Valaikappu Nayaki - வளைகாப்பு நாயகி!-valaokappu.jpg






வளைகாப்பு நாயகி!

திருமணம் எனும் பந்தம், கணவனின் பேரன்பு, தாய்மைப்பேறு...

எல்லாவற்றுக்கும் மேலாக மறுஜென்மத்துக்கு இணையான பிரசவம்...

ஆகியவை இனிதே நடந்தேற வேண்டுமா?

அப்படியென்றால் நீங்கள் வந்து வழிபட வேண்டிய தெய்வம்
வளைகாப்பு அம்மன்தான்!

திருச்சி உறையூரில் உள்ள ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் கோயிலில் தான்
இந்த அம்பாள் குடியிருக்கிறாள்.

அம்மாளின் திருநாமம் கும்குமவல்லி அம்பாள்.

ஆனால், இந்தப் பகுதி மக்கள் வளைகாப்பு அம்மன் கோயில்
என்றே இந்தக் கோயிலை அழைக்கிறார்கள்.

காந்திமதி எனும் பக்தையின் சுகப்பிரசவத்துக்கு அருளிய
குங்குமவல்லி அம்பாளை தேடி வந்து வழிபட்டால்,
கர்ப்பிணிப் பெண்களுக்கு நிச்சயம் சுகப் பிரசவம் ஆகும் என்கிறார்கள்.


இதற்கு ஆதாரமாக, இந்தப் பகுதியில் எந்தப் பெண்ணுக்கு வளைகாப்பு நடந்தாலும்,

முன்னதாக குங்குமவல்லிக்கு கைகள் நிறைய வளையல்களை
அடுக்கி அழகு பார்த்துவிட்டுத்தான்,

கர்ப்பிணிக்கு வளைகாப்பு விழாவை நடத்துகிறார்கள்.





Similar Threads: