Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree61Likes

Kutties Corner


Discussions on "Kutties Corner" in "Kids Zone" forum.


  1. #31
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    பின்னோக்கிப் பறக்குமா தட்டான்கள்?

    # உலகில் டைனோசருக்கு முன்பே உருவான உயிர் தட்டான்கள். தட்டான் பூச்சியின் வயது 30 கோடி ஆண்டுகள்.
    # ஊசி உடல், கண்ணாடிச் சருகு இறக்கை, உருண்டைக் கண்களைக் கொண்ட கண்ணைக் கவரும் வண்ணப்பூச்சிகள் தட்டான்கள்.
    # தட்டான் பூச்சியில் ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.
    # தட்டான் பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள், ஆறு கால்கள், தலை, வயிறு, மார்பு உண்டு.
    # தட்டான் பூச்சியின் உறுப்புகளிலேயே அதன் வயிறுதான் நீளமானது. அது அறை, அறையாகப் பிரிக்கப்பட்டது.
    # ஆறு கால்கள் இருந்தாலும் தட்டானால் நன்றாக நடக்க முடியாது.
    # தட்டான்களால் வேகமாகப் பறக்க முடியும். பின்னோக்கியும் 50 கி.மீ. மைல் வேகத்தில் பறக்கும்.
    # நீரில் வாழும் சிறு உயிரினங்களைத் தட்டான்கள் உணவாக உட்கொள்கின்றன. பெரிய உடல் கொண்ட தட்டான்கள் தலைப்பிரட்டைகள், மீன் குஞ்சுகளையும் சாப்பிடும். காற்றில் பறந்துகொண்டே கொசு, ஈ, பறக்கும் சிறு பூச்சிகளையும் தட்டான்கள் சாப்பிடும்.
    # தட்டான்கள் நீர்ப் பகுதிகளுக்கு அருகில் வாழ்பவை. பெண் தட்டான்கள் முட்டைகளை நீரின் மேற்பரப்பிலேயே இடும். நூறு முதல் சில ஆயிரம் வரையிலான முட்டைகளை நீரிலோ, நீருக்கு அருகில் உள்ள பகுதிகளிலோ இடும். முட்டைகள் பொரிய ஓரிரு நாட்கள் முதல் ஒரு மாதம் வரை எடுத்துக்கொள்ளும்.
    # தட்டானின் இளம்புழுப் பருவம் நீரிலேயே கழியும். அதற்கு இறக்கைகள் இருக்காது. நீரில் மீன்களைப் போல் செவுள்களால் சுவாசிக்கும்.
    # இளம்புழுவாக இருக்கும்போது ஒன்பது முதல் 17 முறை தோலுரித்த பிறகு தட்டான் தண்ணீரிலிருந்து வெளியே வரும். பின்னர் சிறகுகள் முளைத்துப் பறக்கத் தொடங்கிவிடும்.
    # இளம்புழுப் பருவத்திலிருந்து நிலத்துக்கு வரும் பருவத்தில் சிறகுகள் முளைக்காமல் இருக்கும் தட்டான்களில் 90 சதவீதத்தை பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் சாப்பிட்டுவிடும்.
    # மற்ற பூச்சியினங்களுடன் ஒப்பிடும்போது, தட்டான்களின் பார்வை மிகக் கூர்மையானது. எல்லாக் கோணங்களிலும் பொருட்களைப் பார்க்க உதவுகிறது அவற்றின் கூட்டுக் கண்கள். ஒவ்வொரு கூட்டுக் கண்ணிலும் சுமார் 30 ஆயிரம் லென்சுகள் உள்ளன. இந்தப் பார்வைத் திறன்தான் பிற பூச்சிகளின் இயக்கத்தைக் கண்காணித்து மோதாமல் இருக்க உதவுகின்றன.
    # பெண் தட்டான்களைக் கவர்வதற்காக ஆண் தட்டான்கள் கடுமையாக மோதிக்கொள்ளும். ஒரு இடத்தில் வசிக்கும் ஆண் தட்டான் பூச்சி வேறு இடத்திலிருந்து வரும் ஆண் தட்டானை தனது எல்லைக்குள் வர அனுமதிக்காது.
    # தட்டான்களில் சில இனங்கள் இடம்பெயரும் வழக்கம் உள்ளவை. பருவ நிலைகளுக்கு ஏற்ப இடம் மாறும்.
    # சராசரியாக தட்டான் பூச்சிகளின் ஆயுட்காலம் ஓர் ஆண்டுதான். அதிலும் சிறகுகள் முளைத்த பருவத்தில் நாம் பார்க்கும் தட்டான்பூச்சி அதன் பிறகு சில மாதங்களே உயிருடன் இருக்கும். பருவ நிலை வெதுவெதுப்பாகவும் உலர்வாகவும் இருக்கும் காலத்தில் கூடுதல் நாட்கள் உயிர் வாழும்.



    Sponsored Links
    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  2. #32
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    குறள் புராணம்

    # திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.
    # திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
    # அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
    # பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
    # காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
    # திருக்குறள் ‘அக’ரத்தில் தொடங்கி ‘னக’ரத்தில் முடிகிறது.
    # திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000
    # திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
    # தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை
    # திருக்குறளில் இடம்பெற்ற இருமலர்கள் - அனிச்சம், குவளை
    # திருக்குறளில் இடம்பெற்ற பழம் - நெருஞ்சிப்பழம்
    # திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை - குன்றிமணி
    # திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள
    # திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
    # திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
    # திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து - னி (1,705 முறை)
    # திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ, ங
    # திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்
    # திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது.
    # திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
    # திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  3. #33
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    Vegetables sapda adam pidkra chutti unga vetla irundha.. try the trick in below story.

    எனக்கு காய்கறிகள் பிடிக்கும்

    நான் நான்காம் வகுப்பு படிக்கிறேன். எனக்குக் காய்களைக் கண்டாலே பிடிக்காது. அம்மா தினமும் மதிய உணவுக்காகக் கொடுத்தனுப்பும் காய்கறிகளை அப்படியே திருப்பிக் கொண்டுவந்து விடுவேன். காய்கறிகள் நம் உடலுக்குத் தேவையான சத்தைக் கொடுக்கின்றன என்று அப்பா சொல்வார். ஆனால் அவற்றைப் பார்த்தாலே வெறுப்புதான் வருகிறது.
    ஒருநாள் என் அறிவியல் ஆசிரியர், தாவரங்களைப் பற்றி பாடம் நடத்தினார். தாவரங்களுக்கும் நம்மைப் போலவே உயிர் இருக்கிறது, அவையும் நம்மைப் போலவே சுவாசிக்கும், சாப்பிடும் என்று அவர் சொன்னார். அதுமட்டுமல்ல, அவை நமக்கும் சேர்த்து உணவு தயாரித்துத் தருகிறது என்றும் சொன்னார். உடனே எனக்குத் தாவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்துவிட்டது.
    அன்று மாலை எங்கள் பள்ளி மைதானத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். அங்கே சிவப்பு நிறத்தில் சில விதைகள் கீழே கிடந்தன. அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்தேன். அவற்றை நட்டு வைத்தால் செடி முளைக்குமா என்று கேட்டேன். அம்மாவும் எனக்கு ஒரு தொட்டி வாங்கித் தந்தார்கள். அதில் விதைகளைப் போட்டு, மண்ணால் மூடினேன். மறுநாள் காலை அவற்றைக் கிளறிப் பார்த்தேன். எதுவுமே முளைக்கவில்லை. இப்படி அடிக்கடி கிளறினால் விதை முளைக்காது என்று அம்மா சொன்னார். பிறகு தினமும் தண்ணீர் மட்டும் ஊற்றினேன்.
    ஒருநாள் இரவு மழை பெய்தது. காலை எழுந்ததும் முதல் வேலையாக மாடிக்குச் சென்றேன். தொட்டியில் சின்னச் சின்னதாக செடிகள் முளைத்திருந்தன. எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. வீட்டில் அனைவரையும் அழைத்து வந்து செடிகளைக் காட்டினேன். என்னைப் பார்த்து என் தம்பிக்கும் செடிகள் மீது ஆர்வம் வந்துவிட்டது. அவனும் என் அம்மாவின் உதவியுடன் சில விதைகளை நட்டான். இப்போது நாங்கள் இருவரும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்று நிறைய செடிகளை வளர்க்கிறோம். அவற்றில் இருந்து நாங்களே காய்களைப் பறித்து அம்மாவிடம் தருகிறோம்.
    இன்னொரு விஷயம் தெரியுமா? இப்போது எனக்குக் காய்களை மிகவும் பிடிக்கிறது. அனைத்தையும் விரும்பிச் சாப்பிடுகிறேன்.

    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  4. #34
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    விநோத ஆழ்கடல்

    கடலுக்கடியில் என்ன இருக்கும்? கடல் எவ்வளவு ஆழமாக இருக்கும்? இப்படியான கேள்விகள் உங்களுக்கு எழுந்திருக்கிறது அல்லவா? உண்மையில் நில மட்டத்தில் இருந்து கடலுக்குள் ஓரிரு மைல்வரை இருக்கும் பகுதியை ‘கண்ட எல்லை’ என்றே அழைக்கிறார்கள். இதன் சாரசரி ஆழம் 600 அடி.
    அதற்குப் பிறகுதான் நிஜக் கடலே தொடங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் சமவெளிப் பிரதேசம், எரிமலைகள், படுகுழிகள், மலைத்தொடர்கள் ஆகியவையும் ஆழ்கடலுக்குள் அணிவகுத்து காணப்படுகின்றன. கடலுக்கடியில் சூரிய ஒளியினால் ஏற்படும் வெளிச்சம்கூட 100 அடி வரைதான் தெரியும். அதற்குக் கீழ் வெளிச்சம் மங்கிவிடும். ஆயிரம் அடிக்கு பிறகு கும்மிருட்டுதான்!
    சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜேக் பிக்கர்ட் என்ற விஞ்ஞானி 1955-ம் ஆண்டில் ஒரு சிறிய நீர்மூழ்கி அமைப்பு மூலம் கடலுக்குள் இறங்கினார். 5 மணி நேர பயணத்துக்கு பிறகே, தரையைத் தொட்டுவிட்டதாக வயர்லஸ் கருவி மூலம் தகவல் அனுப்பினார். பசிபிக் பெருங்கடலில் அவர் இறங்கிய இடம்தான் ‘மரியானா டிரெஞ்ச்’. அதன் ஆழம் 35 ஆயிரத்து 808 அடி.
    உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டைவிட இது மிகவும் அதிகம். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 26 ஆயிரத்து 246 அடி. அப்படியானால் கடல் எவ்வளவு ஆழம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆனால், கடலின் ஆழம் எல்லா இடங்களிலும் இப்படி ஒரே மாதிரியாக இருக்காது. இடத்துக்கு இடம் மாறுபடவும் செய்யும்.

    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  5. #35
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    Kutties here is something for you to do.....





    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  6. #36
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    நடக்கும் இலை ஓடும் குச்சி நீந்தும் கல்!

    இலை வால் பல்லி
    உயிரினங்களில் பலவற்றுக்குப் உருமறைப்பு (camouflage) என்ற தகவமைப்பை இயற்கை வழங்கியிருக்கிறது. சில உயிரினங்களுக்கு இடத்துக்கு ஏற்றாற் போல தோலின் நிறம் அமைந்திருக்கும். சில உயிரினங்களுக்கு இடத்துக்கு ஏற்றாற் போல நிறம் மாறும். சில உயிரினங்களின் உடலில் உள்ள கோடுகளும் புள்ளிகளும் எதிரிகளைக் குழப்பமடையச் செய்யும்.
    அதாவது, எளிதில் எதிரியின் கண்களில் படாமல் தப்பிக்கவும், தன்னுடைய இரையை எளிதில் பிடிக்கவும் இந்தத் தகவமைப்பு உதவுகிறது. வித்தியாசமான தகவமைப்பை பெற்றுள்ள சில உயிரினங்களைப் பார்ப்போமா?
    இலை வால் பல்லி
    காய்ந்த இலைகளைப் போன்ற தோற்றமுடைய இலை வால் பல்லி (leaf tailed gecko) ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் காணப்படுகிறது. மரப்பட்டை, காய்ந்த இலைகளுடன் இருக்கும் இந்தப் பல்லியை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. 10 முதல் 30 செ.மீ. நீளம் வரையே இது இருக்கும். இலை வால் பல்லியில் எட்டு வகைகள் இருக்கின்றன.
    ஒவ்வொன்றும் உருவம், நிறங்களில் சிறிய மாற்றங்களுடன் காட்சியளிக்கின்றன. பகல் நேரங்களில் மரப்பட்டை, கிளைகளில் ஓய்வெடுத்துவிட்டு, இரவு நேரங்களில் உணவு தேடிக் கிளம்பும். பூச்சிகள், கொறிக்கும் சிறு விலங்குகள் இவற்றின் உணவு.
    இலைப் பூச்சி
    இலைப் பூச்சியை (leaf insect) நடக்கும் இலை என்றே அழைக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற் போல இலையைப் போலவே இருக்கிறது இந்தப் பூச்சி. இப்பூச்சியால் பறக்க முடியாது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகளைத் தின்று வளரும்போது பச்சை நிறத்துக்கு மாறிவிடும். 2.3
    அங்குலமே இருக்கும் இந்த இலைப் பூச்சிகள் இலைகளுடன் சேர்ந்திருந்தால் சுலபத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. இந்தியா, ஃபிஜி தீவுகளில் இலைப் பூச்சிகள் வாழ்கின்றன. இவற்றின் நெருங்கிய உறவினர்தான் குச்சிப் பூச்சிகள்.

    குச்சிப் பூச்சி
    நடக்கும் குச்சி அல்லது குச்சிப் பூச்சிகள் (stick insect) நீண்ட உடலைப் பெற்றவை. அசையும்போதுதான் அது குச்சிப் பூச்சி என்றே அடையாளம் கண்டுகொள்ள முடியும். இப்பூச்சிக்கு நீண்ட ஆண்டெனாக்கள் உண்டு. ஒரு அங்குலத்தில் இருந்து ஒரு அடி வரை பல சைஸ்களில் குச்சிப் பூச்சிகள் உள்ளன. பூச்சிகளிலேயே மிகவும் நீளமானது இதுதான்! பார்ப்பதற்குச் சட்டெனத் தெரியாது. துர்நாற்றத்தை வெளியிட்டு, எதிரியிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும். ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கக் கண்டங்களில் இது காணப்படுகிறது. பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றன.

    கும்பிடு பூச்சி
    கும்பிடு பூச்சியின் (praying mantis) முன்னங்கால்கள் இரண்டும் சேர்ந்து கும்பிடுவதுபோல இருப்பதால் இந்தப் பெயர்! 180 டிகிரிக்கு இப்பூச்சித் தலையைத் திருப்பி, சுற்றுப்புறத்தைக் கவனிக்க முடியும். பச்சை, பழுப்பு வண்ணங்களில் காணப்படும் இந்தப் பூச்சியும் எளிதில் நம் கண்களுக்குத் தெரியாது. இதே நிறத்தில் உள்ள வெட்டுக்கிளி, விட்டில் பூச்சி, ஈக்கள்தான் இதன் உணவு. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியக் கண்டங்களில் இந்தப் பூச்சிகள் காணப்படுகின்றன.

    மலர் பூச்சி
    கும்பிடு பூச்சியின் உறவினர் இந்த ஆர்கிட் மலர் பூச்சி (orchid flower mantis). ஆர்கிட் மலர்களை அச்சு அசலாக ஒத்திருக்கும். வெள்ளை, இளஞ் சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். கால்கள் ஆர்கிட் மலர்களின் இதழ்களைப் போல இருக்கும். இரையைக் கண்டதும் தாவரங்கள் மீது மெதுவாக ஏறி, பூக்களுக்கு அருகே வரும். இரையாகும் உயிரினம் இது பூவா, பூச்சியா என்று குழப்பம் அடையும். அப்போது இரையைப் பிடித்துச் சாப்பிட்டுவிடும். மலேசியா, இந்தோனேசியாவில் இப்பூச்சி காணப்படுகிறது.

    கல் மீன்
    உலகிலேயே அதிக விஷம் கொண்டது கல் மீன் (stone fish). கடலின் தரையில் வாழக்கூடியது. பவழத்திட்டுகள், பாறைகளுக்கு அருகில் வசிக்கும். தன்னுடைய துடுப்பால் மண்ணைக் கிளறும். அசையாமல் ஒரே இடத்தில் அப்படியே இருக்கும்.
    மீன் என்று தெரியாமல் இரை வந்தால், மிக வேகமாகச் சென்று முள்ளை விரித்து, விஷத்தைச் செலுத்திவிடும். பின்னர் இறந்த இரையை உணவாக்கிக்கொள்ளும். மனிதர்கள் மீது விஷம் பட்டாலும் பிழைப்பது கஷ்டம். பசிபிக், இந்தியப் பெருங்கடல்களில் இம்மீன் காணப்படுகிறது.

    Keywords: பல்லி, இலைப் பூச்சி, மலர் பூச்சி, கல் மீன், கும்பிடு பூச்சி, குச்சிப் பூச்சி, உயிரினங்கள், தகவல், சிறுவர், பூச்சிகள்,


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  7. #37
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    ஒளிந்து விளையாடும் சூரியன், பூமி

    ஓவியம்: தர்மா
    இரண்டு வாரங்களுக்கு முன்னால் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அன்றைய தினம் நிலா டீச்சர் குடும்பத்தினரும் சந்திரன் உதயமானவுடனேயே மொட்டை மாடியில் நின்று பார்த்தனர். பௌர்ணமி நிலவையே அவர்களால் பார்க்க முடிந்தது. கிரகண நிலவைப் பார்க்க முடியவில்லை.
    என்றாலும், மொட்டை மாடியிலே உட்கார்ந்துகொண்டு கிரகணம் பற்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்டு கவினும், ரஞ்சனியும் நிலா டீச்சரைத் துளைத்தெடுக்க ஆரம்பித்தனர்.
    அம்மா சந்திர கிரகணம்னா என்னன்னு முதல்ல சொல்லுங்கம்மா என்றான் கவின்.
    பூமியோட நிழல் சந்திரன் மேல விழும். அதான் சந்திர கிரகணம் என்றார் நிலா டீச்சர்.
    ஒண்ணுமே புரியல. வெளக்கமா சொல்லுங்கம்மா என்றாள் ரஞ்சனி.
    பௌர்ணமியும் அமாவாசையும்
    சரி சொல்றேன். கிரகணம் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி நிலாவோட இயக்கத்தைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும். நிலா பூமியைச் சுத்தி வருதுன்னு உங்களுக்குத் தெரியும். அப்படி ஒருமுறை சுத்தி வர இருபத்தி ஒன்பதரை (29.5) நாட்கள் ஆகுது. இப்படி நிலா சுத்தி வர்றதால சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வருவதும், அப்புறம் சூரியனுக்கும் நிலாவுக்கும் இடையே பூமி வருவதும் மாத்தி மாத்தி நடக்கும்.
    பூமி மேல சூரிய ஒளி படுறதைப் போல, நிலா மேலேயும் சூரிய ஒளி படுது. அதனால் ஏற்படற எதிரொளிப்பதான் நிலா வோட வெளிச்சமா நாம பார்க்குறோம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும்போது, அதன் மேல விழும் வெளிச்சத்தை நாம பார்க்க முடியாது. அதனால அந்த நேரத்துல நமக்கு நிலா தெரியாது. இதைத்தான் அமாவசைனு சொல்றோம்.
    அதுக்குப் பிறகு கொஞ்சமா கொஞ்சமா நிலா நகர நகர, அதன் மேல சூரிய ஒளி விழுற பரப்பும் அதிகரிக்கும். அப்போ ஒவ்வொரு நாளும் நிலா வளர்ந்துகிட்டே போறது போல இருக்கும். இதத்தான் வளர்பிறைன்னு சொல்றோம். ஒரு கட்டத்துல பூமியோட இன்னொரு பக்கத்துக்கு நிலா வந்திடும். அப்போ சூரியன பார்த்துகிட்டு இருக்கும் மொத்த பரப்புலயும் சூரிய ஒளிபட்டு எதிரொளிக்கும்போது முழு நிலவை, அதாவது பௌர்ணமியைப் பார்க்கலாம்.
    அப்புறம் தொடர்ந்து நகர நகர நிலா மேலே சூரிய ஒளி படுற பரப்பு குறைஞ்சுகிட்டே போகும். அதனால சூரிய ஒளியை எதிரொலிக்கிற நிலவோட பரப்பும் குறைஞ்சுகிட்டே போறதாலே, நாளுக்கு நாள் நிலவு தேயுற மாதிரி இருக்கும். மீண்டும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலா வரும்போது, நிலா மேல சூரிய ஒளி விழுறதை நம்மால பார்க்க முடியாது. அதுதான் அமாவாசை தினம்.
    இப்படியாகப் பூமியைச் சுத்தி நிலா தொடர்ந்து நகர்ந்துகிட்டே இருக்கும். அமாவாசையும் பௌர்ணமியும் மாத்தி மாத்தி வந்துகிட்டே இருக்கும்.
    கிரகணங்கள்
    இப்படிச் சுத்தி வர நிலா எப்போதாவது மட்டும்தான் சூரியன், பூமி இருக்குற ஒரே நேர்க்கோட்டுல வரும். அப்படி வரும்போது கிரகணம் ஏற்படும்.
    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும்போது நேர்க்கோட்டில் வந்தா, அந்த நாள்ல சூரிய கிரகணம் நடக்கும். அன்னைக்குப் பூமிக்கு வரும் சூரிய ஒளியை நிலா மறைக்கும். இது அமாவசை அன்னைக்குத்தான் நடக்கும்.
    அதேபோல் சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி நேர்க்கோட்டுல வந்தா, அன்னைக்கு நிலா மேல விழும் சூரிய ஒளியைப் பூமி மறைக்கும். அந்த நாளில்
    சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம். பௌர்ணமி அன்னைக்குத்தான் இது நடக்கும்.
    பூமியோட நிழல் படற நேர்க் கோட்டுப் பகுதியில நிலா நுழைய ஆரம்பிச்சதும் கொஞ்சம், கொஞ்சமா அது மறையும். நேர்க்கோட்டுப் பகுதியை விட்டு வெளியே வரும்போது, மீண்டும் நிலா தெரிய ஆரம்பிக்கும். இதுதான் சந்திர கிரகணம்" என்றார் நிலா டீச்சர்.
    முழு கிரகணம், பகுதி கிரகணம் என்றெல்லாம் சொல்றாங்களே அப்படின்னா என்னம்மா என்றாள் ரஞ்சனி.
    அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே ஒரு நேர்க்கோடு வரைஞ்சா, அதே நேர்க்கோட்டுல நிலாவோட மையப் புள்ளி கடந்து போக நேரிட்டால் அன்னைக்கு முழு கிரகணம் ஏற்படும். அப்படியில்லாம நிலாவோட மையப் புள்ளி நேர்க்கோட்டுக்கு மேலேயோ அல்லது கீழேயோ இருக்கும் போகும்போது முழுமையாக மறைக்கப்படாது. அன்னைக்குப் பகுதி கிரகணத்தைதான் பார்க்க முடியும்" என்றார் நிலா டீச்சர்.
    ஏன் பார்க்கலை?
    இப்ப வந்துட்டு போச்சே, அந்தச் சந்திர கிரகணத்தை நம்மளால ஏம்மா பார்க்க முடியல என்று கேட்டான் கவின்.
    அன்னைக்குச் சூரியனுக்கும், பூமிக்குமான நேர்க்கோட்டை நிலா கடந்து போகிற நிகழ்வு என்பது நம்மூர்ல நிலா உதிக்கும் நேரத்துக்கு முன்னாடியே நடந்து முடிஞ்சிடுச்சு. அதனாலதான் அன்னைக்கு நம்மளால பார்க்க முடியல. நமக்குக் கிழக்கே இருக்கக்கூடிய சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகள்ல சூரிய உதயத்தையும், சந்திர உதயத்தையும் நமக்கும் முன்னாடியே பார்க்க முடியும். அதனால, அன்னைக்கு அந்த நாடுகள்ல உள்ள மக்கள் சந்திர கிரகணத்தைப் பார்த்திருப்பாங்கஎன்றார் நிலா டீச்சர்.
    நாம இனி சந்திர கிரகணத்தை பார்க்கவே முடியாதா என்று ஏக்கத்துடன் கேட்டான் கவின்.
    அடுத்தது சூரியன், பூமியோட நேர்க்கோட்டை சந்திரன் கடந்து போகிற நிகழ்ச்சி 2015 ஏப்ரல் 4-ம் தேதி நடக்கப் போகுது. அன்னைக்கு நாம சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம் என்று முடித்தார் நிலா டீச்சர்.
    அம்மா கூறிய தகவல்களால் திருப்தியடைந்த கவினும் ரஞ்சனியும் அடுத்த ஆண்டு நடக்கப் போகிற சந்திர கிரகணத்தைப் பார்க்ககும் ஆவலோடு, மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றனர்.


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  8. #38
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    நீங்களே செய்யலாம் - குட்டியூண்டு ஸ்டூல்

    உட்காருவதற்கும், உயரத்தில் உள்ள பொருட்களை எடுக்கவும் பயன்படுத்துவோம் அல்லவா? அதைப் போன்ற விளையாட்டு ஸ்டூல் ஒன்றை வீட்டிலேயே செய்து பார்க்கிறீர்களா?
    தேவையான பொருள்கள்:
    # தடிமனான தாள்
    # 12 தீக்குச்சிகள் (அனைத்து தீக்குச்சியிலும் தலைப் பகுதியை ஒடித்து எடுத்துவிடுங்கள். படத்தில் காட்டியுள்ளபடி மூன்று விதமான நீளங்களில் நான்கு நான்காகப் பிரித்துக் கொள்ளுங்கள்)
    # கத்தரிக்கோல்
    # பசை.
    செய்முறை:
    1 படத்தில் காட்டியுள்ளபடி தடிமனான தாளில் சதுர வடிவத்தில் ஒரு துண்டை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

    2 மிகக் குறைந்த நீளம் கொண்ட தீக்குச்சிகளைக் கொண்டு ஒரு சட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். பின்னர் இந்தச் சட்டத்தில், தடிமனான தாளிலிருந்து வெட்டி எடுத்த சதுர வடிவத் துண்டை ஒட்டிக்கொள்ளுங்கள்.

    3 இப்போது மிக அதிக நீளம் கொண்ட தீக்குச்சிகளைப் பயன்படுத்தி ஸ்டூலின் கால்களை உருவாக்குங்கள். அடுத்ததாக நடுத்தரமான நீளம் கொண்ட தீக்குச்சிகளின் மூலம் ஸ்டூலின் அடிப்பகுதியில் வரும் சட்டத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

    இப்போது விளையாட அருமையான ஸ்டூல் கிடைத்து விட்டதா? இதை வைத்து விளையாடுங்கள். ஆனால், ஆசையாக அதில் ஏறி உட்கார்ந்துவிடாதீர்கள்!


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  9. #39
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    புத்திசாலிப் படகோட்டி - இந்தோனேசிய நாட்டுப்புறக் கதை


    • ஓவியம்: ராஜே
    • ஓவியம்: ராஜே





    இந்தோனேசிய மன்னர் டோஜராவை ஒரு வியாபாரி ஒரு நாள் சந்தித்தார்.
    என் கப்பலில் உள்ள அனைத்து வெளிநாட்டுப் பொக்கிஷங்களையும் உங்களுக்கு அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கு முன் ஒரே ஒரு நிபந்தனை. உங்கள் குடிமக்களில் யாராவது ஒருவர் எனது இரண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றார்.
    உடனே தன் அரசவையில் இருந்த அனைத்து அறிஞர் பெருமக்களையும் அந்த வியாபாரியைச் சந்திக்க அனுப்பினார் மன்னர்.
    இரண்டு வாத்துகளை எடுத்துக் காட்டிய வியாபாரி, இதில் எது ஆண், எது பெண்? என்று கேள்வி கேட்டார்.
    அடுத்ததாக, நீள்உருளையான ஒரு குச்சியை எடுத்துக் காட்டி, இதன் முன்முனை எது, பின் முனை எது என்று உங்களால் பதில் சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.
    வியாபாரி கேட்ட இந்த இரண்டு கேள்விகளுக்கும் அறிஞர்களால் எந்த பதிலும் அளிக்க முடியவில்லை.
    இதையடுத்து, தண்டோரா போடுபவர்கள் ஊரெங்கும் சென்று மன்னர் கூறிய அறிவிப்பை சொன்னார்கள்.
    இதனால் சகலமானவர்களுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நம் நாட்டுக்கு வந்துள்ள வியாபாரி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க குடிமக்களில் யாருக்காவது புத்திசாலித்தனம் இருந்தால், அவர் நம் தேசத்தின் அடுத்த இளவரசர்-இளவரசியாக அறிவிக்கப்படுவார்
    அப்போது படகு ஓட்டி கொண்டிருந்த இளம் படகோட்டி இந்த தண்டோரா அறிவிப்பைக் கேட்டான்.
    இந்தக் கேள்விக்கு இந்த நாட்டில் உள்ள யாராலுமே பதில் அளி்க்க முடியவில்லையா? அப்படியானால் இந்த வாய்ப்பை நாம் தவறவிடக் கூடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் அந்த படகோட்டி.
    அடுத்த நாள்
    மேதகு மன்னர் அவர்களே! வியாபாரியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், அதற்கு நீங்கள் ஏரிக் கரைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் படகோட்டி.
    இதையடுத்து மன்னர், அமைச்சர்கள், கேள்வி கேட்ட வியாபாரி அனைவரும் ஏரிக்கரைக்குச் சென்றார்கள். போகும்போது வாத்துகளையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.
    வியாபாரியின் கையிலிருந்த கூண்டை வாங்கி, அந்த படகோட்டி வாத்துகளை வெளியே எடுத்தான்.
    அதன் பிறகு, கரையில் அந்த இரண்டு வாத்துகளையும் மெதுவாக நிற்க வைத்தான். அப்போது கறுப்பாக இருந்த வாத்து நீரில் இறங்கி முதலில் நீந்திச் செல்லத் தொடங்கியது.
    உடனே படகோட்டி, இந்த கறுப்பு வாத்துதான் ஆண் வாத்து என்று பதில் கூறினான்.
    அப்படியா, அதை எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று கரையில் நின்று கொண்டிருந்த மன்னர் கேள்வி கேட்டார்.
    மன்னா, எப்போதுமே ஆண் வாத்துதான் நீரில் முதலில் இறங்கும். அதனால் கறுப்பு வாத்துதான் ஆண் என்று மீண்டும் கூறினான் படகோட்டி இளைஞன். பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் இதைக் கேட்டு வாயைப் பிளந்தனர்.
    அந்த படகோட்டி இளைஞன், வியாபாரியின் கையில் இருந்த உருண்டைக் குச்சியை வாங்கி தண்ணீரை நோக்கி வீசினான்.
    அந்தக் குச்சி மூழ்கியுள்ள பகுதி, அந்த மரத்தின் அடிப்பகுதி. மேலே மிதக்கும் பகுதி அதன் நுனிப் பகுதி அடுத்த கேள்விக்கான பதிலையும் கூறினான் படகோட்டி.
    இந்த இளைஞன் சொன்ன இரண்டு பதில்களும் சரியானவைதான். ஏற்கெனவே, நான் அளித்த வாக்குறுதிபடி, எனது கப்பலில் உள்ள வெளிநாட்டுப் பொக்கிஷங்களை உங்களுக்கு வழங்குகிறேன் மன்னரே என்றார் வியாபாரி.
    உடனே மன்னர், நீங்கள் மட்டுமல்ல, நான் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றியாக வேண்டும். நான் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்த இளைஞரை
    எனது இளவரசராக அறிவிக்கிறேன் என்று ஆணையிட்டார்.
    இருந்தாலும் மன்னருக்கு மனதுக்குள் ஒரு சின்ன சந்தேகம்.
    சரி, எப்படி இந்த இரண்டு பதில்களையும் உன்னால் உறுதியாகச் சொல்ல முடிந்தது என்று அந்த இளைஞனைப் பார்த்து கேட்டார் மன்னர்.
    அடிப்படையில் நான் ஒரு படகோட்டி. தண்ணீரில் எது மூழ்கும், எது மிதக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்புறம் ஏரியில்தானே நான் படகு ஓட்டுகிறேன். அங்கு சுற்றியிருக்கும் எல்லா விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்ததாலே, இந்தக் கேள்விகளுக்கு என்னால் எளிதாக பதில் சொல்ல முடிந்தது என்று கூறினான் படகோட்டி இளைஞன்.
    அந்த இளைஞனைப் பாராட்டிய மன்னர், அவனுக்கு இளவரசர் பட்டம் சூட்ட அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  10. #40
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    நடன பொம்மை - நீங்களே செய்யலாம்

    பொம்மை என்றால் உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? அழகாக பாலே நடனமாடும் பெண்ணைப் போன்ற பொம்மையைச் செய்து பார்க்கலாமா?
    தேவையான பொருள்கள்:
    சிறிய பென்சில், பென்சில் சீவும்போது கிடைக்கும் சீவல் துணுக்குகள், மணி, இரண்டு தீக்குச்சிகள், தடிமனான அட்டை, பளபள காகிதம், ஸ்கெட்ச் பேனா, குண்டூசி, கத்தரி, பசை.
    செய்முறை:
    1 சிறிய பென்சிலின் இரு முனைகளை நன்றாகச் சீவி, அந்த சீவல் துணுக்குகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

    2 பென்சில் சீவல் துணுக்களைப் பயன்படுத்தி இரு கூம்பு வடிவத்தைப் படத்தில் காட்டியது போல் உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்தக் கூம்பு வடிவங்களை இரண்டு தீக்குச்சிகளில் இணைத்துக்கொள்ளுங்கள். பென்சிலின் நடுவே பெண்ணின் பாவாடை போன்று பென்சில் சீவல் துணுக்கை ஒட்டிக்கொள்ளுங்கள். மேலே இரண்டு புறங்களிலும் படத்தில் காட்டியுள்ளது போல் தீக்குச்சிகளை இணைத்துக்கொள்ளுங்கள். இவை பெண்ணின் இரண்டு கைகள் போல் செயல்படும். நடனப் பெண்ணின் தலையை உருவாக்க மணியைப் பொருத்திக்கொள்ளுங்கள்.

    3 தடிமனான அட்டையிலிருந்து படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு ஸ்டாண்டை உருவாக்கிக்கொள்ளுங்கள். இதன் மேலே நடனப் பெண்ணைத் தொங்கவிடும் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். தடிமனான அட்டையில் சதுர வடிவ அழகிய டிசைனை வரைந்து அந்த அட்டையை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஸ்டாண்டின் அடிப்பகுதியில் ஒட்டிவிடுங்கள்.

    4 நடனப் பெண்ணைத் தொங்கவிடும் மேல் பகுதியில் ஒரு துளையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதில் குண்டூசியை நுழைத்து தொங்கவிடுங்கள். குண்டூசியின் முனைப் பகுதியில் நடனப் பெண்ணின் தலைப் பகுதியைப் பொருத்தி தொங்கவிடுங்கள்.

    5 இரண்டு முக்கோண வடிவங்களைப் பளபள காகிதத்தி லிருந்து வெட்டி எடுத்து அவற்றை நடனப் பெண்ணின் இரண்டு கைகளிலும் பொருத்திவிடுங்கள். இப்போது ஒரு மின்விசிறிக்குக் கீழே இந்த நடனப் பெண்ணைக் கொண்டு வைத்துவிடுங்கள். காற்றுக்கு ஏற்ப அழகாக பாலே நடனமாடுவாள் அந்தப் பெண்.


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter