Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree105Likes

Interesting Facts Every Day !!


Discussions on "Interesting Facts Every Day !!" in "Interesting Facts" forum.


  1. #1291
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    99,024

    Re: Interesting Facts Every Day !!

    சோவியத் ஒன்றியத்தின் லூனா 21 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட நாள் ஜன.8- 1973



    லூனா திட்டம் என்பது சோவியத் ஒன்றியத்தினால் 1959-லிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். இப்பயணத் திட்டம் "லூனிக்" என்றும் சிலவேளைகளில் கூறப்படுவதுண்டு.

    இவை சந்திரனைச் சுற்றவோ அல்லது தரையிறங்கவோ அனுப்பப்பட்டவை ஆகும். விண்ணில் இறங்கிய முதலாவது விண்கலம் லூனா 2 ஆகும். இவை சந்திரனில் பல ஆய்வுகளையும் நிகழ்த்தின. வேதியியல் பகுப்பாய்வு, ஈர்ப்பு, வெப்பநிலை, மற்றும் கதிரியக்கம் போன்ற பல ஆய்வுகளை நடத்தின.

    லூனா திட்டத்தின் 21-வது விண்கலம் 1973-ம் ஆண்டு இதே தேதியில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது.


    Sponsored Links

  2. #1292
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    99,024

    Re: Interesting Facts Every Day !!

    பொள்ளாச்சியில் தொடங்கியது சர்வதேச பலூன் திருவிழா


    பொள்ளாச்சியில், சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது.
    சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் இன்று தொடங்கியது. பொள்ளாச்சி சப் கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் இதைத் தொடங்கி வைத்தார். இதில், அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பைலெட்கள் பொள்ளாச்சிக்கு வருகை தந்துள்ளனர். பொள்ளாச்சி, சக்தி மில்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்தத் திருவிழா வருகின்ற 16-ம் தேதி வரை நடக்கிறது. சுற்றுலாத்துறையின் பிரமாண்ட தேசியக் கொடி வடிவிலான பலூன், 2.0 பலூன், ஆங்கிரி பேர்டு பலூன் ஆகியவை 12 பலூன்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.


    தினசரி, காலை, மாலை என்று இரண்டு வேளைகள் இந்த பலூன் திருவிழா நடைபெறுகிறது. இதில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழா இன்று நடைபெற்றாலும், நாளை முதலே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்



  3. #1293
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    13,367

    Re: Interesting Facts Every Day !!

    மருத்துவ அற்புதம் ‘இன்சுலின்’




    இன்று (ஜனவரி 11) சர்க்கரை நோயாளிக்கு முதன் முதலில் இன்சுலின் பயன்படுத்தப்பட்ட தினம்.


    சத்தம் இல்லாமல் உடலுக்குள் யுத்தம் நடத்துகின்ற சர்க்கரை நோய் வயதானவர்களுக்கு தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளும், இளைஞர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவல நிலைக்கு, உணவு முறை மாற்றங்கள், உடல் உழைப்பு குறைந்துவிட்ட வாழ்க்கை முறை, அதிக எடை, ஊட்டச்சத்து குறைபாடுகள், மன உளைச்சல் போன்றவை முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.


    இன்று சர்க்கரை நோய்க்கு பல்வேறு இன்சுலின்களும், மருந்து மாத்திரைகளும் வந்துவிட்டன. இன்சுலின் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் உலகில் இந்நேரம் சர்க்கரை நோயினால் மனித குலமே அழிந்து போயிருக்கும். இந்தியாவில் ஏறக்குறைய 3 கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதில் மூன்றில் ஒருவருக்கு இன்சுலின் ஊசி அவசியம்.


    கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்காதவர்களுக்கு இன்சுலின் சிறந்த மருந்து. மாரடைப்பு, அறுவை சிகிச்சைக்கு, ஆறாத புண்ணுக்கு, காச நோய், பிரசவ கால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோயினால் நினைவு இழந்தவர்களுக்கு இன்சுலின் சாலச்சிறந்தது. மருத்துவ உலகில் அற்புத மருந்தான இன்சுலின் 20-ம் நூற்றாண்டின் அதிசய கண்டுபிடிப்பாகும்.


    சர்க்கரை நோய்க்கான மருந்தை தயாரிக்கும் பணியில் நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. 1869-ம் ஆண்டு டாக்டர் லாங்கர்ஹான்ஸ் நாயின் கணையத்தை சோதித்துப் பார்த்து அதில் உள்ள திசுக்கள்தான் இன்சுலினை உற்பத்தி செய்கிறது என்பதை கண்டுபிடித்து, அதை 1901-ம் ஆண்டு வெளி உலகிற்கு அறிவித்தார்.


    1921-ம் ஆண்டு சர்க்கரை நோய் குறித்த ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக, கனடாவைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஸ்ரீ பாண்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகியோர் ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்தனர். 1922-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி சர்க்கரை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு டொரண்டோ பொது மருத்துவமனையில் இருந்த லியோனார்ட் தாம்சன் என்ற 14 வயது சிறுவனுக்கு தாங்கள் கண்டுபிடித்திருந்த புதிய மருந்தை முதன் முதலில் கொடுத்தனர்.


    அப்போது தாம்சனுக்கு அலர்ஜி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன. உடனே அவர்கள் மருந்து கொடுப்பதை நிறுத்திவிட்டு மேலும் 12 நாட்கள் ஆராய்ச்சி செய்து ஜனவரி 23-ந்தேதி 2-வது தடவையாக அந்த சிறுவனுக்கு மருந்தை ஊசி மூலம் செலுத்தினர். ஆச்சரியமாக சிறுவன் தாம்சனுக்கு ரத்தச் சர்க்கரை ‘மளமள’வென்று குறைந்தது. உலகமே வியக்கும் வண்ணம் அந்தச் சிறுவன் மீண்டான். அந்த அதிசய மருந்துதான், இன்சுலின்.






    இந்தச் செய்தி காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பரவியது. 20-ம் நூற்றாண்டின் அற்புத கண்டுபிடிப்பிற்காக பாண்டிங், அவரது பேராசிரியர் மாக்லியோட் ஆகியோருக்கு 1923-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசு பணத்தை பாண்டிங், சார்லஸ் பெஸ்டுடன் பகிர்ந்து கொண்டார்.


    நாயின் கணையத்திலிருந்து தயாரித்த இன்சுலினை மனிதர்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தியபோது அதில் பல பக்க விளைவுகள் இருந்தன. பின்பு மாடு மற்றும் பன்றியின் கணையத்திலிருந்து இன்சுலினைத் தயாரித்தார்கள். பக்க விளைவின் விகிதாச்சாரம் குறைந்தது. மரபுசார் தொழில் நுட்பம் மற்றும் டி.என்.ஏ. மறு சேர்க்கை தொழில் நுட்பம் மூலம் மனிதரிடம் சுரக்கின்ற இன்சுலினை போலவே செயற்கை முறையில் இன்சுலினை தயாரித்தார்கள். ஈ கோலை என்னும் பாக்டீரியாவின் டி.என்.ஏ.வில் மனிதனுடைய மரபணுவை இணைத்து வளர்த்தார்கள். இதில் மனித இன்சுலினைப் போலவே பாக்டீரியாக்கள் சுரந்தன. இவற்றை எடுத்து அதன் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்து பல்வேறு இன்சுலினை தயாரித்து வருகிறார்கள்.


    உணவு சாப்பிட்ட உடன் ரத்தத்தில் ஏறும் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் இன்சுலின் குறைந்த காலம் செயல்படும் இன்சுலின் ஆகும். அதிக சர்க்கரையினால் நினைவு இழந்த நிலையில் உள்ளவர்களுக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது 6 மணி நேரம் செயல்படும். மிக விரைவாக செயலாற்றும் இன்சுலின் உடனே சர்க்கரையை குறைக்கும். இதில் தாழ்நிலை சர்க்கரை மயக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை.


    நடுத்தர காலம் செயல்படும் இன்சுலின் சர்க்கரை மாத்திரையுடன் சர்க்கரையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. நீண்ட நேரம் செயல்படும் இன்சுலின் வேலை செய்ய ஆரம்பித்து 24 மணி நேரம் இன்சுலினை தருகிறது. குறைந்த கால இன்சுலினும், நீண்ட நேரம் செயல்படும் இன்சுலினும் இரண்டையும் கலந்து முக்கலப்பு இன்சுலின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்சுலினை தினம் ஒருமுறை அல்லது இரண்டு முறை போட்டால் போதும்.


    தற்போது தானாகவே போட்டுக்கொள்ளக்கூடிய பேனா வடிவில் இன்சுலின் சிரிஞ்சுகள் வந்துவிட்டன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகளை பாதுகாப்பாக அழித்துவிடவேண்டும். வெப்பத்தால் இன்சுலின் திறன் குறைந்துவிடும். ஆதலால், இன்சுலினை குளிர்சாதனப் பெட்டியின் கதவில் வைக்கவும். தவறிகூட பிரீசரில் வைக்கக்கூடாது.


    தினமும் ஊசி போடும் இடத்தை மாற்ற வேண்டும். இன்சுலின் ஊசியைப் பிட்டத்தில் போடுவது அவ்வளவு நல்லதல்ல. அப்படி போட்டால் அங்கு இன்சுலின் கிரகிக்கப்படும் வேகம் குறைந்து அதன் செயல்திறன் சரியாக இருக்காது. உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பதை உணர்ந்து, உணவு முறையைச் சரிவர கடைப்பிடித்து தேவையான உடற்பயிற்சி செய்து நோய்களுக்கு முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் வாழ்வில் அதிகப் பயனைப் பெறலாம்.


  4. #1294
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    99,024

    Re: Interesting Facts Every Day !!

    அட!! இந்த ஊர்ல ஏடிஎம் இயந்திரத்துக்கும் கம்பளி, ஹீட்டர்!!



    இமாசலப்பிரதேச மாநிலத்தில் லஹவுல்ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்திற்கு அதிக குளிரால் கம்பளி போர்த்தப்பட்டு, ஹீட்டர் போட்டு இருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நடப்பாண்டில் நாட்டின் அனைத்து இடங்களிலும் குளிர் அதிகரித்து மக்கள் கம்பளி, ஸ்வட்டருடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சரி மனிதனுக்கு குளிருது, ஏடிஎம் இயந்திரத்துக்குமா குளிருது என்று நீங்கள் கேட்கலாம்.

    இமாசலப் பிரதேசத்தில் லஹவுல்ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள கீலாங் என்ற இடத்தில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்துக்கு ஹீட்டர் வைத்ததுடன், கம்பளி மற்றும் போர்வைகளைக் கொண்டு மூடி வைத்துள்ளனர். இதனால், ஏடிஎம் இயந்திரம் உறையாமல், பழுதாகாமல் இயங்கும் என்று வங்கி ஊழியர்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கீலாங் பகுதி மேலாளர் சங்கீதா கூறுகையில், ‘’வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் வரும்போது, அதாவது பகல் நேரங்களில் ஏடிஎம் இயந்திரத்துக்கு ஹீட்டர் போடுவது மற்றும் கம்பளிகளைக் கொண்டு மூடி வைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சாதாரண நேரங்களில் இயந்திரத்தின் மீது சூரிய ஒளிபடும். தற்போது இது இல்லை. இதனால் இயந்திரம் ஜாம் ஆகாமல் இருக்கும்’’ என்றார்.

    பொதுவாக இமாசலப் பிரதேசத்தின் பல இடங்களில் குளிர் காலத்தில் ஏடிஎம் இயந்திரங்கள் ஜாம் ஆகிவிடும். பயன்படுத்தமாட்டார்கள். தற்போது -25o செல்சியசுக்கு கீழே சீதோஷண நிலை சென்று விட்டதால், கடும் குளிர் நிலவி வருகிறது.

    இதுகுறித்து காசா எஸ்பிஐ மேலாளர் சமீர் கூறுகையில், ‘’குளிர் தற்போது -5oC, -10oC க்கு சென்றுவிட்டது. இதனால், ஏடிஎம் மையத்திற்குள் ஹீட்டர் போட்டு, தடிமனான துணிகளால் மூடி வைக்கிறோம். மையத்திற்குள் சூட்டை உருவாக்க தீ எரிக்க முடியாது. சீதோஷண நிலை மிகவும் குறையும்போது, இயந்திரத்தை மூடி வைத்துவிடுவோம். ஏனென்றால், பணம் கொடுக்கும் கன்வேயர் பெல்ட் ஜாம் ஆகி பணத்தை வழங்காது’’ என்றார்.

    பொதுவாக அந்த மாநிலங்களின் அரசு அலுவலக ஊழியர்களும் குளிரை சமாளிக்க மின் ஹீட்டர் அல்லது எல்பிஜி ஹீட்டர்களை வைத்துக் கொள்கின்றனர்.


  5. #1295
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    99,024

    Re: Interesting Facts Every Day !!

    விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம்: 13-1-1949



    ராகேஷ் ஷர்மா விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி பிறந்தார். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 138-வது மனிதராவார். இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார். இந்தியா சார்பில் விண்வெளியில் பறந்த முதல் வீரர் இவராவார்.

    இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

    1840 - லோங் தீவில் லெக்சிங்டன் என்ற நீராவிக்கப்பல் மூழ்கியதில் 139 பேர் கொல்லப்பட்டனர். 1847 - கலிபோர்னியாவில் மெக்சிக்கோ- அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 1908 - பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் கொல்லப்பட்டனர். 1915 - இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.

    1930 - மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது. 1938 - இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது. 1939 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.


  6. #1296
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    99,024

    Re: Interesting Facts Every Day !!

    ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் எரிந்த 20 ஆயிரம் கி.மீட்டர் காடுகள்: 13-1-1939



    ஆஸ்திரேலியாவில் 1939-ம் ஆண்டும் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்பட்டது. இதில் 20 ஆயிரம் கி.மீட்டர் காடுகள் தீக்கிரையானது.

    இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

    1942 - ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார். 1953 - யூகொஸ்லாவியாவின் தலைவராக மார்ஷல் ஜோசிப் டீட்டோ தேர்வு செய்யப்பட்டார். 1964 - கல்கத்தாவில் இந்து- முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1972 - கானாவில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது. 1982 - வாஷிங்டன், டிசியில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் கொல்லப்பட்டனர். 1985 - எதியோப்பியாவில் பயணிகள் ரெயில் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் கொல்லப்பட்டனர்.

    1991 - சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர். 1992 - இரண்டாம் உலகப் போரின்போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது. 2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர். 2006 சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.


  7. #1297
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    99,024

    Re: Interesting Facts Every Day !!

    பிளவுஸ் அணிய கற்றுக் கொடுத்தது யார்..? புடவையின் கதை





    பண்டிகை என்றாலே புத்தாடை. புத்தாடை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புது உற்சாகம்தான். அதிலும் பண்டிகைக் காலங்களில் பாரம்பர்ய ஆடைகள் அணிவது தனி அழகு. தமிழரின் பாரம்பர்ய உடை எனக் கருதப்படும் புடைவையின் ஆதி முதல் அந்தம் வரையிலான தொகுப்பு இங்கே.
    இன்று நாம் பின்பற்றும் புடைவை உடுத்தும் முறை முற்றிலும் மேற்கத்தியர்கள் பின்பற்றிய ஃபேஷன். ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு உடைகள் அணியும் முறை பின்பற்றப்பட்டது. அதுவே பாரம்பர்யம் என நம்பப்பட்டது. கி.பி 300-களில் ஆண், பெண் இருவரும் இணை ஆடை ஏதுமின்றி செவ்வக வடிவிலான துணியை மட்டுமே கட்டியுள்ளனர் என்பதை பழம்பெரும் சிற்பங்கள் மூலம் அறியலாம். 16-ம் நூற்றாண்டில், முகலாயர்களின் ஆதிக்கத்தினால் இந்தியாவுக்கு வந்ததுதான் சல்வார் கமீஸ், கிட்டத்தட்ட இந்தியாவின் தேசிய உடை என்று தற்போது கருதப்படுகிறது. அதுவரை ஒரே துணியை அணிந்திருந்த மக்கள், இரண்டு பாகங்களாகப் பிரித்து அணியும் முறைக்கு மாறினார்கள். ஆனாலும், இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்தது.
    செட்டிநாடு அல்லது கண்டாங்கி சேலை, தமிழர்களின் பொக்கிஷமாக நீண்ட நாள் இருந்தது. ரவிக்கை எனப்படும் பிளவுஸ் இல்லாமல், இந்தப் பிளைன் காட்டன் புடைவையைக் கட்டும் விதமும் வித்தியாசம். புடைவையின் விளிம்பு முட்டிக்குக் கீழே வரையில்தான் இருக்கும். வயல்களில் உழவும் கிராமியப் பெண்களுக்கு ஏற்ற உடையாகவும் கருதப்பட்டது. சிவப்பு, பச்சை, ரஸ்ட் நிறங்களில் மட்டுமே ஆரம்பத்தில் கண்டாங்கி சேலைகள் உற்பத்தியானது. பின், வெவ்வேறு வண்ணங்களில் நெய்யப்பட்டது. நாளடைவில் இந்த முறையும் மறைந்தது.
    19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பால் பிளவுஸ் அணியும் வழக்கம் வந்தது. அன்று வரை பிளவுஸ் அணியாமல் வெறும் புடைவையை மட்டும் அணிந்திருந்தனர். ரவீந்திரநாத் தாகூரின் சகோதரனின் மனைவி ஜெநாநந்தா நந்தினி தேவி மூலம்தான் பிளவுஸ் அணியும் வழக்கம் பிரபலமானது. விமரிசையாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நந்தினி தேவியை அனுமதிக்கவில்லை. காரணம் அவர் பிளவுஸ் இல்லாமல் சேலையை மட்டும் அணிந்திருந்தார். இதனால் நந்தினி தேவி மேற்கத்தியர்களின் ரவிக்கை அணியும் பழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து 'Blouse ' மற்றும் 'Petticoat ' ஆகிய சொற்கள் தமிழரின் அகராதியில் இடம் பெற்றன.
    உலகிலேயே தரமான பட்டு வகைகள் கிடைக்குமிடம் காஞ்சிபுரம். இங்கே தயாரிக்கப்படும் பட்டுப்புடைவை, அனைத்துத் தமிழ் பெண்களின் அலமாரியிலும் கண்டிப்பாக இருக்கும். ஆரம்ப காலத்தில் ஜரி விளிம்புகளை மட்டும் கொண்ட காஞ்சிபுரம் புடைவைகள், பின்னாளில் முழு புடைவையிலும் ஜரி பின்னப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதுபோல் 'Customised' புடைவைகளும் பிரபலமாயின. ஊர்த் திருவிழா முதல் திருமணம் வரை அனைத்திலும் பட்டுப் புடைவை உடுத்தும் முறை தமிழர்களின் வழக்கமானது. இப்போது தமிழ் பெண்கள் என்றாலே பட்டுப் புடைவை, தலை நிறைய மல்லிகைப்பூ, மூக்குத்தி, மஞ்சள், கொலுசு போன்றவை முக்கிய அடையாளங்களாகிவிட்டன.


    ஒரே ஒரு துணியை உடுத்திய காலம் போய் இப்போது புடைவை என்றாலே பிளவுஸ், பெட்டிகோட், சேலை பின் போன்றவை அவசியமாகிவிட்டது. எப்போதும் புடைவையில் பார்த்த பெண்களின் காலம் மலையேறி, பண்டிகை நாள்களில் மட்டுமே புடைவையில் பார்த்து ரசிக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்



  8. #1298
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    13,367

    Re: Interesting Facts Every Day !!

    ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6434 பேர் பலியாயினர் - ஜன.17, 1995

    ஜப்பானின் கோபே நகரில் 1995-ஆம் ஆண்டு இதே நாளில் 7.3 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 6434 பேர் பலியாயினர். மேலும், பலத்த சேதங்களும் ஏற்பட்டது.

    மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

    • 1377 - போப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார்.
    • 1595 - பிரான்சின் நான்காம் ஹென்றி ஸ்பெயின் மீது போரை அறிவித்தான்.
    • 1773 - கேப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.
    • 1899 - பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.
    • 1917 - கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.
    • 1928 - லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
    • 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரைக் கைப்பற்றினர்.
    • 1946 - ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.
    • 1951 - சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.
    • 1973 - பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பீன்சின் நிரந்தர அதிபர் ஆனார்.
    • 1991 - வளைகுடாப் போர் ஆரம்பித்தது.


  9. #1299
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    13,367

    Re: Interesting Facts Every Day !!

    மிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினம் - ஜன.17, 1917



    நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்., 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும், சத்தியபாமாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதாகும். இவருடைய அப்பா கேரளாவில் வக்கீலாக பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்.

    குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாததால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் அனுபவமான நிலையில் திரைப்படத் துறைக்கு சென்று, தனது அயராத உழைப்பில் முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும்பாலான மக்களை கவர்ந்தது.

    அண்ணல் காந்தியடிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இருந்த இவர், அறிஞர் அண்ணாவில் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் திமுகவில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பதவியில் இருந்தார். இவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter