Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree61Likes

Kutties Corner


Discussions on "Kutties Corner" in "Kids Zone" forum.


  1. #41
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    வேட்டையாடு... விளையாடு...

    குத்தி வீழ்த்தும் உயிரி
    சில உயிரினங்கள் இரையைப் பிடிக்க வசதியாக விசேஷ உடல் அமைப்பையும், பண்பையும் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட சில உயிரினங்களைப் பார்ப்போம்.
    குத்தி வீழ்த்தும் உயிரி
    பல வண்ணங்களில் கண்ணைக் கவரும் பீக்காக் மாண்டிஸ் ஷ்ரிம்ப் (peacock mantis shrimp) என்ற இந்த இறால், இரையை வித்தியாசமாக வீழ்த்தும். இரை அருகில் வந்ததும் கால்களால் குத்த ஆரம்பிக்கும். அதாவது நாம் ஒரு முறை கண் சிமிட்டும் நேரத்துக்குள் 50 தடவை குத்தி விடும் அளவுக்கு வேகமாகச் செயல்படும் ஆற்றல் பெற்றது. இரை சுதாரிப்பதற்குள் ஓடுகளை இழந்து, உயிரை விட்டுவிடும். கடினமான கண்ணாடியையும் இப்படிக் குத்தியே இந்த இறாலால் உடைத்துவிட முடியும்.
    வாயிலிருந்து வரும் வில்லு
    ஆர்ச்சர் மீனின் (archer fish) இரை எது தெரியுமா? கரைகயோரம் இருக்கும் தாவரங்களில் வசிக்கும் பூச்சிகள்தான். இவற்றை நீரில் வசிக்கும் இந்த மீனால் எப்படிப் பிடிக்க முடியும்? தண்ணீரின் மேல் மட்டத்துக்கு வந்து தாவரங்களைக் கவனிக்கும். ஏதாவது பூச்சியைக் கண்டவுடன் வாய் நிறைய நீரை உறிஞ்சும்.
    பூச்சியை நோக்கி வில்லில் இருந்து அம்பு எய்வது போல, தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும். பூச்சி பயந்து போய் தண்ணீரில் விழும். வேகமாக நீந்திச் சென்று பூச்சியைச் சாப்பிட்டுவிடும். 16 அடி உயரம் வரை கூட இப்படித் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க இந்த மீன்களால் முடியும். ஆனால், 3 முதல் 6 அடி வரையே பெரும்பாலும் குறி வைத்து இரையைப் பிடிக்கிறது. முதல் முயற்சியில் இரை கிடைக்காவிட்டால், தொடர்ந்து முயன்று பிடித்துவிடும்.

    ஷாக் கொடுக்கும் உயிரி
    குறைவான பார்வைத் திறன் கொண்டது எலக்ட்ரிக் ஈல் (electric eel). தன்னுடைய உடலிலிருந்து 10 வோல்ட் மின்சாரத்தை வெளிப்படுத்தி, இரை அருகில் இருப்பதை உறுதி செய்துகொள்ளும் இது. இரை நெருங்கியவுடன் 600 வோல்ட் மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது. உடனே இரை இறந்துவிடும். சராசரியாக 8 அடி நீளம், 20 கிலோ எடையும் கொண்ட எலக்ட்ரிக் ஈல், மீன்களையும் தவளைகளையும் விரும்பிச் சாப்பிடும்.

    டன் கணக்கு உணவு
    ஹம்பேக் திமிங்கிலத்தின் (humpback whale) உணவு எது தெரியுமா? சிறிய மீன்கள், இறால் ஆகியவைதான். இது டன் கணக்கில் உணவை விழுங்கும். மீன்கள் கூட்டத்தைக் கண்டவுடன் வேகத்தைக் குறைக்கும். காற்றை ஊதி, குமிழ்களை உருவாக்கும். குமிழ் வட்டங்களுக்குள் சிக்கிய மீன் கூட்டத்தைப் பெரிய வாயைத் திறந்து அப்படியே விழுங்கிவிடும்.

    வலை விரிக்கும் பூச்சி
    சில உயிரினங்கள் இரையைப் பிடிக்க வசதியாக விசேஷ உடல் அமைப்பையும், பண்பையும் இயற்கை கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட சில உயிரினங்களைப் பார்ப்போமா?
    மண்ணுக்குள் ஒரு சுரங்கத்தை அமைக்கும் ட்ராப் டோர் சிலந்தி (Trap-Door Spider). சுரங்கத்தின் வாயிலை வலை அல்லது நார்களைக் கொண்டு அடைத்துவிட்டு, உள்ளே காத்திருக்கும். அந்த வழியாக வரும் பூச்சிகளோ, சிறிய உயிரினங்களோ தெரியாமல் வலையைத் தொட்டால் அவ்வளவுதான். உள்ளிருக்கும் சிலந்தி வேகமாக வெளியே வந்து, இரையைப் பிடித்துவிடும். சிலந்தியின் சுரங்கம் யார் கண்களுக்கும் எளிதாகத் தெரியாது. வலை விரித்து இரையைப் பிடிக்கிறது இந்தச் சிலந்தி.

    விஷத்தால் கிடைக்கும் உணவு
    தென் அமெரிக்காவில் வாழும் ராட்சத பூரானின் பெயர் அமேசான் ராட்சத பூரான் (Amazonian Giant Centipede). ஒரு அடி நீளம் இருக்கும். சத்தம் இல்லாமல் குகையின் மேற்கூரைக்கு வேகமாகச் செல்லும். அங்கே தொங்கிக்கொண்டிருக்கும் வெளவாலைத் தன் கால்களால் பிடித்து, விஷத்தைச் செலுத்தும். வெளவால் இறந்தவுடன், ஒரு மணி நேரத்தில் இரையை முழுவதும் சாப்பிட்டு விடும். எலி, சிறிய பறவை, பல்லி, தவளை ஆகியவை இந்தப் பூரானின் விருப்ப உணவுகள்.




    Sponsored Links
    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  2. #42
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    பிரம்மாண்ட குதிரைகள்








    இந்தக் குதிரைப் வடிவங்களைப் பார்த்தவுடனே உங்களுக்கு என்ன தோணுது? ஏதோ ஒரு மலை மேலே இதை வரைஞ்சு வைச்சுருக்காங்கன்னுதானே நினைக்கிறீங்க? உண்மைதான். ஆனால், இந்த வடிவங்களுக்குப் பின்னால ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைய புதைஞ்சு கிடக்கு. அதான் இந்த வடிவங்களோட சிறப்பே.
    இங்கிலாந்திலதான் இந்தப் புகழ்பெற்ற குதிரை வடிவங்கள் மலைகள அலங்கரிச்சுக்கிட்டு இருக்கு. இந்த வடிவங்கள வரைஞ்சு எத்தனை வருஷம் ஆயிருச்சு தெரியுமா? 4 ஆயிரம் வருஷங்கள்! இங்கிலாந்துல ஸ்டோன்ஹென்ச், சில்பரி மலை எப்படி உருவாச்சுன்னு தெரியாதோ, அதேபோலத்தான் இந்தக் குதிரை வடிவங்களும்.
    சில்பரி மலை, வைல்ட்ஷையர், ஹம்ப்ஷையர், ஆவ்பரி ஆகிய இந்த இடங்களதான் இந்தக் குதிரை வடிவங்கள் இருக்கு. ‘பயிர் வட்டங்கள்’ அதிகமா உருவாக்குற இடங்கள் இவை. அதனால இந்த ஓவியங்களுக்கு இன்னும் சிறப்பு கிடைச்சுருக்கு. உலகின் ஆச்சரியமாகப் பார்க்கப்படும் இந்த ஓவியங்கள் எதற்காக, யாரால உருவாக்கப்பட்டுச்சுன்னு இதுவரை தெரியவே இல்ல. இந்த வடிவங்கள் நாலாயிரம் வருஷங்கள் ஆகியும் அழியாமல் அப்படியே இருக்கு.
    இந்த இடங்களில் வெண்கட்டி (Chalk) மண் வகை அதிகமா காணப்படுது. இந்த வெண்கட்டித் தரையிலேயே இந்தக் குதிரை உருவங்கள உருவாக்கியிருக்காங்க. ஆரம்ப காலத்துல இங்க பத்துக் குதிரை வடிவங்கள் உருவாக்கினாங்க. ஆனா, 19-ம் நூற்றாண்டில 3 குதிரைகள அழிச்சிட்டாங்க. இப்போ ஏழு குதிரைகள் மட்டும்தான் இருக்கு.
    குதிரை வடிவங்கள் மாடர்ன் ஆர்ட் மாதிரி வரைஞ்சிருக்காங்க. ஒவ்வொரு குதிரை வடிவமும் நூறு மீட்டர் அளவுல பிரம்மாண்டமா இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  3. #43
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    உலகின் மிகப் பெரிய குகை








    மாமல்லபுரம் அருகே புலிக் குகை, திருச்சி மலைக் கோட்டையில் பல்லவர் காலத்துக் குகையைப் பற்றியெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். இவையெல்லாம் மனிதர்கள் உருவாக்கிய குகைகள். ஆனால், மலைத்தொடர்களில் இயற்கையாகவே அமைந்த குகைகள் நிறைய நாடுகளில் உள்ளன. அவற்றில் வியட்நாம் நாட்டில் உள்ள ஒரு குகைக்குத் தனிச்சிறப்பு உள்ளது. ஆமாம், இந்தக் குகைதான் உலகிலேயே மிகப் பெரியது.
    குவாங் பின்க் மாகாணத்தில் ட்ராக் என்ற இடத்தில் அடர்ந்த காடு உள்ளது. இந்த இடத்தில்தான் இக்குகை உள்ளது. இதற்கு சான் டூங் என்று பெயர். யாருடைய கண்களுக்கும் தட்டுப்படாத, இந்த அதிசயக் குகை 20 ஆண்டுகளுக்கு முன்பு 1991-ம் ஆண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்தது. பிரிட்டிஷ் குகை ஆராய்ச்சி யாளர்கள் இக்குகையைக் கண்டு பிடித்தார்கள், ஆனால், அதற்கு முன்பே உள்ளூர்வாசி ஒருவர் குகையின் வாசல் வரை சென்றார். ஆனால், குகையில் இருந்து வந்த மர்மமான ஒலியைக் கேட்டுப் பயந்து ஓடி வந்துவிட்டார். அதன்பிறகு யாரும் அந்தக் குகைப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லையாம்.
    இந்தக் குகையின் நீளம் 5 கிலோ மீட்டர். உயரம் 80 மீட்டர், அகலம் 80 மீட்டர். சுமார் 150 தனித்தனிக் குகைகளால் ஆன ஒரு பிரம்மாண்டக் குகை இது. ஏறக்குறைய 50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஓடிய ஆறால், இந்தக் குகை உருவானதாகக் குகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே மழை ஆறு என்று அர்த்தம் கொண்ட சான் டூங் என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
    இதில் சுவாரசியமான ஒரு விஷயமும் இருக்கிறது. குகையின் கூரையில் ஒரு பகுதி* உடைந்துவிட்டது. அந்த இடம் அடர் சோலைவனம் போலக் காட்சியளிக்கிறது. இதை கார்டன் ஆஃப் ஈடன் என்று அழைக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக, இங்குள்ள மணல் துகள்களின் மீது படிந்த தண்ணீர் துளிகளால், இந்தக் குகை முழுவதும் பல அழகிய படிமானங்கள் உருவாகியிருக்கின்றன. சலசலவென ஓடும் சிறிய ஆறு, திரும்பும் பக்கமெல்லாம் பச்சைப்பசேல் எனப் போர்வை போர்த்தியது போல் காணப்படும் புல்வெளிகள், அடர்ந்த மரங்கள், பேரிரைச்சலுடன் விழும் அருவி என இந்தக் குகை பேரழகுடன் காணப்படுகிறது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு முன்பு சான் டூ குகை உலகின் பெரிய குகையாக அறிவிக்கப்பட்டது.


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  4. #44
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    வானில் தோன்றும் வண்ண வில்லு








    இப்போது மழைக்காலம். இந்தப் பருவக் காலத்தில்தான் வானத்தில் வானவில் அடிக்கடி தோன்றும் இல்லையா? வானவில்லைப் பார்த்தவுடன் உங்களைப் போன்ற குட்டீஸ்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து ரசிப்பீர்கள். இந்த வானவில் எப்படித் தோன்றுகிறது? அது ஏன் வில் போல வளைந்து காணப்படுகிறது என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
    வானவில் தோன்றவும், வில் போல வளைந்து தெரியக் காரணம் இருக்கிறது. முதலில் வானவில் எப்படித் தோன்றுகிறது? அதற்கு நீர்த்திவலையும் சூரிய ஒளிக்கதிர்களும்தான் காரணம். அதாவது, நீர்த்திவலைகளில் சூரிய ஒளிக்கதிர்கள், ‘முழு அக எதிரொளிப்பு’ அடைவதால்தான் வானில் அழகிய வானவில் தோன்றுகிறது. கோள வடிவத்தில் நீர்த்திவலைகள் இருக்கும்போது, அதில் அதிக கோணத்தில் உட்புகும் ஒளிக்கதிர் வெளியேறும் முன்பே ‘அக எதிரொளிப்பு’ நிலையை அடைகிறது.
    இதன் காரணமாக நீர்த் திவலைக்குள் செல்லும் பல நிறக் கதிர்களின் வேகம் மாறுபடுகிறது. இதனால் அவை வெளியேறும்போது பல நிறங்களாகப் பிரிகின்றன. இவை ‘நிறமாலை’யாகக் காட்சி அளிக்கின்றன. நிற மாலையில் உள்ள பல நிறக் கதிர்கள் நம்மை வெவ்வேறு கோணங்களில் வந்தடைகின்றன. இதனால் நம்மைச் சுற்றி ஒரு கோணத்தில் இருக்கும் நீர்த்திவலைகள் ஒரு நிறமாகவும், அடுத்துள்ள கோணத்தில் இருப்பவை வேறு நிறமாகவும் தெரிகின்றன. இதைத்தான் வானவில் என்று கூறுகிறோம்.
    இப்படியாக வானவில் ஒரே கோணத்தில் இருப்பதால்தான் அவை வளைந்தும் வில்லு போலக் காட்சி அளிக்கிறது.


    jv_66 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter