ஆண்டாள்

Little  grany stories - Patti Sonna Kathaigal-andal.jpg

ஸ்ரீ வில்லிபுத்தூரைச் சேர்ந்த பெரியாழ்வார் என்பவரின் வளர்ப்பு புதல்விதான் கோதை எனப்படும் ஆண்டாள்.....சிறு வயதில் இருந்தே ஸ்ரீ கிருஷ்ணனிடம் அபார அன்பு வைத்திருந்த கோதை வளர வளர அதை கண்ணன் மேல் கொண்ட காதலாகவே மாற்றிக் கொண்டார்...

எந்நேரமும் கண்ணனைப் பற்றி பாடல்களும், பாசுரங்களும் பாடிக் கொண்டு இருப்பார்....அப்படி அவர் பாடியவைதான் திருப்பாவை.....

பெரியாழ்வார் பூமாலைகள் தொடுத்து வில்லிபுத்தூர் பெருமாளுக்கு அணிவிப்பார்....தந்தை அறியா வண்ணம் கோதை நாச்சியார் அந்த மாலைகளை தான் அணிந்து அழகு பார்த்தபின் இறைவனுக்கு அணிவிப்பார்... ஒரு நாள் இதை பார்த்துவிட்ட பெரியாழ்வார் மிகவும் மனம் வருந்தி இறைவனுக்கு வேறு புதிய மாலைகள் அணிவித்தார்....ஆனால் விஷ்ணுவோ அன்று இரவில் அவர் கனவில் வந்து தான் கோதையின் பக்தியை மெச்சியதாகவும், கோதையை திருமணம் செய்யப் போவதாகவும் அதனால் அவள் அணிந்து அழகு பார்த்த மாலைகளையே தனக்கு அணிவிக்க வேண்டும் என்றும் பெரியாழ்வாரிடம் கூறுகிறார்....தான் குறிப்பிடும் தேதியில் திருமணம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் என்பதையும் தெரிவிக்கிறார்.....

மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போன பெரியாழ்வார் தன மகளின் பக்தியைக் கண்டு வியந்து போகிறார்....இறைவன் குறிப்பிட்ட தேதியில் அனைவரும் ஸ்ரீ ரங்கநாதரை தேடிச் செல்ல அங்கு ஆண்டாள் ரங்கநாதரோடு ஐக்கியம் ஆகிறார்.....

மாலைகளை தான் அணிந்துகொண்டு பிறகு இறைவனுக்கு கொடுத்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாளை குறிப்பிடிகிறோம்...
சரியா குழந்தைகளே.....