தேன்
சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்கும் சக்தி இதற்கு உண்டு. பெண்கள் தேனுடன் ஒரு துளி மஞ்சள் பொடியைக் குழைத்து முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள கருப்புப் புள்ளிகள் வடுக்கள் ஆகியன மறையும்.
உருளைக்கிழங்கு

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கவும் சோர்வாய் இருக்கும் கண்களுக்கும் உருளைக்கிழங்கின் சாறு உகந்ததாய் இருக்கிறது. இதன் சாற்றையும் வெள்ளரிக்காயின் சாற்றையும் கலந்து முகத்தில் பூசினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைய வாய்ப்பிருக்கிறது.
கறிவேப்பிலை

இதைச் சாப்பாட்டில் அதிகம் சேர்த்தால் தலைமுடி அதிக வளர்ச்சி பெறும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையைக் காய்ச்சித் தினமும் தலைக்குத் தடவினால் முடி அடர்த்தியாய் வளரும்.
எலுமிச்சம்பழம்

இதற்குச் சருமத்தைப் பிளீச் செய்யக்கூடிய சக்தி இருக்கிறது. முகம் முழங்கைகள் கைவிரல் நகங்கள் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ஜூஸைத் தடவினால் அங்குள்ள கருமை மறையும்.
சர்க்கரை

முட்டையின் வெண் கருவையும் சில துளி எலுமிச்சம்பழச்சாற்றையும் கலந்து முகத்தில் தடவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக இருக்கும். எண்ணெய்ப் பசையுள்ள சருமத்திற்கு இந்த பேஸ்பேக் சிறந்தது. இதைத் எண்ணெய்ப் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிருதுவாகவும் கண்டிஷன் செய்தது போலவும் இருக்கும்
அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்

நன்றாக சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பஸ்ஸிலும் மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத் தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்பபுக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல்இ ஒத்துழைக்க நன்கு சாப்பிட்டாக வேண்டுமே? அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள் தருவது நல்லதென்று கருதுகிறேன்.
காலை உணவைத் தவிர்க்காதீர்!

பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால்இ அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி ஜூஸ் அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை.
வைட்டமின் மாத்திரைகள் உடல்நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள். இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள் பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.
சாப்பிடும்போது எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு.
காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும் மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும் மனச்சோர்வுற்றிருக்கும் போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

Similar Threads: