Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree41Likes

Moral Stories for Kids in Tamil


Discussions on "Moral Stories for Kids in Tamil" in "Kids Zone" forum.


  1. #21
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-11-நல்லவனாக இரு...ஆனால் கோழையாக இருக்காதே...

    ஒரு நல்ல பாம்பு ஒரு முனிவரிடம் வருத்தப்பட்டு சொன்னது... எனக்கு நல்ல பாம்பு என்று பெயர் இருந்தாலும் யாரும் என்னை நல்லவனாக நினைப்பதில்லை... என்னைக் கண்டாலே வெறுக்கிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்.... எனக்கு வருத்தமாக இருக்கிறது...

    அதற்கு அந்த முனிவர் " நீ எல்லோரையும் கடித்து துன்புறுத்துகிறாய்... யாரையும் கடிக்காமல் இரு"...என்று புத்தி சொல்லி அனுப்பினார்...

    சில நாள் கழித்து அந்த பாம்பு ரத்த காயங்களுடன் வந்து நின்றது... நீங்கள் சொன்னபடி யாரையும் நான் கடிக்கவில்லை... இருந்தாலும் என்னைக் கண்டவுடன் கல்லால் அடிக்கிறார்கள்... என்று அழுதது....

    நான் கடிக்க வேண்டாம் என்றுதான் சொன்னேன்... சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே... நீ சீறியிருந்தால் அடிக்காமல் பயந்து ஒதுங்கி இருப்பார்கள்....

    நல்லவனாக இரு... அதற்காக கோழையாக இருந்து விடாதே என்று மீண்டும் புத்தி சொல்லி அனுப்பினார்...

    [இது கலைஞர் அவர்கள் சொன்ன கதை என்று ஏதோ ஒரு நாளிதழில் படித்த ஞாபகம் ]


    Sponsored Links
    umaravi2011 likes this.

  2. #22
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-12-முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

    ஒரு நாள் ஒரு அழகிய முயல் ஒரு பெரிய பாறையின் மீது துள்ளி ஏறி அமர்ந்திருந்தது... உயரமான இடத்தில் அமர்ந்ததும் தானே அந்த இடத்திற்கு அரசன் என்று நினைத்து கொண்டது....

    அப்போது ஒரு குள்ள நரி அந்த வழியே செல்ல முயல் அதனை வம்புக்கு இழுக்க ஆசைப்பட்டு "உன்னால் முடிந்தால் என்னை பிடி பார்க்கலாம்?" என்று ஏளனமாக கூறியது... ஏற்கனவே சோர்ந்து போயிருந்த நரி எதுவும் பதில் சொல்லாமல் சென்று விட்டது...

    மற்றொரு நாள் அந்த முயல் தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்த போது அந்த குள்ள நரி அதை லபக் என்று பிடித்துச் சென்று தின்று விட்டது....

    உயர்வாக இருக்கிறோம் என்று கர்வப்பட்டுத் திரியக்கூடாது... நாம் ஒருவருக்கு செய்யும் தீமைகள் என்றாவது ஒரு நாள் நமக்கே திருப்பி வந்து சேரும்...

    Last edited by suganthiramesh; 3rd Aug 2012 at 03:41 PM.
    umaravi2011 and saranyaraj like this.

  3. #23
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-13-பழிக்குப் பழி

    ஒரு ஒட்டகமும், ஓநாயும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன...ஆற்றின் மறு கரையில் இருந்த பழங்களை தின்ன வேண்டும் என்று ஓநாய்க்கு மிகுந்த ஆசை... அது ஒட்டகத்திடம் தன்னை அங்கே கூட்டிச் செல்லுமாறு கெஞ்சியது...

    ஒட்டகமும் நண்பனின் கோரிக்கையை ஏற்று ஓநாயை முதுகின் மேல் ஏற்றிக்கொண்டு ஆற்றைக் கடந்து சென்றது...இரண்டு மிருகங்களும் ஆசை தீர பழங்களை தின்றன... வயிறு நிறைய தின்று தீர்த்த ஓநாய் எப்போதும் போல ஊளை ஏப்பம் விட சத்தம் கேட்டு தோட்டக்காரன் வந்துவிட்டான்...

    ஓநாய் ஓடி ஒளிந்து கொள்ள ஒட்டகம் மிகப் பெரிய மிருகம் என்பதால் ஒளிய முடியாமல் மாட்டிக் கொண்டது... தோட்டக்காரனிடம் நன்றாக அடி வாங்கிய ஒட்டகம் அவன் சென்றதும் மீண்டும் ஓநாயை முதுகில் ஏற்றிக்கொண்டு ஆற்றைக் கடந்தது...

    எதற்காக நீ ஊளையிட்டாய்.... அதனால் தான் நான் மாட்டிக்கொண்டேன் என்று ஒட்டகம் வருத்தப்பட்டு சொல்ல "வயிறு முட்ட தின்ற பின் ஊளையிடுவது என் சுபாவம்" என்று ஓநாய் அலட்சியமாக பதில் சொன்னது....

    இதைக்கேட்டு கோபம் கொண்ட ஒட்டகம் ஆற்று நீரில் இப்படியும் அப்படியும் உருண்டது... "ஏன் இப்படி உருளுகிறாய்... நான் கீழே விழுந்துவிடுவேன் " என்று ஓநாய் பயந்து அலற...." வயிறு முட்ட தின்ற பின் இப்படி தண்ணீரில் உருளுவது என்னுடைய சுபாவம்" என்று சொன்னது.... ஆற்று நீர் ஓநாயை அடித்துச் சென்றுவிட்டது...

    நாம் ஒருவரை சிக்கலில் மாட்டிவிட்டால் அவர்களும் நம்மை நேரம் பார்த்து பழி வாங்கி விடுவார்கள்...

    Last edited by suganthiramesh; 4th Aug 2012 at 01:39 PM.
    umaravi2011 likes this.

  4. #24
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-14-பேராசை பெருநஷ்டம்

    ஒரு நாய் கசாப்புக் கடையை சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தது... கடைக்காரன் ஏமாந்த நேரம் பார்த்து ஒரு பெரிய துண்டு மாமிசத்தை கவ்விக்கொண்டு ஓடிவிட்டது...

    ஓடும் வழியில் ஓரிடத்தில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்க அதில் தன் உருவத்தை பார்த்த நாய்..... மற்றொரு நாய் அதில் பெரிய மாமிசத் துண்டோடு நிற்பதாக நினைத்துக்கொண்டது...

    அதையும் தானே கைப்பற்றித் தின்ன வேண்டும் என்று பேராசைப்பட்டு தன் வாயில் இருந்த மாமிசத்தை ஒரு பாறையின் மீது வைத்துவிட்டு மீண்டும் குளம் நோக்கி சென்றது... அதற்குள் வேகமாக பறந்து வந்த காகம் ஒன்று அந்த மாமிசத்தை தூக்கிச் சென்றுவிட்டது...

    உள்ளதும் போனதே என்று வருத்தப்பட்டு அந்த நாய் பட்டினி கிடந்தது... பேராசை பெருநஷ்டம்...

    Last edited by suganthiramesh; 4th Aug 2012 at 01:56 PM.
    umaravi2011 and NivetaMohan like this.

  5. #25
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-15-அழகு ஆபத்தானது

    ஒரு கிளைமான் குளத்திற்கு தண்ணீர் குடிக்கச் சென்றது.... தண்ணீரில் தெரிந்த தன் கொம்புகளை பார்த்து அதற்கு மிகுந்த கர்வம் ஏற்பட்டது...

    வேறு எந்த விலங்கிற்கும் இல்லாத அளவிற்கு அழகான கொம்புகள் தனக்கு இருப்பதாக எண்ணிக் கொண்டு சென்றபோது ஒரு வேடன் அதனைக் கொல்வதற்காக குறி பார்ப்பதை கண்டு வேகமாக ஓடத் துவங்கியது....

    கண்மண் தெரியாமல் ஓடிய வேகத்தில் அதன் கொம்புகள் ஒரு மரக்கிளையில் சிக்கிக் கொள்ள தப்பிக்க முடியாமல் வேடனிடம் மாட்டிக் கொண்டது....

    அழகு சில நேரம் ஆபத்தாகவும் முடியலாம் அல்லவா குழந்தைகளே....

    umaravi2011 and NivetaMohan like this.

  6. #26
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-16-புத்தி உள்ளவன் பிழைத்துக் கொள்வான்

    ஒரு மரத்தில் நிறைய குரங்குகள் வசித்து வந்தன.... அருகில் இருந்த ஆற்றில் இரண்டு முதலைகள் வசித்து வந்தன... அதில் இருந்த பெண் முதலைக்கு குரங்கின் இதயத்தை சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது...

    உடனே ஆண் முதலை திட்டமிட்டு ஒவ்வொரு குரங்காக தன்னோடு விளையாட வருமாறு அழைத்தது... ஆனால் முதலையின் சுபாவம் தெரிந்த குரங்குகள் வர மறுத்தன.....

    ஒரு குரங்கு மட்டும் தைரியமாக முதலையின் அழைப்பை ஏற்று செல்ல " உன்னைக் கொன்று உன்னுடைய இதயத்தை ருசித்துத் தின்னவே விளையாட அழைத்தேன்" என்று முதலை சொன்னது...

    உடனே அந்த புத்திசாலிக் குரங்கு.... "அடடா இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே... நான் என் இதயம் நனையக்கூடாது என்பதற்காக மரத்தின் மீது பத்திரமாக வைத்துவிட்டு வந்தேனே.... நீ இப்போது என்னை விட்டால் என் இதயத்தை உனக்கு கொண்டு வந்து தருகிறேன் " என்று சொன்னது....

    அந்த முட்டாள் முதலையும் அதை நிஜமென்று நம்பி குரங்கை கரையில் விட தப்பித்தோம்..பிழைத்தோம் என்று குரங்கு ஓடியே போனது....

    சமயோஜிதப் புத்தி இருந்தால் எப்பேர்பட்ட ஆபத்தில் இருந்தும் பிழைத்துக் கொள்ளலாம் குழந்தைகளே...

    Last edited by suganthiramesh; 5th Aug 2012 at 06:19 PM.
    umaravi2011 likes this.

  7. #27
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-17-குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை

    ஒரு காட்டுக்குள் பல மிருகங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன... ஆனால் ஒரு நரி மட்டும் எந்த மிருகத்தைப் பற்றியாவது மற்றவர்களிடம் குறை சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது...

    பல மிருகங்கள் அதற்கு புத்தி சொல்லியும் அது கேட்பதாக இல்லை... எல்லா மிருகங்களும் சேர்ந்து கரடியாரிடம் யோசனை கேட்டன... அதற்கு அந்த கரடியும் தான் சொல்லும் வரை யாரும் நரியிடம் பேசவேண்டாம் என்று தெரிவிக்க எல்லா மிருகங்களும் ஒன்று சேர்ந்து நரியை புறக்கணித்தன...

    ஆரம்பத்தில் வீம்பாக திரிந்த நரி நாள் ஆக ஆக வருத்தப் பட ஆரம்பித்தது... சிறு உதவிக்கு கூட ஆள் இல்லாமல் கஷ்டப்பட்ட நரி ஒரு நாள் நோயுற்றது..

    உணவுக்கு கூட வழி இல்லாமல் போன நரியை ஏன் என்று கேட்க கூட ஆள் இல்லாமல் போக ... அப்போது கரடியார் நரியிடம்... "நீ எல்லோரிடமும் குற்றம் கண்டுபிடித்து கொண்டு இருந்ததால் இன்று யாருமில்லாமல் தனியாகக் கிடக்கிறாய் " என்று சொல்ல நரியும் தன் தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்டது...

    பழங்கள், கிழங்குகள், மாமிசம் என்று எல்லா மிருகங்களும் கொண்டு வந்து கொடுத்து உபசரிக்க நரியும் மனம் திருந்தி ஒற்றுமையாக வாழ ஆரம்பித்தது...


    Last edited by suganthiramesh; 8th Aug 2012 at 06:32 PM.
    umaravi2011 likes this.

  8. #28
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-18-விளையாட்டு வினையாகும்

    ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஒரு நாள் " ஐயோ... யாராவது காப்பாற்றுங்கள்... புலி... புலி' என்று கத்தினான்... கிராம மக்களும் அவனை காப்பாற்றுவதற்காக ஓடி வந்தனர்... ஆனால் அங்கே புலி ஏதும் இல்லை... சிறுவன் விளையாட்டாக ஏமாற்றி இருக்கிறான் என்று அறிந்து அவர்கள் திரும்பிச் சென்றனர்...

    இதே போல அந்த சிறுவன் அடிக்கடி செய்ய ஆரம்பித்தான்... நாளடைவில் கிராம மக்கள் அவன் குரலுக்கு மரியாதை கொடுப்பதையே விட்டுவிட்டனர்...

    ஒரு நாள் நிஜமாகவே புலி வந்தது.... அந்த சிறுவன் பயத்தில் அனைவரையும் உதவிக்கு அழைக்க எப்போதும் போல் விளையாடுகிறான் என்று நினைத்து யாரும் உதவி செய்ய முன்வரவில்லை... அந்த புலியும் அவனை கொன்றுவிட்டது....


    umaravi2011 likes this.

  9. #29
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-19-ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

    ஒரு குறுகிய பாலத்தின் மீது இரண்டு ஆடுகள் எதிர் எதிரே வந்தன... ஒரு ஆடு சிறிது ஒதுங்கி வழிவிட்டால் தான் மற்றொரு ஆடு முன்னேற முடியும் என்ற நிலை... ஆனால் இரண்டு ஆடுகளுமே நீயா நானா என்று வழி விடாமல் வீம்பாக நின்றன...

    நேரம் ஆக ஆக இரண்டு ஆடுகளுக்கும் கோபம் அதிகமாகி சண்டையிட்டுக் கொண்டன... குறுகிய பாலத்தின் மீது நின்று சண்டையிட்டால் என்ன ஆகும்? இரண்டு ஆடுகளும் ஆற்று நீரில் தவறி விழுந்து இறந்து விட்டன...

    கோபத்தில் கண்டபடி நடந்து கொள்ளலாமா....?

    umaravi2011 likes this.

  10. #30
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Moral Stories for Kids in Tamil

    கதை-20-உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

    ஒரு காட்டில் ஒரு சிங்கம் எல்லா மிருகங்களுக்கும் சண்டைப் பயிற்சி அளித்து வந்தது... அதில் ஒரு நரி மிகவும் திறமை வாய்ந்தவன் என்று பட்டம் பெற்றது....

    நரிக்கு பெருமையும், கர்வமும் தாங்க முடியாமல் போனது.... என்னோடு சண்டை போட்டு ஜெயிப்பவர்கள் யார் என்று எல்லா மிருகங்களையும் வம்புக்கு இழுத்தது.... நரியைக் கண்டாலே வெறுப்பாகும் அளவுக்கு எல்லா மிருகங்களும் ஒதுங்க ஆரம்பித்தன...

    இந்த நரியின் கொட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சிறு அணில் ஆசைப்பட்டது... அது நரியுடன் சண்டையிடுவதற்கு தயார் என்று அறிவித்தது...

    ஒரு சின்ன அணில் தன்னை வென்று விட முடியுமா என்று நினைத்த நரி பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டது... கண நேரத்தில் அந்த அணில் நரியின் மீது பாய்ந்து எத்தனை இடங்களில் கடிக்க முடியுமோ கடித்து விட்டு ஓடியது...

    என்ன எது என்று புரிவதற்கு முன்பே நரியின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டிருக்க வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தது...

    அணிலின் பற்கள் எவ்வளவு கூர்மையாக இருக்கும் என்று பார்த்திருக்கிறீர்களா குழந்தைகளே... உருவத்தில் பெரியவன் மட்டும் பலசாலி ஆகிவிட மாட்டான்...


    umaravi2011 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter