Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree151Likes

குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal


Discussions on "குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal" in "Kids Zone" forum.


  1. #21
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal

    ஜெயந்தி ...
    என்கிட்டயும் நிறைய கதை இருக்கு, இந்த த்ரெட் முழுக்க சொல்லிட்டே போலாம். அவ்ளோ வச்சு இருக்கேன். அவனுக்கு 5 வயது இருக்கும்போது நடந்த விஷயம் இது........மாம்பலத்தில் நாங்கள் இருக்கும்போது ஒரு பண்டிகை சமயம் பனகல் பார்க் பக்கத்தில் இரவு நேரங்களில் கடை வைத்திருப்பவர்களிடம் குறைந்த விலையில் பேரம் பேசி பனியன் போன்றவை வாங்கலாம். அதுக்காகவே நாங்கள் 9 மணிக்கு மேல் போவோம். அப்படி போயிருக்கும்போது என் கணவர் ரொம்ப பேரம் பேசுவார். நான் சம்பந்தமே இல்லாத மாதிரி தள்ளி நிப்பேன் !!!அப்போதானே அவங்க திட்டும்போது தப்பிச்சுக்கலாம் !!! நாங்க தாம்பரத்தில் இருந்து வரோம். பார்த்து விலை சொல்லுப்பா என்றார். என் மகன் உடனே, இல்ல டாடி, இங்க பக்கத்துலதானே நம்ப வீடு இருக்கு, ஏன் இப்பிடி சொல்றிங்க ? இதோ பக்கத்துலதான் அங்கிள் எங்க வீடு , அப்படின்னு சொன்னதும், நாங்க ரெண்டு பேரும் அசட்டு சிரிப்போட அந்த இடாத விட்டு ஓடாத குறையா வந்தோம் பாருங்க, இப்பவும் அதை அடிக்கடி சொல்லி சிரிப்போம். இப்போ கூட
    அந்த பக்கம் போகும்போது நான் அவன் கிட்ட சொல்லி சிரிப்பேன். அவனும் சிரிச்சுக்குவான் ..


    Sponsored Links

  2. #22
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal

    ஜெயந்தி .......
    உங்க பையனோட குறும்பும் சளைச்சதில்லை போல இருக்கே!!!!!!!! எப்பவும் நினைத்து நினைத்து ரசிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் இருக்கு.......

    Parasakthi, jv_66 and Sriramajayam like this.

  3. #23
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal

    சியாமளா ..........
    உங்க பொண்ணோட டீலிங் நல்லா இருக்கே !!!!! சமர்த்து ..........

    Parasakthi, jv_66 and Sriramajayam like this.

  4. #24
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal

    hi jv aunty

    super brother, aen aunty appaye ungalukkaka oru busaye stop panitanga


  5. #25
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ஜெயந்தி ...
    என்கிட்டயும் நிறைய கதை இருக்கு, இந்த த்ரெட் முழுக்க சொல்லிட்டே போலாம். அவ்ளோ வச்சு இருக்கேன். அவனுக்கு 5 வயது இருக்கும்போது நடந்த விஷயம் இது........மாம்பலத்தில் நாங்கள் இருக்கும்போது ஒரு பண்டிகை சமயம் பனகல் பார்க் பக்கத்தில் இரவு நேரங்களில் கடை வைத்திருப்பவர்களிடம் குறைந்த விலையில் பேரம் பேசி பனியன் போன்றவை வாங்கலாம். அதுக்காகவே நாங்கள் 9 மணிக்கு மேல் போவோம். அப்படி போயிருக்கும்போது என் கணவர் ரொம்ப பேரம் பேசுவார். நான் சம்பந்தமே இல்லாத மாதிரி தள்ளி நிப்பேன் !!!அப்போதானே அவங்க திட்டும்போது தப்பிச்சுக்கலாம் !!! நாங்க தாம்பரத்தில் இருந்து வரோம். பார்த்து விலை சொல்லுப்பா என்றார். என் மகன் உடனே, இல்ல டாடி, இங்க பக்கத்துலதானே நம்ப வீடு இருக்கு, ஏன் இப்பிடி சொல்றிங்க ? இதோ பக்கத்துலதான் அங்கிள் எங்க வீடு , அப்படின்னு சொன்னதும், நாங்க ரெண்டு பேரும் அசட்டு சிரிப்போட அந்த இடாத விட்டு ஓடாத குறையா வந்தோம் பாருங்க, இப்பவும் அதை அடிக்கடி சொல்லி சிரிப்போம். இப்போ கூட
    அந்த பக்கம் போகும்போது நான் அவன் கிட்ட சொல்லி சிரிப்பேன். அவனும் சிரிச்சுக்குவான் ..
    hi selvi

    paarteengala kulanda poi solla kudadu nu appave terinchu vachrkan tambi


  6. #26
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal

    aamaa jash........naamathaan ellathaiyum solik kuduthu kedukkirom.......

    Parasakthi and jv_66 like this.

  7. #27
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ஜெயந்தி ...
    என்கிட்டயும் நிறைய கதை இருக்கு, இந்த த்ரெட் முழுக்க சொல்லிட்டே போலாம். அவ்ளோ வச்சு இருக்கேன். அவனுக்கு 5 வயது இருக்கும்போது நடந்த விஷயம் இது........மாம்பலத்தில் நாங்கள் இருக்கும்போது ஒரு பண்டிகை சமயம் பனகல் பார்க் பக்கத்தில் இரவு நேரங்களில் கடை வைத்திருப்பவர்களிடம் குறைந்த விலையில் பேரம் பேசி பனியன் போன்றவை வாங்கலாம். அதுக்காகவே நாங்கள் 9 மணிக்கு மேல் போவோம். அப்படி போயிருக்கும்போது என் கணவர் ரொம்ப பேரம் பேசுவார். நான் சம்பந்தமே இல்லாத மாதிரி தள்ளி நிப்பேன் !!!அப்போதானே அவங்க திட்டும்போது தப்பிச்சுக்கலாம் !!! நாங்க தாம்பரத்தில் இருந்து வரோம். பார்த்து விலை சொல்லுப்பா என்றார். என் மகன் உடனே, இல்ல டாடி, இங்க பக்கத்துலதானே நம்ப வீடு இருக்கு, ஏன் இப்பிடி சொல்றிங்க ? இதோ பக்கத்துலதான் அங்கிள் எங்க வீடு , அப்படின்னு சொன்னதும், நாங்க ரெண்டு பேரும் அசட்டு சிரிப்போட அந்த இடாத விட்டு ஓடாத குறையா வந்தோம் பாருங்க, இப்பவும் அதை அடிக்கடி சொல்லி சிரிப்போம். இப்போ கூட
    அந்த பக்கம் போகும்போது நான் அவன் கிட்ட சொல்லி சிரிப்பேன். அவனும் சிரிச்சுக்குவான் ..

    Sollunga Selvi.....neenga mattum illai.....inga ulla ella ammakkalum thangal kutties oda kurumbai solli magizha dhaane indha thread.

    Adhanaala, niraya niraya ellarum sollunga. Jolly ya irukum.

    Yen pa.....unga payyan ipdi unga maanathai vaangittan....kuzhndhainga eppavum poi solla maataanga illa....adhaan....bayangara siripudhaan ponga....unga payyan sonnadhu.....unga rendu per nilamaidhaan paridhabam


    selvipandiyan and femila like this.
    Jayanthy





  8. #28
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal

    athai ean kekuringa???? ippo ninaichalum sirippu varum.......intha mathiri niraiya irukku......mathavankalum sollattum..appuram naan solren......

    jv_66 likes this.

  9. #29
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal

    இப்போ அடுத்த குறும்பு / சிரிப்பு .

    என் மகனுக்கு 1 1/2 வயதாக இருக்கும்போது , நடந்தது இது .

    நாங்கள் இருந்த வீடு, தோட்டம் , கிணறு என்று எல்லாம் இருந்தது .

    கொஞ்ச நேரம் இவனைக் காணோம் என்றால் , பின்பக்கத்தில் , குழாயடியில் தேடினால் கிடைப்பான் .....எப்போ பார்த்தாலும் அந்தத் தண்ணிலேயேதான் ஆட்டம்.

    எப்போதும் போல ஒரு நாள் , வேலைக்காரி வந்து பின்பக்கத்தில் , கிணற்றடியில் துணி துவைத்துக் கொண்டு இருந்தாள்.

    அவள், துணி துவைக்கப் போனால் , இவனும் பின்னோடையே போய் விடுவான் . சரி , அவள் பார்த்துக் கொள்வாள் என்று நானும் விட்டுவிடுவேன் .

    அவள், இவனுடன் பேசிக் கொண்டே துணி துவைத்து , அலசி , கிணற்றுக் கட்டையில் , துணிகளை வைப்பாள் .அன்றும் இதே போல செய்து கொண்டு இருந்து இருக்கிறாள் .

    திடீரென்று , " ஐயோ அம்மா ......இங்க வாங்க " அப்டின்னு கத்துற சத்தம் கேட்டு , நான் , என் மாமியார் , மாமனார் மூவரும் பின் பக்கம் ஓடினோம் .

    "என்ன ஆச்சு " அப்டின்னு கேட்க , அவள் "கிணத்துக்குள்ள பாருங்க " அப்டின்னு சொன்னாள்.

    நாங்க மூணு பேரும் போய் பார்த்தால், கிணற்றில் நிறைய துணிகள் மிதந்து கொண்டு இருக்கின்றன . எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

    அவளோ , "நான் துவைச்சு , அந்தக் கட்டையில் வச்சேன் , இந்த பக்கம் திரும்பி , ஒவ்வொரு துணியா அலசும் போதும் "தோபால்" அப்டின்னு சத்தம் போட்டுட்டே இருந்தது இந்தப் பையன்....சரி , ஏதோ ஒளரிக்கிட்டு இருக்கு அப்டின்னு விட்டுட்டேன், பார்த்தா , இப்போ எல்லா துணியையும் , கிணத்துக்குள்ள "தோபால்னு " போட்டுடுச்சு , என்ன ஐயா செய்றது " அப்டின்னு கேட்கிறாள் .


    எங்க எல்லாருக்கும் சிரிப்புத் தாங்கலை.

    "சரி விடு , நாங்க பார்த்துக்கறோம் " அப்டின்னு என் மாமனார் சொல்லிட்டார் .

    அப்புறம் , கொஞ்சம் வீடுகள் தள்ளி இருந்த என் அப்பா , ஆபீசிலிருந்து வந்த பிறகு , கிணற்றுக்குள் இறங்கி , எல்லா துணியையும் ஒரு பக்கெட்டில் எடுத்து வந்து தந்து விட்டார் .

    இதன் பிறகு , அந்த வேலைக்காரி மிகவும் கவனமாக , துணி துவைப்பாள்.

    ஆனால் , இந்தப் பையன் அத்தோட விடலை .

    அந்தத் தோட்டத்தில் இருக்கும் , இலை , சத்தை, மட்டை எல்லாத்தையும் எடுத்து, நாங்கள் கொஞ்சம் அசரும்போது , கிணற்றுக்குள் போட்டு , ஒரு கட்டத்தில் , கிணற்றில் உள்ள தண்ணீரே தெரியாத அளவுக்கு , அதில் குப்பையை போட்டு விட்டான் .

    பிறகு , கிணற்றைத் தூர் வாரிவிட்டு , அதற்குக் கதவு போட்டு விட்டார் என் மாமனார் .

    இதை இப்போதும் நினைத்தால் சிரிப்பு வரும் .


    sumathisrini, sowmiya k and gkarti like this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter