Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree23Likes

Thenali raman stories in Tamil - தெனாலி ராமன் கதைகள்


Discussions on "Thenali raman stories in Tamil - தெனாலி ராமன் கதைகள்" in "Kids Zone" forum.


  1. #11
    meenamari's Avatar
    meenamari is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    1,488

    Re: Thenali raman stories in Tamil - தெனாலி ராமன் கதைகள்

    hi nandhana nice thenali raman stories thanks for sharing

    happy new year


    Sponsored Links
    Raja Nanthana likes this.

  2. #12
    Raja Nanthana is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Mumbai
    Posts
    248

    Re: Thenali raman stories in Tamil - தெனாலி ராமன் கதைகள்

    கூன் வண்ணான்

    ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு
    போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தைஉட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள்.


    இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச்சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன்நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான்.

    இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள்அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப்போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன்என்றான்.

    போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்லஉனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படிதெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனைகொடுத்திருப்பேன்.

    இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்குமரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார்.

    உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒருகுழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறுபணித்தார்.

    அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவுபுதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்றுவிட்டனர்.

    அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்துகொண்டிந்தான்.

    ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப்பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறுபுதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான்.

    அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகுகூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒருவைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன்நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது.ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான்.

    அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலேதூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல்நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில்அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறேசெய்தான்.

    உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டுகுழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னாபின்னமாகியது.

    அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக்கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

    அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின்தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர்.

    தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக்கொண்டிருக்கையில் மனனர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர்மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே........ பின்எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார்.

    அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான்.மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசுவழங்கினார்.



  3. #13
    Raja Nanthana is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Mumbai
    Posts
    248

    Re: Thenali raman stories in Tamil - தெனாலி ராமன் கதைகள்

    பாத்திரங்கள் குட்டி போட்டகதை

    விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான்.
    மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால்வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.


    இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்ததிட்டம் தீட்டினான்.

    அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒருநாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும்அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்துதருவதாகவும்" கூறினான்.

    அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக்கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறியபாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.

    இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானேகொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன்கொடுக்கிறாய்" என்று கேட்டான்.

    அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன.அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்துஎடுத்து வந்தேன்" என்றான்.

    இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்றுஎண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன.ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக்கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்குமன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப்பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.

    இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப்பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன.விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வாஎன்றான்.

    "
    சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத்தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்பவருவதாகக் காணோம்.

    ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான்.தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டுவந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.

    அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாகஇருந்தனவா............... பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப்பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.

    இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள்சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டிபோடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.

    "
    என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின்தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும்

    வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட்.

    இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச்சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.

    எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள்குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்குஇது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" எனபுத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர்.

    தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டிபரிசுகள் வழங்கினார்

    Last edited by Raja Nanthana; 5th Jan 2013 at 11:02 AM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter