Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree19Likes
  • 7 Post By jv_66
  • 5 Post By sumathisrini
  • 1 Post By jv_66
  • 1 Post By thenuraj
  • 2 Post By sapar
  • 1 Post By subamithra
  • 2 Post By smmadhumathi

ஒரு குழந்தை திருத்தி சொல்லிய கதை - Story Retold by a Child


Discussions on "ஒரு குழந்தை திருத்தி சொல்லிய கதை - Story Retold by a Child" in "Kids Zone" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    ஒரு குழந்தை திருத்தி சொல்லிய கதை - Story Retold by a Child


    இக்காலத்தில் சில குழந்தைகளின், 'ஐக்யூ' பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர்.

    சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாகப் பணி புரியும், அவர் சொன்னது:

    சாதாரணமா தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத மொழியாகப் பார்த்து, ஒதுக்கி வைப்பாங்க. ஆனா, நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; இங்கே, தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க.

    சமீபத்தில், யூ.கே.ஜி., குழந்தைகளுக்கு, படம் பார்த்து கதை சொல்லும் வகுப்பு எடுத்துட்டு இருந்தேன். அதில் ஒரு கதையில், ஆலமரத்தில் கூடுகட்டி, முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு, 'ஸ்வாகா' செய்து வருவதையும், பாம்பை பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையை, காவலர்கள் கண்முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பை கொன்று, முத்து மாலையை, காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையில் இருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்கு விளக்கினேன்.

    தலையைத் தலையை ஆட்டியபடி எல்லா குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று, 'இது என்ன கதை மிஸ்?' என்றாள்.
    'இது தான் நீதிக்கதை...' என்றேன்.

    'இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?' எனக் கேட்டாள்.

    'தன்னைவிட பலசாலியான எதிரிகளை, தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்ங்கிறது தான் நீதி...' என்றேன்.


    'அதுக்காக காகம் என்ன செஞ்சது?' என்றாள்.

    'ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டது...' என்றேன்.

    உடனே, அக்குழந்தை, 'ஒருத்தருக்கு சொந்தமான பொருளை, அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தா, அது திருட்டு தானே... அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க மிஸ்... திருடறது தப்பு இல்லயா?' எனக் கேட்டாள்.

    குழந்தையின் அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. 'திருதிரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தாள்...

    'என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பை கொலை செய்றது தப்பில்லயா மிஸ்... பாம்பும் ஒரு உயிர் தானே...' என்றாள்.

    நானும், 'தப்பு தான்!' என்றேன். உடனே, 'இந்தக் கதையில திருடுறதையும், கொலை செய்றதையும் தானே எங்களுக்கு சொல்லித் தந்திருக்கீங்க; இது நீதிக் கதையா?' எனக் கேட்டாள்.

    வயசுக்கு மீறி பேசும் குழந்தைகளை அதுவரை திரைப்படங்கள்ல மட்டும் தான், பார்த்திருக்கிறேன்; அன்று நேரிலேயே பாத்தேன். இதே கதையை தான், நம் பெற்றோரும், நாமும் படித்துள்ளோம். யாராவது இது குறித்து, இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்துள்ளோமா?

    அக்குழந்தை, 'காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு வேற வழி தோணலியா மிஸ்?' எனக் கேட்டாள்.

    'தோணலியே கண்ணு...' என்று, என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன்.

    ஆனாலும், உள்ளுக்குள் குறுகுறுப்பு! குறை கூறத் தெரிந்த குழந்தைக்கு, அதற்கு வழி கூறும் ஐடியா தெரிந்திருக்குமோ என நினைத்து, 'குட்டிமா... இதுக்கு வேற ஏதாவது வழி இருக்குதா செல்லம்...' என்றேன்.

    உடனே அது, 'இருக்கே!' என்று கூறி, 'காகம் சாது; பாம்பு துஷ்டன். 'துஷ்டனை கண்டா தூர விலகு'ன்னு நீங்க தானே சொல்லி இருக்கீங்க... அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி, முட்டை போடலாம்ல்லே மிஸ்... அப்ப, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாதுல்ல...' என்றாள்.

    இதைக் கேட்டதும், உறைந்து போனேன். இப்படியொரு கோணத்தில், நாம் ஏன் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லை என, நினைச்சேன் எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.

    நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, 'பிளைண்ட்' டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இக்காலத்து பிள்ளைகள், துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.

    வலைத்தளத்திலிருந்து


    Similar Threads:

    Sponsored Links
    Jayanthy





  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    re: ஒரு குழந்தை திருத்தி சொல்லிய கதை - Story Retold by a Child

    அருமையான பகிர்வு ஜெயந்தி. குழந்தையின் எதிர் கேள்வியும், தீர்வும் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது தான். நாம் எல்லாம் பெரியவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று எதிர்கேள்வி கேட்காமல் இருந்தோம். இந்த காலத்துக் குழந்தைகள் அப்படியல்ல... நாம் கொடுக்கும் விளக்கம் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள். இல்லையேல் வாதம் செய்யவும் தயங்குவது இல்லை.


  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: ஒரு குழந்தை திருத்தி சொல்லிய கதை - Story Retold by a Child

    Thanks friends.



    Quote Originally Posted by sumathisrini View Post
    அருமையான பகிர்வு ஜெயந்தி. குழந்தையின் எதிர் கேள்வியும், தீர்வும் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது தான். நாம் எல்லாம் பெரியவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று எதிர்கேள்வி கேட்காமல் இருந்தோம். இந்த காலத்துக் குழந்தைகள் அப்படியல்ல... நாம் கொடுக்கும் விளக்கம் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள். இல்லையேல் வாதம் செய்யவும் தயங்குவது இல்லை.
    ஆமாம் சுமதி . ரொம்ப கரக்ட் நீங்க சொல்றது .

    sumathisrini likes this.
    Jayanthy





  4. #4
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: ஒரு குழந்தை திருத்தி சொல்லிய கதை - Story Retold by a Child

    சூப்பர் குழந்தை.... யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கணும்னு நினைக்கும் மனம்... சும்மாவா சொன்னாங்க...'குழந்தையும் தெய்வமும் ஒண்ணு"ன்னு...!

    subamithra likes this.

  5. #5
    sapar is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    108

    re: ஒரு குழந்தை திருத்தி சொல்லிய கதை - Story Retold by a Child

    very interesting ,super child

    thenuraj and subamithra like this.

  6. #6
    subamithra's Avatar
    subamithra is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    VIRUDHUNAGAR
    Posts
    700

    re: ஒரு குழந்தை திருத்தி சொல்லிய கதை - Story Retold by a Child

    நல்ல பகிர்வு ஆன்ட்டி , கதையோட முடிவு நல்லாருந்தது .

    ( மன்னிக்கவும் , ரிப்ளை பண்ணதுக்கு அப்பறம் தான் இந்த போஸ்ட் எந்த த்ரெட்ல இருக்குன்னு பார்த்தேன் , நான் இங்கே ரிப்ளை பண்ணலாமா என்னனு தெரியல , தவறு இருந்தால் மன்னிக்கவும் )

    Last edited by subamithra; 10th Jan 2016 at 09:12 AM.
    thenuraj likes this.

  7. #7
    smmadhumathi's Avatar
    smmadhumathi is offline Minister's of Penmai
    Real Name
    Madhumathi
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Hyderabad
    Posts
    3,057

    re: ஒரு குழந்தை திருத்தி சொல்லிய கதை - Story Retold by a Child

    super ka nijamave oru kan thirappu than intha pagirvu

    thenuraj and subamithra like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter