Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree51Likes

Little grany stories - Patti Sonna Kathaigal


Discussions on "Little grany stories - Patti Sonna Kathaigal" in "Kids Zone" forum.


  1. #11
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    Little  grany stories - Patti Sonna Kathaigal-ganges.jpg
    கங்கை ஆறு பூலோகம் வந்த கதை .

    பகீரதன் என்ற ஒரு அரசன் தன் உறவினர்களின் அஸ்தியை புனிதமான முறையில் கரைத்து அவர்களுக்கு பாவ விமோசனம் தர வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அதற்காக மிகக் கடுமையாக தவம் செய்து [பகீரதப் பிரயத்தனம் என்போமே] இந்திரனிடம் சம்மதம் வாங்கினார். அப்போது கங்கை நதி இந்திர லோகத்தில் மட்டுமே இருந்தது. பூலோகத்துக்கு வர வேண்டுமானால் என் வேகத்தை [force ] தாங்கக் கூடியவர் யார் என்று கங்கை கேட்டாள். சிவா பெருமான் கங்கையின் வேகத்தை தன் தலையில் தாங்குவதாக வாக்களித்தார். தன் வேகத்தை யார் தாங்க முடியும் என்று எள்ளி நகைத்த கங்கையை தன் ஜடா முடியில் சிறைப் படுத்திவிட்டார் சிவன். என்ன செய்தும் கங்கையால் வெளியே வரவே முடியவில்லை. கங்கையின் கர்வமும் அடங்கிப்போனது. பகீரதனின் கெஞ்சலுக்கு கட்டுப்பட்டு கங்கை சிறிய அளவில் வெளியேற சிவன் அனுமதி அளித்தார். இதுதான் கங்கை ஆறு மேலோகத்தில் இருந்து பூலோகம் வந்த கதை.


    Sponsored Links
    Last edited by suganthiramesh; 15th May 2012 at 09:43 PM.
    umaravi2011 likes this.

  2. #12
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    Quote Originally Posted by sowmyasri0209 View Post
    Hi Suganthi,

    Kuttiesku puriyarapla.... Avanga languagelaye koduthurkeynga.... Nalla irukku
    thanks sowmi.


  3. #13
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    அணில் முதுகில் மூன்று கோடுகள்
    இலங்கை யுத்தத்திற்கு கடல் கடந்து செல்வதற்காக வானர சேனை பாலம் கட்டிக் கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறு அணில் தானும் ராமபிரானுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தது. இங்கே அங்கே ஓடி சிறு குச்சிகளை தன் வாயில் கவ்விக் கொண்டு வந்து பாலம் கட்டும் இடத்தில சேர்த்தது. இதை பார்த்துக் கொண்டு இருந்த ராம பிரான் அந்த அணிலை தன் கையில் எடுத்து மூன்று விரல்களால் அதன் முதுகை தடவிக் கொடுத்தார். அணிலின் முதுகில் மூன்று கோடுகள் வரக் காரணம் இதுதான்.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-hhh.jpg

    Last edited by suganthiramesh; 16th May 2012 at 12:42 AM.
    umaravi2011 likes this.

  4. #14
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    குபேரன் வைத்த விருந்து
    செல்வங்களின் தலைவனான குபேரனுக்கு சிவ பெருமானின் எளிமையைப் பற்றி எப்போதும் ஒரு ஏளனம் இருந்தது. ஒரு நாள் மிகப் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்து சிவ பெருமானை விருந்துக்கு அழைக்கிறார். அப்படி அழைக்கும் போது யாருமே சாப்பிட்டு முடிக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய விருந்து தடபுடலாக ஏற்பாடு செய்து இருக்கிறேன் என்று கர்வமாகக் கூறுகிறார். சிவ பெருமான் தன்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டு அதற்கு பதிலாக விநாயகரை அனுப்புவதாகக் கூறுகிறார். அழகாபுரிக்கு விருந்துக்கு சென்ற விநாயகர் அத்தனை உணவையும் உண்டுவிட்டு இன்னும் பசிக்கிறது வேறு உணவு வேண்டும் என்று கேட்கிறார். அரண்மனை வாசிகள் சமைக்க சமைக்க விநாயகரும் இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டே இருக்க என்ன செய்வது என்று புரியாமல் குபேரன் விழிக்கிறார்.இறுதியில் இது ஈசனின் திருவிளையாடல் என்று உணர்ந்து விநாயகரிடமும், சிவ பெருமானிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார்.
    எளிமையாக இருப்பவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கக் கூடாது. சரியா குட்டீஸ்.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-images.jpg

    Last edited by suganthiramesh; 16th May 2012 at 12:37 AM.
    umaravi2011 likes this.

  5. #15
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    மார்கண்டேயர் கதை
    புத்திரன் வேண்டி மிருகண்டு மகரிஷியும் அவர் மனைவியும் தவம் செய்கின்றனர். அப்போது இறைவன் அவர்கள் முன் தோன்றி இரண்டு விதமான நிபந்தனைகள் விதிக்கிறார். ஒன்று ஆயுள் குறைவான புத்திசாலி மகன் பிறப்பான் அல்லது மிக நீண்ட ஆயுள் கொண்ட முட்டாள் மகன் பிறப்பான் என்பதே. மகரிஷி புத்தியுள்ள மகன் வேண்டும் என்று கேட்கிறார். அதன்படி அவர்களுக்கு ஒரு புத்திசாலி மகன் பிறக்கிறான். ஆனால் அவனுக்கு ஆயுள் பதினாறு வயது வரை மட்டுமே . இதை அறிந்த மார்கண்டேயன் என்னும் அச்சிறுவன் தீவிர சிவ பக்தனாக மாறுகிறான். எந்நேரமும் சிவ பூஜையும், சிவ நாமங்களும் சொல்லிக் கொண்டு இறைவனே கதி என்று இருக்கிறான். அவன் ஆயுள் முடியும் நேரத்தில் எம கிங்கரர்கள் அவன் உயிரை எடுத்துச் செல்ல வருகிறார்கள். ஆனால் மார்கண்டேயன் சிவ லிங்கத்தை அணைத்தபடியே இருந்ததால் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
    பிறகு யமராஜரே நேரில் வந்து பாசக் கயிற்றை வீசுகிறார். அந்தக் கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டுவிட சிவபெருமான் கோபம் கொண்டு யமனுடன் போர் புரிகிறார். நான் என் கடமையை செய்யத்தானே வந்தேன் என்று யமராஜன் சொல்ல அதற்கு சிவபெருமான் தீவிரமான பக்தர்களுக்கு விதிவிலக்கு உண்டு என்று கூறி யமனை திரும்பிப் போகச் சொல்கிறார்.
    இதன் காரணமாகவே சிவ பெருமான் கால சம்ஹார மூர்த்தி என்று அழைக்கப் படுகிறார். இந்த உலகம் உள்ளவரை மார்கண்டேயர் நித்ய சிரஞ்சீவியாய் இவ்வுலகைச் சுற்றி வந்து நன்மைகள் செய்து கொண்டே இருப்பார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    Little  grany stories - Patti Sonna Kathaigal-yama.jpg

    Last edited by suganthiramesh; 16th May 2012 at 01:29 AM.
    umaravi2011 likes this.

  6. #16
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    காவேரி ஆறு பற்றி தெரிந்து கொள்வோமா.
    பிராமகிரியை ஆண்ட காவேர மன்னன் மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருந்தான். கடுமையான தவத்திற்குப் பிறகு சிவன் அவர் முன்னே தோன்றி காவேரி என்ற பெண்ணை மகளாகக் கொடுப்பதாகவும் அவள் மூலம் மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கம் நிறைவேறும் என்றும் வரம் தருகிறார். திருமண வயதில் இருக்கும் காவிரியை அகத்திய முனிவருக்கு அரசர் மணமுடித்துக் கொடுக்கிறார். அகத்தியர் எங்கு சென்றாலும் காவேரி அவரைப் பின்தொடர்ந்து செல்வது வழக்கமாயிற்று. ஒரு நாள் காவிரிக்கு உடல் நிலை சரியில்லாததால் அகத்தியரோடு அவளால் உடன் செல்ல முடியவில்லை. ஆனால் அகத்தியருக்கோ அவளை தனியாக ஆஷ்ரமத்தில் விட்டுச் செல்ல மனமில்லை. அதனால் அவளை நீராக மாற்றி தன் கமண்டலத்தில் அடைத்து உடன் எடுத்துச் செல்கிறார். அந்த கமண்டல நீரை ஒரு பாறையின் மீது வைத்துவிட்டு நீராடச் செல்கிறார்.
    காவேரி இனி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்று தேவர்கள் அறிகின்றனர். அவர்கள் விநாயகரிடம் முறையிட அவரோ ஒரு காகத்தின் ரூபத்தில் வந்து அந்த கமண்டல நீரை தட்டிக் கவிழ்த்து விடுகிறார். உடனே காவேரி நதியாக பொங்கிப் பிரவாகித்து பாய்கிறாள். சூரபத்மனின் அட்டகாசத்தால் வறண்டு போய்க் கிடந்த தென்னாடு காவிரியால் வளம் பெற்றுக் கொழிக்கத் தொடங்கியது. தன் மனைவியைக் காணாமல் கவலைப் பட்ட அகத்தியருக்கு அவள் பிறவியின் நோக்கத்தை எடுத்துச் சொல்கிறார் விநாயகர். தென்னாட்டு கங்கையாகி விட்டாள் காவேரி.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-kaveri.jpg

    Last edited by suganthiramesh; 16th May 2012 at 07:34 AM.
    umaravi2011 likes this.

  7. #17
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    மகாசிவராத்திரியின் மகிமை
    ஒரு வேடன் காட்டுக்குள் வேட்டையாடிக் கொண்டே இருந்தான். இரவு ஆனதைக் கூடக் கவனிக்கவில்லை. நன்கு இருட்டிய பிறகு எப்படி திரும்பிச் செல்வது என்று வழி தெரியாமல் திகைத்தான். அந்த இரவை அங்கேயே கழிக்கலாம் என்று ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இரவு முழுவதும் விழித்துக் கொண்டே இருந்தான். தூக்கம் வராமல் இருப்பதற்காக ஒவ்வொரு இலையாக பிச்சி எறிந்து கொண்டு இருந்தான். அவனுக்கு சாப்பிடுவதற்கும் ஒன்றும் இல்லை. இரவு முழுவதும் பட்டினியாக இருந்துவிட்டு விடிந்த பிறகு தன் வீடு வந்து சேர்ந்தான். தான் வேட்டையாடியவற்றை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தான். அவனுடைய ஆயுள் முடியும் நேரத்தில் எம கின்கரர்களுக்கு பதிலாக சிவ லோகத்தில் இருந்து அவனை அழைத்துச் செல்ல வந்தார்கள்.
    சாதாரண வேடனுக்கு சிவ லோகப் ப்ராப்தமா என்று அவன் ஆச்சரியப் பட்டான். அவன் காட்டில் அமர்ந்திருந்தது ஒரு வில்வ மரத்தின் மீது..இரவு முழுவதும் பட்டினி கிடந்தது உபவாசதிற்கு சமம். அவன் பிய்த்து எறிந்த இலைகள் மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அன்றைய இரவோ மகாசிவராத்திரி. அவனுக்கே தெரியாமல் அவன் செய்த இலை பூஜையும் , உபவாசமும் அவனுக்கு சிவலோகப் ப்ராப்தியை வழங்கிவிட்டன. சிவ லோகத்தில் இருக்க வேண்டிய காலம் முடிந்த பிறகு மறு பிறவியில் அவன் அரசனாகப் பிறந்தான். அறியாமல் செய்த பூஜைக்கே இவ்வளவு பலன்.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-sivaraathri.jpg

    Last edited by suganthiramesh; 16th May 2012 at 08:22 AM.
    umaravi2011 likes this.

  8. #18
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    Suganthi...romba nalla irukku unga narration...Great Job! I hav copied this n kept... padicha 5 stories-la 2 stories naan ippa dhan kaelvi padraen... thank u so much for this thread!

    suganthiramesh likes this.

  9. #19
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    பரசுராமருக்கு பாவ விமோசனம்
    தன் தந்தையான ஜமதக்னியின் ஆணைப்படி ஒரு கோடாலி கொண்டு சொந்த தாயாரான ரேணுகா தேவியின் தலையை வெட்டி விடுகிறார் பரசுராமர். வெட்டிய கோடாலி அவர் கையிலேயே ஒட்டிக் கொண்டு விடுகிறது. தன் பாவத்தில் இருந்து விடுபட்டால் மட்டுமே கோடாலி கையிலிருந்து விடுபடும் என்று அறிந்து பாவ விமோசனம் தேடி அலைகிறார் பரசுராமர். இறுதியில் பிரம்மா குளம் என்னும் நீர் குளத்தை அடைகிறார். சுற்றிலும் மலைகள் சூழ இருந்த பிரம்மா குளத்து நீர் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று நினைத்து தன் கையில் ஒட்டியிருந்த கோடாலியால் மலையை சிறிதளவு வெட்டி குளத்து நீர் ஓடையாக வெளியேற விடுகிறார். அவர் கையில் ஒட்டியிருந்த கோடாலியும் கீழே விழுகிறது. பாவ விமோசனம் தந்த பிரம்மா குளம் பிறகு பிரவாகித்து ஓடும் பிரம்மபுத்ரா நதியாக மாறுகிறது.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-parasurama.jpg

    Last edited by suganthiramesh; 16th May 2012 at 12:11 PM.
    umaravi2011 likes this.

  10. #20
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    very good stories bala. These stories help our kids to know about our rich culture, heritage and mythology. keep sharing

    suganthiramesh likes this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter