Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree52Likes

Kids Songs - குழந்தை பாடல்கள்


Discussions on "Kids Songs - குழந்தை பாடல்கள்" in "Kids Zone" forum.


  1. #21
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Kids Songs - குழந்தை பாடல்கள்

    தோசை அம்மா தோசை

    அரிசி மாவும் உளுந்த மாவும்

    கலந்து சுட்ட தோசை

    அப்பாவிற்கு நான்கு

    அண்ணனுக்கு மூன்று

    அக்காவுக்கு இரண்டு

    பாப்பாவுக்கு ஓன்று

    சீனி நெய்யும் சேர்த்து

    கூடி கூடி உண்போம்



    Sponsored Links
    sgr37 and umaravi2011 like this.

  2. #22
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Kids Songs - குழந்தை பாடல்கள்

    குட்டிக் கைகள் குட்டிக் கால்கள்
    கொண்ட குட்டிப் பாப்பா!
    கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும்
    சுட்டித் தங்கப் பாப்பா!

    ஒட்டிக் கொண்டு அம்மா இடுப்பில்
    உட்கார்ந் திருக்கும் பாப்பா!
    எட்டிச் செல்லும் சுட்டிப் பாப்பா
    எவரும் கிட்டப் போனால்!

    குட்டிப் பொம்மை குண்டுப் பொம்மை
    கொடுத்தால் சிரிக்கும் பாப்பா!
    தொட்டுத் தொட்டுப் பொம்மை உருட்டித்
    தூங்கிப் போகும் பாப்பா!


    umaravi2011 likes this.

  3. #23
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Kids Songs - குழந்தை பாடல்கள்

    வட்ட நிலாவை
    அழைப்போமா?
    வானில் ராக்கெட்
    விடுவோமா?
    கிட்டுவை ராக்கெட்
    தனில்ஏற்றிக்
    கிண்ண நிலவைப் பிடிப்போமா?


    umaravi2011 likes this.

  4. #24
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Kids Songs - குழந்தை பாடல்கள்

    ஆடுகின்ற பலூன்கள்

    அதோபார் அதோபார்
    அழஅழகாய் பலூன்கள்!
    அதோபார் காற்றினிலே
    ஆடுகின்ற பலூன்கள்!

    மூச்சடக்கி ஊதிவைத்த
    மொட்டைத்தலை பலூன்கள்!
    பேச்சடக்கி ஊத ஊத
    பெருத்துவரும் பலூன்கள்!

    பச்சைநிறம் சிவப்புநிறம்
    பழுப்புநிறப் பலூன்கள்!
    உச்சிவரை ஊத ஊத
    உடல்வெடிக்கும் பலூன்கள்!


    umaravi2011 likes this.

  5. #25
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Kids Songs - குழந்தை பாடல்கள்

    துள்ளும் மீன்

    தொட்டிக் குள்ளே சின்னமீன்
    துள்ளு கின்ற வண்ணமீன்!
    எட்டிப் பாயும் பச்சைமீன்
    இறக்கை யுள்ள மஞ்சள்மீன்!

    மீனைப் பார்த்த மனிதனும்
    வேக மாக நீந்தினான்!
    யானை போன்ற கப்பலைக்
    கடலில் செல்லக் கட்டினான்..!!


    umaravi2011 likes this.

  6. #26
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Kids Songs - குழந்தை பாடல்கள்

    இரண்டு சக்கர வண்டி
    இதுதான் சைக்கிள் வண்டி!
    முரண்டு செய்திடாது
    மோதி ஓட்டும் போது!

    கால் மிதிக்க ஓடும்
    கருப்புச் சைக்கிள் வண்டி!
    யார் மிதிக்கும் போதும்
    பறந்து செல்லும் வண்டி!


    umaravi2011 likes this.

  7. #27
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Kids Songs - குழந்தை பாடல்கள்

    சின்னப் பூவே மல்லிகை
    சிரிக்கும் பூவே மல்லிகை
    கண்ணைக் கவரும் மல்லிகை
    கமகமக்கும் மல்லிகை

    கமலம் பின்னிக் கொண்டிடும்
    கருப்புச் சடையின் மீதிலே
    அமரும் பூவே மல்லிகை
    அட்டா அழகு மல்லிகை


    umaravi2011 likes this.

  8. #28
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Kids Songs - குழந்தை பாடல்கள்

    கிளியே கிளியே இங்கேவா
    கிண்ணம் நிறையப் பால்தருவேன்
    களித்துப் பாலைக் குடித்துடிவாய்
    கதைகள் எனக்குச் சொல்லிடுவாய்

    காட்டில் நீயும் பிறந்தகதை
    கனிவாயப் பேசக் கற்றகதை
    நாட்டில் வந்து திரிந்தகதை
    நன்றாய் எனக்கே உரைத்திடுவாய்

    வானில் உயர நீபறக்கும்
    வகையை எனக்குக் கூறிடுவாய்
    நானும் அதனைக் கேட்டிடுவேன்
    நன்றாய் வானில் பறந்திடுவேன்


    umaravi2011 likes this.

  9. #29
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Kids Songs - குழந்தை பாடல்கள்

    மயிலைப் போல ஆடிட
    மனதில் ஆசை வேண்டும்
    குயிலைப் போல பாடிட
    குரலைப பழக்க வேண்டும்

    எலியைப் போலத் திருடிடும்
    எண்ணம் கொண்ட எருதுபோல்
    வாழ்வில் உழைக்க வேண்டும்.


    umaravi2011 likes this.

  10. #30
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Kids Songs - குழந்தை பாடல்கள்

    சின்ன ரயிலு
    சிங்கார ரயிலு!
    சின்னத் தம்பி தேடும்
    சிக்குசிக்கு ரயிலு!

    தடதட என்ற
    சத்தமின்றி ஓடும்!
    எடுஎடு சாவி
    இயக்கிட ஓடும்!

    ஓட்டுகிற வழியில்
    ஓடுகற ரயில்போல்
    பாட்டன்சொல்லி வைத்த
    பாதையில் நடப்போம்


    umaravi2011 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter