu Kaarthi , makkal ellaam velinattu juicekku ponappuram, panai maram eri nongu parikiravanga kuranjittaanga. Labor charge koodi pochu. Innonnu.... kaasu kooda irundha thaane namakku adhan iruppe theriyudhu. Maththadhukku thalavusaa selavu seira nammaala idhu pola porulukku romba yosikkirom(ennaiyum serththuthaan)

    chan and gkarti like this.

  4. #4
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: பனைநுங்கு

    True that Sissy

    RathideviDeva likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter