குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு
Discuss here on குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு within the Infertility & Treatments forums, part of the Fertility forum; இந்தியாவில் 10 முதல் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ...
-
11th Jan 2012, 05:24 PM #1
- Real Name
- Hameetha
- Gender
- Female
- Join Date
- Jul 2011
- Location
- Trichy
- Posts
- 8,721
- Blog Entries
- 4
குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு
இந்தியாவில் 10 முதல் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒருஆண்டு கால தாம்பத்தியத்துக்கு பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ளலாம். பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆணிடம் போதுமான அளவு உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்க செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு கரு முட்டையின் உற்பத்தி சரியாக இருப்பதுடன், கருமுட்டை கருப்பைக்கு வரும் வழி அடைப்பு எதுவும் இன்றி இருக்க வேண்டும். கருவை வளர்க்கக் கூடிய பலமுள்ள நிலையில் கருப்பை இருக்க வேண்டியதும் அவசியம். தாம்பத்தியமும் சரியாக இருக்க வேண்டும். இவை சரியாக இருந்தால் குழந்தை உருவாவதில் பிரச்னை ஏற்படாது.
ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும். பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.
ஆண்மை குறைபாடு மற்றும் உயிரணு குறைபாடுகளை மருந்துகளை கொண்டு சரி செய்ய முடியும். ஆண்களுக்கு உயிரணு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், ஹார்மோன் பரிசோதனை குறைபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மாதவிலக்கு குறைபாடுகள் உள்ள பெண்கள் முன்கூட்டியே பரிசோதிக்கலாம். ஆண், பெண் இருவருமே அதிக உடல் எடையைக் குறைப்பது மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு முறைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறைபாட்டுக்கு ஏற்ற சிகிச்சை முறையால் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்கிறார் மகப்பேறு சிறப்பு மருத்துவர் கல்பனா சம்பத்.
பாதுகாப்பு முறை:
குழந்தைப் பேறை உருவாக்க பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் வருமுன் காப்பதே நல்லது. பெண்கள் மாதவிலக்கு கோளாறுகள், பரம்பரை காரணங்கள் இருப்பின் முக்கூட்டியே பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ளலாம். மது , போதைப் பழக்கத்தை ஆண்கள் கைவிட வேண்டும். பாலியல் ரீதி யான குறைபாடுகளை மறைக்காமல் முன்கூட்டியே சிகிச்சை செய்து கொள்வது அவசியம். ஆண், பெண் இருவருமே தாமதமான திருமணம் மற்றும் 35 வயது வரை குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சத்தான உணவு, உடற்பயிற்சி, குறித்த காலத்தில் குழந்தை பெறுவது மற்றும் ஆணும் பெண்ணும் மகிழ்வான சூழலில் அன்பை பகிர்ந்து கொள்வது குழந்தையின்மைப் பிரச்னைக்கான வாய்ப்புகளை குறைக்கும்.
-ஸ்ரீதேவி
அவல் தோசை:
அவல் மற்றும் 1 கப் தயிரை மிக்ஸ் செய்து ஊற விடவும். 1 கப் பச்சரிசி மற்றும் 1 கப் புழுங்கல் அரிசியை தனியாக ஊற விடவும். இதனுடன் வேக வைத்த ஒரு ஸ்பூன் சாதத்தை சேர்த்து அரைக்கவும். அவல் மிக்சையும் தனியாக அரைத்து அனைத்தையும் கலந்து இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
ரெசிபி
ஓட்ஸ் வெஜ் அடை: கேரட் துருவியது அரை கப், கோஸ் அரை கப் ஆகியவற்றுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி அரைக்கவும். ஒரு கப் ஓட்சில் தோசைப் பதத்துக்கு தேவை யான தண்ணீர் சேர்க்கவும். அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், அரை கப் கீரை மற்றும் உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அடையாகவும் சுடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.
கருவேப்பிலைக் குழம்பு:
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், 5 வறமிளகாய், 2 டீஸ்பூன் துவரம்பருப்பு, 1 டீஸ்பூன் மிளகு, ஒரு கப் கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கவும். 50 கிராம் புளியை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி புளிக்கரைசல் மற்றும் தேவை யான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். இதில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் உள்ளது.
டயட்
பரம்பரைக் காரணங்கள், தாமத மான திருமணம், அதிக எடை, தைராய்டு பிரச்னை, ஆண், பெண் வயது வித்தியாசம் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உருவாகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி இன்றி இருத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் ஜங்க் புட், கொழுப்பு உணவுகள் அதிகம் எடுப்பதைத் தவிர்க் கவும். முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானிய வகைகள், நல்ல கொழுப்பு உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இரும்புச் சத்து, கால்சியம், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்க்கவும். எண்ணெய்யின் பயன்பாட்டை குறைக்கவும், சோயா பருப்பு, கீரை சேர்த்துக் கொள்ளலாம். ஆட்டு ஈரல் மற்றும் மீன் ஆகியவற்றை எண்ணெய்யில் பொரிக்காமல் குழம்பில் போட்டு சாப்பிடலாம். உப்பு அதிகம் உள்ள உணவு, ரீபைண்டு செய்யப்பட்ட மைதா, சேமியா, இனிப்பு ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் மட்டுமே குழந்தையின்மை பிரச்னையைத் தீர்க்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
* ஆக்ரூட் பருப்பு, சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
* அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.
* அமுக்காரா, நெருஞ்சில், கோரைக் கிழங்கு தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து, தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மூட்டு, இடுப்பு, தொடை வலி குணமாகும்.
* அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.
* ஆடு தீண்டா பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.
* ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.
* இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.
-
Re: குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு
Thanks for Sharing Nisha
nlakshmi.
Every closed eye is not sleeping, and every open eye is not seeing.-Bill Cosby
-
21st Jan 2012, 12:39 PM #3
Re: குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு
Thanks for your post
Similar Threads
-
மன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி&
By Nishahameetha in forum Psychological ProblemsReplies: 1Last Post: 3rd Jan 2012, 02:40 PM -
அனைத்து டூ வீலர்களுக்கும் ஒரே எஞ்சினை உர
By sudhar in forum Cars and BikesReplies: 0Last Post: 30th Dec 2011, 04:37 PM -
சென்னைக்கு புதியவரா நீங்கள்? சென்னையின்
By Ganga in forum ChennaiReplies: 3Last Post: 16th Dec 2011, 04:16 PM -
குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்ச
By silentsounds in forum SchoolerReplies: 5Last Post: 23rd Aug 2011, 12:58 PM -
கழிவுநீரையும் சுத்தமாக்கி பயன்படுத்தல
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 20th Aug 2011, 11:42 PM


5Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks