Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
 • 3 Post By Ganga
 • 4 Post By Ganga
 • 1 Post By dayamalar
 • 1 Post By Ganga

என்னை குழந்தையாய் வாழ விடுங்கள்!!


Discussions on "என்னை குழந்தையாய் வாழ விடுங்கள்!!" in "Kids Zone" forum.


 1. #1
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  என்னை குழந்தையாய் வாழ விடுங்கள்!!

  சரோஜாவிற்கு எப்போதுமில்லாமல் தன் மகள் மாயாவின் நடவடிக்கைகள் புதிதாக பயத்தையும் , சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. துறு துறு வென பட்டாம்பூச்சி போல சுற்றி திரியும் தன் பதினொரு வயது குழந்தை சில தினங்களாக யாரிடமும் முகம் கொடுத்து பேசுவதில்லை. கண்கள் எப்போதும் கலங்கி காணப்படுகிறது. முன் போல் சாப்பிடுவதும் இல்லை, பள்ளிக்கு கொடுத்து அனுப்பும் டிபனும் அப்படியே திரும்பி வருகிறது. அவளை கேட்டால் எதுவும் பதில் சொல்லாமல் மழுப்புகிறாள். புத்தகத்தை கையில் வைத்து இருக்கிறாளே தவிர கவனம் அதில் இல்லை என்று பார்த்தாலே தெரிகிறது. முன்பு போல அண்ணனிடம் சண்டைக்கு போவதும் இல்லை, அப்பாவின் கழுத்தை பிடித்து தொங்குவதும் இல்லை. எங்கேயோ ஏதோ சரியில்லை என்று எண்ணிய அடுத்த நொடி சரோஜா மாயாவை அழைத்து சென்றது கல்லூரியில் கடைசி ஆண்டு மருத்துவும் படிக்கும் தன் அக்கா மகள் மித்ராவிடம் தான் . மாயாவுக்கும் மித்ரா என்றால் உயிர், எல்லாவற்றிலும் சாதிக்கும் அக்காவின் மேல் ஒரு தனி மரியாதை மற்றும் பிரியம். ரோல் மாடலும் கூட...சாதரணமாகவே மித்ராவிடம் எல்லாவற்றையும் ஒப்பிக்கும் மாயா இந்த முறை தானாக வாய்திறந்து எதையுமே சொல்லவில்லை. ஒரு வழியாக இரண்டு நாள் கழித்து மெது மெதுவாகவே பூதம் வெளியே வந்தது. பக்கத்து வீட்டு தாத்தா ஏதோதோ பேசுறாரு, எங்க எங்கயோ தொடுறாரு. இது கடந்த பத்து நாட்களாக நடந்து கொண்டு இருக்கிறது. அம்மாவிடம் சொன்னால் கொன்னுடுவேன் என மிரட்டல் வேறு.

  ஆம், இது எங்கோ மாயாவின் நிலை மட்டும் அல்ல, நம் இந்தியாவில் 53 சதவிகித குழந்தைகள் (ஆண், பெண்) பாலியல் வன் முறைகளுக்கு ஆளாகிறார்கள் என சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. 53 சதவிகிதம் என்பது இரண்டில் ஒரு குழந்தை நம் நாட்டில் பாலியல் தொல்லைகளை கடந்து தான் வருகிறார்கள்.சத்யமேவ் ஜெயதேவில் அமீர்ஜி இரண்டாவது வாரம் பேசியது இதை பற்றி தான்!

  உலகெங்கும் பல்லாயிரமான குழந்தைகள் பாலியல் வன்முறையினால் உயிரையும் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.உலகில் மூன்று பெண் குழந்தைகளில் ஒன்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்கிறது புள்ளி விவரக் கணக்கு. இதில் இன்னும் வேதனை படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்தியாவைப் பொறுத்தவரை ஐம்பது விழுக்காடு பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்கின்றது ஒரு ஆய்வு முடிவு.

  இது போன்ற ஆய்வுகள் தான் , நம் குழந்தைகள் இச்சமூகத்தில் எத்தனை பாதுகாப்பில்லாமல் இருக்கின்றனர், அவை எவ்வாறு வெளிவராமல் இருகின்றது, என்பதை நமக்கு தெள்ள தெளிவாகவே எடுத்து காட்டுகிறது.

  நாம் நினைப்பது போல் நம் குழந்தைகள் , தன் சொந்த வீட்டில் தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால், அது தவறு, அவர்கள் சொந்த வீட்டில் தான் இத்தகைய கேவலமான கொடுமைகளுக்கு 90 சதவிகிதம் ஆளாகிறார்கள் என்பது முகத்திலறைகின்ற உண்மை. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல இது மாதிரி கொடுமைகளுக்கு ஆளாவது பெண் குழந்தைகள் மட்டும் அல்ல பெண் குழந்தைகளை போலவே ஆண் குழந்தைகளும் இக்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இதில் அதிகம் பாதிக்கபடுவது சிறு குழந்தைகள் தான், அவர்களுக்கு இது போல் பெரிய காரியங்களை சில சின்னபுத்தி மிருகங்கள் செய்யும் போது, அதனை பெரியவர்களிடம் சொல்ல தெரியாமல் தவிக்கிறார்கள்.அது அவர்களின் உடலையும், மனதையும் வெகுவாக பாதிக்கிறது.

  சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியில் இருந்து சில, ஒரு ஆறு வயது குழந்தைக்கு தினமும் பாடம் சொல்லி கொடுக்க அக்குழந்தையின் வீட்டிற்கு வரும் ஆசிரியர், அவளது சொந்த வீட்டில் வைத்தே அக்குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.

  பெண் குழந்தைகள் மட்டும் அல்ல ஆண் குழந்தைகளும் பரவலாக பாதிக்கபடுகிறார்கள் என்பதற்கு நிகழ்ச்சியில் பேசிய இரு ஆண்கள் சாட்சி...ஒருவர் கூட்டு குடும்பத்தில் தன் சொந்த சித்தப்பாவினால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி இருக்கிறார், அவரின் 7 வயதில் இருந்து 18 வயது வரை. இடையில் தன் தாயிடம் இதை தெரியபடுத்தி இருக்கிறார் அவர், ஆனால் கூட்டு குடும்பம், தன் சொந்த தங்கையின் வாழ்க்கை இவற்றை கருத்தில் கொண்டு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தன் தாயே தன்னை நம்பவில்லை என்று மனம் உடைந்து போய் இருக்கிறான் அக்குழந்தை ஆக பெற்றோர்களே நம் குழந்தை இது போன்ற விஷயங்களை பயந்து நம்மிடம் சொல்லும் போது காது கொடுத்து கேளுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை எடுங்கள். நம் குழந்தைக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது நம் கடமையே.


  தன் பெற்றோர் எல்லா விசயத்துக்கும் ஆலோசனை கேட்கும், பெரிதாக மதிக்கும்
  55 வயதான அங்கிள், 11 வயதான அக்குழந்தையை அவளின் பெற்றோர் இல்லாத நேரத்தை அறிந்து வந்து கற்பழித்திருக்கிறான். இரண்டு வயது குழந்தைக்கு சொந்த தாத்தாவே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இவ்வாறாக நீண்டு கொண்டே போகிறது பட்டியல். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நம் இந்திய நாட்டில் எந்த சட்டமும் இல்லை. வல்லரசாக முன்னேறி கொண்டு இருக்கிறோம். இதை சாதித்து விட்டோம் அதை சாதித்து விட்டோம் என நம்மை நாமே பீற்றி கொள்கிறோம். ஆனால் குழந்தைகளின் அடிப்படை பாதுகாப்பு கூட கேள்வி குறியாக தான் உள்ளது.

  Similar Threads:

  Sponsored Links
  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


 2. #2
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  Re: என்னை குழந்தையாய் வாழ விடுங்கள்!!

  பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. “வெளியே சொன்னால் நம் குழந்தைக்குத் தான் அவமானம்” எனும் கவலையும்,குடும்ப கவுரவம் மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் குடும்பத்தின் நெருங்கிய நபர் என்ற நிர்பந்தமும் இத்தகைய பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் உலகின் பார்வைக்கு வராமல் மறைக்க படுகிறது

  இந்நிகழ்ச்சி மே 13 ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது, இந்நிகழ்ச்சி மூலமாக அமீர்ஜியின் முயற்சியால் ஒரு பெட்டிஷன் இதற்காக எழுதப்பட்டு, அனைவரிடமும் கையெழுத்து பெற்று அரசாங்கத்திடம் விண்ணப்பத்ததின் பேரில் மே 23 அன்று இந்த மசோதா நிறைவேற்ற பட்டது.

  இந்தியாவில் 72.1 % குழந்தைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்கிறது அரசு ஆய்வு.
  குழந்தைகளுக்கு போதுமான தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டுங்கள். பெற்றோர்கள் ஒரு நல்ல தோழன்/ தோழியை போல பழகுங்கள். அவர்களின் தினசரி வாழ்க்கையை கேட்டு அறியுங்கள். யாரேனும் புதிதாக அறிமுகம் ஆனாலோ, நெருங்கி பழகினலோ, பரிசு பொருட்கள் கொடுத்தாலோ நீங்கள் கண்டிப்பா அவரை பற்றிய விஷயங்களை விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் உடலில் ஏதேனும் மாற்றமோ, இல்லை யாரும் தவறாக நடந்ததாக கூறினாலோ முதலில் நீங்கள் பதற்றமடையாதிர்கள் அது குழந்தையை இன்னும் கலவரபடுத்தும். உங்களை தவிர வேறு யாரையும் குழந்தைக்கு உடை மாற்ற அனுமதிக்காதீர்கள். அது நெருங்கிய உறவினாராக இருந்தால் கூட கண்டிப்பாக நோ சொல்லி விடுங்கள்.

  ஒரு குறிப்பிட்ட ஒருவரிடமோ அல்லது அவரது வீட்டிற்கோ குழந்தை போக மறுத்தால் கட்டாயபடுத்தி அனுப்பாதீர்கள்.நன்றாக துறு துருவென இருக்கும் உங்கள் குழந்தை திடீரென அமைதியை தத்தெடுத்து கொள்வது. வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள். கோபம், பதட்டம், ஆகியவை அதிகம் காணப்பட்டால் நீங்கள் உஷாராக வேண்டும். உங்களிடம் எல்லாவற்றையும் பகிர தூண்டுங்கள். அப்படி உங்களிடம் பகிர முடியாவிட்டால் அதில் ஏதோ தவறு இருக்கிறது என உணர்த்துங்கள். பள்ளியில் அல்லது டியூஷன் சொல்லும் இடங்களில் நெருங்கிய தோழி/ தோழன் இவர்கள் யாரென கேட்டு அறிந்து கொள்ளுங்கள். சமயங்களில் நம்மிடம் பகிர பயப்படும் விஷயங்களை சாதாரணமாக நட்புகளிடம் பகிர்வார்கள் தெரிந்தவரோ தெரியாதவரோ நீங்கள் அருகில் இல்லாத போது போட்டோ மற்றும் வீடியோ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள். "அம்மா, அப்பாவிடம் சொல்ல கூடாது" என யாரேனும் கூறினால் அதை கண்டிப்பாக அம்மாவிடம் கூற வேண்டும் என அறிவுறுத்துங்கள்.

  அதிமுக்கியமாக இதில் இருந்து அவர்கள் ஓரளவுக்கு தப்பிக்க ஒரே வழி அவர்களுக்கு நீங்கள் நல்ல தொடுதல், தவறான தொடுதலை கற்று கொடுப்பது தான். நெஞ்சு,வயிறு/இடுப்பு ,தொடைகளுக்கு மேலான பகுதி, பின்புறம் தொட்டால் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடி வந்து விட சொல்லுங்கள். பயப்படாமல் கத்த வேண்டும் என கூறுங்கள். வீட்டில் அக்காவிடமோ, அண்ணனிடமோ/தாத்தா/பாட்டியிடமோ யார் எது செய்தாலும் தெரியபடுத்த அறிவுறுத்துங்கள். முதலில் அந்த நபர் சரியானவரா என அறிவது உங்கள் பொறுப்பு.

  இது குறித்து நம் பெண்மை தோழி ஒருவரிடம் பேசும் போது, எனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் , கண்ணீரையும் வரவழைக்கும் படியான ஒரு நிகழ்ச்சியை என்னுடன் பகிர்ந்தார். அவரின் சொந்த சின்ன தாத்தாவே இக்கொடுமையை செய்து இருக்கிறார். வீட்டில் சொன்னால், "நீ பணத்தை திருடினாய் என்று எல்லோரிடமும் சொல்லுவேன்" எல்லோரும் என்னை தான் நம்புவார்கள் என மிரட்டல் வேறு. தினம் இந்நேரத்திற்கு இங்கு வர வேண்டும் என எட்டே வயதான அச்சிறுமியை மிரட்டி இருக்கிறது அந்த குள்ள நரி. இதனாலேயே தன் அப்பாவின் ஊரில் உள்ள சொந்த வீட்டிற்க்கு விடுமுறைக்கு செல்வதை முடிந்த வரை மறுத்திருக்கிறார். அதற்கு அடியும் உதையும் வாங்கியும் இருக்கிறார். தன் தந்தை இடமும் சொல்ல பயம் தாயிடம் சொல்லியும் தன் தாயே தன்னை நம்பவில்லை எனும் வடு இன்னும் அவர் மனதில் ஆறாத ரணமாக இருக்கிறது. நான் ஆண்களை இன்றும் வெறுக்கிறேன் என்றார். நம்மில் பலரின் நிலை இப்படியாக தான் இருக்கிறது

  ஆகவே பெற்றோர்களே! அடிக்கடி இது குறித்து குழந்தைகளிடம் உரையாடுங்கள், அவர்கள் எத்தனை கவனமாக இருந்தாலும் இந்த மிருகங்கள் எதையேனும் விளையாட்டு என கூறி தங்களின் சின்ன புத்தியை காட்டி விடுவார்கள்.

  பாலியல் தொந்தரவு செய்பவர்கள் ஒருமுறையுடன் நிறுத்துவதில்லை. அவர்களுடைய சிந்தனை முழுக்க முழுக்க அதைச் சார்ந்தே இருக்கும். அதற்காகவே நல்லவர்களாய் நடமாடுபவர்கள் தான் அதிகம்.
  எனவே குழந்தையின் மனநிலையும், உடல்நிலையும் காப்பதில்
  எச்சரிக்கை அவசியம் !

  அன்புடன்,
  கங்கா


  Last edited by Ganga; 29th May 2012 at 03:12 PM.
  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


 3. #3
  dayamalar's Avatar
  dayamalar is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2011
  Location
  Madurai
  Posts
  11,468
  Blog Entries
  10

  Re: என்னை குழந்தையாய் வாழ விடுங்கள்!!

  romda arumaiya solirikinga ganga ka...inum ethanayo idathula chinna pillange ithana mentally depress ayirkanga.......

  Ganga likes this.

 4. #4
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  Re: என்னை குழந்தையாய் வாழ விடுங்கள்!!

  Quote Originally Posted by dayamalar View Post
  romda arumaiya solirikinga ganga ka...inum ethanayo idathula chinna pillange ithana mentally depress ayirkanga.......
  நம்மை சுற்றி எங்கோ ஒரு மூலையில் நமக்கு நன்கு தெரிந்த அல்லது தெரியாத ஒரு குழந்தைக்கு இக்கொடுமைகள் நடந்து கொண்டு தானிருக்கிறது தயாமலர். குழந்தையை காப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

  நன்றி தயாமலர்!!

  dayamalar likes this.
  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter