User Tag List

Like Tree19Likes

Infertility factors & Remedies - மலட்டுத் தன்மையும் அதற்கான காரணிக


Discussions on "Infertility factors & Remedies - மலட்டுத் தன்மையும் அதற்கான காரணிக" in "Infertility & Treatments" forum.


 1. #11
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,614

  Re: மலட்டுத் தன்மையும் அதற்கான காரணிகளும், 

  விந்து அணுப் பரிசோதனை:

  தம்பதினர்க்கு குறிப்பிட்ட காலத்திற்கு மேலாக குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தால் ஆணின் விந்தைப் பரிசோதித்து கருத்தரிப்பதற்கு தகுதியான விந்தணு இருக்கின்றனவா என அறிகின்றனர். கருத்தரிப்பு என்பது கணவன் - மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கு காரணம் ஆணா அல்லது பெண்ணா என அறிய, முதலில் ஆணின் விந்தணுவை பரிசோதனை செய்கின்றனர்.
  பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

  பரிசோதிக்கப்படுபவை:
  * ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
  * விந்தணுக்களின் எண்ணிக்கை.
  * விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
  * இயல்பான உயிரணுக்கள்.
  * பாக்டீரியா போன்றவை.
  * ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.
  2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  அதாவது குறைந்த பட்சம் -நாற்பது மில்லியன் அணுக்கலாவது இருக்கணும் .அதற்க்கு குறைந்தால் நல்லதில்லை. .நூற்று இருபது மில்லியன் அணுக்கள் இருந்தால் மிக நல்லது. இந்த இடைவேளைக்கு உள் இருப்பது சிறந்தது
  விந்தணுவில் 70 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

  விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 80 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.

  விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

  நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

  சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.

  அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

  (புதிய ஆராச்சிகளின்படி மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

  விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் d குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும். தேவையான அளவு வைட்டமின் d உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன
  தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் கால்களுக்கு இதமாக நடந்து வருவது தான்!

  இந்த ஆய்வை நடத்திய போது இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.

  இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது. அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் d யும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

  புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும்.)


  Sponsored Links
  kiruthividhya likes this.

 2. #12
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,614

  Re: மலட்டுத் தன்மையும் அதற்கான காரணிகளும், &am

  காரணங்கள்

  கருச்சிதைவானது பல காரணங்களால் ஏற்படலாம். அவை யாவும் முற்றிலுமாக அறியப்படவில்லை. தெரிந்த காரணங்களில் சில மரபியல்; கருப்பை; வளரூக்கி சார்ந்த அசாதாரண நிலமைகள், இனப்பெருக்கத் தொகுதியில் ஏற்படும் தொற்றுக்கள், இழைய நிராகரிப்பு போன்றனவாகும்.


  முதல் மூன்று மாத காலம்
  அனேகமான மருத்துவத்தில் தோன்றும் மூன்றில் இரு பங்கு தொடக்கம் நான்கில் மூன்று பங்கு கருச்சிதைவானது முதல் மூன்று காலத்திலேயே நிகழ்கின்றது. முதல் 13 கிழமைக்குள் நிகழும் கருச்சிதைவில் அரைவாசியானவற்றில் நிறப்புரி அல்லது
  நிறமூர்த்தத்தில் ஏற்படும் அசாதாரணமே காரணமாக உள்ளது.
  இது தவிர புரோகெஸ்தரோன் (progesterone) வளரூக்கியின் குறைபாடும் கருச்சிதைவுக்கு காரணமாகின்றது. இந்த வளரூக்கியானது மாதவிடாய் வட்டத்தின் பின் அரைவாசிக் காலத்தில் குறைவாக இருப்பின், அந்தப் பெண்களுக்கு புரோகெஸ்தரோன் குறைநிரப்பு பொருளாக முதல் மூன்று மாத காலத்துக்கு வழங்கப்படும். ஆனாலும் புரோகெஸ்தரோன் குறைநிரப்பு பொருளாக வழங்கப்படும்போது, கருச்சிதைவுக்கான இடர் குறைக்கப்படுவதாக ஆய்வுகள்மூலம் சரிவர நிரூபிக்கப்படவில்லை.

  மூன்று தொடக்கம் ஆறு மாத காலம்
  இக்காலத்தில் நிகழும் 15% மான கருச்சிதைவு கருப்பையில் ஏற்படும் இயல்பற்ற மாற்றங்கள், கருப்பையில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகள், கருப்பை வாய் செயல்திறனற்ற தன்மை போன்றவற்றால் ஏற்படும். இவை குறைப்பிரசவத்துக்கும் காரணமாய் அமைவதுண்டு.
  ஒரு ஆய்வு இந்தக் காலத்தில் நிகழும் 19% கருச்சிதைவுக்கு தொப்புட்கொடியில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாவதாகக் கூறுகின்றது. நஞ்சுக்கொடியில் ஏற்படும் பிரச்சனைகளும் இக்காலத்தில் நிகழும் கருச்சிதைவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  kiruthividhya likes this.

 3. #13
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,614

  Re: Infertility factors & Remedies - மலட்டுத் தன்மையும் அதற்கான காரணி

  பொதுவான இடர் காரணிகள்

  ஒன்றுக்கு மேற்பட்ட முதிர்கரு இருக்கும் நிலையில் இவ்வகை கருச்சிதைவுக்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது.

  கருத்தரிப்பின் போது சில பெண்களில் நீரிழிவு நோய் ஏற்படுவதுண்டு. இது கருவளர்ச்சிக்கால நீரிழிவு நோயாகும். கருத்தரிப்பின்போது போதிய கவனமெடுத்தலால் இது கட்டுப்படுத்தப்படக் கூடிய ஒரு நிலையாக இருக்கும். அவ்வாறின்றி, கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயைக் கொண்டிருப்பவர்களிலும் கருச்சிதைவுக்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.

  சூலகத்தில் பல நீர்க்கட்டிகள் இருக்கும் நிலையும் கருச்சிதைவிற்கான இடரை அதிகரிக்கும். இந்த நோய்க்குறியை உடைய பெண்களில் 30-50% மானோரில் முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவு ஏற்படுவதாக அறியப்படுகிறது. கருத்தரிப்புக் காலத்தில் Metformin மருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டவர்களில் கருச்சிதைவு குறைந்திருப்பதாக இரு ஆய்வுகள் கூறின. ஆனாலும் 2006 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு மீளாய்வு இதனை மறுத்ததுடன், வழக்கமான Metformin சிகிச்சை பெறுவதையும் பரிந்துரை செய்யவில்லை.

  கருத்தரிப்பு காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (Pre-eclampsia) ஏற்படுவதும் ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. அதேபோல் மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களில் (Pre-eclampsia) ஏற்படும் சந்தர்ப்பமும் அதிகமாகும்.

  தீவிரமான தைராய்டு சுரப்புக் குறை இருப்பவர்களிலும் கருச்சிதைவு அதிகம் நிகழலாம். இநோயின் தாக்கம் குறைவாக உள்ளவர்களில் கருச்சிதைவுடன் தொடர்பு காட்டப்படவில்லை. மேலும் இக்குறிப்பிட்ட நோயால் தன்னுடல் எதிர்ப்புக் குறைபாடு போன்ற, நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் ஏற்படும் சில நிலைகள், கருச்சிதைவைக் கூட்டுகின்றன.

  உருபெல்லா (Rubella) என்றழைக்கப்படும் தீ நுண்மம் ஒன்றினால் ஏற்படும் உருபெல்லா தட்டம்மை (Rubella measles) அல்லது ஜேர்மனி தட்டம்மை, கிளமிடியா நோய் போன்ற நோய்களாலும் கருச்சிதைவுக்கான இடர் அதிகரிக்கும்.

  புகைபிடிக்கும் அல்லது புகைக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கும், புகைக்கும் பழக்கமுள்ள தகப்பனைக் கொண்ட கருவிலும் இவ்வகை கருச்சிதவு ஏற்படும் சந்தர்ப்பம் கூடுவதாக அறியப்பட்டுள்ளது. கொக்கெயின் பாவனையும் கருச்சிதைவுக்கு காரணமாகலாம்.

  குழந்தை வெளியேற ஆயத்தமாகும் நிலையில் திறக்க வேண்டிய கருப்பை வாய்ப்பகுதி முதலிலேயே திறந்து கொள்ளல்.
  உடல் அதிர்ச்சி, நச்சு பொருட்கள் நிறைந்த சூழலில் போதல், IUD] போன்ற கருத்தடை உபகரணத்தை கருக்கட்டல் நேரத்தில் கருப்பையினுள் கொண்டிருந்தமை போன்ற நிலமைகளும் கருச்சிதைவுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.

  Paroxetine, Venlafaxine போன்ற மன அழுத்தத்திற்கு எதிரான சில மருந்துகள் பாவனை போன்றனவும் கருச்சிதைவுக்குக் காரணமாகலாம்

  கருத்தரிக்கும் பெண்ணின் வயதும் கருச்சிதைவுடன் நெருங்கிய தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது. வயது அதிகரிக்கும்போது கருச்சிதைவுக்கான சந்தர்ப்பமும் அதிகரிக்கும்.

  பெற்றோரின் வயது அதிகரிக்கையில் கருச்சிதைவின் அளவும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். 25-29 வயதுடைய ஆண்களைக் காட்டிலும், 25 வயதுக்குட்பட்ட ஆண்களில் கருச்சிதைவு நிகழ்வதற்கான தன்மை 40% ஆல் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே ஆய்வு 25-29 வயதினரைவிட, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் கருச்சிதை நிகழ்வதற்கான வாய்ப்பு 60% ஆல் அதிகரிப்பதாகக் கூறுகின்றது. வேறொரு ஆய்வு, இவ்வாறான கருச்சிதைவுகள் வயது கூடிய ஆண்களில் நிகழ்வது பொதுவாக முதல் மூன்று மாதங்களிலாகும். இன்னுமொரு ஆய்வு பெண்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75% கருத்தரிப்பு கருச்சிதைவில் முடிவதாகக் கூறுகின்றது.

  kiruthividhya likes this.

 4. #14
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,614

  Re: Infertility factors & Remedies - மலட்டுத் தன்மையும் அதற்கான காரணி

  சிகிச்சை குறைகள்:

  செயற்கை கருத்தரிப்பு முறை - பரிசோதனைக்குழாய் குழந்தை

  சில காரணங்களால் கலப்பின் போது ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருவணு உருவாக்கத்தை ஏற்படுத்தாத போது விந்தையும், முட்டையையும் Petridish எனப்படும் கண்ணாடி கிண்ணத்தில் வளர்ப்பூடகத்தில் இணைத்து கருவணுவை உருவாக்கி பெண்ணின் கருப்பைக்குள் வைத்து வளர்க்கும் முறை பரீட்சிக்கப்பட்டு என்பதுகளில் இச்சோதனை வெற்றி பெற்று பரிசோதனைக்குழாய் குழந்தைகள் உருவாக்கத்திற்கு வழி அமைத்தது.

  படியெடுப்பு (Cloning)
  கருவணு உருவாக்கத்திற்கு ஆணினது விந்து தேவையென்ற நிலையை தகர்த்த புரட்சியே அடுத்த முக்கிய கட்டமான படியெடுப்பு இனப்பெருக்கமாகும். இதன்படி பெண்ணினது முட்டையிலுள்ள கரு நீக்கப்பட்டு சாதாரண உயிரணுவிலுள்ள கரு செலுத்தப்பட்டு கருவணுவை உருவாக்கி முளையமாக்கி பின்னர் கருவறையினுள் வளரச்செய்து பிரசவிக்கும் முறையாகும். இதுவே படியெடுப்பு (Cloning) எனப்படுகிறது.

  ஒத்த குழந்தைகள்
  பரிசோதனைக்குழாய் குழந்தைகளுக்கான முறையிலோ அல்லது படியெடுப்பு முறையிலோ கருவணுவை உருவாக்கி அதனை வளர்பூடகத்தில் வளர்க்கும் போது முதல் ஓரிரு நாட்களில் 2, 4, 8, 16, 32 என உருவாகும்.

  முளையத்திலுள்ள குருத்தணுக்கள் எனப்படும் உயிரணுக்களை மீண்டும் தனித்தனியாக பிரித்தெடுத்து வெவ்வேறாக வளர்த்து பரீட்சிக்கப்பட்ட போது அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனி கருவணுவாக செயற்பட்டு தனித்தனி முளையங்களை தோற்றுவித்தது. அவைகளை வெவ்வேறு பெண்கள் மூலமாக கருத்தரிக்கச்செய்ய வைக்க முடியும் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் இயல்பிலும் தோற்றத்திலும் ஒத்த பலரை வெவ்வேறு பெண்கள் மூலமாக பிரசவிக்கச்செய்ய முடியும் என்ற புரட்சியை விஞ்ஞானம் கொள்கையளவில் நிரூபித்தது.

  இதனால் இக்குருத்தணுக்களை முளைய குருத்தணுக்கள் (Embryonic Stem Cells) என அறியப்படுத்தப்பட்டன.

  இக்கண்டுபிடிப்பு தாவரவியலிலேயே இன்று வரையும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனது.

  kiruthividhya likes this.

 5. #15
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,614

  Re: Infertility factors & Remedies - மலட்டுத் தன்மையும் அதற்கான காரணி

  இரட்டைக் குழந்தைகள் - சாதாரண இரட்டை (Identical twins)

  பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சூல் பையிலிருந்து ஒரு சூல் முட்டை வெளிப்படும். அபூர்வமாக சில சமயங்களில் இரண்டு முட்டைகள் வெளிப்படும். அல்லது ஏதாவது காரணங்களால் ஒரு முட்டை இரண்டாகப் பிளவுபட்டு விடும். இந்தச் சமயங்களில் ஆண், பெண் சேரும் போது இரண்டு முட்டைகளும் இரு வேரு விந்துக்களால் கருவுயிர்க்கப்பட்டு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இங்கு எப்போதுமே விந்துக்களும் முட்டைகளும் வெவ்வேறாக இருப்பதால் பிறக்கும் குழந்தைகளின் மரபுக் கூறும் வெவ்வேறாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கிடையில் உருவ ஒற்றுமையோ பிற பண்புகளில் ஒற்றுமையோ குறிப்பிடத்தக்கதாய் இருப்பதில்லை.

  ஒன்று போலிருக்கும் இரட்டை (Non Identical Twins)
  கருவுயிர்க்கப்பட்ட முட்டை, பிளவின் பொது (Clevage) சில சமயங்களில் இயல்புக்கு மாறாக இரண்டாகப் பிரிந்து விடும். இவ்வாறு இரண்டாகப் பிரிந்த கருவுயிர்க்கப்பட்ட முட்டை இரு குழந்தைகளாக உருவாகின்றன. ஒரு வேளை கருவுயிர்க்கப்பட்ட முட்டை சரியாக இரண்டாகப் பிரியவில்லையெனில் பிறக்கும் குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றன. இங்கு ஒரு சூல் முட்டையும், ஒரு விந்துமே காரணமாக இருப்பதால் குழந்தைகளின் மரபுக்கூறும் ஒன்றேயாகும். எனவே இக் குழந்தைகள் எல்லாப் பண்புகளிலும் ஒன்று போலவே இருக்கின்றன. ஆனால் குழந்தையின் வளர்ச்சியில் சூழ்நிலையும் முக்கியப் பங்கு வகிப்பதால் சூழ் நிலை வேறுபாட்டால் இத்தகைய குழந்தைகளுக்கிடையே சிறிய வேறுபாடுகள் காணப்படலாம்.

  kiruthividhya likes this.

 6. #16
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,614

  Re: Infertility factors & Remedies - மலட்டுத் தன்மையும் அதற்கான காரணி

  பதிலித்தாய்

  பதிலித்தாய் (Surrogate mother) என்பவர் வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனியான மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் ஆவார். இவர் அதனை பணம் பெற்றுக் கொண்டு செய்வாராயின், வாடகைத்தாய் என அழைக்கப்படுவார். பதிலித்தாயின் கருமுட்டையே கருவுருவாக்கத்தில் உதவியிருப்பின், பதிலித்தாயே குழந்தையின் மரபியல் தாய் ஆவார்.

  சில சமயங்களில் வேறொரு பெண்ணின் முட்டையானது, ஒரு ஆணிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருக்கட்டலுக்கு உட்பட்ட பின்னர், அந்த முளையமானது பதிலித்தாயின் கருப்பையினுள் வைக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுமாயின், பதிலித்தாயானவர் குழந்தையுடன் மரபியல் தொடர்பெதுவும் அற்றவராக இருப்பார். அந்நிலையில் கருசுமக்கும் தாய் ஆக மட்டுமே இருப்பார்.
  பதிலித்தாய் ஒரு குழந்தையின் கருக்காலம் மட்டுமே அக்குழந்தைக்குத் தாயாக இருப்பார். சிலசமயம் தாய்ப்பாலூட்டலுக்காக தொடர்ந்து சில மாதங்கள் வரை தாயாக இருக்க அனுமதிக்கப்படுவார்.

  பதிலித்தாயானவர் மரபியல் தாயாகவும் இருப்பாராயின், அவர் பொதுவாக செயற்கை விந்தூட்டல் மூலம் கருத்தரிப்புக்கு ஆட்பட்டிருப்பார். அவருக்குச் செலுத்தப்படும் விந்தானது குறிப்பிட்ட தம்பதிகளில் ஆணின் விந்தாகவோ அல்லது வேறொரு ஆணிடமிருந்து பெறப்பட்டு குளிர்நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் விந்தாகவோ இருக்கலாம். வெளிச் சோதனை முறை கருக்கட்டலிலும் இவ்வாறாக பதிலித்தாயைப் பயன்படுத்தவும் முடியும். அந்நிலையில் குழந்தைக்குத் தாயாகப் போகும் பெண்ணின் முட்டையும், தகப்பனாகப் போகும் ஆணின் விந்தும் கருக்கட்டலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கருமுட்டை பதிலித்தாயின் கருப்பையினுள் வைக்கப்படும். சிலசமயம் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே கூட வழங்கி/வழங்கிகளிடம் இருந்து பெறப்பட்டவையாகவும் இருக்கக் கூடும்.
  குழந்தையைச் சொந்தமாக்கிக்கொள்ளப் போகும் பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமோ மலட்டுத்தன்மை உள்ளவராக இருப்பின், அல்லது பெற்றோர் தற்பால் சேர்க்கை உள்ளவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிப்பதிலோ, அல்லது குழந்தைப் பேறிலோ விருப்பமற்றவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிக்கவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலை அல்லது மருத்துவ ரீதியான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பின் இவ்வாறான பதிலித்தாய் ஏற்பாட்டைச் செய்வார்கள்.

  சிலசமயம் ஒரு தனி பெண் அல்லது ஆண், வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளாமல், தனக்குரிய மரபியல் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், முறையே தனது கருமுட்டையை அல்லது விந்தைக் கொண்டு உருவாக்கப்படும் முளையத்தை பதிலித்தாய் மூலம் பெற்றெடுத்துக் கொள்வதற்காய் இத்தகைய ஏற்பாட்டை செய்வதும் உண்டு.

  குழந்தையை சுமக்கும்காலத்தில் குழந்தைக்கும், பதிலித்தாயானவருக்கும் ஏற்படக்கூடிய பிணைப்பானது, குழந்தை பிறந்து குறிப்பிட்டவர்களிடம் வழங்கப்பட்ட பின்னர், பதிலித்தாய்க்கு உளவியல் ரீதியான ஒரு பிரச்சனையாக உருவாவதும் உண்டு. இத்தகைய உணர்வுபூர்வமான பல சிக்கல்கள் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதனால், ஒவ்வொரு நாட்டிலும் இவ்வகையான பதிலித்தாய் நடைமுறைக்கு பல சட்டதிட்டங்கள், விதிமுறைகள் உள்ளன.

  kiruthividhya likes this.

 7. #17
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,614

  Re: Infertility factors & Remedies - மலட்டுத் தன்மையும் அதற்கான காரணி

  மலட்டுத்தன்மை சிகிச்சை[2].

  முட்டை உருவாக்கத்தை அதிகரித்தல் (Ovulation Induction)

  முட்டை உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் பயன்படுத்தும் முறை. இது பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்கு சிகிச்சையளிக்க வல்லது. இங்கு கொடுக்கப்படும் பல வகையான மருந்துகளும் பெண்களின் இனப்பெருக்கும் தொகுதியைத் தூண்டி, அதன் மூலம் கருக்கட்டல் ஏற்படுவதற்கான நிகழ்தகவை அதிகரிக்கச் செய்யும். இந்த மருந்துகளில் பெரும்பாலானவை வளரூக்கிகளாகும். இயற்கையாக இருக்கும் வளரூக்கியின் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக இவை வழங்கப்படலாம். புரோஜெஸ்தரோன் வளரூக்கியே பொதுவாக சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றது.

  செயற்கை விந்தூட்டல் (Artificial Insemination - AI)

  இந்த செயற்கை விந்தூட்டல் முறையில், கருக்கட்டலுக்கு உதவும் முகமாக, ஆணிடம் இருந்து பெறப்படும் விந்தானது சில சுத்தப்படுத்தலின் பின்னர், நேரடியாக பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியினுள் செலுத்தப்படும். விந்து சுத்தப்படுத்தப்படுவதன் மூலம், விந்துப் பாய்மத்தில் இருக்கும் தேவையற்ற, ஆபத்தான வேதிப்பொருட்கள் அகற்றப்படுவதனால் கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கச் செய்யலாம். இந்த முறைக்கு உதவுவதற்காக மலட்டுத்தன்மையைப் போக்க உதவும் மருந்துகளும் பயன்படுத்தப்படலாம்.

  விந்தானது பெண்ணின் ஆண் துணையிடம் இருந்தோ, ஆண் துணை இல்லாதவிடத்து, அல்லது ஆண் துணையிடமிருந்து வளமான விந்தை பெற முடியாத நிலை இருக்குமிடத்து, வேறொரு விந்து வழங்கியிடம் இருந்து விந்து பெறப்படும். அந்த விந்து கருப்பை வாய்ப் பகுதியிலோ (Intracervical Insemination - ICI), அல்லது கருப்பையின் உள்ளேயோ (Intrauterine insemination) செலுத்தப்படும். சில அனுகூலங்கள் காரணமாக கருப்பையினுள் செலுத்தும் முறையே தற்போது பரவலாக செய்யப்பட்டு வருகின்றது.

  இம்முறை பயன்படுத்தப்படும்போது, வெற்றிகரமான கருக்கட்டலுக்காக, முட்டை வெளியேறுதலை சரியாக அறிந்து கொள்ள, குருதிப் பரிசோதனைகள், மீயொலி சோதனை போன்றவற்றினால் பெண்ணின் மாதவிடாய் சுழற்சி மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படும்

  kiruthividhya likes this.

 8. #18
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,614

  Re: Infertility factors & Remedies - மலட்டுத் தன்மையும் அதற்கான காரணி&am

  துணையான இனப்பெருக்கத் தொழில்நுட்பம் (Assisted Reproductive TECHNOLOGY- ART)

  கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கச் செய்யும் முகமாக முட்டையானது பெண்ணின் சூலகத்தில் இருந்து எடுக்கப்பெற்று, மீண்டும் பெண்ணின் உடலினுள் வைக்கப்படும். இது நான்கு முறைகளால் மேற்கொள்ளப்படும்.

  வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In Vitro Fertilization - IVF)

  இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மிகவும் பரவலாக அறியப்படும் தொழில்நுட்பமாகும். முதிர்ச்சி அடைந்த முட்டையானது பெண்ணின் சூலகத்தில் இருந்து அகற்றப்பட்டு, வெளியே சோதனை அறையில் வைத்து, ஆண் துணையிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருக்கட்டச் செய்யப்பட்டு, கருக்கட்டலின் பின்னர் முளையம் மீண்டும் கருப்பையினுள் வைக்கப்படும்.

  பாலோப்பியன் குழாய் உள்ளான புணரி இடமாற்றம் (Gamete Intrafallopian Transfer - GIFT)
  இம்முறையில் முட்டைகள் சூலகத்தில் இருந்து அகற்றப்பட்டு, பின்னர் முட்டையும், விந்தும் கருக்கட்டச் செய்யப்படும் நோக்குடன் பலோப்பியன் குழாயினுள் செலுத்தப்படும். சோதனை அறியில் வைத்து கருக்கட்டலைத் தவிர்ப்பதால் இது வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் இருந்து வேறுபடுகின்றது.
  பலோப்பியன் குழாய் உள்ளான இருபாலணு இணைவுக்கரு இடமாற்றம் (Zygote Intrafallopian Transfer - ZIFT)

  இங்கு முட்டை அகற்றப்பட்டு, சோதனை அறையில் வைத்து விந்துடன் கருக்கட்டச் செய்யப்பட்டு, முளைய விருத்திக்கு முன்னராகவே, அதாவது புணரிக்கலமாகவே (zygote) பலோப்பியன் குழாயினுள் செலுத்தப்படும்.

  kiruthividhya likes this.

 9. #19
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,614

  Re: Infertility factors & Remedies - மலட்டுத் தன்மையும் அதற்கான காரணி

  குழியமுதலுரு உள்ளான விந்து உட்செலுத்தல் (Intracytoplasmic Sperm Injection - ICSI)

  விந்து குழியமுதலுருவினுள் ஊசி மூலம் ஏற்றப்படல். இந்த முறையும் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. இங்கே முதிர்ந்த முட்டையானது பெறப்பட்டு, அதனுள் வளமான ஒரு விந்து சேரடியாகச் செலுத்தப்பட்டு, கருக்கட்டச் செய்து, பின்னர் முளையமானது கருப்பையினுள் வைக்கப்படும்.

  மேலதிக மலட்டுத்தன்மை சிகிச்சை
  சில உடற்கூற்றியல் தொடர்பான மலட்டுத்தன்மை இருப்பின், அவற்றை நேரடியாக அறுவைச் சிகிச்சை மூலமாகவோ, அல்லது தேவைப்படாதவிடத்து, வேறு அறுவைச் சிகிச்சையல்லாத முறைகளாலோ சிகிச்சை அளித்து மலட்டுத்தன்மையை நீக்கலாம்.

  kiruthividhya likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter