Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree61Likes

Kutties Corner


Discussions on "Kutties Corner" in "Kids Zone" forum.


  1. #21
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    ஆரஞ்சு இங்கே? ஆப்பிள் எங்கே



    1. எந்த மாதம் 28 நாட்கள் கொண்டது?
    2. இருபது அடுக்கு மாடிகள் கொண்ட அப்பார்ட்மெண்டிலிருந்து ஒரு குழந்தை தவறி விழுந்து உயிர் பிழைத்து கொண்டது. எப்படி?
    3. ஒரு கூடையில் 6 முட்டைகள் இருக்கின்றன. 6 நபர்கள் ஒருவருக்கு ஒரு முட்டை என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்கின்றனர். அனைவரும் முட்டைகளை எடுத்துக் கொண்ட பின்பும் கூடையில் ஒரு முட்டை இருக்கிறது. எப்படி?
    4. மூன்று பெட்டிகள் இருக்கின்றன. முதல் பெட்டியில் ஆப்பிள், இரண்டாவதில் ஆரஞ்சு, மூன்றாவதில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு என ஓவ்வொரு பெட்டியிலும் லேபிள்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், மூன்று லேபிள்களும் தவறாக ஒட்டப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு முறை மட்டும் ஒரு பெட்டியை திறந்து பார்க்கலாம். ஆனால், மூன்று லேபிள்களையும் சரி செய்ய வேண்டும். என்ன செய்வீர்கள்?
    5. மேரியின் அம்மாவிற்கு நான்கு குழந்தைகள். முதல் குழந்தையின் பெயர் ஏப்ரல், இரண்டாவது மே, மூன்றாவது ஜுன். அப்படியானால் நான்காவது குழந்தையின் பெயர் என்ன?
    பதில்கள்
    1. 12 மாதங்களும் 28 நாட்கள் கொண்டவைதான்.
    2. தரை தளத்தில் இருந்த வீட்டின் ஜன்னலில் இருந்துதான் குழந்தை விழுந்தது.
    3. 6-வது நபர் கூடையோடு முட்டையை எடுத்துக் கொண்டார்.
    4. ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு என லேபிள் ஒட்டப்பட்ட பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். அதில் ஆரஞ்சு அல்லது ஆப்பிள் பழம் இருக்கும். உதாரணத்துக்கு, அந்த பெட்டியில் ஆரஞ்சு பழங்கள் இருந்தால் ஆரஞ்சு என்ற லேபிளை அதன் மீது ஒட்டி விடுங்கள். அடுத்து இதற்கு முன்பு ஆரஞ்சு என்று ஒட்டப்பட்டிருந்த பெட்டியை ஆப்பிள் என மாற்றுங்கள். இறுதியாக ஆப்பிள் லேபிளை ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு என மாற்றுங்கள்.
    5. மேரி


    Sponsored Links
    Last edited by lekha20; 15th Oct 2014 at 01:21 PM.
    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  2. #22
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    வளரும் கோபுரம் - நம்ப முடிகிறதா?


    # புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் கோடை காலத்தில் 15 சென்டி மீட்டர் உயரம் அதிகமாகிவிடும். காரணம் வெப்பத்தில் இரும்பு விரிவடையும்.

    # இரண்டு லட்சத்தில் ஒரு பிரசவத்தில்தான் ஒட்டிய இரட்டையர்கள் பிறக்கிறார்கள்.
    # மிக வேகமாக நீந்தக்கூடிய செயில் மீன் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தை சில விநாடிகளில் எட்டிவிடும்.
    # ஏதாவது நிறத்தைச் சொல்லும்படி கேட்டால் ஐந்து பேரில் மூன்று பேர் ‘சிவப்பு’ என்றே சொல்கிறார்கள்.

    # ஆக்டோபஸுக்கு 3 இதயங்கள் இருக்கின்றன.

    # ஒரு மனிதர் தினமும் சராசரியாக 4 கனவுகள் காண்கிறார்.

    # 1937-ம் ஆண்டில் லண்டனில் அதிவேக உயிரினமான சீட்டா ரேஸ் நடத்தப்பட்டிருக்கிறது.

    # அஞ்சல் தலைகளுக்கு அடியில் உள்ள பசையைக் கரப்பான்பூச்சிகள் விரும்பிச் சாப்பிடும்.

    # மூங்கில் ஒரே நாளில் சுமார் ஒரு மீட்டர் வரை வளர்ந்து விடும்.

    # ஒன்றிலிருந்து நூறு கோடிவரை வரிசையாக எண்ணி முடிக்க 30 ஆண்டுகள் ஆகும்.

    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  3. #23
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    எச்சில் ஊறவைக்கும் குச்சிகள்!








    உங்கள் லஞ்ச் பேக்கில் ஒரு நாள் ஸ்பூன் இல்லாமல் போனால் என்ன செய்வீர்கள்? பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் அம்மாவிடம் கோபித்துக்கொள்வீர்கள் இல்லையா? ஆனால், ஸ்பூனில் சாப்பிடுவது நமது பழக்கமில்லை. இது ஐரோப்பியர்களின் உணவுப் பழக்கம்.
    ஸ்பூன், ஃபோர்க் எனப்படும் முள்கரண்டி இரண்டையும் இப்போது நாமும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். ஆனால், நமது பக்கத்து நாடான சீனாவில் ‘குவைட்சு’ எனப்படும் இரண்டு குச்சிகளைப் பயன்படுத்தி உணவு உண்ணும் பழக்கம் உள்ளது. ஒரு வயதுக் குழந்தை முதல் 90 வயது குடுகுடு பாட்டிவரை சிந்தாமல் சிதறாமல் இந்தக் குச்சிகளைக் கொண்டே சாப்பிடுகிறார்கள். நூடூல்ஸ், காய்கறிகள், மாமிசம், புலவ் எனப்படும் அரிசி உணவையும் அவர்கள் இந்தக் குவைட்சு குச்சிகளைப் பயன்படுத்தியே சாப்பிடுகிறார்கள். இந்தக் குவைட்சு குச்சிகளை ஆங்கிலத்தில் ‘சாப்ஸ்டிக்ஸ்’(Chopsticks) என்று அழைக்கிறார்கள்.
    பழமையான குச்சிகள்
    குவைட்சு குச்சிகளைப் பயன்படுத்தி உணவை உண்ணும் பழக்கம் கி.மு. 500-களில் தொடங்கியது. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையான பழக்கம் இது. மாமிசத்தை வேகவைக்க சீனர்கள் நெருப்புத் துண்டுகளைப் பயன்படுத்தினார்கள். அதாவது ஒரு அகலமான பாத்திரத்தில் மசாலா தடவப்பட்ட மாமிசத் துண்டுகளை வைத்து சுற்றிலும் நெருப்புத் துண்டுகளை வைத்துவிடுவார்கள். மாமிசத் துண்டுகள் வெந்தபிறகு அவற்றைக் கையால் எடுத்தால் சுடும் அல்லவா? இதற்காக இரண்டு குச்சிகளை இடுக்கிபோல் பயன்படுத்தி அவற்றை எடுத்துப் பரிமாறும் பாத்திரத்தில் வைத்துக் கொண்டார்கள். மாமிசம் நெருப்பின் வெப்பத்தில் நன்றாக வெந்திருக்கிறதா என்று பார்க்க, அதைச் சமைப்பவர்கள் குச்சியில் பிடித்தபடியே கொஞ்சமாக ருசி பார்த்தார்கள். இந்தப் பழக்கமே பிறகு சிறிய அளவில் கைக்கு அடக்கமான குவைட்சு குச்சிகளாக மாறி, சாப்பாட்டு மேஜைக்கு வந்தது என்று கூறுகிறார்கள்.
    இவரும் காரணம்
    அர்த்தமுள்ள நல்ல வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சீனர்களுக்குச் சொல்லித் தந்தவர் கிமு 500-களில் வாழ்ந்த மாமேதையான கான்பூசியஸ். அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட சீனர்கள், உணவு மேஜையில் கத்தியைக் கொண்டு மாமிசத்தை வெட்டிச் சாப்பிடும் பழைய முறையைக் கைவிட்டார்கள். அவரே குவைட்சு குச்சிகளைப் பயன்படுத்தி உணவு உண்ண சீனர்களை வலியுறுத்தினார் என்றும் சொல்கிறார்கள்.
    சீனா, மியான்மர், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இன்று சாப்ஸ்டிக்ஸ் குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
    சீனமொழியில் குவைட்சு என்பது இரண்டு சொற்ககளின் சேர்க்கையில் உருவானது. குவை என்றால் ‘வேகமான’ என்பது பொருள். ‘சு' என்றால் மகன் என்பது பொருள். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைத்தால், அவர்களுக்கு ஒரு ஜோடி குவைட்சு குச்சிகளை கொடுத்து அனுப்புவது வழக்கமாம்.


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  4. #24
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    சித்திரக் கதை: கிச்சுகிச்சு தண்டனை








    ஒரு காட்டில் வால்தனம் செய்து தண்டனை பெற்ற குட்டி விலங்குகள், சிரித்துக்கொண்டே அதை அனுபவித்தன. அது எப்படி முடியும்?
    ‘ஹி... ஹி... விட்டுடுப்பா... விட்டுடுப்பா...’ என்று கெஞ்சிக்கொண்டே அப்பா சிங்கத்திடம் பிடிபடாமல் விலகி ஓடி, வேடிக்கை காட்டியது குட்டிச் சிங்கம்.
    ‘இன்னிக்கு உன்னை விட மாட்டேன்... பிடிச்சு பனிஷ் பண்ணினால்தான் நீ சரிப் படுவே...’ குட்டிச் சிங்கத்தைப் பிடிப்பதுபோல் நடித்துக் கொண்டிருந்தது அப்பா சிங்கம்.
    ‘ஹா... ஹா... வேணாம்பா... இனிமே தப்பு பண்ண மாட்டேன்...’ - சுற்றிச்சுற்றி ஓடி வந்தது குட்டி. அப்பா சிங்கமோ விடுவதாயில்லை. தன் முன்னங்கால்களால் குட்டியை எட்டிப் பிடித்தது. தன் தாடியை வைத்துக் குட்டிச் சிங்கத்தின் முகத்தில் தேய்த்தது.
    ‘ஹா... ஹா... ஹா... ஹோ.... ஹோ... கூசுதே... விட்டுடுப்பா... இனிமே அம்மாவுக்குத் தெரியாமல் குளத்துக்குப் போகமாட்டேன்... ஹா... ஹா...’, அப்பா சிங்கம் தன் தாடியால் கிச்சுகிச்சு மூட்டுவதைத் தாங்க முடிவில்லை குட்டியால். கூச்சத்தில் நெளிந்துகொண்டே வயிறு வலிக்கச் சிரித்தது.
    ‘எத்தனை முறை சொல்லியிருக்கேன்? பெரியவங்க துணை இல்லாமல் குளத்துக்குப் போகக்கூடாதுன்னு. குளத்தில் இருக்கும் முதலைகிட்டே மாட்டிக்கிட்டால்...? உன்னை அது தின்னுடுமே... அது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எவ்வளவு கஷ்டம்... உன்னைப் பிரிஞ்சு எங்களால வாழ முடியுமா? இனிமே குளத்துக்குப் போவியா..? போவியா..?’ – அப்பா சிங்கம் மறுபடியும் தன் தாடியால் கிச்சுகிச்சு மூட்டியது.
    ‘அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இது நல்ல விளையாட்டுதான்...’ – மரத்தடியில் உட்கார்ந்திருந்த அம்மா சிங்கம் புன்னகைத்துக் கொண்டது.
    குட்டிச் சிங்கம் சரியான அறுந்த வால். அப்பா, அம்மா பேச்சைக் கேட்பதில்லை. அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருக்கும். கரடிக் குட்டியுடன் சேர்ந்துகொண்டு காட்டைச் சுற்றும். ஒருமுறை முள்ளம்பன்றியிடம் வால்தனம் செய்து உடம்பெல்லாம் கீறலுடன் வீட்டுக்கு வந்தது. வால்தனம் செய்யும் போதெல்லாம் அப்பா சிங்கம் பிரம்பை எடுத்து விளாசும். அப்போதெல்லாம் ‘அப்பா... விட்டுடுப்பா... தெரியாமல் செஞ்சுட்டேன்...’ என்று குட்டி கெஞ்சும்.
    வாங்கிய பிரம்படியில் குட்டிக்கு உடம்பெல்லாம் வீங்கியிருக்கும். இரவெல்லாம் குட்டி வலியால் அழும். அப்போதெல்லாம் அப்பா சிங்கத்துக்குப் பாவமாய் இருக்கும். எல்லாம் ஒரு நாள்தான். மறுநாள் சிறுத்தையுடன் சேர்ந்து, குட்டி மரத்தில் ஏற முயலும். கீழே விழுந்து அடிபட்டு, அழுதுகொண்டே வந்து நிற்கும். மறுபடியும் அடி விழும்.
    ஒருநாள் இரவு. குட்டி அடிவாங்கிக் கொண்டு வலியில் அழுதது. அதற்கு வேடிக்கை காட்டத் தன் தாடியை வைத்து, அதன் முகத்தில் கிச்சுகிச்சு மூட்டியது அப்பா.
    உடனே அழுகையை மறந்து, கூச்சத்தில் நெளிந்துகொண்டே குட்டி கெஞ்சியது ‘ஹா... ஹா.... அப்பா விட்டுடு... கூசுது... ஹி... ஹி...’ அப்பா விடவில்லை. இன்னும் தாடியை வைத்து, தேய்த்துவிடத் தொடங்கியது.
    ‘ஹா.... ஹா... ஹா...’ என்று சிரித்துக்கொண்டே எழுந்து ஓடியது குட்டி. அப்பா விடவில்லை. துரத்திச் சென்று கிச்சுகிச்சு செய்தது.
    ‘இனித் தப்பு செய்வியா? இனி பேட் ஃபிரெண்ட்ஸ்கூடச் சேருவியா?’
    ‘ஹா... ஹா.... சேர மாட்டேன்...’
    ‘இனி அப்பா, அம்மா சொல்றதைக் கேட்பியா?’
    ‘கேட்கிறேன்... கேட்கிறேன்...’
    அந்த நேரத்தில்தான் அப்பாவுக்கு, அந்த யோசனை தோன்றியது. அடித்தால் வலிக்கும். இரவில் குட்டி வலியில் அழும். இனி அடிக்காமல் கிச்சுகிச்சு பண்ணிதான் இந்த வால் பயலைத் தண்டிக்கணும். அன்றிலிருந்து குட்டி செய்யும் வால்தனங்களுக்கு அடி விழுவதில்லை. கிச்சுகிச்சுதான் தண்டனை. அடிகளுக்குக்கூட அஞ்சாத குட்டி, கிச்சுகிச்சுவுக்கு பயந்தது. அன்றிலிருந்து அதன் வால்தனம் குறையத் தொடங்கியது. இது நடந்து சில வாரங்கள் ஓடியிருக்கும்.
    ஒருநாள் சிறுத்தை மரம் ஏறுவதற்குக் குட்டிச் சிங்கத்தைக் கூப்பிட்டது. ‘ஐயோ... நான் மாட்டேன்பா... அப்பாவுக்குத் தெரிந்தால் கிச்சுகிச்சு பண்ணு வாரு...’ என்று மறுத்தது குட்டி.
    ‘கிச்சுகிச்சா... அப்படின்னா...?’ சிறுத்தைக் குட்டி கேட்டது.
    ‘என் அப்பா தன் தாடியை என் மூஞ்சியிலே வெச்சுத் தேய்ப்பார். அடிகூடப் பரவாயில்லே... கிச்சுகிச்சுதான் தாங்க முடியலே...’ என்றது. சிறுத்தை நேராகத் தன் அப்பாவிடம் போனது.
    ‘அப்பா... இனிமே நான் தப்பு செய்தால் அடிக்கக் கூடாது. ஒன்லி கிச்சுகிச்சு பனிஷ்மெண்ட்தான். ஓகே..?’ என்றது. அப்பா சிறுத்தை விவரம் புரியாமல் விழித்தது. ‘என்னடா கண்ணா விஷயம்?’ என்று விசாரித்தது. குட்டிச் சிங்கத்தைப் பற்றி சிறுத்தைக்குட்டி சொன்னவுடன், ‘கண்ணா... சிங்கத்துக்குத் தாடி இருக்கு. கிச்சுகிச்சு பண்ணுது. எனக்குத் தாடி இல்லையே ராசா... நான் என்ன பண்றது?’
    ‘தாடி இல்லேன்னா ஒட்டுத் தாடியாவது வெச்சுக்கோ... ஐ வாண்ட் கிச்சுகிச்சு...’ என்று அடம்பிடித்தது. வேறு வழியில்லாமல், தேங்காய் நாரை வைத்துப் பொய்யாய் ஒரு தாடி தயாரித்துக்கொண்டது அப்பா சிறுத்தை. அன்றிலிருந்து, சிறுத்தை ஏதாவது தவறு செய்தால், அப்பா சிறுத்தை குட்டிச் சிறுத்தைக்குப் பொய் தாடியால் கிச்சுகிச்சு மூட்டும்.
    குட்டிச் சிறுத்தை கூச்சம் தாங்காமல் ‘கெக்கெக்கெக்கே...’ என்று ‘இழுத்து இழுத்து’ சிரிக்கும். சமயங்களில் சிரிக்கும்போது, அதன் கண்களில் கண்ணீர்கூட வந்துவிடும்.
    இந்தக் கிச்சுகிச்சு தண்டனை அப்பா சிறுத்தைக்கும் பிடித்திருந்தது. அடிகொடுத்தும் அடங்காத குட்டி, கிச்சுகிச்சு என்றவுடன் பயந்து அடங்குகிறதே என்று திருப்தியடைந்தது. கிச்சுகிச்சு தண்டனை பற்றி ஒருநாள் கரடியிடம் சிறுத்தை சொல்ல, கரடியும் ஒட்டுத் தாடி வைத்துக்கொண்டு கிச்சுகிச்சு தண்டனை முறையைப் பின்பற்ற, ‘அட இது நல்லா இருக்கே...’ என்று நினைத்த
    மற்ற விலங்குகளும் பொய்த் தாடியை ஒட்டிக்கொண்டு, தங்கள் குட்டிகள் வால்தனம் செய்தால் தண்டிக்கத் தொடங்கின.
    வால்தனம் செய்து அடிவாங்கி அழுத காட்டின் குட்டி விலங்குகள் எல்லாம், இப்போது, கிச்சுகிச்சு தண்டனையால் வாய்விட்டு, ‘ஹா... ஹா... ஹா...’ என்று சிரிக்கின்றன. முன்பைவிட தன் அப்பா, அம்மாவின் சொல் பேச்சைக் கேட்டுச் சமர்த்தாக நடந்துகொள்கின்றன. காட்டில் இப்போதெல்லாம் எந்தக் குட்டிகளும் அழுவதில்லை.
    கொஞ்சம் இருங்கள். யாரோ அழுகிற சத்தம் கேட்கிறதே... அது யார்?
    ‘மத்த விலங்குகளுக்குக் கிச்சுகிச்சு தண்டனை சரிப்படும். நமக்குச் சரிப்படாதுன்னு சொன்னேனே கேட்டியா... இப்ப பாரு... நான் கிச்சுகிச்சு செய்ததால் என் உடம்புல இருக்கிற முள் குத்தி, உன் உடம்பெல்லாம் காயமாகிடுச்சே...’ தனது குட்டியின் உடம்பைத் தடவி விட்டபடியே சோகத்துடன் கூறிக் கொண்டிருந்தது முள்ளம்பன்றி.



    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  5. #25
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    வெயிலும், குளிரும் பிறந்த கதை


    • ஓவியங்கள்: ராஜே
    • ஓவியங்கள்: ராஜே





    முன்னொரு காலத்தில் அண்ணன், தங்கை ரெண்டு பேர் இருந்தார்கள். ரெண்டு பேரும் ரொம்ப ஒற்றுமையா இருந்தார்கள். எங்கே போனாலும் ஒண்ணாதான் போவார்கள். அண்ணன் பேரு கதிரவன். தங்கை பேரு நிலா.
    தங்கை மேல அண்ணன் உயிரையே வைத்திருந்தான். தங்கையும் அண்ணனைச் சுற்றியே ஓடுவாள். ஊரே இவர்கள் ரெண்டு பேரையும் பாராட்டும். இவுங்க ரெண்டு பேருக்கும் ஒரு அம்மா இருந்தார்கள். அவங்க பேர் பூமி.
    ஒரே அம்மாவோட குழந்தைகள் என்றாலும் ஒரே மாதிரியா குணம் இருக்கும்? இருக்காது இல்லையா? கதிரவன் பயங்கர வாலு. நல்லா சேட்டை பண்ணுவான். ஆனா, படிக்கச் சொன்னா மட்டும் படிக்குற மாதிரி போக்குக் காட்டுவான்.
    அவனோட தங்கை நிலா நேர் எதிர். இருக்கற இடமே தெரியாம அமைதியா இருப்பாள். நல்லா படிப்பாள். அதனால எல்லோரும் நிலாவைப் பாராட்டுவாங்க. அதனால் கதிரவனுக்குத் தங்கை மேல் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறாமை வரத் தொடங்கியது.
    தங்கையை அடிக்கடி வம்புக்கு இழுப்பான் கதிரவன் அண்ணன். நிலா சும்மா இருந்தாலும் கதிரவன் சீண்டிக்கிட்டே இருப்பான். ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட ஆரம்பிச்சாங்க. ரெண்டு பேரும் ஓயாமல் சண்டை போட்டதால், பூமி அம்மாவுக்கு ஒரே கவலையா போச்சு.
    தங்கைக்குக் கல்யாணம் செய்து வைத்து வெளியே அனுப்பினால், அண்ணன் பாசமாயிடுவான்னு பூமி அம்மா நினைச்சாங்க. நிலாவுக்கு கல்யாண ஏற்பாடு செய்யத் தொடங்கினாங்க. ஆனால், தங்கைக்குத் திருமணம் முடியுறதுக்குள்ளேயே அண்ணன் – தங்கை சண்டை மறந்து பாசமலர்களா மாறிட்டாங்க.
    கல்யாணம் முடிந்தது. கல்யாணம் ஆனதால கணவன் வீட்டுக்கு நிலா போனாள். அம்மாவை விட்டுட்டு போனதால, நிலா சந்தோஷமாவே இல்லை. அம்மாவை அடிக்கடி நினைச்சுக்கிட்டே இருந்தாள்.
    அண்ணனோட வீட்டுக்கும் அடிக்கடி போக முடியா தில்லையா? அதனால் ஒருநாள் பூமி அம்மாவைச் சந்தித்துக் கண்ணீர்விட்டாள் நிலா. அம்மாவும் பொண்ணுக்காக ஒரு யோசனை சொன்னார்கள்.
    தினமும் காலை நேரத்துல அண்ணன் கதிரவன் வீட்டுலயும், இரவு நேரத்துல தங்கை நிலா வீட்டுலயும் இருக்கறதுன்னு முடிவு செய்தார்கள். கதிரவனும், நிலாவும் இதுக்கு சம்மதித்தார்கள்.
    நிலாவோட மாமியார் வீட்டுலயும் சந்தோஷமா ஒத்துக்கொண்டார்கள். அன்று முதல் அம்மா, அண்ணன் வீட்டுக்கும், தங்கை வீட்டுக்கும் தினமும் மாறி, மாறிப் போயிட்டு வர்றாங்க.
    கதிரவன் வீட்டுல தங்கும் போது அம்மாவுக்கு வெயில் அடிக்கும். நிலா வீட்டுல தங்கும் போது குளிர் அடிக்கும். ஏதாவது நிகழ்ச்சிக்காக கதிரவன் வீட்டுக்கு நிலா செல்லும்போது, அவள் மீதும் வெயில் படும். அன்று தான் பௌர்ணமி. இன்றுவரை இந்த வழக்கத்தைப் பூமி அம்மா சந்தோஷமாகக் கடைப்பிடித்து வர்றாங்க


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  6. #26
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    குளிரைத் தடுக்கும் கொழுப்பு








    # கரடி இனத்தைச் சேர்ந்த பனிக்கரடி, ஊன் உண்ணும் பாலூட்டி.
    # உலகில் வாழும் ஊன் உண்ணிகளில் பெரிய விலங்கு பனிக்கரடிதான்.
    # உறைபனி சூழ்ந்த குளிர்பிரதேசமான ஆர்டிக் கண்டத்தில் இவை வாழ்கின்றன.
    # கடலில் வாழும் சீல்கள் தான் இவற்றின் பிரதான உணவு.
    # வளர்ந்த ஆண் பனிக்கரடி 350 முதல் 700 கிலோ வரை இருக்கும். ஆணின் எடையில் பாதி எடையுடன் இருக்கும் பெண் கரடிகள்.
    # பனிக்கரடியின் ரோமம் வெள்ளையாகத் தெரிந்தாலும் அது கண்ணாடி போன்று நிறமில்லாதது. பனிக்கரடியின் தோல் கறுப்பு.
    # நிலத்தில் பிறந்தாலும் வாழ்நாளின் பெரும் பகுதியை கடலிலேயே கழிப்பவை பனிக்கரடிகள்.
    # பனிக்கரடிக்கு 42 பற்கள் இருக்கும்.
    # பனிக்கரடியின் தோலுக்கு அடியில் 10 சென்டிமீட்டர் அடர்த்தியில் கொழுப்புத் திரை இருக்கும். அதனால்தான் குளிரிலும்கூட பனிக்கரடி இயல்பாக இருக்க முடிகிறது.
    # பனிக்கரடிகள் அருமையான மோப்பத்திறன் கொண்டவை. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சீல்களையும் மோப்பத்திறனால் அறியக்கூடியவை.
    # நிலத்தில் மணிக்கு 40 கிலோமீட்டர் ஓடும் திறன் கொண்டவை. நீரில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    # பனிக்கரடி பொதுவாக தனியாக வாழும். பெரிய அளவில் திமிங்கலம் போன்ற உணவு கிடைக்கும்போது மட்டுமே பகிர்ந்து உண்பதைக் காணலாம்.
    # ஏப்ரல், மே மாதங்களில் உறை பனிக் காலத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
    # பெண் கரடிகள் பிரசவ காலத்தில் பனிப்பரப்பில் தனக்கென ஒரு வளையைத் தோண்டிக்கொள்ளும். அந்த வளையில் காற்று போகும் வசதியும் பல அறைகளும் இருக்கும்.
    # இரண்டு குட்டிகளை ஒரு பிரசவத்தில் பெற்றெடுக்கும்.
    # குட்டிகள் பிறக்கும்போது குறைந்தபட்ச ரோமத்துடன் கண்களை மூடியபடி பிறக்கும்.
    # பனிக்கரடிகள் வாழும் ஆர்டிக் பிரதேசத்தில் அதை இரையாகக் கொள்ளும் இரைகொல்லி கிடையாது.
    # 25 முதல் 30 ஆண்டுகள் வரை பனிக்கரடிகள் வாழும்.
    # அருகிவரும் இனமாகப் பனிக்கரடி கருதப்படுகிறது. மனிதர்களின் வேட்டையால் அதிகம் பாதிக்கப்படும் இனமாகப் பனிக்கரடி உள்ளது. அது மட்டுமல்லாமல் பூமி அளவு கடந்து வெப்பமடைவதால், வேகமாக அழிந்து வருகிறது.


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  7. #27
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    மூளை என்ற முதலாளி

    ஓவியம்: தர்மா
    சூரியன் மறைந்த அந்தி நேரம். நிலா டீச்சர் குடும்பத்தினர் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கவின் அவ்வப்போது சப் சப்... எனக் கைகளால் உடம்பெங்கும் அடித்துக் கொண்டிருந்தான்.
    வேறொன்றுமில்லை, கொசுக்கள் அவனைச் சூழ்ந்து கடித்துக் கொண்டிருந்தன. கடித்த இடங்களில் கைகளால் அடித்து கவின் கொசுவை விரட்டிக் கொண்டிருந்தான்.
    திடீரெனக் கவினுக்குக் கேள்வி பிறந்தது.
    அம்மா! என் கால்ல கொசு கடிக்கிற இடத்துக்கு என் கை உடனே போயிடுது. காலில கொசு கடிக்கிறது கைக்கு எப்படிம்மா தெரியுது? என்று கேட்டான் கவின்.
    இவனுக்கு மட்டும் எப்படிம்மா இப்படியெல்லாம் கேள்வி தோணுது? என்று ரஞ்சனி சிரித்தாள்.
    கவினுக்கு வரும் சந்தேகங்களாலதான் நீயும் நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்க முடியுது என்று கூறிய நிலா டீச்சர், கவின்! நல்ல சந்தேகத்தைத்தான் நீ கேட்டிருக்க என்றார்.
    சிரிப்பை நிறுத்திய ரஞ்சனி, விளக் கமா சொல்லுங்கம்மா என்றாள்.
    ஆயிரமாயிரம் அதிசய நிகழ்வுகள் நடக்கிற இடம் நம்ம உடம்புன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இப்ப நான் சொல்ல வர்ற விஷயமும் அப்படிப்பட்டதுதான்.
    நம்ம உடம்போட தலைவனா இருந்து, ஒட்டுமொத்த செயல்களை யும் கட்டுப்படுத்தற வேலைய மூளை செய்யுது. உடம்புல ஒவ்வொரு பாகத்துல நடக்கிற நிகழ்வுகள பத்தி எல்லாத் தகவலும் உடனே மூளைக்குப் போய்விடும்.
    அடுத்து என்ன செய்யணும்னு மூளை உத்தரவு போடும். அந்த உத்தரவுகள் வேக வேகமாக அந்தந்தப் பாகத்துக்கு எடுத்துச் செல்லப்படுது. உத்தரவு கிடைச்ச உடனேயே, குறிப்பிட்ட பகுதியில அந்த உத்தரவு செயல்படுத்தப்படும்.
    இப்படி உடம்போட பல பாகங்களில இருந்து மூளைக்குத் தகவல்களை எடுத்துச் செல்றதுக்கும், மூளை போடுற உத்தரவுகள உடம்போட மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் இருவழித் தகவல் போக்குவரத்துப் பாதை உடம்புல செயல்படுது.
    இப்படி நடக்கிற தகவல் பரிமாற்ற வேலையை நரம்புகள் செய்கின்றன. நரம்புகளோட இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கிற வேலையைத் தண்டுவடம் செய்யுது."
    அப்படியா ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்மா. இதையெல்லாம் நம்பவே முடியல என்றாள் ரஞ்சனி.
    நம்ம உடம்புல தகவல் பரிமாற்றம் நடந்துகிட்டு இருக்குங்கிறத நாம தெரிஞ்சுக்க முடியுமா? என்று கவின் கேட்டான்.
    ம் சில பரிசோதனைகள் மூலமா புரிஞ்சுக்க முடியுமே. நாம இப்போ ஒரு பரிசோதனை செய்வோம் என்ற நிலா டீச்சர், கவின்! ஒரு பழைய போஸ்ட் கார்டை எடுத்துட்டு வா என்றார். போஸ்ட் கார்டு வந்தது.
    இத வச்சு என்னம்மா செய்யப் போறீங்க? என்றாள் ரஞ்சனி.
    ரஞ்சனி, நீ இந்த போஸ்ட் கார்டை பிடி. உன்னோட வலது கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரலால் கார்டைப் பிடிச்சுக்கணும். கவின்! நீ கார்டுக்குப் பக்கத்துல உன் வலது கை கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் தயாரா வச்சுக்கணும். ரஞ்சனி கார்டைக் கீழே விட்டா, உன் ரெண்டு விரல்களால் உடனே அதைப் பிடிச்சிடணும். ரெடியா? என்றார் நிலா டீச்சர்.
    ஓகே ரெடிம்மா என்றனர் இருவரும்.
    ரஞ்சனி கார்டை விடத் தயாரானாள். அவள் விடும்போது கார்டைப் பிடிப்பதற்காகத் தனது இரு விரல்களை கார்டுக்கு அருகில் தயாராக வைத்திருந்தான் கவின்.
    ரஞ்சனி கார்டை விட்டாள். ஆனால், கவினால் அதைப் பிடிக்கவில்லை. கார்டு கீழே விழுந்துவிட்டது. மீண்டும் ரஞ்சனி அதேபோல் கார்டைக் கீழேவிட்டாள். இப்போதும் கவினால் பிடிக்க முடியவில்லை. இப்போது கவின் கார்டைப் போட்டான். ரஞ்சனியாலும் பிடிக்க முடியவில்லை.
    நீங்க ரெண்டு பேரும் கார்டைப் பிடிக்கலை. இப்போ நான் பிடிக்கிறேன் பாருங்க என்ற நிலா டீச்சர், வலது கையில் பிடித்திருந்த கார்டைக் கீழே விட்டார். அதை இடது கையின் இரண்டு விரல்களால் பிடித்துவிட்டார். இவ்வாறு தொடர்ந்து அவர் கார்டைக் கீழே விட்டு, பிடித்தார்.
    அம்மா! நீங்க கார்டைவிட்டு நீங்களே பிடிக்கிறீங்க. நான் போடுற கார்டை நீங்க பிடிங்க பார்க்கலாம் என்றான் கவின்.
    சரி என்றார் நிலா டீச்சர்.
    கவின் கார்டைப் போட்டான். ஆனால் நிலா டீச்சரால் பிடிக்க முடிய வில்லை. கவினும், ரஞ்சனியும் சிரித்தார்கள்.
    ஓகே! என்னால மட்டுமல்ல, யாராலயும் பிடிக்க முடியாது. அதாவது நம்ம போடுற கார்டை நம்மால பிடிக்க முடியும். அடுத்தவங்க போடுற கார்டை நம்மால பிடிக்க முடியாது என்றார் நிலா டீச்சர்.
    ஏன்னு சொல்லுங்கம்மா என்றான் கவின்.
    கவின் கையில கார்டு இருக் கிறப்போ, முதலில் ரஞ்சனி அந்த கார்டைப் பார்த்துகிட்டே இருக்கணும். எப்போ கார்டு கீழே விழுதோ, அதை ரஞ்சனியின் கண்கள் பார்த்த பிறகு அந்தத் தகவல் நரம்பு மண்டலம் வழியாக அவளோட மூளைக்குப் போய் சேருது.
    உடனே அந்த கார்டை பிடிக்கச் சொல்லி ரஞ்சனியின் விரல்களுக்கு, மூளை உத்தரவு போடுது. அந்த உத்தரவு கிடைச்சு, ரஞ்சனியின் விரல்கள் பிடிப்பதற்குள் கார்டு கீழே போய் சேர்ந்துடும்.
    அதே கார்டை நாம கீழே போடுறப்போ, நம்ம மூளைதான் ஒரு கைக்கு அந்த கார்டை கீழே விடும்படி உத்தரவிடுது. அந்த கார்டு எப்போ விழும் என்பது மூளைக்குத் தெரியும். ஒரு கை கார்டைக் கீழே விடும்போது, அதைப் பிடித்துக் கொள்ளும்படி அடுத்த கைக்கு உடனடியாக மூளை உத்தரவிடும்.
    இரண்டு உத்தரவுகளுக்கும் இடையிலான இடைவெளி ரொம்பக் கம்மி. அதனால நாம போடுற கார்டை, நம்மால பிடிக்க முடியுது என்று முடித்தார் நிலா டீச்சர்.
    செல்போனைப் போல உடம்புக்குள்ளயும் தகவல் பரிமாற்றம் நடப்பதைப் பரிசோதனை மூலமா ரொம்ப சுலபமா புரிய வைச்சிட்டீங்கம்மா என்றான் கவின்.
    உன்னைக் கொசு கடிச்சதாலதான் இவ்வளவு விஷயங்கள தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அந்தக் கொசுவுக்குத்தான் நீ நன்றி சொல்லணும் என்றாள் ரஞ்சனி.
    அனைவரும் சத்தமாகச் சிரித்தார்கள்.​


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  8. #28
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    ஆப்பிரிக்க ஆச்சர்யங்கள்!

    # உலகின் இரண்டாவது மிகப் பெரிய கண்டம் ஆப்பிரிக்கா.
    # உலகின் மிக நீளமான நதியான நைல் நதி இந்தக் கண்டத்தில்தான் ஓடுகிறது.
    # சாய்ரே, நைஜர், சாம்பேசி என மூன்று பெரிய நதிகளும் இந்தக் கண்டத்தில்தான் இருக்கின்றன.
    # உலகின் மிகப் பெரிய பாலைவனமான சகாரா இங்குதான் உள்ளது. கலஹாரி, நமீபியா ஆகிய இரு பெரிய பாலைவனங்களும் ஆப்பிரிக்காவிலேயே உள்ளன.
    # 14,300 வெவ்வேறு மொழி பேசும் மக்கள் ஆப்பிரிக்காவில் வசிக்கின்றனர்.
    # இந்தக் கண்டத்தில் இஸ்லாம், கிறிஸ்தவ மக்களே அதிகம் உள்ளனர்.
    # ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய சிகரம் ‘கிளிமாஞ்சரோ’. இதன் உயரம் 5,895 மீட்டர்.
    # இந்தக் கண்டத்தின் மிகப்பெரிய ஏரி ‘விக்டோரியா’. இதன் பரப்பு 68,800 சதுர கிலோமீட்டர்.
    # மக்கள்தொகை அடிப்படையில் இந்தக் கண்டத்தில் உள்ள பெரிய நாடு ‘ நைஜீரியா’. 11 கோடியே 50 லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள்.
    # ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நீர் யானை போன்ற அரிய வகை விலங்குகள் இக்கண்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன.


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  9. #29
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    பகல் பாதி, இரவு பாதி







    ஒவ்வொரு நாள் மாலையும் சூரியன் வீட்டுக்குப் போகும்போது வானத்தை அண்ணாந்து பார்த்திருக்கிறீர்களா? பிரகாசிக்கும் தங்க மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, நீலம், சில நேரம் வேறு பல வண்ணங்கள் கலந்து ஒவ்வொரு நாளும் வானம் வரையும் ஓவியங்கள் எவ்வளவு அழகு!
    கடந்த வாரமும் சாயங்கால வானத்தை அப்படி அண்ணாந்து பார்த்திருந்தால், ஒரு மாற்றத்தைக் கவனித்திருக்கலாம். வழக்கத்துக்கு மாறாக இரவு சீக்கிரமே வந்திருக்கும். பகல், சீக்கிரமே விடைபெற்று வீட்டுக்குப் போயிருக்கும். அதற்குக் காரணம் இருக்கிறது.
    இரண்டும் சமம்
    பிரபஞ்சத்தில் சூரியன்தான் எல்லாவற்றையும் இயக்குகிறது. பூமிப் பந்து ஒரு பக்கமாக, அதாவது 23.45 டிகிரி சாய்ந்த அச்சில் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் பூமியின் ஒரு பகுதியில் அதிகச் சூரிய ஒளி படும், மறுபுறம் குறைவாகப் படும். சூரிய ஒளி படுவதைப் பொறுத்துப் பகலும் இரவும் நீண்டும், குறுகியும் அமைகின்றன.
    இருந்தாலும் வருடத்துக்கு இரண்டு முறை மட்டும் இரவும் பகலும் கிட்டத்தட்ட சமமான அளவுக்கு இருக்கும். அதில் ஒரு நாள் செப்டம்பர் 22/23. மற்றொன்று மார்ச் 20. ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய வானியல் நிகழ்வுகளில் இவையும் ஒன்று. இந்த நாட்கள் சம இரவுபகல் நாள் (Equinox) எனப்படுகின்றன.
    இந்த இரண்டு நாட்களில் மட்டுமே உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இரவும் பகலும் ஒரே அளவுக்கு இருக்கும். செப்டம்பர் 22/23க்குப் பிறகு இந்தியாவில் பகல் நேரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும்.
    குறுகிய பகல்
    பூமிப் பந்து சூரியனுக்கு எதிர்பக்கமாக அதிகமாகத் திரும்பியுள்ள நிலை ஆங்கிலத்தில் குளிர்காலத் திருப்புநிலை (Winter solstice) எனப்படுகிறது. அந்த நாள் டிசம்பர் 21/22. அன்றைக்குப் பூமிப் பந்தின் தெற்கு மூலையில் சூரியன் இருக்கும், அதனால் சூரிய ஒளி நீண்ட நேரம் தெரியாததால் ஆண்டிலேயே குறுகிய பகலாக இருக்கும்.
    அதற்குப் பிறகு பகல் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும். பிறகு மீண்டும் மார்ச் 20-ம் தேதி பகலும் இரவும் சமமாக இருக்கும்.
    நீண்ட பகல்
    பூமி சூரியனின் பக்கமாக அதிகமாகத் திரும்பியுள்ள நிலை ஆங்கிலத்தில் கோடை திருப்புநிலை (summer solstice) எனப்படுகிறது. அது ஜூன் 20/21-ம் தேதி வருகிறது. அன்றைக்குப் பூமிப் பந்தின் வடக்கு மூலையில் சூரியன் இருப்பதால், நீண்ட நேரம் சூரிய ஒளி தெரியும் அன்றைய தினத்தின் பகல் ஆண்டிலேயே நீண்டதாக இருக்கும்.
    இப்போது தினசரி கவனித்துக் கொண்டே வந்தால், செப்டம்பர் 22/23க்குப் பிறகு பகல் குறுகிக்கொண்டே போவதைக் கவனிக்கலாம். அதுபோல அடுத்தடுத்து வரும் வானியல் நிகழ்வுகளையும் குறிச்சு வச்சுப் பாருங்க. ஒவ்வொண்ணையும் வருஷத்துக்கு ஒரு தடவைதான் பார்க்க முடியும்.
    சீன, ஆஸ்திரேலியக் கொண்டாட்டம்
    சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 1,07,826 கி.மீ. வேகத்தில் சூரியனை பூமி சுற்றுகிறது.
    # சூரிய ஒளி சூரியனில் இருந்து புறப்பட்டு பூமியை வந்தடைய 8 நிமிடம் 20 விநாடி எடுத்துக்கொள்கிறது.
    # ஆங்கிலத்தில் equinox என்ற சொல், equinoxium என்ற லத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதற்கு பகலும் இரவும் சமம் என்று அர்த்தம்.
    # கிரேக்க நம்பிக்கைபடி, முந்தைய மாதங்களின் வெற்றி, தோல்விகளை திரும்பிப் பார்ப்பதற்கான நாள்தான் சம இரவுபகல் நாள்.
    # ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளுக்கு செப்டம்பர் மாத சம இரவுபகல் நாள் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அதற்குப் பிறகுதான் ஆஸ்திரேலியாவில் வசந்த காலம் தொடங்கும்.
    # சீனாவில் இலையுதிர் காலத்துக்கு இடையில் வரும் சம இரவுபகல் நாள் நிலா விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, கோடை கால அறுவடையைக் கொண்டாடும் வகையில் தாமரை, எள், முட்டை, உலர்பழங்கள் சேர்க்கப்பட்ட மூன்கேக் செய்வது வழக்கம்.


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  10. #30
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    மரத்துக்கு வந்த ஆசை








    இது ஒரு தனித்திருந்த மரத்தின் கதை.
    பரந்த வயல்வெளியின் நடுவே அந்த மரத்திற்கு ஒரு வீடு இருந்தது. அந்த வயல்வெளியில் வேறு மரங்கள் எதுவும் இல்லை. எந்தப் பறவையும் அங்கு வருவதும் இல்லை. அதனால்தான் நம் கதையில் வரும் மரம் தனிமையாக உள்ளது.
    மரத்தின் மனதில் ஆயிரக்கணக்கான கதைகள். இந்தக் கதைகளை எல்லாம் யாரிடம் சொல்வது என அது நினைத்தது!சூரியன், நிலா, நட்சத்திரம் ஆகியோரிடம் சொல்லலாமா? ஆனால், அவை எல்லாம் வெகு தூரத்தில் வானில் அல்லவா இருக்கின்றன?
    திடீரென்று ஒருநாள் மாலை வேளையில், பாதை தவறிய ஒரு நீலக்குருவி அந்த மரத்தின் மீது வந்து உட்கார்ந்தது.நேரம் செல்லச் செல்ல வானம் இருட்டியது. இருட்டில் எப்படி வீட்டிற்குப் போக முடியும் என்று நீலக்குருவி யோசித்தது. அதனால் இரவு மட்டும் மரத்திலேயே தங்கி விடலாம் என நினைத்தது.
    இதைப் பார்த்த மரத்துக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. மனசுக்குள் துள்ளிக் குதித்தது. மரம் நீலக்குருவியிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மரமும் நீலக்குருவியும் நண்பர்களாகி விட்டார்கள். இருவரும் நேரம் போவதே தெரியாமல் விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்தது. நீலக்குருவி தன்னுடைய வீட்டுக்குப் புறப்படத் தயரானது.
    கவலைப்படாதே நண்பா, நான் மறுபடியும் இங்கு வருவேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டுக் குருவி பறந்து சென்றது.
    குருவி வரும் என்று இரவும் பகலும் மரம் காத்துக் கொண்டிருந்தது. பகல்கள் போயின, இரவுகள் போயின. நாட்கள் நகர்ந்தன. ஆனால் நீலக்குருவி மட்டும் வரவேயில்லை.
    மரம் கண்ணீர் விட்டு அழுதது. அதன் கண்ணீர், துளித் துளியாகக் கீழே விழுந்தது. ஒருநாள் காலையில் தன் கண்ணீர் கீழே குளமாகத் தேங்கியிருப்பதைக் கண்டது அந்த மரம். இப்போது குளத்துடன் பேசத் தொடங்கியது மரம். நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தது. இருந்தாலும் பேசுவதற்கான கதைகள் ஒரு நாளில் தீர்ந்துவிடுமா என்ன?
    தன் காலை குளத்தில் நனைத்தபடி மரம் பேசிக்கொண்டேயிருந்தது. பேசிக்கொண்டே குளத்தில் பிரதிபலித்தத் தன் கிளையைப் பார்த்தது. அந்தக் கிளையில்தான் ஒரு காலத்தில் ஒரு பறவை வந்து அமர்ந்திருந்தது. குளத்தின் துணையுடன் மரம் இப்போது தனியாக இல்லை.


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter