தங்கமே தங்கம்
Discuss here on தங்கமே தங்கம் within the Jewellery forums, part of the Fashion forum; தங்கமே தங்கம் தங்கம், பல நூறு ஆண்டுகளாகவே, பல நாடுகளில் சூரியனின் அம்சமாக மதிக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டும் வருகிற ஒன்று. வேதங்கள் இதற்குக் கொடுத்த தனிப்பெயர் - ஸுவர்ணம் ...
-
11th Jan 2012, 02:13 PM #1
- Gender
- Female
- Join Date
- Jun 2011
- Location
- Chennai
- Posts
- 3,319
- Blog Entries
- 1
தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
தங்கம், பல நூறு ஆண்டுகளாகவே, பல நாடுகளில் சூரியனின் அம்சமாக மதிக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டும் வருகிற ஒன்று. வேதங்கள் இதற்குக் கொடுத்த தனிப்பெயர் - ஸுவர்ணம் (நன் நிறம்). தங்கம் ஒரு ஆபரணப் பொருளாக மட்டுமில்லாமல் பலவகையிலும் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டுவருகிறது.
* ஆயுர்வேதத்தில் தங்க பஸ்பத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் சுரக்கங்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் அழகு பூச்சுகளில், தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. உடலின் செல்களுக்கும், "டிஷ்யு'களுக்கும் இன்றியமையாத ஒரு "மினரல்' தங்கம்.
* தங்கம் சேர்ந்த பானங்களை/மருந்துகளை உட்கொள்வதோடு மட்டுமில்லாமல், ஊசி மூலமாகவும் தங்கம் சேர்த்த கூட்டுக்களை சருமத்தினுள் செலுத்தலாம்.
* மூட்டு வியாதிகளுக்கு தங்கம் ஒரு சிறந்த மருந்து என்பதை மருத்துவ விஞ்ஞானமே கூறியுள்ளது. இந்த சிகிச்சை முறைக்கு "க்ரைஸோ தெரபி' என்று பெயர்.
* தங்கத்துக்கு "கான்ஸர்' சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தும் திறன் இருப்பதால், அதற்கான ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
* "பராலிஸிஸ்' நோயால் முகம் பாதிக்கப்பட்டு, கண் இமைகளை மூட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு தங்கத் தகடை இமைகளின் மேல் பாகத்தினுள் பொருத்தி, நிவாரணம் அளிக்கப்படுகிறது.
* சூரியனின் உஷ்ண கிரணங்கள் தாக்காமலிருக்க விண்கலனின் சில பாகங்களில், மெல்லிய தங்கப்பூச்சு கொடுக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி விண்கலனில் செல்பவர்கள் அணியும் "ஹெல்மெட்'டிலுள்ள கண்ணாடித் தடையில் தங்கக் "கோட்டிங்' கொடுக்கப்படுகிறது.
* மின் ஓட்டத்தை தங்கம் வெகு எளிதில் கூடத்துகிறது. செல்ஃபோன், கணிப்பொறி போன்ற பொருள்களில் உபயோகப்படும் "எலெக்ட்ரானிக் சர்க்யூட்'களில் சிறிய "வால்டேஜ்'ல் சிறிய அளவில் "கரெண்ட்' அனுப்பவும், வினாடிக்கு பல தடவை தொட்டு வெட்டு நடத்தும் இணைப்புகளிலும் தங்கம்தான் உபயோகிக்கப்படுகிறது.
* ஆலய கோபுரங்களின் உச்சியிலும், பிரபலமான பழமைவாய்ந்த கட்டடங்களின் கூரைகளிலும் தங்கத்தகடுகள் பதிக்கப்படுகிறது. இதனால் கட்டடத்தின் அழகு அதிகரிப்பதுடன் அவை சுற்றுச் சூழல்களால் ஏற்படும் சேதத்திலிருந்தும் காப்பாற்றப்படுகின்றன. இது "லீஃபிங்க்' அல்லது "கில்டிங்க்' என்று அழைக்கப்படுகிறது.
* வெளிப்புறம் மட்டுமல்லாது வீட்டின் உள்புறம் பயன்படுத்தும் உலோகத்தில் செய்யப்பட்ட விக்ரகங்களுக்கும், வேறு கலைப்பொருள்களுக்கும் அதன் கலையழகு குன்றாதிருக்க அவற்றுக்குத் தங்கத் தகடு போர்த்தலாம்.
* நாட்டின் பொருளாதாரத்துக்கு தங்கம் அளவுகோல். உலகம் தோன்றிய நாள் முதலே ஒரு விலையுயர்ந்த உலோகமாக மதிக்கப்பட்டு வருகிறது.
இப்படி பல வகையிலும் உபயோகப்படுகின்ற வேறு ஒரு உலோகத்தை, நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான் தங்கத்துக்கு இத்தனை மகிமை.
-கே.சுஜா
நன்றி : மங்கையர் மலர்
தினமலர்கங்கா
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
பூவுலகம் காண வாராய் மகளே
Similar Threads
-
உங்கள் சருமத்திற்குத் தேவையான 5 பொருட்கள
By Nishahameetha in forum Skin CareReplies: 0Last Post: 1st Dec 2011, 10:36 AM -
தங்கத்தை பூசிக்கொள்ளும் தங்கங்கள்
By silentsounds in forum Misc BeautyReplies: 0Last Post: 21st Oct 2011, 08:33 AM -
குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்ச
By silentsounds in forum SchoolerReplies: 5Last Post: 23rd Aug 2011, 12:58 PM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks