Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 2 of 2
Like Tree3Likes
  • 2 Post By Nishahameetha
  • 1 Post By Doctor

கருவுற்ற பெண்கள் கடைப்பிடித்து வரவேண்ட&#

Discuss here on கருவுற்ற பெண்கள் கடைப்பிடித்து வரவேண்ட&# within the I am pregnant forums, part of the Pregnancy forum; கருவுற்ற பெண்கள் கடைப்பிடித்து வரவேண்டிய சில நடைமுறைகள் தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் ...

  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    8,721
    Blog Entries
    4

    கருவுற்ற பெண்கள் கடைப்பிடித்து வரவேண்ட&#



    கருவுற்ற பெண்கள் கடைப்பிடித்து வரவேண்டிய சில நடைமுறைகள்

    தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் வரும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும்.

    இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

    அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும்.

    இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

    ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

    • கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
    • குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. ஜன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.
    • மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.
    • எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது.
    • அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப்பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.
    • கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
    • அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
    Parasakthi and maryjose like this.

  2. #2
    Doctor's Avatar
    Doctor is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    INDIA
    Posts
    12

    Re: கருவுற்ற பெண்கள் கடைப்பிடித்து வரவேண்ĩ

    கர்ப்பிணிகள் மீன் அதிகம் சாப்பிட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது
    Nishahameetha likes this.

Similar Threads

  1. Replies: 12
    Last Post: 30th Mar 2012, 02:24 PM
  2. Replies: 4
    Last Post: 22nd Mar 2012, 10:05 PM
  3. Replies: 2
    Last Post: 12th Nov 2011, 04:07 PM
  4. Replies: 1
    Last Post: 6th Nov 2011, 04:01 PM
  5. Replies: 1
    Last Post: 3rd Aug 2011, 07:56 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •