Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree110Likes

Kids world - மழலையர் உலகம்


Discussions on "Kids world - மழலையர் உலகம்" in "Kids Zone" forum.


  1. #21
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    தனிமை:

    சில குழந்தைகள் எப்போதும் தனிமையிலேயே இருப்பதைப் பெரிதும் விரும்புவார்கள். அவர்களது உலகத்தில் தனியாக அவர்கள் பாட்டுக்கு ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களிடம் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்வதிலும் ஒன்றின் மேல் கவனத்தைக் குவிப்பதிலும் சிரமம் இருக்கும். இந்தக் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும்போது, முதலில் தனிக் கவனம் எடுத்து கவனிக்க வேண்டும். கண்ணால் நேரடியாகப் பார்த்துக் கொண்டே பேசுவது நல்ல பயிற்சி. இதன் மூலம் தனிமை உணர்வு குறையும். அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம்.

    குழந்தைகள் பொதுவாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் நினைப்பதைவிட அதிகம் கற்றுக் கொள்ளும் ஆற்றல் உடையவர்கள்தான். ஆனால், அவர்களது கற்றுக்கொள்ளும் ஆற்றலைக் கணக்கிலெடுக்காமல், விருப்பங்களைப் புரிந்து கொள்ளாமல் நாம் நமக்குச் சரி என்று படும்படி அவர்களைத் திருப்புவதுதான் பெரும்பாலும் தவறான வழிக்கு அவர்களைக் கொண்டு போய் விடுகிறது. எனவே, குழந்தைகளைப் புரிந்துகொண்டு, அவர்களது போக்கிலேயே போய் வளர்ப்பதுதான் சிறந்த ஒரு ஆளுமையாக, குழந்தை வளர்வதற்குக் காரணமாக இருக்கும்.

    ஐன்ஸ்டினைப் போல், ஆபிரஹாம் லிங்கனைப் போல் உங்கள் குழந்தையிடமும் ஒரு ஆற்றல் ஒளிந்திருக்கலாம். அதனைத் சொல்ல அவர்களுக்குத் தெரியாது. நாம்தான் அதைக் கண்டுபிடித்து அதனை வளர்க்கும்படி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், உங்கள் குழந்தையும் ஐன்ஸ்டினைப் போல் ஒரு மேதையாக வளர வாய்ப்புகள் உள்ளது. வாழ்த்துக்கள்!



    Sponsored Links
    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #22
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    குழந்தைகள் மனம் கவரும் மதிய உணவு

    டிபன் பாக்ஸைத் திறப்பதற்கு முன் உங்கள் குழந்தை, ‘இன்று அம்மா என்ன வைத்திருப்பார்?’ என்று எதிர்பார்க்க வையுங்கள்.பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளின் அம்மாக்கள் எதிர்கொள்ளும் குழப்ப சூழ்நிலைகளில் ஒன்று, குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரிப்பது!

    தினமும் குழந்தைகளுக்கு மதிய உணவு என்று எதையோ ஒன்றினைத் தயாரித்தால் போதாது. உணவு சத்துள்ளதாகவும், சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் நல்ல முறையில் உணவு உண்டால்தானே படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியும்?


    Last edited by datchu; 18th Aug 2013 at 07:32 AM.
    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #23
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    அப்படியென்றால் குழந்தைகள் மனம் கவரும் உணவை சமைப்பது எப்படி?

    எப்போதும் ஒரே மாதிரியான இட்லி, தோசை செய்தாலும்கூட விதவிதமான வடிவத்தையும் நிறத்தையும் பயன்படுத்துங்கள். செயற்கை வண்ணங்கள் சேர்க்காமல், ஒரு நாள் ரவை சேர்த்து தோசை செய்யலாம், அடுத்த நாள் கோதுமை தோசை, அதற்கடுத்த நாள் கேள்வரகு தோசை என மாற்றும் போது குழந்தைகளுக்கு சுவாரஸ்யம் ஏற்படும். தோசையும் இட்லியும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் பொம்மை வடிவில் செய்து அவர்களைக் கவரலாம். பல வண்ணக் காய்கறிகளைச் சேர்த்து இன்னும் கவர்ச்சி ஏற்றலாம்.

    வெரைட்டியாய சாண்ட்விச், சப்பாத்தி ரோல், பிட்ஸா, குக்கீஸ் என்று காலத்திற்கு ஏற்றாற்போல மாறுங்கள்!

    ஒவ்வொரு நாளும், புதுப்புது உணவைத் தயாரித்து குழந்தைகளை ஆர்வத்துடன் உணவு உண்ண ஈடுபடுத்துங்கள். டிபன் பாக்ஸைத் திறப்பதற்கு முன் உங்கள் குழந்தை, ‘இன்று அம்மா என்ன வைத்திருப்பார்?’ என்று எதிர்பார்க்க வையுங்கள்.

    குழந்தையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல தினந்தோறும் பழங்கள், காய்கறிகள், புரத உணவு, பிஸ்கட் என்று விதவிதமாக வைத்து அசத்துங்கள்!

    பழம் என்றால் ஒரு நாள் ஆப்பிள், ஒரு நாள் வாழைப்பழம், ஒரு நாள் ஆரஞ்சு என்றும் மாற்றுங்கள். ‘மாற்றம்தானே மனிதத் தத்துவம்!’ இந்த சின்னச் சின்ன மாற்றங்கள் குழந்தைகளிடம் மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அல்லவா!
    நேற்று இரவு நீங்கள் செய்த இட்லி அல்லது சப்பாத்தி மீந்து விட்டதா? அதையே குழந்தைகளுக்கு கொஞ்சம் மாற்றிக் கொடுங்கள். இட்லியைக் காய்கறிகளுடன் சின்னச் சின்னதாக கட் பண்ணிப் போட்டு, ‘மஞ்சூரியன்’ என்று பெயரிடுங்கள். சப்பாத்தியையும் காய்கறிகளுடன் வதக்கிக் கொடுங்கள். உங்கள் நேரமும் மிச்சமாகும், பொருட்கள் வீணாவதும் தவிர்க்கப்படும்.

    ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்! உணவு சத்துள்ளதாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடிய வகையில், அவர்களைக் கவர்வதாகவும் இருக்க வேண்டும். கடைகளில் ரெடிமேடாக வாங்கும் உணவுகளை விட, நீங்களே தயாரிக்கும் உணவு வகைகள் சத்துள்ளதாகவும், சுத்தமானதாகவும் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!

    குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் போது அதில் குழந்தைகளையும் ஈடுபடுத்த வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் உலகில், குழந்தைகளுக்கு வித்தியாசமாக உணவு செய்வது பற்றிய பல இணையதளங்கள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன. அவற்றைப் பார்த்து பல புது உணவுகளைச் செய்யுங்கள். குழந்தைகளோடு இணையதளத்தில் தேடுங்கள். நாளைய மதிய உணவு தயாரிப்பதில் அவர்களுக்கும் கொஞ்சம் பங்கு இருக்கட்டுமே! அவர்களுக்குப் பிடித்தவற்றை, பிடித்த முறையில் அவர்களின் துணையுடன் செய்யும் போது, ‘குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கின்றன’ என்ற உங்கள் குறைபாடு நீங்கிவிடும்தானே!

    குழந்தைகள் எடுத்துச் செல்லும் லஞ்ச் பாக்ஸ் கூட பார்ப்பதற்கு வித்தியாசமானதாக, குழந்தைகள் விரும்புவதாக இருக்க வேண்டும்.

    அம்மாக்களே! நீங்கள் காலத்திற்கு ஏற்றாற்போல கொஞ்சம் மாறி, கொஞ்சம் உங்களுடைய கற்பனையையும் சேர்த்தால், குழந்தைகள் விரும்பும் உணவை சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் செய்ய முடியும். சத்தான உணவு குழந்தைகளின் கவன சக்தியை அதிகரித்து பள்ளியில் சிறந்த மாணவக் கண்மணிகளாகத் திகழ வைக்கின்றது. அதுதானே நீங்கள் எதிர்பார்ப்பதும்!


    Last edited by datchu; 18th Aug 2013 at 07:31 AM.
    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #24
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    அன்பு குழந்தைகளின் எதிர்காலம்…

    குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். ஒவ்வொரு நாட்டின் வருங்கால தூண்கள். நாளைய தேசத்தை வழிநடத்த இருப்பவர்கள். இத்தகைய குழந்தை செல்வங்கள் சிறப்பான முறையில் வளர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் இவர்கள் மிகவும் எளிதாக வழி தவற வாய்ப்புள்ளது.

    சிறு வயதில் குழந்தைகள் பழகும் பழக்கங்கள், அவர்களின் மனப்பான்மை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வழி தவறிய குழந்தைகளால் குடும்பத்திலும் நாட்டிலும் குழப்பமும் வேதனையும் தான் மிஞ்சும்.

    தற்போதுள்ள சூழ்நிலைகள் அடுத்த தலைமுறையினர் சந்திக்க இருக்கும் குழப்பங்களை குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. குழந்தைகளுக்கு தேவையான துணிமணிகள், விளையாட்டு பொருட்கள் என எந்தவொரு பொருளை வாங்குவதற்கும் அதிகமான சிரமப்பட வேண்டியுள்ளது. எங்கு நோக்கினும் நாம் சிறிதும் விரும்பாத உருவங்கள்தான் விகாரமாக காட்சி தருகின்றன. பார்ப்பதற்கு எந்தவிதத்திலும் சகிக்காத ஸ்பைடர் மேன், பென்டன் வகையறாக்கள் தான் எங்கும் நீக்கமற உள்ளன. குழந்தைகள் அதிகமாக விரும்பும் பார்பி கேர்ள் பொம்மையும் இப்போது அரைகுறை ஆடையுடன்தான் வருகிறது.

    திரையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் இத்தகைய கதாபாத்திரங்கள், அவர்களின் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 1990-களின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சக்திமான் தொடரை பார்த்த குழந்தைகள், சக்திமான் என்னை காப்பாற்றுவார் என்று கூறிக்கொண்டு, மாடியில் இருந்து குதித்ததையும் தனது உடம்பில் தீ வைத்து கொண்டதையும் நாம் மறக்க முடியாது. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் என எல்லா மேன்களுக்கும் இது பொருந்தும். ஆனாலும் இந்த நிழல் உலக ஹீரோக்களின் படையெடுப்பு நிற்பதாக இல்லை. இது குறித்து பல முறை எழுதப்பட்டாலும் இவர்களின் மீதான மோகம் குறைவதாக இல்லை.


    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #25
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    நிழல் உலக ஹீரோக்களின் ஆக்கிரமிப்பால் குழந்தைகள் நிஜ ஹீரோக்களை மறந்து விடுகின்றனர். சமூக முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தத்திற்காக பாடுபட்டவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் என அனைவரும் இன்று வரலாற்று புத்தகங்களில் மட்டுமே இடம் பிடிக்க முடிகிறது.

    ஸ்பைடர்மேன், பென்டன், சூப்பர்மேன் போன்ற கதாபாத்திரங்கள் குழந்தைகள் மனதில் அபரிதமான கற்பனைகளையும் வன்முறையையும் சத்தமில்லாமல் வளர்க்கின்றன. திரையில் காணும் சாகசங்களை தங்களால் நிறைவேற்ற முடியாத போது குழந்தைகள் மனதளவில் தோல்வியை உணர்கின்றன. இதனால் குழந்தைகளிடம் ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகவும் வாய்ப்பு உள்ளது. நேரத்தை போக்குவதற்கும் பள்ளியில் இருந்து சோர்வாக வரும் குழந்தைக்கு உற்சாகமாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களே இத்தகைய நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கின்றனர். ஆனால் இது அவர்களின் வாழ்க்கையை திசை திருப்பும் முயற்சி என்பதை அறியாதவர்களாகவே உள்ளோம், இல்லையென்றால் தெரிந்தும் அலட்சியமாக உள்ளோம். எதிர்கால சந்ததியினரை சீரழிப்பதற்கான முயற்சிகள் இவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இது மட்டுமல்லாமல், கலாச்சார சீர்கேடு இன்னொரு விதத்திலும் சப்தமில்லாமல் அரங்கேறி வருகிறது. ஆயத்த ஆடைகள் வடிவத்தில் இன்று நம்முடைய கலாச்சாரம் புதை குழியை நோக்கி அழைத்து செல்லப்படுகிறது. தனது பெண் குழந்தைக்கு துணிகள் வாங்க சென்று திணறிய விதத்தை சமீபத்தில் ஒரு சகோதரி மிகவும் அழகாக பதிவு செய்திருந்தார். ஐந்து, ஆறு வயது குழந்தைகளுக்கு அறைகுறை ஆடைகள் மட்டுமே இருப்பதை கண்ட அவர், தன்னுடைய குழந்தைகளுக்கு புத்தாடைகளை வாங்காமலேயே அந்த கடையில் இருந்து வெளியேறியதாக தெரிவித்தார். ஆனால் பலரும் அந்த அரைகுறை ஆடைகளை வாங்கிய கையோடு தான் வெளியே வருகின்றனர் என்பதை நாம் கண்டு வருகிறோம். குழந்தைகளுக்கு ஒரு கண்ணிமான ஆடையை வாங்க முடியாமல் தடுமாறும் அவலத்தை எங்கு சென்று சொல்வது?

    சில சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் அணிவிக்கும் ஆடைகள் மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. சிறுவர்களுக்கான உடைகளையும் விளையாட்டு சாமான்களையும் தேடிச் சென்றால் அதே கோரமான முகங்கள்தான் எங்கும் நிறைந்து இருக்கின்றன. நிஜ வாழ்க்கையில் சிறிது விகாரமாக யாரும் உடை அணிந்திருந்தால் அதனை விரும்பாத நாம், இத்தகைய கோரமான முகங்களையும் உடைகளையும் எப்படித்தான் சகித்து கொள்கிறோம் என்பது புரியவில்லை.

    மாடல் அழகிகளையும் சினிமா நடிகைகளையும் போன்று தங்கள் குழந்தைகளுக்கு ஆடைகளை அணிவித்து மகிழ்பவர்கள், எத்தகைய சந்ததியினரை உருவாக்குகின்றனர்? மேலை நாட்டு கலாச்சார மோகமும் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையும் இந்த குழந்தைகளை வழி நடத்தி செல்கின்றன. வளர்ந்த பின்னரும் இந்த கலாச்சார மோகத்தில் இருந்து விடுபட முடியாமல் அதிலேயே தங்களின் வாழ்க்கையை தொலைக்கின்றனர். விதிவிலக்காக ஒரு சிலர் மட்டும் இதில் இருந்து வெளியேறுகின்றனர்.

    நம்மையும் அறியாமல் நம்முடைய கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு நாம் விரும்பாத விதத்தில் நம்முடைய குழந்தைகள் வளர்ந்து வருகின்றன. இதிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவதில் பெற்றோர்களுக்கு தான் முக்கிய பங்கு இருக்கிறது. சினிமா நடிகைகளும் சூப்பர்மேன்களும் நமக்கு முன் மாதிரிகள் கிடையாது என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் அணியும் ஆடைகளும் செய்யும் செயல்களும் கண்ணியமான நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    நம்முடைய குழந்தைகள் டாக்டராகவும் எஞ்சினியராகவும் தொழில்நுட்ப வல்லுனராகவும் வர வேண்டும் என்று ஆசை கொள்கிறோம். ஆனால் அவர்கள் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என்று ஆசை கொள்கிறோமா? பதில் நம்மிடம்தான் உள்ளது.


    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #26
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    குழந்தைகள் விரும்பும் தின்பண்டங்கள்

    கிராமத்து எல்லைகள் சுருங்கிய அளவில் இருந்தாலும் குழந்தைகளின் உலகம் அளவற்று விரிந்திடும் தன்மையுடையது. குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவு மட்டும் போதாது. வயல் வேலை செய்கின்ற உழைப்பாளர்களின் வீட்டில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமிருக்கும். குடிப்பதற்குக் கூழோ, பழைய சோறோ, கஞ்சியோ கிடைப்பதே பெரிய விஷயம்தான். எனினும் குழந்தைகளுக்கு விதம்விதமான பலகாரங்கள், இனிப்புகள், மிட்டாய்கள், கிழங்கு வகைகள் தின்னப் பெரிதும் விருப்பமிருக்கும். குழந்தைகளைப் போற்றாத கிராமத்து வாழ்க்கையில், அவர்களின் விருப்பம் என்பது எப்பொழுதும் நிறைவேறாத கனவு தான்.

    வீட்டில் எவ்வளவுதான் உணவு சாப்பிட்டிருந்தாலும் கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களைப் பார்த்தவுடன் குழந்தைகளின் வாயில் எச்சில் பெருகும். மிட்டாய்கள் பெப்பர்மிண்டு என அறியப்பட்ட காலத்தில், பெரிய கடைகளில்கூட நாலைந்து கண்ணாடி ஜாடிகளில்தான் மிட்டாய் வகைகள் இருக்கும். சிறிய ஆரஞ்சு மிட்டாய், நெய் மிட்டாய், கொக்கோ மிட்டாய், சூட மிட்டாய், கடலை மிட்டாய், தேன் மிட்டாய்கள் கடைகளில் விற்கும். பச்சைக் கலர் சலபன் காகிதத்தில் சுற்றப்பட்ட பாரீஸ் சாக்கலேட் பெரிய ஸ்டோரில் கிடைக்கும். ஒரு சாக்கலேட்டின் விலை அரையணா-ஆறு பைசாக்கள். ரொம்ப விலை உயர்ந்த சரக்கு. மதுரைப் பக்கம் v.k.s பிஸ்கட்ஸ் பிரபலம். ஒரு காசுக்கு இரண்டு சிறிய பிஸ்கட்ஸ் கிடைக்கும். ருச்சி ரொட்டி வேறு. பொதுவாக மிட்டாயின் விலை ஒன்று அல்லது இரண்டு காசுகளுக்குள் அடங்கும். அப்பொழுது குழந்தைகளுக்குப் 'பாக்கெட் மணி' தரும் வழக்கமில்லை. அழுது அடம் பிடித்தால் முதுகில் அடிதான் கிடைக்கும். சிலசமயம் காலணா-மூன்று காசுகள்- கிடைத்தால் பெரிய விஷயம். சின்னக் குழந்தைகள் மிட்டாய் ஜாடிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

    பள்ளிக்கூட வாசலில் உள்ள புளிய மரத்தடியில் மிட்டாய்க் கடை இருக்கும். ஆறுமுகப் பாட்டிஎன்ற வயதான கிழவி சிவப்புக் கலர் சவ்வுமிட்டாய், அவித்த மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, முத்துச் சோளச் கதிர், இலந்தைப் பழம் என வைத்திருப்பார். மாங்காய் சீசனில் மாவடுக்கள் விற்பார். மாங்காயைக் கத்தியால் நான்காகக் கீறி உப்பு மிளகாய்த் தூள் கலந்த கலவையைத் தடவித் தருவார். பள்ளிக்கூடம் தொடங்கும்போதும், இண்டர்வெல் நேரத்திலும் அவருடைய கடையில் மாணவர்கள் மொய்த்திருப்பார்கள். சிறுவர் சிறுமியரை நம்பி அவர் கடன் கொடுப்பார். அதெல்லாம் ஒரு நம்பிக்கைதான். கடன் வாங்கிய சில மாணவர்கள் ஓரமாக ஒதுங்கிப் போவர்கள். பள்ளிக்கூடம் போகும்போது மாணவர்கள் அழுது அடம் பிடிச்சு வாங்கி வரும் காசில் தின்பண்டம் வாங்கித் தின்பதில் தனி உற்சாகம் தான்.

    பள்ளிக் கூட வாயிலில் சைக்கிளை கேரியரில் கட்டப்பெற்றிருக்கும் பெட்டியிலிருந்து விற்கப்படும் குச்சி ஐஸ் சாப்பிடவும் மாணவர்கள் போட்டி போடுவார்கள். சிலவேளைகளில் மூன்று ஐஸ்காரர்கள் வந்துவிட்டால் ஒரே போட்டிதான். ஜவ்வரிசி ஐஸ், சேமியா ஐஸ் கலந்த குச்சி ஐஸ்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதிலும் ஜீனி, எலுமிச்சம் பழம் தோய்க்கப்பெற்ற குச்சி ஐஸ்களைச் சூம்புவதில் அளவற்ற ஆர்வம். ஐஸ் சூம்பினால் சளி பிடித்துக்கொண்டு, காய்ச்சல் வந்துவிடும் என்று பெரியவர்கள் எச்சரித்தாலும் சிறுவர்கள் அதை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை.

    பள்ளிக்கூட வாசலில் போடப்படும் கடைகளை நம்பி எங்கள் ஊரில் ஐந்தாறு குடும்பங்கள் வாழ்ந்தன. இன்றும் கடைகள் தொடர்கின்றன. தெருவில் விற்கும் பொருட்களை வாங்கித் தின்னக் கூடாது; அவற்றில் தெருப் புழுதி படிந்திருக்கும்; ஈக்கள் மொய்த்திருக்கும்; உடல் நலத்திற்குக் கேடு என்று ஆசிரியர்கள் எவ்வளவுதான் சொன்னாலும் மாணவர்கள் கேட்பதில்லை. வெறும் அறிவுரைக்குப் பதிலாகப் பள்ளிக்கூடத்திற்குள்ளேயே சுத்தமான முறையில் கேண்டீன் அல்லது கடை ஏன் இன்றுவரை நடத்தப்படுவதில்லை என்பது முக்கியமான கேள்வி. பள்ளி நிர்வாகங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்மையில் மாணவர்களின் உடல்நலத்தின் மீது அக்கரை இல்லை என்பதுதான் உண்மை.

    கிராமத்துத் தெருக்களில், 'சவ்வு மிட்டாய்' என்று கூறி வரும் மிட்டாய்க்காரர் குழந்தைகளின் உண்மையான நண்பர். வெக்கையும் வறட்சியுமான தெருவில் குதூகலத்தை வழங்கும் அந்த மிட்டாய்க்காரரைப் பார்த்தால் மனத்துக்கு மகிழ்ச்சியாக இருக்கும் ஒற்றை மூங்கிலின் உச்சியில் சிறிய சட்டை, பாவாடை மாட்டிய பொம்மையின் சலங்கை மாட்டப்பட்ட கைகளும், தலையும் நூல் கயிற்றினால் இணைக்கப்பட்டு மூங்கில் குழாயின் வழியாகக் கொண்டு வந்து, மிட்டாய்க்காரரின் கால் பெருவிரலை மேலும் கீழும் அசைத்தவுடன் மணிச்சத்தம் ஒலிக்கப் பொம்மை தலையை ஆட்டிக் கொண்டு, கைகளைத் தட்டும். அதனுடைய உள்ளங்கையில் ஒட்டப்பெற்றுள்ள வட்டமான வெண்கலத் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஓசையை எழுப்பும். இரண்டு காசுக்கு ஏரோப்பிளான், நெக்லஸ், ஸ்கூட்டர், சைக்கிள், ரேடியோ, கெடிகாரம் என விதம் விதமாக சவ்வு மிட்டாயில் பொம்மைகள் செய்து தரும் மிட்டாய்க்காரர், கடைசியில் இருஅங்குல நீளமான மிட்டாய்த் துண்டினைக் குழந்தையின் கன்னத்தில் ஒட்டி விடும்போது, ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. மிட்டாயைப் பொம்மை வடிவமாக்கி, குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை வழங்கிடும் மிட்டாய்க்காரர் வெறுமன வியாபாரி மட்டுமல்ல; அற்புதமான கலை ரசிகர்; குழந்தைகள் உளவியல் நிபுணர். மிட்டாய் வாங்கித் தின்னக் காசு இல்லாவிடிலும் பொம்மையின் ஆட்டத்தைப் பார்க்கும் குழந்தைகளும் மகிழ்வுடன் சிரிக்கும். சில குழந்தைகள் மிட்டாய்க்காரரின் பின்னாடியே சில தெருக்கள் வரை தொடர்ந்து சென்று, கைதட்டி மகிழும்.

    Contd....


    Last edited by datchu; 18th Aug 2013 at 07:47 AM.
    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #27
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    எப்பொழுதாவது இரவு வேளையில் 'பஞ்சு மிட்டாய். . . சோன்பப்டி' என்று கூவிக் கொண்டிருக்கும் மிட்டாய்க்காரரின் தோற்றம் வித்தியாசமாக இருக்கும். குர்தா, பைஜாமா உடுத்தி, தோளில் காவடியைச் சுமந்து வரும் வடக்கத்திக்காரரின் தமிழ் உச்சரிப்பு விநோதமாக வெளிப்படும். காவடியில் தொங்கும் வட்டத்தட்டில் வட்டமான கண்ணாடி ஜாடிக்குள் சோன் பப்டிமிட்டாய் இருக்கும். அதன் அருகில் இருக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் ஒளிபட்டு மிட்டாய் பளபளக்கும். வாயில் போட்டவுடன் கரைந்து போகும் மிட்டாயை நினைத்துப் பெற்றோரிடம் அடம்பிடித்து கடி வாங்கும் சிறுவர்கள் கிராமத்தில் நிரம்ப உண்டு. வீட்டுக்கு ஐந்து அல்லது ஆறு பிள்ளைகள் இருக்கும் சூழலில், எல்லோருக்கும் மிட்டாய் வாங்கித் தின்னக் காசு கொடுத்தல் என்பது கட்டுப்படியாகாது. சிறுவர்கள் சோன்பப்டிக்கு 'ம யிர் மிட்டாய்' என்று செல்லப் பெயர் வைத்திருந்தனர்.

    'கூட்டாஞ்சோறு' என்பது குழந்தைகள் வட்டாரத்தில் புழங்கும் முக்கியமான சொல் ஆகும். சிறுவர், சிறுமியர் சேர்ந்து விளையாடும்போது கூட்டாகச் சேர்ந்து சோறு ஆக்கிச் சாப்பிடுதல் என்பது உற்சாகமான விஷயம். குழந்தைகள் ஒவ்வொருவரும், அவரவர் வீட்டிற்குச் சென்று, அம்மாவுக்குத் தெரியாமல், அரிசி, வெல்லம், பருப்பு போன்ற பொருட்களை எடுத்து வருவார்கள். சில சமயம் வீட்டை விட்டு வெளியேறும் போது, பெரியவர்கள் பார்த்தால் திட்டு, உதை விழும். ஓரளவு வளர்ந்த பெரிய பெண் பிள்ளைகள் தான் மூன்று கற்களைக் கட்டிவைத்து, அதன்மேல் மண்சட்டியை வைத்து, அடுப்பில் நெருப்பை எரிக்க விறகு, சுள்ளி பொறுக்கிக் கொண்டு வருவார்கள். பெரும்பாலும் சோற்றை ஆக்கி, அதில் வெல்லம் அல்லது சர்க்கரையைக் கொட்டிக் கிண்டிச் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பார்கள் சிலவேளை அருகிலிருக்கும் திருமணமான இளம்பெண்கள் உணவு சமைப்பது எப்படி? பதம் பார்ப்பது எப்படி என்று ஆலோசனை வழங்குவார்கள். குழந்தைகள் கல்யாணமுருங்கை மரத்தின் இலையைப் போட்டு முன்னே உட்கார்ந்து கொள்ள, சிறிய கரண்டியால் கூட்டாஞ்சோறு எல்லோருக்கும் பரிமாறப்படும். பால் பேதமின்றி எல்லாக் குழந்தைகளும் கூடிச்சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் உணவு என்பது குழந்தைகளைப் பொறுத்தவரையில் அமுதம் தான்.

    பத்து வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சேர்ந்து தயாரிக்கும் 'வெடி தேங்காய்' அருமையான உணவாகும். பெரிய தேங்காயின் மேற்பகுதியிலுள்ள கண்ணைத் திறந்து, நீரைக் குடித்துக் காலி செய்து கொள்ள வேண்டும். பொட்டுக் கடலை, வெல்லம் இரண்டையும் அம்மியில் வைத்து நசுக்கிய தூளை, தேங்காய்க்குள் திணித்து, ஓட்டையை வெல்லக் கட்டியினால் மூடிவிடுவார்கள். ஓலையைப் போட்டுத் தீயை மூட்டித் தேங்காயை அதனுள் இட்டுச் சுடுவார்கள். சூடேறிய தேங்காய் ஓடு சத்தத்துடன் வெடிக்கும். தீயை அணைத்து விட்டுத் தேங்காயை வெளியே எடுத்து, ஆற வைத்த பின்னர், எஞ்சியிருக்கும் சிரட்டையை நீக்கினால், வெல்லத்துடன் சேர்ந்து சூடான தேங்காய் மணக்கும்; சாப்பிடச் சுவையாக இருக்கும். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வெடி தேங்காயைச் சாப்பிடுவார்கள். இந்தச் செயலைத் தனி ஒரு ஆளாகச் செய்தால் அவ்வளவு சுவராசியம் இருக்காது. ஒத்த வயதுடைய சிறுவர்கள் சேர்ந்து வெடிதேங்காய் தயாரிக்கும்போது ஏற்படும் அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தின்பண்டம் என்றாலும், அதைத் தயாரிக்கப் பலர் கூட்டாகச் சேர்ந்து முயலுவது, எல்லோருரிடம் உற்சாகத்தைத் தரும் விஷயமாகிறது.

    கிராமத்துச் சிறுவர்கள் தின்னுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டேயிருப்பார்கள். பனம்பழம் மரத்திலிருந்து கீழே விழும் காலத்தில் பனைமரத்தடியில் போய்ப் பழங்களைப் பொறுக்கி எடுத்து வந்து சாப்பிடுவார்கள். நாரும் சதையுமான பனம்பழத்து வாடை எப்படிக் கழுவினாலும் கையிலிருந்து போகாது. அதிகமாகப் பனம்பழம் சாப்பிட்டால் தலை வலிக்கும் என்ற நம்பிக்கை சிறுவர்களிடமிருந்தது. எனவே செத்தைகளைப் போட்டுத் தீயை மூட்டிப் பனம்பழத்தைச் சுட்டுச் சாப்பிட அது ஒருவகையான சுவையாக இருக்கும்.

    புளியம்பூ தொடங்கி புளியம்பிஞ்சு, புளியங்காய், ஓதப்பழம், புளியம்பழம் என எல்லாக் காலத்திலும் நாக்கைச் சப்பிக் கொண்டு சாப்பிடுவதிலும் உள்ளடங்கிய பசி இருக்கும். ஊரிலுள்ள புளியமரங்களில் எந்தப் புளியமரத்துப் பழம் இனிக்கும் என்பது சிறுவர் உலகில் பலருக்கும் தெரியும். புளியங்காய், உப்பு, மிளகாய்த் தூள் மூன்றையும் அம்மியில் வைத்து அரைக்கப்படும் துகையலைச் சாப்பிட சிறுவர்களுக்கிடையில் எப்பொழுதும் போட்டியிருக்கும்.

    மாமரத்தில் சிறிய வடுக்களாகக் காய்த்திருக்கும்போது, பலமான காற்று வீசினால் உதிர்ந்து தரையில் விழும். அதிகாலையில் எழுந்து ஆற்றங்கரையிலுள்ள மாமரங்களில் கீழே விழுந்து கிடக்கும் மாவடு, சிறிய மாங்காய்களைச் சாப்பிடுவதே தனி ருசி தான்.

    சமயநல்லூரிலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள நாகமலையில் கடுக்காப் பழம் என்ற சிறிய கறுப்பு நிறப் பழம் சீசனில் பழுத்திருக்கும். அப்பழம் இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையில் அருமையாக இருக்கும். குத்துச் செடியில் கொரண்டி போல வளைந்திருக்கும் முள்களுக்கிடையில் சிறிய கிளையில் அப்பியிருக்கும் கடுக்காப் பழத்தைப் பிடுங்கித் தின்ன எட்டு வயதான சிறுவர்கள் கூடக் கிளம்பிப் போவார்கள். அவ்வளவு தொலைவு நடந்துபோய் மலையில் ஏறி, கையில் குத்தும் முள்ளுக்கிடையில் பழத்தைப் பிடுங்குவது ஒருவகையில் சிரமமானது. ஆனால் அதிலிருக்கும் 'திரில்' எல்லோரையும் கவர்ந்தது.

    இயற்கையாக மரம், செடி, கொடியில் காய்த்துக் கிடக்கும் தின்னக் கூடிய காய், பழம், விதை ஆகியவற்றைச் சிறுவர்கள் விரும்பிச் சாப்பிட்டனர். வயல் வரப்புகளில் தட்டான்காய் நீளம் நீளமாகக் காய்த்திருக்கும். அதைப் பிடுங்கித் தின்றால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். தோட்டத்து வேலியில் இருக்கும் சப்பாத்திக் கள்ளிச் செடியில் இருக்கும் சிவப்பான பழத்தையும் சிறுவர்கள் விட்டுவைப்பதில்லை. அப் பழத்தின் நடுவிலிருக்கும் தொண்டை முள்ளை எடுத்துப் போட்டு விட்டுச் சதைப் பிடிப்பான பகுதியைச் சாப்பிடலாம். புளிப்பும் இனிப்பும் கலந்த ருசியில் நாக்கில் லேசாக அரிப்பை ஏற்படுத்தும்.


    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #28
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    கொடுக்காப்புளிப் பழம், மூக்குச் சளிப் பழம் போன்ற பழங்களும் வைகை ஆற்றங்கரையோரம் காய் காய்த்துப் பழுத்துப் பையன்களுக்காகக் காத்திருக்கும்த் துணிச்சலான பையன்கள் விருவிருவென மரத்தின் உச்சியில் ஏறி, கிளையை வளைத்து, நுனியில் தொங்கும் பழத்தைப் பிடுங்கி கீழே எறிவார்கள். எல்லாப் பழங்களையும் சேகரித்து, ஆற்று மணலில் உட்கார்ந்து தங்களுக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வார்கள். சில சிறுவர்கள் புதருக்குள் நுழையவும் மரமேறவும் பயப்படுவார்கள். அத்தகையவர்களைப் பெரிய பையன்கள் கேலி செய்தாலும், அவர்களையும் தங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டு எல்லா இடங்களுக்கும் கூட்டிப் போவார்கள். அன்றைய இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையானது சிறுவர்களுக்குள் கூட்டு மனப்பான்மையையும் தோழமையையும் வளர்த்தது. சிறுவர்களின் உலகம் கிராமத்துத் தெருக்களுக்கு வெளியே எங்கும் விரிந்து கொண்டேயிருந்தது.

    வீட்டையொட்டி விளையாடும் விளையாட்டுகள் கூட்டாஞ்சோறு ஆக்குதல் போன்றவற்றில் தான் சிறுவரும் சிறுமியரும் சேர்ந்திருப்பர். ஊருக்கு வெளியே காய்த்திருக்கும்,பழுத்திருக்கும் காய்,பழத்தைப் பிடுங்கிடப் போகும்போது சிறுவர்கள் மட்டுமே சேர்ந்து செல்வார்கள்; சிறுமிகளுக்கு அங்கு இடமில்லை. வெளியே இருந்து பறித்துக் கொண்டு வரும் பழங்களைச் சிறுவர்கள் வீட்டிற்கு வந்து, சகோதரிகள், பக்கத்து வீட்டுச் சிறுமிகளுக்குத் தருவார்கள்.

    கடைகளில் விற்கப்படும் மிட்டாய்கள், இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் எனக் கிராமத்துச் சிறுவர்களின் உலகம் நிரம்பியிருந்தது. எதைத் தின்றாலும் செரித்துவிடும் இளம் வயதில், குழந்தைகளின் வயிறுகள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும். இனிப்புகள் தான் குழந்தைகளுக்குப் பிடித்த உணவாக எப்பொழுதும் இருந்திருக்கின்றன. சிலரைப் பொறுத்தவரையில் எழுபது வயதிலும் இனிப்பு சாப்பிடுவதை விரும்புகின்றனர் எனில் அதற்குக் காரணம் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட பழக்கம்தான். அதிகமாக மிட்டாய்,சாக்கலேட் சாப்பிட்டால், ஆசன வாயில் புழு கடிக்கும்; பற்கள் சொத்தையாகி விடும்; அடிக்கடி சளி பிடிக்கும் என்று குழந்தைகளைப் பார்த்து எதுவும் சாப்பிடாதே என்று எச்சரிக்கும் மருத்துவரும் பெற்றோரும் பெருகிக் கொண்டிருக்கின்றனர். இன்று பல்வேறு பட்ட மிட்டாய்களைச் சாப்பிடக் குழந்தைகள் விரும்புவதில்லை; தொலைக்காட்சி விளம்பரத்தில் காட்டப்பெறும் சாக்கலேட்டுகள் தேவைப்படுகின்றன. சுகாதாரமான முறையில் பேக்கிங் செய்யப்பட்டுள்ள சாக்லேட்டுகள்தான் குழந்தைகளின் உடல் நலத்துக்குக் கேடாக மாறியுள்ளன என்பதுதான் உண்மை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கை கொட்டும் பொம்மையுடன் சவ்வு மிட்டாய் விற்ற மிட்டாய்க்காரரின் தயாரிப்பு சுத்தமானதா என்று தெரியவில்லை. ஆனால் அந்த மிட்டாய், குழந்தைகளுக்கு அன்பையும் குதூகலத்தையும் சேர்த்து வழங்கியது. இன்று சாக்லேட் உள்பட எல்லாத் தின்பண்டங்களும் குழந்தைகளின் கைக்கெட்டிய தொலைவில் உள்ளன. ஆனால் அவர்களின் தேடலும் புழங்கு வெளியும் எங்கிருக்கின்றன என்பதுதான் முக்கியமான கேள்வி.


    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #29
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1

    வணக்கம் நண்பர்களே நேற்றைய அலுவலகப் பணி கவிதையை வாசித்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இன்றைய பதிவில் உங்கள் குழந்தையின் செயல்பாடுகள் மீதான உங்களின் அணுகுமுறை தொடர்பாக ஆராயவேண்டிய விஷயங்களையும் அதற்க்கு தேனையான அம்சங்களைப் பற்றியும் அலசுவோம்.பொதுவாகவே அனைத்துப் பெற்றோர்களும்விரும்புவது தங்கள் குழந்தைகள் தலைசிறந்த மேதைகளாக தரணியில் வலம்வர வேண்டுமெனவே ஆசைப்படுகிறார்கள்.ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வழைமுறைகள் சரிவரத் தெரிவதில்லை.இதற்க்கான ஒரு பத்து கேள்விகள் கீழே முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து எத்தனை விஷயங்களில் சரி தவறு என்று கணக்கிட்டு உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.பதிவின் இறுதியில் தேவையான அம்சங்கள் பற்றி காண்போம்.

    பிஸ்கட்டுகள் நிறைந்த ஒரு டப்பாவை உங்களின் இரண்டு வயது குழந்தை திறக்க முயற்சிக்கும்போது, நீங்கள் அந்த செயலை கண்டித்து, குழந்தையிடமிருந்து டப்பாவை பிடுங்கி விடுவீர்களா?
    உங்கள் குழந்தை சகதியில் விளையாடிக் கொண்டிருந்தால், சத்தம்போட்டு, குழந்தையை சுத்தப்படுத்தி, வீட்டிற்குள், சுத்தமான பொம்மைகள் நிறைந்துள்ள இடத்தில் விடுவீர்களா?
    நீங்கள் சமையல் வேலையில் மும்முரமாக இருக்கையில், உங்கள் குழந்தை சில காலி அட்டைப் பெட்டிகளை வெளியில் எடுக்கும் சத்தம் கேட்டு நீங்கள் அங்கு சென்று பார்க்கையில், மேலும் ஒரு அட்டைப் பெட்டிக்காக உயரமான அலமாரியில் உங்கள் குழந்தை ஏறிக்கொண்டுள்ளது. இதனால் கோபம் கொண்டு குழந்தையை கடிந்துகொண்டு, அந்த இடத்திலிருந்து குழந்தையை அப்புறப்படுத்தி, தொலைக்காட்சியை இயக்கி அதன் முன்பாக குழந்தையை அமர வைப்பீர்களா?
    உங்களின் குழந்தை தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்து, கார்டூன் சேனல்களையோ அல்லது வர்த்தக விளம்பரங்களையோ ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தால், உங்கள் குழந்தையைப் பார்த்து, சமர்த்து என்று சொல்வீர்களா?

    ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கையிலேயே, வேறொரு நாற்காலியை இழுக்கும்போதோ, தொலைக்காட்சி சேனலை மாற்றும்போதோ அல்லது இடத்தை விட்டு இறங்கி வேறு எதையாவது தேடி அலைந்து திரியும்போதோ, நீங்கள் பொறுமையை இழந்து, குழந்தையை அதட்டி அதன் பழைய இடத்திலேயே அமர வைப்பவரா?

    உங்களின் உதட்டு சாய பாட்டிலைப்பார்த்து, அதை எடுத்து தனது உடலில் சாயம் பூசிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால் நீங்கள் பொறுமையை இழக்கிறீர்களா?

    உங்களின் பத்து வயது பிள்ளையானது, பல வண்ணங்களில் ஒரு கோணல்மானலான படத்தை வரைந்து வந்து உங்களிடம் காட்டினால், நீங்கள் அதை சில நொடிகள் கடமைக்காக பார்த்துவிட்டு, சூப்பர் என்று சொல்லிவிட்டு, மீண்டும் உங்கள் வேலையில் ஆழ்ந்து விடுவீர்களா?
    உங்கள் குழந்தை வரைந்ததை என்ன என்று கேட்டு, அதற்கு ஏதேனும் ஒரு மிருகத்தையோ, பறவையையோ அல்லது பொருளையோ உங்கள் குழந்தை சொன்னால், அதைக்கேட்டு ஏளனமாக சிரித்து, குழந்தை சொன்னதை மறுப்பீர்களா?

    உங்கள் 6 வயது பெண் குழந்தை, தனது அண்ணனின் துப்பாக்கி பொம்மை அல்லது கட்டுமான அமைப்பை எடுத்து விளையாடினால், நீங்கள் அவளிடம் இது பெண்களுக்கானதல்ல, எனவே உனக்கான பொம்மையை எடுத்து விளையாடு என்று சொல்பவரா?

    உங்கள் பனிரெண்டு வயது குழந்தை உங்களிடம் வந்து, தான் ஒரு விஞ்ஞானியாக போகிறேன் அல்லது தத்துவ ஞானி ஆகப் போகிறேன் என்று சொன்னால், அது மிகவும் கஷ்டம் அல்லது முடியாத காரியம் என்று சொல்பவரா நீங்கள்?

    மேற்கண்ட பத்து கேள்விகளுக்கு உங்களின் பதில் இல்லை என்று இருந்தால், நீங்கள் ஒரு சிறந்த பெற்றோர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உங்கள் குழந்தைகளை மேதைகளாக வளர்க்கும் செயல்பாட்டில், நீங்கள் முழுமையாக ஒத்துழைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    அதேசமயம், ஏழு முதல் ஒன்பது வரை உங்களின் பதில்கள் இல்லை என்று இருந்தால், குழந்தைகளை மேதைகளாக வளர்க்கும் செயல்பாட்டின் வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்று அர்த்தம். எனவே, உங்களின் இதர பலவீன பகுதிகளை சரிசெய்து கொள்ளுங்கள்.

    மேற்கண்ட கேள்விகளுக்கு ஆறு மற்றும் அதற்கும் குறைவாக உங்களின் பதில் இல்லை என்று இருந்தால், உங்கள் குழந்தையின் மேதமை வளர்ச்சியை நீங்கள் தடுக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, உங்களின் மனநிலை மற்றும் குழந்தைவளர்ப்புத்தன்மையை நீங்கள் நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    ஏனெனில் உங்களின் குழந்தை தற்போது வெற்றிகரமான வாழ்க்கை என்னும் மாபெரும் கடலின் கரையில் நின்று கொண்டுள்ளது. அந்தக் கடலை கடப்பதற்கு உங்களின் குழந்தைக்கு அடியிற்கண்ட மூன்று விதமான விஷயங்கள் கட்டாயம் தேவை.

    1.
    படைப்புத் திறன் – Creative Skills

    2.
    கற்பனைத்திறன் – Imagination Skills

    3.
    அவர்களுக்கான சுதந்திரம் - Independence

    ஒரு குழந்தை வெற்றிகரமான மனிதனாக உருவாதலில், இந்த மூன்று அம்சங்களும் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன.அவற்றைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் அலசுவோம்.


    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #30
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    re: Kids world - மழலையர் உலகம்

    Quote Originally Posted by datchu View Post
    மழலையர் உலகம்


    * அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

    * கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

    * குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.

    * அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.

    * பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

    * ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.

    * புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.

    * நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.

    * நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.

    * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.

    * தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.
    well said.....

    Quote Originally Posted by datchu View Post
    குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !

    1. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். வேறு எந்தப் பொருளும் என்ன காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது.
    *
    2. பிறந்த சில குழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும். இதை குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாது நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
    *
    3. பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் உரம் விழுந்து இருக்கிறது என்று எண்ணி உரம் எடுத்தல் என்று செய்கிறார்கள். இது தவறான பழக்கம். இப்படியொரு நோய் நிலை இல்லை.
    *
    4. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது. பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டுமே தவிர தொக்கம் எடுப்பது தவறு - சில சமயம் விபரீதம் ஏற்படக் கூடும்.

    பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று தொக்கம் எடுத்தல் என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று. அது போல் குடல் ஏற்றம் என்று குடல் தட்டல் என்று செய்கிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.
    *
    5. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளைச் சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.
    *
    6. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவை அவசியமில்லை; பயனுமில்லை.
    *
    7. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும்.
    *
    8. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும்போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சி உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.
    *
    9. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறுசிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை அக்கி என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். மருந்தை உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.
    each and every points you said is true......

    especially 3,4,,6,7,8.... child doctor advices also this....
    intha uram,thokkal, mookilirnthu sali edupathu,oilbath, and sambaarani(alergy)......

    mythili akka and maams ...
    new thread in a new way you are shining ....kalakurinka.....keep rocking.

    thanks for sharing useful info .......keep sharing more and more

    datchu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter