Quote Originally Posted by jv_66 View Post
So, friends,

இது விஷயமா மேலும் என்னோட கருத்து என்னன்னா ,
உங்க குழந்தைகளை , 12 வயசு வரை compel செஞ்சு தனியா படுக்க வைக்காதீங்க .

அவங்களா ,அந்த வயசுக்குள்ள , “நான் தனியா படுக்குறேன்னு “ சொன்னால் , உடனே object பண்ணாம , அதை செயல் படுத்தி , அவங்களுக்கு தைரியம் கொடுத்து , படுக்க வச்சு , அப்பப்போ நைட்ல செக் பண்ணிட்டே இருங்க சில வருஷங்களுக்கு .

அப்படி அவங்களே சொல்லலைன்னா , ஒரு 13 வயசுல , “இந்த வயசுல , நிறைய பிள்ளைங்க தனியா படுத்துக்கணும்னு விரும்புவாங்க , உனக்கும் அப்படி விருப்பமா , நான் உன்னைக் compel பண்ணலை . பட் தனியா படுத்துப் பழகினா , அப்புறம் பெரியவனா /வளா ஆகும்போது படிப்புக்காக வெளியூர் ஏதாவது போய் இருக்கணும்னா , உனக்கு எல்லாத்தையும் தனியா செய்ய தைரியமா இருக்கும் . வேணா கொஞ்ச நாள் ட்ரை பண்ணிப் பாரு . நான் எப்பவும் பக்கத்து ரூம்ல உன்னோட தான் இருப்பேன் . எந்த ஹெல்ப் வேணாலும் என்னைக் கேட்கலாம் “அப்டின்னு சொல்லுங்க .

Suppose, ரெண்டு ஆண் பசங்கன்னா , 10 வயசுலேர்ந்தே , அவங்க ரெண்டு பேரையும் தனியா படுக்க வைக்கலாம் .

Suppose ஒரு பெண் , ஒரு ஆண் , அப்டின்னா , 11 வயசுலேர்ந்தே , அவங்க ரெண்டு பேரையும் ஒரே பெட் ல படுக்க வைக்காம , அட்லீஸ்ட் தனித்தனி கட்டில் இல்லேன்னா தனித்தனி ரூம் இதுல படுக்க வைங்க .

அவங்ககிட்ட “இனிமே நீங்க பெரியவங்களா ஆகிட்டே வரீங்க , அதனால தனிதனியாதான் படுக்கணும்” அப்டின்னு சொல்லுங்க .
Thank you Jayanthy ka for the useful information.