உடல் குண்டாக இருப்பவர்கள் தினம் சாப்பிடும் உணவில், பச்சை மிளகாய் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின், உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்து விடுகிறது.
கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருளாகும். ஆகவே இந்த பச்சை மிளகாய் சேர்த்திருக்கும் உணவு சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடுகிறது. பச்சை மிளகாயில் கொழுப்பு குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும் ஆற்றலும் உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவோர், கொஞ்சம் மோர் சாதமும் இரண்டு பச்சை மிளகாயும் சாப்பிட்டால் போதும். காலப்போக்கில் கொழுப்பு கரைந்து, உடல் எடையும் குறைந்துவிடும்.
மிளகாயில் பல சிறப்பு தன்மைகள் உள்ளன. மிளகாய் வற்றல், 200 கிராம், மிளகு, 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து, 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர் சேர்த்து, சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை, தலைமுழுகி வந்தால் எந்த வகையான தலைவலியும் குணமாகும்.
மிளகாயை பூண்டு மிளகோடு, சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூசினால் முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்கள் மறையும்.

Similar Threads: