Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree51Likes

Little grany stories - Patti Sonna Kathaigal


Discussions on "Little grany stories - Patti Sonna Kathaigal" in "Kids Zone" forum.


  1. #21
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    விஷ்ணுவின் வாமன அவதாரம்
    பலி என்ற அரசன் ஏகப்பட்ட கடுமையான தவங்கள் செய்து இந்த உலகம் முழுவதையும் தன் ஆட்சிக்கு கீழே கொண்டு வந்துவிடுகிறான். மற்ற உலகங்களையும் அவன் ஆக்கிரமித்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிடுகிறார்கள். விஷ்ணுவும் ஒரு பிராமணக் குடும்பத்துச் சிறுவனாக அவதாரம் எடுக்கிறார். அச்சிறுவன் ஒரு நாள் பலி சக்ரவர்த்தியிடம் சென்று யாசகம் கேட்கிறான். சிறுவன் என்ன பெரிதாக கேட்டு விடப் போகிறான் என்று நினைத்த அரசன் 'என்ன வேண்டுமானாலும் கேள் ..தருகிறேன்' என்று வாக்கு தருகிறார். என் கால் பாதம் படியும் அளவுக்கு மூன்று அடி நிலம் வேண்டும் என்று கேட்கிறார் வாமனர். சிறுவனின் கால் தானே என்று நினைத்த பலி ஒத்துக் கொள்கிறார். உடனே வாமனர் தன் விஸ்வரூப தரிசனம் எடுத்து ஒரு அடியில் பூலோகத்தையும், இரண்டாம் காலடியில் மேலோகத்தையும் ஆக்கிரமித்து விடுகிறார். மூன்றாம் அடி வைக்க இடம் இல்லாததால் பலியின் தலை மீதே கால் வைத்து அவனை பூமிக்குள் அழுத்திவிடுகிறார். விஷ்ணுவின் பாதம் பட்டதால் பலி மகாபலி ஆகிறான்.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-vamana.jpg


    Sponsored Links
    Last edited by suganthiramesh; 16th May 2012 at 12:37 PM.

  2. #22
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    Quote Originally Posted by Penmai View Post
    very good stories bala. These stories help our kids to know about our rich culture, heritage and mythology. keep sharing
    that is really a great appreciation. infact an energy booster to me. thank you mam.

    Penmai and Parasakthi like this.

  3. #23
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    கோவர்த்தனகிரி
    ஸ்ரீ கிருஷ்ணர் வசித்த பிருந்தாவனத்தில் வருடத்திற்கு ஒரு முறை அனைவரும் இந்திர வழிபாடு செய்வார்கள் . தவறாமல் மழையைக் கொடுக்கும் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் செய்வார்கள். ஒரு முறை கிருஷ்ணர் 'மலைகள் இருந்தால் தானே மழை பெய்யும்..அதனால் நம் கோவர்தன மலையே மழை பெய்வதற்கு காரணம் ...நன்றி சொல்ல வேண்டுமென்றால் நம் மலைகளுக்கும் அதில் உள்ள காடுகளுக்கும் தான் சொல்லவேண்டும்' என்று சொல்கிறார். ஊர் மக்களும் இதனை ஒத்துக் கொள்கிறார்கள். கோவர்த்தன மலைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல யாகங்கள் செய்கிறார்கள்.
    தான் ஒதுக்கப்பட்டதை அறிந்த இந்திரன் கடுமையான இடி, மின்னலுடன் கூடிய மழையை ஏவி பிருந்தாவனதையே அழிக்கப் பார்க்கிறான் . தன் மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று கிருஷ்ணர் கோவர்தன மலையிடம் வேண்டுகிறார். மலையும் ஒத்துக் கொள்ளவே கிருஷ்ணர் தன் சுண்டு விரலால் மலையை தூக்கி நிறுத்த மக்கள் அனைவரும் அதன் நிழலில் தஞ்சம் அடைகின்றனர். இதை பார்த்த இந்திரன் தன்னை விட பலசாலிகளும் , சக்தி வாய்ந்தவர்களும் உண்டு என்று புரிந்து கொண்டு கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்கிறார்.
    இயற்கை வளங்கள் எல்லா வகையிலும் நமக்குபாதுகாப்புதான்.அவற்றை நாம் வணங்க வேண்டுமே தவிர அழிக்கக்கூடாது..சரியா குழந்தைகளே..மலைகள் இருந்தால் தான் காடுகள் இருக்கும்..காடுகள் இருந்தால் தான் மழை பெய்யும். மழை தவறாமல் பெய்தால் தான் மக்கள் செழிப்பாக வாழலாம்.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-govardan.jpg


  4. #24
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    அன்னபூரணி
    ஒரு முறை சிவ பெருமானும் பார்வதி தேவியும் கைலாயத்தில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் . அப்போது சிவன் 'இந்த உலகமே மாயை..நாம் உண்ணும் உணவிலிருந்து அனைத்துமே மாயை ' என்று சொல்கிறார். இதை கேட்ட உமாதேவி கோபம் கொள்கிறார். கைலாயத்தை விட்டே வெளியேறி விடுகிறார். சக்தி இல்லாவிட்டால் எதுவுமே இல்லையே. உணவும் இல்லாமல் போனது. எங்கு பார்த்தாலும் பட்டினி, வறட்சி என்று உலகமே வறண்டு போனது. பல உயிர்கள் செத்து மடிந்தன. இதைப் பார்த்த உமாதேவி ஜீவராசிகள் மீது இரக்கப்பட்டு காசிக்குச் சென்று அங்கே தன் கையாலேயே உணவு சமைத்து அனைவருக்கும் தருகிறார். உமாதேவி திரும்ப வந்ததை அறிந்த சிவனும் காசிக்குச் சென்று உணவுக்காக பார்வதியிடம் கையேந்தி நிற்கிறார். மாயை என்ற வார்த்தை முற்றும் துறந்தவர்களுக்கு மட்டுமே ..இந்த பூலோக வாழ்க்கைக்கு பொருந்தாது என்று சிவன் ஒத்துக்கொள்கிறார். பார்வதியும் அவருக்கு உணவு அளித்து அன்னபூரணியாக காட்சி அளிக்கிறாள்.
    இந்த உலகத்தில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது அர்த்தம் நிச்சயம் இருக்கும் குழந்தைகளே..
    Little  grany stories - Patti Sonna Kathaigal-annapoorani.jpg


  5. #25
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    மூஷிக வாகனன்
    மூஷிகாசுரன் என்ற அரக்கனின் அட்டகாசங்கள் அளவுக்கு மீறி போய்க் கொண்டிருந்த காலம் அது. அசுரனின் கர்வம் அதிகமாகி அவன் விநாயகரையே வம்புக்கு இழுக்க ஆரம்பித்தான். அசுரனின் தொல்லை தாங்க முடியாத நிலையில் விநாயகர் தன் ஒரு தந்தத்தை ஆயுதமாக்கி அவன் மீது எறிகிறார். உடனே அவன் எலியாக மாறி ஓடத் துவங்குகிறான். தந்தமும் அவனை விடாமல் துரத்தியது. தப்பிக்க முடியாது என்று ஆனதும் மூஷிகாசுரன் கணபதியிடம் மன்னிப்பு கேட்கிறான். கணபதியும் அவனை மன்னித்து என்றும் தனக்கு கட்டுப்பட்டு இருக்கும் மூஷிக வாகனமாகவே இருக்கும்படி கூறிவிடுகிறார். தேவையில்லாமல் யாரையும் வம்புக்கு இழுக்கக் கூடாது குட்டிப் பசங்களா.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-mooshika.jpg


  6. #26
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    மகிஷாசுரமர்தினி
    மகிஷாசுரன் என்ற அரக்கன் பல கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் சில வரங்களை பெற்றுக்கொண்டான். ஒரு பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு இல்லை என்றும் வரம் பெற்றான். ஒரு பெண்ணால் தன்னை என்ன செய்து விட முடியும் என்ற கர்வம் அவனுக்கு இருந்தது. பூலோகம் முழுவதிலும் மக்களை இம்சித்து தன் அராஜகத்தை மேலோகத்திலும் தொடங்கினான். இந்திரனை விரட்டிவிட்டு அவன் அரியாசனத்தை பிடுங்கிக் கொண்டான். தேவர்கள் அனைவரும் சிவனிடம் முறையிட்டு அழுதனர்.
    எல்லா கடவுளுடைய சக்தியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே மகிஷனை அழிக்க முடியும் என்று சிவன் கூறுகிறார். உடனே பிரம்மா,விஷ்ணு, சிவன் மற்றும் அனைத்து கடவுள்களும், தேவர்களும் தங்கள் உடம்பில் உள்ள சக்தியை ஒளிவெள்ளமாக வெளிப்படுத்துகின்றனர். எல்லா ஒளிவேள்ளமும் ஒன்றாகச் சேர்ந்து ஆயிரம் கைகளை உடைய பெண் தெய்வமாக வடிவெடுக்கிறது. ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு தெய்வத்தின் ஆயுதத்தை ஏந்தி சிங்கத்தின் மேல் அமர்ந்து மகிஷனை அழிக்கச் செல்கிறாள் துர்க்கை என்னும் சிம்ஹவாகினி. எருமைத் தலையுடன் போரிட வந்த மகிஷனை தன் வாளால் வெட்டி வீழ்த்தி மகிஷாசுரமர்த்தினி ஆகிறாள் துர்க்கை.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-durga.jpg


  7. #27
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    ராகுவும், கேதுவும்
    பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்ததில் தேவர்கள், அசுரர்கள் இருவருக்கும் சம பங்கு உண்டு. ஆனால் மோகினி ரூபத்தில் இருந்த விஷ்ணுவுக்கு அசுரர்கள் அமிர்தம் பருகக் கூடாது என்ற எண்ணம் இருந்தது. இதனை அறிந்து கொண்ட அரக்கர்களில் இருவர் தேவர்களை போல உருவம் எடுத்து தேவர்கள் இருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டனர். சூரியனும், சந்திரனும் இந்த அரக்கர்களை விஷ்ணுவிடம் காட்டிக் கொடுத்து விட்டனர். அதற்குள் ராஹு, கேது என்ற அந்த அரக்கர்கள் இருவரும் கொஞ்சம் அமிர்தத்தை குடித்து விட்டனர். கோபம் கொண்ட விஷ்ணு அரக்கர்களின் தலையை வெட்டிவிட்டார். இருந்தாலும் அமிர்தம் குடித்துவிட்ட படியால் அவர்களுக்கு இறப்பு என்பது நேரவே இல்லை. இறப்பு என்பது இல்லையென்றால் அவர்களும் தேவர்கள் தானே. ஆனால் தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியனையும், சந்திரனையும் இன்றளவும் அவர்கள் மன்னிக்கவில்லை. சூரியனையும், சந்திரனையும் ராஹுவும், கேதுவும் விழுங்கிவிடும் நாள்தான் க்ரஹனம் என்று நம்பப் படுகிறது.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-rahu.jpg


  8. #28
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    வால்மீகி

    ஒரு ஊரில் ஒரு திருடன் சதாசர்வ காலமும் வழிப்பறி செய்து கொண்டே இருந்தான். ஒரு முறை தன் வழியே வந்த நாரதரிடமும் வழிப்பறிக்கு முயன்றான். தான் ஒரு முற்றும் துறந்த முனிவர் ..தன்னிடம் தருவதற்கு எதுவும் இல்லை என்று நாரதர் சொல்கிறார். எதற்காக நல்ல விஷயங்களை நாடிச் செல்லாமல் இப்படித் திருடிப் பிழைக்கிறாய் என்று நாரதர் கேட்கிறார். தன குடும்பத்தை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை என்று திருடன் சொல்கிறான். நீ திருடித் தருவதை பங்கு போடும் உன் குடும்பம் அதனால் ஏற்படும் பாவத்திலும் பங்கு போடுமா என்று நாரதர் கேட்கிறார். அன்று வீடு சென்ற அத்திருடன் இதே கேள்வியை தன் பெற்றோரிடமும், மனைவியிடமும் கேட்கிறான். தாங்கள் யாரும் அவனை திருடச் சொல்லவில்லை என்றும் அவனாக சேர்த்துக் கொண்ட பாவத்தில் தங்களுக்கு துளியும் பங்கில்லை என்று கூறிவிடுகிறார்கள்.
    மனம் வெறுத்துப்போன திருடன் வீட்டை விட்டு வெளியேறி காடு மலைகளில் எல்லாம் கடுமையான தவம் மேற்கொண்டான். தன் குடும்பத்தை முற்றிலும் மறந்து போனான். பல வருட கடுமையான தவத்திற்குப் பிறகு வானத்தில் இருந்து அசரீரி கேட்கிறது. "இனி நீ திருடன் இல்லை..உன் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டன. மக்கள் உன்னை இனிமேல் வால்மீகி என்று அழைப்பார்கள். வருங்காலத்தில் ராமாயணம் எனும் மகாகாவியத்தை எழுதப்போவதும் நீதான்" என்று அசரீரி சொல்கிறது.
    அதனால் குழந்தைகளே..அவரவர் செய்யும் பாவமும், புண்ணியமும் அவரவரையே சேரும்..அதனால நல்ல விஷயங்களை மட்டும் செய்து நல்லதை மட்டும் தேடிப்போமா.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-valmiki.jpg

    Last edited by suganthiramesh; 18th May 2012 at 12:48 AM.

  9. #29
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    அர்த்தநாரீஸ்வரர்
    ஒரு முறை கைலாயத்தில் சிவனும், பார்வதியும் மனோரம்யமாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். உமாதேவி விளையாட்டுத் தனமாக சிவனின் கண்களை தன் இரு கரங்களால் மூடி விடுகிறார். சூரியனும், சந்திரனுமே சிவனின் இரு கண்களாகும். நெற்றிக்கண் அக்னியாகும். வெளிச்சத்துகான எல்லா வழிகளும் தடைப்பட்டதால் சர்வ லோகங்களும் இருண்டு போயின. கைலாயத்தில் இது அரை வினாடிதான் நடந்திருந்தாலும் மற்ற லோகங்களுக்கு அது கோடானு கோடி வருடங்களுக்கான இருளாகும். உயிர்கள் அழியத் தொடங்கவும் தான் விளையாட்டாய் செய்த பாவத்திற்கு என்ன பரிகாரம் செய்வது என்று தேவி கேட்கிறாள்.
    பிறகு சிவன் கூறியபடி காஞ்சிபுரம் சென்று அங்கு ஆற்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபடுகிறாள். ஒரு நாள் அவ்வாறு வழிபடும்போது திடீரென்று வெள்ளம் பிரவாகித்து வர மணல் லிங்கம் அழியாமல் இருப்பதற்காக அதை கட்டி அணைக்கிறாள் தேவி. அவள் பக்தியை மெச்சிய இறைவன் மண்லிங்கம் வைத்து வழிபட்ட தேவியை மக்கள் இனி காமாட்ஷி என்று அழைத்து வணங்குவார்கள் என்று வரமளித்தார். இனி எந்த காரணத்தை கொண்டும் சிவனும், பார்வதியும் பிரியக் கூடாது என்று சபதம் எடுத்து இருவரும் ஒன்றாக இணைந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார்கள்.

    சக்தியும் , சிவனும் ஒன்றே .
    Little  grany stories - Patti Sonna Kathaigal-arthanari.jpg

    Last edited by suganthiramesh; 18th May 2012 at 01:37 AM.

  10. #30
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Little grany stories - Patti Sonna Kathaigal

    அபிராமி அந்தாதி
    ஒரு முறை தஞ்சையை ஆண்ட மன்னர் இறைவனை வழிபட கோவிலுக்கு வருகிறார். அவர் வந்ததைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அபிராமி பட்டர் என்பவர் தேவியைத் தரிசித்துக் கொண்டும், அவளை புகழ்ந்து பாடிக் கொண்டுமே இருந்தார். தன்னை மதிக்காமல் இருந்த அந்த மனிதனிடம் பேச்சுக் கொடுக்க எண்ணிய அரசர் "இன்று என்ன நாள் தெரியுமா" என்று கேட்கிறார். அரசர் ஏதோ ஒரு அர்த்தத்தில் கேட்க பட்டரோ "இன்று பௌர்ணமி " என்று பதில் அளிக்கிறார். [உண்மையில் அன்று அமாவாசை தினம்]. நான் வருவதைக் கூட கவனிக்காத அளவுக்கு உன் பக்தி உண்மையாகுமானால் இன்று பௌர்ணமி என்பதை நிரூபித்துக் காட்டு என்று அரசர் சொல்கிறார்.
    தன் தவறான பதிலை உணர்ந்த பட்டர் என்ன செய்வது என்று புரியாமல் அபிராமி தேவியே தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். அம்பாளை உச்சி முதல் பாதம் வரை வர்ணித்து அபிராமி அந்தாதி என்ற பாடலை மாலை வரை பாடிக் கொண்டே இருக்கிறார். அவர் பாடலில் மனம் உருகிய அன்னை அபிராமி தன் காது வளையத்தைக் கழற்றி வானத்தில் வீசுகிறார். அம்பாளின் காடு வளையம் வானத்தில் முழு நிலவாக ஜொலிக்கிறது. இதைக் கண்ட அரசர் அபிராமி பாட்டரின் பக்தியை மெச்சி பரிசுகள் பல வழங்குகிறார்.
    Little  grany stories - Patti Sonna Kathaigal-abirami.jpg


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter