ஓ... ஒமேகா 3!


பொதுவான பலவீனம் முதல் மூளையை சுறுசுறுப்பாக்குவது வரை ‘ஒமேகா 3’ என்கிற கொழுப்பு அமிலம் உதவுவதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அதென்ன ஒமேகா 3? அதை எப்படிப் பெறுவது? விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷீலா சுவர்ணகுமாரி.

``ஒமேகா 3 (N3 fatty acid எனவும் அழைக்கப்படுகிறது) என்னும் கொழுப்பு அமிலம் நம் உடலில் உற்பத்தியாகாது. இதனை (Essential fatty acid) என்கிறோம். உணவின் மூலம் கிடைக்கும் இந்த கொழுப்பு அமிலம் உடல்நலத்துக்கு இன்றியமையாதது. இது நமக்கு அளிக்கும் ஆரோக்கிய பலன்கள் அதிகம். அன்றாட உணவில் சேர்க்க வேண்டியதும் அவசியம்.

ஒமேகா 3ன் முக்கிய பலன்களில் ஒன்று இதய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு. இதயத்துக்கு ஒமேகா 3 மிகவும் அவசியம் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பல ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறுஆய்வுகளுக்குப் பின் தெரிவித்துள்ளது.இதய நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைப்பதில் ஒமேகா 3 முக்கிய பங்கு வகிக்கிறது.

ரத்தம் உறைவதை தடுக்கிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவது குறைகிறது.அதனால், இதய நோயாளிகள் தேவையான அளவுஒமேகா 3 கொழுப்பை உட்கொள்ள வேண்டும் என அந்த அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

ஒமேகா 3, நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு ஒமேகா 3நல்ல பலன் அளிக்கிறது. புற்றுநோய்வராமல் தடுப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. ADHD (Attention Deficit Hyperactivity Disorder) பாதிப்புள்ள குழந்தைகளின் கவனச்சிதறலை குறைத்து, அவர்களை ஒருமுகப்படுத்துகிறது. அவர்களின் உள் வாங்கும் திறனை அதிகரிக்கிறது.

ஒமேகா 3 பார்வைக்கும் நல்லது. மூளையின் ஆரோக்கியத்துக்கும் இது அவசியம் எனஇப்போது வலியுறுத்தப்படுகிறது. நினைவாற்றல் செல்களை அதிகரித்து மூளையைசுறுசுறுப்பாக்கவும் இது உதவுகிறது.தேவையான அளவு ஒமேகா 3 எடுத்துக்கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட புத்திக்கூர்மையுடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

3 வயது முதல் 5 வயது வரை உள்ளகுழந்தைகளுக்கு உணவு மற்றும் மாத்திரைகள் மூலம் ஒமேகா 3 கொழுப்பு கொடுத்து ஆராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. அதில் அவர்களின் கற்றல் திறன், அறிவுத்திறன் நல்ல முறையில் அதிகரித்திருப்பதோடு, அவர்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுவதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கர்ப்பிணிகள் தேவையான அளவு ஒமேகா 3 எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் பிறக்கும் குழந்தைகள் கவனக்குறைபாட்டுப் பிரச்னைக்கு ஆளாகலாம்.
ஒமேகா 3ல் ALA (A Linolenic Acid), EPA (Eicosa Pentaenoic Acid), DHA (Aocosa Hexaenoic Acid) என்ற 3 வகைகள் உள்ளன. கடல் உணவுகளில் EPA, DHA வகைகள் இருக்கின்றன. சைவத்தில் ALA மட்டும் இருக்கிறது.

மீன்களில் கெளுத்தி, கானாங்கெளுத்தி, மத்தி, நெத்திலி, சால்மன் போன்றவற்றில் ஒமேகா 3 இருக்கிறது. வாரம் 3 முதல் 4 முறை 75 கிராம் அளவுக்கு மீன் சாப்பிடும் போது தேவையான அளவு ஒமேகா 3 கிடைக்கும். சைவத்தில் சோயா பீன் ஆயில், கேனோலா ஆயில், வால்நட், ஃபிளாக்ஸ் விதைகள் போன்றவற்றில் அதிகம் இருக்கிறது.

சோயாபீன்ஸ், ராஜ்மா, சோயா டோஃபு போன்றவற்றிலும் ஓரளவு உண்டு. தினமும்4 முதல் 5 டீஸ்பூன் அளவு சோயா பீன் ஆயில் அல்லது கேனோலா ஆயில் பயன்
படுத்துவது, 5 அல்லது 6 வால்நட் அல்லது 2 டீஸ்பூன் ஃபிளாக்ஸ் விதைகள் சாப்பிடுவது நல்லது. எண்ணெயை சூடு செய்வதால் ALA
அழிவதில்லை. உடலினுள் ALAவின் ஒரு பகுதி EPA, DHA ஆக மாற்றம் பெறுகிறது.

மருந்து மாத்திரைகள் மூலமாகவும் ஒமேகா 3 பெற முடியும். மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய்மாத்திரைகளில் ஒமேகா 3 இருக்கிறது. இதை தேவைப்பட்டவர்கள் உட்கொள்ளலாம்.

இருந்தாலும் உணவின் மூலம் பெறும் போது அதனுடன் சேர்த்து அந்த உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளும் நமக்குக் கிடைக்கும்...’’ தேவையான அளவு ஒமேகா 3 எடுத்துக் கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகள், மற்றகுழந்தைகளை விட புத்திக்கூர்மையுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


Similar Threads: