பாலைக் குடிக்காமல் பாலில் உள்ள கால்சியம் பெற வேண்டும் என்றால் இதைப் படியுங்கள்...

சிலருக்கு பால் என்றால் சுத்தமாக பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் பால் மட்டுமல்ல பால் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களும் பிடிக்காது. ஆனால், கால்சியம் சத்து என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று. எனவே, அவர்கள் தங்கள் உடலின் கால்சியத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
அப்படிப்பட்ட சில உணவுப் பொருட்களைப் பற்றி இப்போது பார்ப்போம் வாருங்கள்....

பாதாம் பருப்பு
உடல் பலம் பெற வேண்டும் என்றால் பாதாம் பருப்பு சாப்பிட வேண்டியது மிக அவசியம். ஏனெனில், 100 கிராம் பாதாம் பருப்பில் 264 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. பால் குடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பாதாம் பருப்பை சாப்பிடுங்கள்.

எள்
நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பொருள் தான் எள். 100 கிராம் எள்ளில் 975 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் எள்ளில் சுமார் 50 மில்லிகிராம் கால்சியம் இருக்கிறது. அதுமட்டுமல்லாது இதில் தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்துக்களும் அதிகம் உள்ளன.

மீன்கள்
100 மத்தி மீனில் 382 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. மேலும், மத்தி மீனில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. சால்மன் மீன், அரை டின்னில் 440 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. சால்மன் மீனின் எலும்புகளை கூட நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

சீரகம்
100 கிராம் சீரகத்தில் 631 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. அன்றாடம் நாம் உண்ணும் சீரகத்தில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான கால்சியத்தில் இருந்து 18 சதவீதம் கிடைக்கிறது. மேலும், இவை எலும்பு, பற்களின் வளர்ச்சிக்கும், உடல் எடையை வேகமாகக் குறைக்கவும் பயன்படுகிறது.

ஆரஞ்சு ஜுஸ்
அரை கப் ஜுஸில் 175 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. கால்சியம் சிட்ரேட் அதிகமுள்ள ஆரஞ்சு ஜுஸ் உடம்புக்கு மிகவும் நல்லது.

வெண்டைக்காய்
100 கிராம் வெண்டைக்காயில் 81 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. கால்சியம் தவிர வேறு சில சத்துக்களும் வெண்டைக்காயில் உள்ளன. அதுமட்டுமல்ல வெண்டைக்காயை சமைத்து தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை, அப்படியே கூட சாப்பிடலாம். அதுவும் நல்லது தான்.


Similar Threads: