முடி வளர கீரை நல்லது!



கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும். காய்கறி வகைகளிலே, கீரைக்கு முக்கிய இடம் உண்டு. குறைந்த பட்சம் வாரத்தில் இரண்டு முறையாவது கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும்.

அந்தளவுக்கு, கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்துள்ளன. கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. இளைஞர்கள் கூட, கீரை வைத்தால் தொட்டுக் கூட பார்ப்பதில்லை.

இதை பெற்றோர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும்.. நார்ச்சத்து கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு முதலியன நார்ச்ச்த்துள்ள உணவுப் பொருட்க்ளில் அடங்கும்.

கீரைகளில் கால்சியம், சோடியம் எனப்படும், உலோகச்சத்து அதிகம் உண்டு. கீரையில் சர்க்கரை கிடையாது. ஆகவே நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உகந்தது. பூண்டும் மிகவும் நல்லது. கூடிய வரையில் ஆரோக்கிய உணவுப்பழக்கம் மேற்கொள்ளுதல் வியாதிகளை வர விடாமல் தடுக்கும்.

வியாதி வந்த பின், அத்ற்கேற்ற உணவுகளை கட்டுப்பாட்டுடன் சாப்பிடுவதைக் காட்டிலும், வருவதற்கு முன் ஆரோக்கியமான உணவுகளை உண்பதே சிறந்தது.

கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், தலை முடியும் நன்றாக வளரும். அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல் புண் குணமாகும். வாரம் ஒரு முறை உண்பதால், வயிற்றில் காணப்படும் புழுக்கள் அழியும்.

பசலை ம்ற்றும் வெந்தய்க் கீரையை சாப்பிட்டு வந்தால், உடல் உஷ்ணம் குறையும். புளிச்சக் கீரையில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. உடல் பலவீனமானவர்கள் சாப்பிடடால் பலம் பெறும். தூதுவளைக் கீரை, சளிக்கு மருந்தாக அமையும். அதனை துவையல் செய்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலை உணவு பதார்த்தத்தில் இருந்தாலே, தூக்கி எறியும் பழக்கம் கொண்டவர்கள் இருக்கும் போது, பச்சை கறிவேப்பிலையை மென்று தின்னலாம் என்கிறார்கள் ஆராய்ச்சி நிபுணர்கள். கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் பரம்பரை நரை முடி பிரச்னை ஏற்படாது.

கண்பார்வை குறைபாடும் ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து விழுதாகவோ அல்லது சாறு எடுத்தோ உண்டு வந்தால் நுரையீரல், இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்களே அண்டாது. கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவும்.

கறிவேப்பிலையை பறித்து பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.


Similar Threads: