Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree110Likes

Kids world - மழலையர் உலகம்


Discussions on "Kids world - மழலையர் உலகம்" in "Kids Zone" forum.


  1. #31
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 2

    வணக்கம் நண்பர்களே ! நேற்றைய மைனா பதிவிற்க்கு வந்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.இன்றையபதிவில் குழந்தை வளர்ப்பில் கவனிக்கவேண்டியவை பற்றி அலசுவோம்.இதன் முதல் பகுதியை தவறவிட்டவர்கள் குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 1 சென்று வாசித்துவிட்டு இந்த பதிவினை வாசிக்கத்தொடங்கவும்.என்ன நண்பர்களே சுயபரிசோதனை முடித்துவிட்டீர்களா..?. நமது குழந்தைகளை வெற்றிகரமான மேதைகளாக உருவாக்குவதில் படைப்புத்திறன்,கற்பனைத்திறன்,அவர்களுக்கான சுதந்திரம் ஆகியவையே மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.ஒரு மேதை என்பவர் வெறுமனே விஷயங்களை எளிதாக புரிந்து கொள்பவர் அல்ல.அவர் தனக்கான தனித்தன்மையை இந்த சமூகம் மற்றும் இந்த உலகிலிருந்து பெறுகிறார். எனவே, ஒரு குழந்தையின் படைப்புத்திறன் பெரியளவில் எழுச்சிப் பெறுவதற்கு, படைப்பாக்க ஆர்வம், கற்பனை மற்றும் சுதந்திரம் ஆகியவை அதற்கு கட்டாயம் தேவை.

    படைப்புத்திறன் - Creative Skills.


    படைப்புத்திறனுக்கான அடிப்படை தன்மையாக படைப்பாக்க ஆர்வம் திகழ்கிறது. படைப்புத்திறனை உங்கள் குழந்தையினுள் உருவாக்க, பலவித விஷயங்களைப் பற்றி கேள்விக் கேட்கும் பழக்கத்தை தூண்டுங்கள். குழந்தையானது, புதிய அனுபவங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள். இதன்மூலம் அக்குழந்தைக்கு புதிய எண்ணங்கள் பிறக்கும்.
    ஒரு குழந்தை கேள்வி கேட்கும்போது, உங்களின் முழு கவனத்தையும் அதன்பால் செலுத்தவும். ஏனெனில் இதில் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு பொதுவாக கற்றுத் தரப்படுகிறது. நாமும் அதைத்தான் அவர்களிடம் சொல்கிறோம். ஆனால் நாம் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் சிறுவர்களாக இருந்தபோது, நம்மை உதாசீனப்படுத்திய பெரியவர்களை நாம் விரும்பியிருக்கிறோமா? அல்லது மனதுக்குள் மதித்திருக்கிறோமா? எனவேதான், குழந்தைக்கான முக்கியத்துவத்தை நாம் நிச்சயம் வழங்கியாக வேண்டும்.மேலும் உங்கள் குழந்தையை வெளியே அழைத்துச் செல்லும்போது, கண்ணால் காணும் காட்சிகள் தொடர்பாக கேள்விகள் கேட்கலாம். (அந்த மனிதர் ஏன் செடிக்கு நீர் ஊற்றுகிறார், நின்று கொண்டிருந்த கார் எவ்வாறு ஓடியது, ஏன் கடை வைத்திருக்கிறார்கள்)

    இதன்மூலம் சிந்தனைத்திறன் மேம்படும். ஏன், எதற்கு என்று யோசிப்பார்கள். அதற்கு விடைகாண முயல்வார்கள்.

    கற்பனைத்திறன் - Imagination Skills

    பள்ளியில் ஒரு குழந்தைக்கு, வரலாறு, புவியியல், சமூகவியல், அறிவியல், கணிதம் போன்ற பல பாடங்களைப் பற்றிய அம்சங்கள் பள்ளியில் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றுடன் கற்பனைத்திறன் சேர்வது மிகவும் முக்கியம். கற்பனையற்ற அம்சங்கள் என்பவை பசுமையில்லாத தாவரங்களைப் போன்றவை. எனவே, பாடத்திட்டத்தில், ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் என்ற அம்சம் கட்டாயம் இருக்க வேண்டும். னினில், படைப்புத்திறனின் உயிநாடியாகஇந்த ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் திகழ்கிறது. உதாரணமாக, ஒரு விஞ்ஞானி ஒரு விஷயத்தை முதலில் கற்பனை செய்து, பின்னர் அதை நிஜமாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அது தோல்வியடையும்போது, மீண்டும் வேறொரு கற்பனையை மேற்கொண்டு, தனது முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த செயல்முறைதான் அனைத்து வகை துறைகளிலும் இருக்கிறது.

    உங்கள் குழந்தையின் கற்பனை சமயத்தில் அபத்தமாகவும், தவறாகவும் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதற்காக அவர்களைத் திட்டுவது அதைவிட அபத்தமானது. ஏனெனில், இதன்மூலம் கற்பனை செய்யவே பிற்காலத்தில் குழந்தை பயப்படும். ஏனெனில் இதுபோன்ற கற்பனைகள்தான் வருங்காலத்தில் செம்மையான சிந்தனைகளாக மாறும்.

    அவர்களுக்கான சுதந்திரம் - Independence

    ஒரு மேதைக்கு, சுதந்திரம் என்பது ஜீவ நீரைப் போன்றது. அந்த சுதந்திரத்திற்கு தடை ஏற்பட்டால், ஒரு இளம் மேதை தன்னை ஒரு நல்ல படைப்பாளியாக உருவாக்கிக் கொள்வதில் பலவிதமான சிக்கல்களை ஏற்படும். ஒரு வளரும் மேதைக்கு பெரியளவிலான புறக்கணிப்பு ஏற்படக்கூடாது. அப்போதுதான், அந்த மேதை இன்னும் புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். ஒரு இளம் மேதையின் சுதந்திரமானது, பெற்றோர் காட்டும் அன்பு மற்றும் ஆதரவில்தான் அடங்கியுள்ளது.

    பழைய நடைமுறைகள் மற்றும் விதிகளை மீறினால்தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். அதுதான் உலக நியதி. எனவே, உங்கள் குழந்தை அந்த விதிகளை மீறினால், நீங்கள் அதிர்ச்சியடையாமல், ஆச்சர்யமடைந்து, உங்களின் குழந்தையை ஊக்குவிக்க வேண்டும்.

    வறுமை என்பது ஒரு சிறு தடைதான். அதை மீறி சாதனை புரிந்தவர்கள் எத்தனையோ பேர். முறையான ஆதரவு, உற்சாகமளித்தல், திறமையை கண்டுகொண்டு உதவுதல், சுதந்திரம் அளித்தல், சோதனைகள் வந்தாலும் குழந்தையின் பக்கமே இருத்தல் போன்ற பலவித உதவிகள் கிடைக்காமல் காணாமல் போகும் மேதைகள்தான் அதிகம்!எனவே, அவர்களுள் ஒருவராக, உங்களின் குழந்தையும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.



    Sponsored Links
    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #32
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 3

    வணக்கம் நண்பர்களே மீண்டுமொரு குழந்தைகளுக்க்கான் பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களை வாசிக்க 1.குழந்தைவளர்ப்பில் கவனிக்க வேண்டியவை மற்றும் கவனிக்கவேண்டியவை பாகம் 2.பொதுவாக குழந்தைகளுக்கு ஆசிரியரை பிடிக்கவில்லையென்றால் கூட அவர்கள் நடத்தும் பாடங்கள் பிடிக்காது, படிக்கப் பிடிக்காது என்பதை ஆசிரியர்கள் உணர்வதில்லை. அதனால் மாணவர்களுக்குப் பிடித்தது போல நடந்து கொள்ள முயற்சிப்பதில்லை.ஆசிரியர் பாடம் நடத்தும்விதம் பிடிக்க வில்லையென்றாலோ அல்லது தன்னை நடத்தும் விதம் பிடிக்கவில்லை என்றாலோ கூட ஆசிரியரை பிடிக்காது. இதன் காரணம் ஆசிரியர் நமது பிள்ளைகளை அடிப்பதினால் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.இதில் யார் செய்தது சரி அல்லது தவறு என்று பார்ப்பதை விட ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்குமான உறவை மேம்படுத்துவது எப்படி என்றும் அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் பார்ப்போம்.

    ஒருவரை அடிப்பது என்பது யார் செய்தாலுமே தவறுதான். மிருகங்களுக்குத்தான் அடித்து பயிற்சி கொடுப்பார்கள். ஆனால் இன்று மிருகங்களை அடிப்பதையே யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படியிருந்தும் அடிக்கும் பழக்கம் மட்டும் இன்னும் முழுதாக நம்மிடமிருந்து நீங்கவில்லை. பெற்றோர் , ஆசிரியர் அல்லது சகமாணவன் என யாரோ ஒருவர் யாராவது ஒருவரை அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் இன்னும். என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் நம் அடிமனதின் ஆழத்தில் இன்னும் கொஞ்சம் காட்டுமிராண்டித்தனம் நீங்காமல் இருக்கிறதோ ? என்று தோன்றுகிறது.

    என் பிள்ளை மேல கையை வைச்சது யாரு ? இப்பவே அந்த டீச்சர் இங்க வரணும்என்று பள்ளி வாசலில் நின்று கத்துகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். ‘எங்களாலதான அவன அடக்க முடியல . நீங்களாவது நாலு அடி வைச்சாவது அவன நல்லபடியா கொண்டு வந்தா சரிதான்என்று சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.இதில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, அடிப்பதால் யாரும் திருந்தியது கிடையாது. கத்துவதாலும் யாரும் திருந்துவது கிடையாது. இப்படி எல்லாம் செய்வதால் ஆசிரியர்கள் மேலுள்ள மரியாதை மேலும் குறைந்து குழந்தைகள் இன்னும் அலட்சியமாக மாற ஆரம்பிக்கிறார்கள்.எனவே, ஆசிரியர்கள் பற்றிய குழந்தைகளின் கருத்துகள் என்ன என்பதை அவ்வப்போது மனம் விட்டு பேசுங்கள். ஆசிரியர்களைப்பற்றி குறை சொன்னால் கண்டிக்காமல் அதை நேர்மறையாக புரிந்து கொள்ள உதவி செய்யுங்கள்.உதாரணத்திற்கு ஆசிரியர் என்னை பாரட்டவில்லை. எப்போதும் குறைதான் சொல்கிறார் என்றால், பாராட்டுகிறவர்கள் நம்மை அதே நிலையில் வைத்திருப்பவர்கள் விமர்சிப்பவர்களே நம்மை மேம்படுத்துபவர்கள் என்பதை விளக்கமாக சொல்லிக்கொடுங்கள்.‘நீ நல்லா படிக்கிறேன்னு சொன்னா, சரி நாம தான் நல்லா படிக்கிறோமேன்னு நீ அலட்சியமா இருந்துடக்கூடாதுன்னுதான் நீ இன்னும் படிக்கணும்னு உன்னோட வாத்தியார் சொல்றாங்கஎன்பதினை புரிய வையுங்கள்.

    ஆசிரியர்களை மதிக்கும் பழக்கம், மாணவர் களிடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று பெரும்பாலான ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையும் கூட.போதாக்குறைக்கு சினிமாவில் ஆசிரியரை நக்கல் அடிப்பது என்று ஸ்பெசல் கிளாஸ் வேறு நடத்துகிறார்கள்.இதனை தவிர்க்க உங்கள் குழந்தைகளிடம், ’இந்த உலகத்தில் வெற்றி பெற்ற யாவரும் ஓர் ஆசிரியரின் வழிகாட்டுதலால் வென்றவர்கள்தான்என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.ஆசிரியர் நமக்கே தெரியாமல் நம்மை மேம்படுத்துபவர் என்பதை எடுத்துச்சொல்லி வகுப்புக்கு வராத ஆசிரியராக இருந்தால்கூட அவர்களிடமும் மதிப்போடும் கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்துங்கள்.

    மேலும் குறைந்த மதிப்பெண் எடுக்கிற மாணவர்களை விட கற்றுக்கொள்ளும் ஆர்வமே இல்லாத மாணவனைத்தான் ஆசிரியர்களுக்கு பிடிப்ப தில்லை. எனவே உங்கள் குழந்தைகள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் ஆசிரியர்களை பயந்து விலகாமல் சந்தேகம் கேட்கவும் அதிக மதிப்பெண் பெற வழிகாட்டும்படியும் கேட்கச் சொல்லுங்கள்.எவ்வளவுதான் நன்றாக படிக்கிற பையனாக இருந்தாலும் வகுப்பில் அருகில் உள்ள மாணவனிடம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் ஆசிரியர்களுக்கு பிடிப்பதில்லை. உங்கள் குழந்தைக்கு அந்தப்பழக்கம் இருந்தால் உங்கள் குழந்தையை மட்டுமல்லாமல் அவர்களின் நண்பர்களையும் அழைத்து இப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள ஊக்குவியுங்கள்.வகுப்பறையில் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குமுறைகளை பெற்றோர்களே கற்றுக் கொடுத்துவிட்டால் இது போன்ற அசம்பாவித சம்பவங்களுக்கு வாய்ப்பேயில்லை.ஆசிரியரை நேசிக்க வைப்பது குழந்தைகளை மேதைகளாக்க விரும்பும் பெற்றோர்களாகிய உங்கள் கைகளில்தான் இருக்கிறது.ஏனெனில் ஆசிரியரை பிடித்தால்தான் குழந்தைகளுக்கு பாடங்கள் பிடிக்கும். படிக்கவும் பிடிக்கும்.


    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #33
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 4

    வணக்கம் நண்பர்களே மீண்டுமொரு குழந்தைவளர்ப்புப் பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றுள்ள அவசர சூழ்நிலையில் ஒரு கைக்குழந்தை அழுதால், பசியாகதான் இருக்கும் அவர்களுக்கு பாலூட்ட வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் கணிப்பு. ஆனால் குழந்தை அழுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.இன்றைய பதிவில் இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் அதை தவிர்ப்பது எப்படி என்பது பற்றியும் விவாக காண்போம்.இத்தொடரின் முந்தைய பகுதிகளை தவறவிட்ட அன்பு நெஞ்சங்கள் இங்கே க்ளிக் செய்து வாசித்துவிட்டு தொடரலாமே..

    முதலில் குழந்தையின் பசி :

    பிறந்த முதல் மூன்று மாதங்களுக்கு ஒவ்வொருமுறையும் தாய்பால் குடித்த பின்னர் மூன்று மணி நேரத்திற்குப் பின்புதான் பசி ஏற்படும். இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே குழந்தை அழத் தொடங்கினால் நிச்சயம் அது பசியினால் ஏற்பட்டிருக்காது. வேறு காரணம் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

    முதலில் குடித்த பால் போதுமானதா? என்பது தாய்க்கே தெரியும். அவ்வாறு எப்பொழுதும் போல் குழந்தை பால் குடித்திருந்தால் வேறு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும்.

    பால் குடித்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து குழந்தை அழுதால் மட்டுமே குழந்தைக்கு மீண்டும் பால் கொடுத்துப் பார்ப்பதில் தவறொன்று மில்லை.

    புட்டிப்பால் குடிக்கும் குழந்தையாக இருந்தால் முதலில் எப்பொழுதும் குடிக்கும் அளவு பால் குடித்திருகிறதா என்பதைக் கவனிக்கவும். அப்படியிருந்தால் அழுகைக்குப் பசி காரணமாக இருக்க முடியாது.

    குழந்தையின் வயிற்று வலி :

    திடீரெனக் குழந்தை அழுவதற்கு வயிற்று வலி ஒரு காரணம். பாலுடன் சர்க்கரையோ, காபியோ இதர பானங்களோ சேர்த்துக் கொடுத்தாலும் வயிறு வலி ஏற்படும்.

    வயிறு உப்பியும், தட்டினால் கிண் என்று சத்தம் கேட்டும், அடிக்கடி காற்று வெளிப்பட்டுக் கொண்டும் இருந்தால் ஜீரணம் சரியில்லை எனலாம்.

    அடுத்து கொடுக்க வேண்டிய ஒருவேளை பாலைக் கொடுக்காமல் விட்டு விடவும். குடலுக்கு ஓய்வு தேவை. தண்ணீர் எந்த நேரமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துக் கொண்டே இருக்கவும். காற்று வெளிப்பட வலி குறையும். குழந்தையும் அயர்ந்து தூங்கிவிடும்

    குழந்தைக்கு திடீரென காய்ச்சலோ, தலை வலியோ, தடுமனோ, நெஞ்சு சளியோ இருக்கக்கூடும். அதனால் குழந்தை நலிவுற்று, தூக்கம் கெட்டு, எந்த நேரமும் அழவும் கூடும். குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்பதை முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

    முகம் சோர்வுற்று, மூக்கிலிருந்து தண்ணீர் வடியவும் உடல் லேசான சூட்டுடனும் இருக்கும். தும்மலும், இருமலும் ஆரம்பிக்கக்கூடும் அல்லது குழந்தைக்கு அஜீரணத்தால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

    தவழும் வயதில் குழந்தை கை சூப்புவது :

    தாயிடம் பால் குடிக்கும் காலங்களில் அல்லது புட்டியில் பால் அருந்தும் காலங்களில் ஆசை தீர குழந்தை சுவைத்துக் கொண்டிருக்கப் போதிய அவசரம் கிடைக்காமல் போய்விடுவதுதான் கை சூப்புவதற்குக் காரண மாகக் கருதப்படுகிறது. தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளை விட புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளிடையே தான் இப்பழக்கம் அதிக மாகக் காணப்படுகிறது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்குப் பால் முடிந்ததும் தாயார் புட்டியைக் குழந்தையிடமிருந்து எடுத்து விடுதலால் அதற்குப் போதிய பால் கிடைத்திருந்தாலும் சுவைக்கு மின்பம் பூர்த்தியடையவில்லை. ஆகவே குழந்தை பால் குடித்து முடிந்ததும் தன் கட்டை விரலைச் சூப்பத் தொடங்கிவிடும். ஆகவே குழந்தை கட்டைவிரலைச் சூப்புவது பாலுக்காக அல்ல; தனக்குள்ள சுவைக்குமின்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவே ஆகும்.

    சிறிது நேரம் மட்டுமே கை சூப்பினால் அதைப் பற்றிக் கவலையில்லை. சில குழந்தைகள் பசி வந்ததும் பாலுக்காக அந்த நேரம் மட்டுமே அவசரம் அவசரமாகக் கை சூப்பக்கூடும். இதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை. 3 அல்லது 4 மாதத்தில் பல் முளைக்கும் பொழுது ஏற்படும் உறுத்தலால் சில குழந்தைகள் கை சூப்பக்கூடும். இதுவும் நின்று விடுமாதலால் இதைப்பற்றியும் கவலையில்லை.

    பெரிய குழந்தைகள் கை சூப்புவது சுவைக்குமின்பத்திற்காக அல்ல. இவ்வயதில் அவர்கள் உள்ளத்தில் ஏற்படும் கோபம், மகிழ்ச்சி, அவசரம், பரபரப்பு, கவலை, பயம், திகில் போன்றஉணர்ச்சிகளை மறக்கக் குழந்தை கை சூப்பக் கூடும். தூக்கத்திற்காகவும் சில குழந்தைகள் கை சூப்பக்கூடும்.

    கை சூப்புவதால் ஏற்படும் கெடுதல்கள்:

    கை சூப்பும் குழந்தை சுவைக்குமின்பத்திலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்திவிடுவதால் அதற்கு வெளி உலக இன்பங்கள் அனுபவங்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன. மன வளர்ச்சி இதனால் பாதிப்படைகிறது.

    எந்த நேரமும் குழந்தை கை சூப்பிக் கொண்டிருந்தால் அதனால் அழுக்கும் கிருமிகளும் வாய்க்குள் புகுந்து வாய்ப்புண்ணையும். இரைப்பையில் புண்ணும் ஏற்பட்டு, பசியின்மையும், வாய் துர்நாற்றமும் ஏற்பட்டு குழந்தை மெலிந்துவிடக் கூடும். மேலும் கை சூப்புவதால் பற்கள் வரிசை மாறிவிடும். குழந்தை வாய் வழியே மூச்சுவிட ஆரம்பித்து அதனால் பல கஷ்டங்கள் உண்டாகலாம்.

    Contd....


    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #34
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    குழந்தைகளுக்கு ஏற்படும் களைப்பு :

    குழந்தையை ஆள் மாறி மாறித் தூக்கிக் கொண்டு கொஞ்சுவதும், எந்த நேரமும் அதனுடன் விளையாடுவதும், அதனைத் திரும்பத் திரும்ப சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பதும், அதனைச் சதா ஆட்டிக் கொண்டிருப்பதும் குழந்தையின் உடம்பிலும் மனதிலும் களைப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
    குழந்தையை எந்த நேரமும் தொட்டிலும் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தாலும் களைப்பு ஏற்படுவதுடன் மூளைக்கலக்கமும் ஏற்பட்டுவிடும்.

    குழந்தையைக் காற்றோட்டமான நிசப்தமான இடத்தில் கீழே படுக்க வைக்கவும். தன் இஷ்டத்திற்கு விளையாடவோ வேடிக்கை பார்க்கவோ தூங்கவோ விட்டுவிடவும்.

    குழந்தை திடுக்கென்று அதிருதல் :

    குழந்தையை மெதுவாகத் தொட்டாலும், ஏதாவது பட்டாலும், ஒரு சிறிய சப்தம் கேட்டாலும், திடுக்கென்று எழுந்திடும். தூக்கத்திலும் காரணமின்றி திடுக்கிட்டு அடிக்கடி விழித்துக் கொள்ளும்; அழவும் தொடங்கிவிடும். இவ்வாறான சிசுக்களில் சில, திடுக்கிட்டதும் மலம், சிறுநீர் சிறிதளவு கழித்து விடவும் கூடும்.

    தாயின் வயிற்றுக்குள் எவ்வித அதிர்ச்சிக்கும் காரணமில்லாமல் நிம்மதியுடன் வளர்ந்து வந்த சிசுவின் நரம்புகள் வெளி உலக அதிர்ச்சிகளுக்குத் தக்கபடி பக்குவமடையாமல் இருப்பதே காரணமாக இருக்கக்கூடும். நாளடைவில் வெளிச் சப்தங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் குழந்தையின் நரம்புகள் தாமே பக்குவப்படுத்திக் கொள்வதால் நாளாக நாளாக அதிர்ச்சி குறைந்துவிடுகிறது.

    அடுத்த பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகளின் வளர்ப்பில் எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை சிக்கல்களை பற்றி அலசுவோம்.


    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #35
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5

    வணக்கம் அன்பின் நண்பர்களே.மழலை சமுதாயம் கோலோச்சுகின்ற சமயம் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் குழந்தைகளின் பங்கேற்பு அபரிமிதமாகவே உள்ளது.விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளிலும் கூட அவர்களின் திறமைகள் மற்றும் ஆர்வங்கள் எல்லாமே வியப்பைத்தருகின்றன.எனினும் நமது நாட்டில் எந்த அளவிற்க்கு மழலை சமுதாயம் முன்னேற்றம் கண்டுள்ளதோ அந்த அளவிற்க்கு பின்னடைவும் கண்டுவருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.இதனை அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தல்,நரபலி,ஆசிரியர் மாணவர் உறவு முறிவு போன்றவற்றில் இருந்து நன்கு உணரமுடியும்.தவறான உறவுகளில் பிறக்கும் குழந்தைகளிலிருந்து பெண் சிசு கொலைகள் வரை இன்று சர்வ சாதரணமாகவே சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது கேட்டுக் கொண்டிருக்கும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. குழந்தைகளின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே நெருக்கடிகளுக்கும் பயமுறுத்தல் களுக்கும் ஒடுங்கி வாழும்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதால் அவர்களின் வளர்ச்சியில் தீவிரவாதமும் வன்முறையும் கூடவே வளர்ந்துவிடுகிறது.இதனை தவிர்க்கவே இன்றைய தலைமுறை பெற்றோர்கள் ஒவ்வொருவரும் குழந்தை வளர்ப்பினைப் பற்றிய சூட்சுமங்களை கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகிறது.இன்றைய பதிவில் குழந்தைகளின் ஆறுவயது முதல் பன்னிரண்டு வயது வரை பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பற்றி விரிவாக அலசுவோம்.

    இதன் முந்தைய பதிவுகளை படிக்க...

    ஆறு வயது முதன் முதலில் வெளி உலகம்

    ஆறு வயதிற்குப் பின்னர்தான் குழந்தைகள் பெற்றோரை எந்த நேரமும் தேடிக் கொண்டிராமல் சுதந்திரமாக வாழ ஆரம்பிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது அவர்களின் பொறுமையை இழக்கச் செய்துவிடும்.

    பெற்றோர்களின் நடை, உடை, பாவனைகள் அப்படியே தாங்களும் செய்துகொள்ள விரும்பிய குழந்தைகள் இப்பொழுது அவற்றில் தங்களுக்குப் பிடித்தமானவைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிடவும் செய்கின்றன.உதாரணமாக பிறர் தங்களை நெருங்கி வந்து முத்தம் கொடுத்தால் அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை.

    இந்த வயதில் புத்தகம் படித்தல், வரைதல், கணக்குப் போடுதல், பாட்டுப்பாடுதல், மெஷின்களை கழற்றி மாட்டுதல், இயற்கை வள ஆராய்ச்சி போன்றவற்றில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.

    பெற்றோரோ, மற்றோரோ அவர்களை ஒரு பொம்மை போல் வைத்துக் கொண்டு கொஞ்சுவதை அவர்கள் விரும்புவதில்லை. தாங்களும் தன்மதிப்புடன் வாழும் இளைஞர்கள் என்பதை உணருகிறார்கள். மற்றவர்களும், தங்களை அவ்வாறே நடத்த வேண்டுமென்று எண்ணுகிறார்கள்.


    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #36
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    3-5 வயதுக் குழந்தைகள் எதைக் கற்றுக் கொடுத்தாலும் அதைத் தவறின்றி சரிவரச் செய்ய மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். உதாரணமாக பல் தேய்க்க, குளிக்க உடை போட்டுக் கொள்ள, உட்கார்ந்து அமைதியுடன் சாப்பிடுவதில், தலைவாரிக் கொள்வதில், கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதில் மிகவும் அக்கறை காட்டுவார்கள். ஆறு வயதில் மேற்கூறியவற்றை சரியாக செய்து கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார்கள். பெற்றோர் என்ன சொன்னாலும் காதில் வாங்க மாட்டார்கள்.

    இதைக் கண்டு சகிக்காமல் பெற்றோர் குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ, இதைச் செய் இப்படிச் செய் என்று அதிகாரமாகப் பேசுவதோ கூடாது. குழந்தை தவறு செய்தால் அதனிடம் சாதாரணமாகப் பேசுவதுபோல் இவ்வாறு நீ செய்வது சரியில்லை என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு சென்றுவிட வேண்டும். அத்துடன் குழந்தையிடம் சிறிது கண்டிப்புடனும் நடந்து அவனைத் திருத்திவிட வேண்டும். சரிவர செய்துவிட்டால் குழந்தையைப் பாராட்டி ஒரு சிறு பரிசும்கூட அளிக்கலாம். நாளடைவில் குழந்தை தன் தவறுகளைப் புரிந்து கொண்டு தானே நிறுத்திவிடுவான்.


    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #37
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    ஏழு வயது முதல் பன்னிரண்டு வயது வரை..

    ஏழு வயதிற்கு மேல் கற்பனையில் ரயில் ஓட்டுவதும், வீடு கட்டுவதும், பறக்க விடுவதும், கால்பந்து, ஹாக்கி, சடுகுடு, கிரிக்கெட், கோலி விளையாட்டு, கோலாட்டம், கும்மியாட்டம், பரத நாட்டியம் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். கேரம், செஸ், சீட்டாட்டம் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டக் கூடும். விதிகளைத் தெரிந்து கொண்டால் அவற்றை மிகவும் கண்டிப் புடனும் கடைப்பிடிப்பார்கள்.

    இந்த வயதில் குழந்தைகள் தங்கள் உடைகளை புத்தகங்களை இதர சாமான்களைப் பத்திரமாகவும், சுத்தமாகவும், அடுக்கியும் வைத்துக் கொள்ள ஆசைப் படுவார்கள். ஒரு நாள் சுத்தமாக வைத்துக் கொண்டாலும் மறுநாளே அவற்றைக் கலைத்தும் திரும்பவும் சாமான்களை இங்குமங்காக போட்டு விடக் கூடும். தங்கள் பொருட்களை நன்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்துகொண்டு தான் இருக்கும்.

    சினிமாவிலோ, தொலைக் காட்சியிலோ, கொடூரமான காட்சிகளைப் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். ( இன்றைய காலகட்டத்தில் இது கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது )கொலை செய்வது, துன்புறுத்துவது, திருடுவது போன்ற கொடூரக்காட்சிகள் குழந்தைகளின் மனதைக் கெடுத்து விடக் கூடும். குழந்தைகளுக்கென்று அறிவையும், ஆற்றலையும் வளர்க்கக்கூடிய சினிமாக்களோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ அதிகம் கிடையாது.

    விரும்பத்தகாத பல காட்சி களையும் குழந்தைகள் பார்க்க நேரிடுகிறது. இதனால் அவர்களையறியாமல் அவர்களின் காட்சிகளையும் கூட குழந்தைகள் பார்க்க நேரிடுகிறது. இதனால் அவர்களின் மனம் உள்ளூர கலக்கமடையச் செய்துவிடுகிறது.

    12
    வயது வரை அவர்கள் பேச்சுப்போட்டி, படம் வரைதல் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, தையல், எம்பிராய்டரி, ஸ்டாம்ப் சேர்ப்பது நாணயங்கள் கற்கள் சேர்ப்பது போன்றவற்றைத் தங்கள் பொழுதுபோக்காக விரும்பக்கூடும்.

    குறிப்பிட்ட நேரங்களில் சிறுவர்களுக்கென்று வரும் காட்சிகள் மட்டுமே தொலைக்காட்சியில் குழந்தைகள் பார்ப்பது என்று முறைப்படுத்திக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மணிக்கணக்கில் தொலைக்காட்சியின் முன் உட்காருவதை நீங்களும் குழந்தையும் நிறுத்த வேண்டும்.

    நல்ல கருத்துள்ள புத்தகங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பது நன்மை தரும். குழந்தைக்கு நிறைய புத்தகங்களை இந்த வயதில் படிக்க வேண்டு மென்ற ஆர்வத்தை ஊட்டுங்கள். பெரியோர்கள், தலைவர்கள், வீரர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்கள் செய்த சேவைகளையும் நிறைய படிக்கச் செய்யவும்.

    சிறு குழந்தைகள் எந்தப் பொருளைக் கண்டாலும் அது தன்னுடையது இல்லை என்றாலும் தானே வேகமாகச் சென்று எடுத்துக் கொள்வார்கள். இது திருட்டாகாது. உண்மையில் எது தங்களுக்குச் சொந்தம், எது மற்றவர்களுக்குச் சொந்தம் என்றெல்லாம் அவர்களுக்குத் தெரிந்து கொள்ள இயலாது. அவர்களை திட்டியோ அவர்களிடமிருந்து பொருட்களைப் பறித்தோ மனதைக் களங்கப்படுத்தக் கூடாது.. நீ சமத்துப்பிள்ளை அவர் பொம்மையை நீயே கொடுத்துவிடுவாய் என்று சொல்லி அவளையும் இணங்க வைத்து பொம்மையையும் அவளே விரும்பிக் கொடுத்துவிடச் செய்யவும்.

    ஒரு குழந்தை திருடியது பெற்றோருக்கோ, ஆசிரியருக்கோ தெரிந்துவிட்டால் அவன் மேல் மிகுந்த கோபம் கொள்கின்றனர். உடன் அக்குழந்தை மேல் பாய்ந்து அவனிடமிருந்து பொருளை மீட்கவும் அவனை அவமானப்படுத்தவும் முனைந்து விடுகின்றனர்.

    குழந்தை திருடிவிட்டால் அந்தப் பொருளைத் தானே சென்று திருப்பிக் கொடுத்துவிட்டு வரச் செய்யுங்கள். குழந்தையை அவமானப்பபடுத்துவதைக் கூடுமானவரை தடுத்து விடுங்கள். குழந்தை தானாகவே தன் தவற்றைஉணர்ந்து திருத்திக் கொள்ள வகை செய்யுங்கள்.


    priyachandran likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #38
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    குழந்தைக்கு என்ன உணவு தருவீங்க!

    * குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

    * குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    * உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது.

    அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #39
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    உணவு சாப்பிட மறுத்தால்...

    * சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.

    *
    சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

    *
    ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

    *
    சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.

    *
    அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும்.

    இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

    நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும்.


    உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

    * குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும் வேக வைத்து மசித்த காய்கறிகள்:

    * பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.

    *முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

    * இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

    * ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.

    * எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும்.

    * அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #40
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Kids world - மழலையர் உலகம்

    குழந்தைகளின் மனதுக்குள்ளே....

    குழந்தையின் மூளையானது பல ரகசியங்களை உள்ளடக்கியது. அதன் விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள். கருவறையில் தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்-படுத்தப் பட்டவை. தான்தோன்றித் தனமாக அல்ல.

    குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ "வெறுமையானது". அதாவது எதனையுமே கற்றுக் கொள்வதற்கு அது தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணும் எதுவும், காதுகளால் கேட்கின்ற எதுவும், தொடுகையினால் உணரும் எதுவும், நாக்கினாலே ருசிக்கின்ற எதுவும் அவர்களது 'புதிய' மூளையில் பதிகின்றன. எங்களுக்கு சாதாரணமாகத் தோன்றும் நடப்புகள் எல்லாம் அவர்கள் புதியதாகக் கற்றுக் கொள்வதாக இருக்கும். இவை அவர்களது மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நியூரோன்களின் கோர்-வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள்.

    குழந்தையின் மூளை கற்றுக் கொளவதற்கு வசதியான ஓர் எந்திரம்! குறுகிய காலத்தில் அவள் என்ன எல்லாம் கற்றுக் கொள்கிறாள்? தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு, ஆராய்ந்து திரிவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்குப் பின்னர் மனிதருக்கென்றே உரிய சிறப்புத் தன்மையான மொழியைக் கற்க வேண்டும். கல்வி நீண்டு கொண்டே போகும். வாழ்நாள் முழுவதும்.

    ஆரம்ப கால மன வளர்ச்சி நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி கட்டிப்பிடித்து விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும். இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கிவந்து விளையாட வேண்டும். மேற்கொண்டு குழந்தையின் மன வளர்ச்சி எப்படி நடைபெறுகிறது?

    பெற்றோர்கள் தங்கள் 8-10 மாதக் குழந்தையை அவளது ஆசனத்தில் இருத்திவிட்டு, சமையலறையில் அடுத்த நேரத்திற்கான உணவைத் தயார் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். குழந்தை இவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கவனமாக அவதானிப்பாள். இருவரும் வேகமாக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போகிறார்கள். எதை எதையோ எடுக்கிறார்கள். பிறகு அவற்றை வேறு எங்கோ வைக்கிறார்கள். இதையெல்லாம் செய்யும் போது, இருவரும் ஏதோ ஒருவருக்கு ஒருவர் கூறிக் கொள்கிறார்கள். இவ்வளவு சிக்கலான நடப்புகளையும் குழந்தைகள் மிக அவதானமாக தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. அவர்கள் மேலும் வளர்ந்து வர, இவை எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அவற்றின் தொடர்ச்சியையும் மொழியையும் எவ்வாறோ குழந்தைகள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். ஆயிரமாயிரம் பொருள்களுக்கும் ஆயிரமாயிரம் செயல்-களுக்கும் அவர்கள் இவ்வாறான தொடர்புகளை மனதில் உண்டாக்குவார்கள்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter