Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree61Likes

Kutties Corner


Discussions on "Kutties Corner" in "Kids Zone" forum.


  1. #1
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Talking Kutties Corner

    Hi Friends,

    "Kutties corner" Nama chutties kaga create panniruka thread. Idho avangalukaga oru kutti story.

    சித்திரக்கதை: மூன்று மீன்கள் மூன்று குணங்கள்


    அந்தக் கிராமத்தின் பெயர் குளத்துப்பட்டி. ஊரின் பெயருக்கேற்ப அழகான குளம் ஒன்று அந்த ஊரில் இருந்தது. அந்தக் குளத்தில் மூன்று மீன்கள் வசித்து வந்தன. மூன்றும் நண்பர்களாக இருந்தன. நண்பர்களாக இருந்தாலும், மூன்று மீன்களும் வெவ்வேறு குணங்களைக் கொண்டிருந்தன.
    எதையும் முன்கூட்டியே யோசித்துச் செய்யும் குணம் ஒரு மீனிடத்தில் இருந்தது.
    இரண்டாவது மீனோ, ஏதாவது நடந்தா, அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்! என்கிற குணமுடையது.
    நம்மால் எதுவும் செய்ய முடியாது; எது நடக்கிறதோ அதுபடி நடக்கட்டும் என்ற குணத்துடன் மூன்றாவது மீனும் வாழ்ந்து வந்தது.
    ஒருநாள்- குளக்கரையோரமாய் இரண்டு மீனவர்கள் வந்தார்கள்.
    இந்தக் குளத்தில் ரொம்ப நாளா மூணு பெரிய மீன்கள் இருக்கு. அதப் பிடிக்கணும் என்றான் ஒரு மீனவன்.
    அப்படியா! நாளைக்கே வலை போட்டுப் பிடிச்சிடுவோம் என்றான் இன்னொரு மீனவன்.
    இதைக் கரையோரமாய் நின்ற முதல் மீன் கேட்டுவிட்டது.
    உடனே, இரு நண்பர்களையும் அழைத்து விஷயத்தைச் சொல்லி, காலையில் நம்மைப் பிடித்து விடுவார்கள். வாருங்கள்அருகே உள்ள வாய்க்கால் வழியாக இப்போதே வேறு இடத்திற்குச் சென்றுவிடலாம் என்று முதல் மீன் சொன்னது.
    நாளைக்குக் காலையில யாராவது வந்தா பாத்துக்கலாம்.பேசாம வேலையப் பாரு என்றது இரண்டாவது மீன்.
    யாரோ சும்மா பேசிக்கிட்டுப் போயிருக்காங்க. அதுக்குப் போயி பயந்துக்கிட்டு குளத்தை விட்டுப் போறதாநா வரலே..!என்றது மூன்றாவது மீன்.
    வேறு வழியின்றி, முதல் மீன் மட்டும் வாய்க்கால் வழியாக வேறு இடத்திற்குச் சென்றுவிட்டது.

    மறுநாள் விடிகாலையிலேயே மீனவர்கள் சொன்னதுபோல் வந்தார்கள். குளத்தில் வலையை வீசினார்கள்.
    திடீரென்று வலையை வீசியதில், தூங்கிக் கொண்டிருந்த இரு மீன்களும் வலையில் சிக்கிக் கொண்டன.
    அய்யோநண்பன் சொன்னதைக் கேட்காமல் இப்படி மாட்டிக் கொண்டோமே!என்று வருத்தப்பட்டது இரண்டாவது மீன்.
    மூன்றாவது மீனோ, ஏன் வீணாப் புலம்புறே. என்ன பண்றாங்கன்னு பொறுமையாத் தான் பாப்போமே! என்றது.
    இரண்டாவது மீன் வயிறு முட்ட தண்ணீரைக் குடித்தது. வயிறு பெரிதாகி விட்டது. அப்படியே செத்த மீனைப்போல கிடந்தது. மூன்றாவது மீனோ எந்தக் கவலையுமின்றி வலையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.
    வலையைக் கரைக்கு இழுத்துவந்த மீனவர்கள், ஆகாஒரு மீன் எப்படியோ தப்பிச்சுடுச்சே?என்று வருத்தப்பட்டனர். வலையிலிருந்த மற்ற இரு மீன்களையும் வெளியே எடுத்தனர்.
    இந்த மீனைப் பாரு. வயிறு எவ்வளவு பெருசாயிருக்கு. ஏதோ நோய் வந்து செத்துப் போயிருக்குஇதை சாப்பிட்ட நமக்கும் நோய் வரும்!என்றபடி இரண்டாவது மீனைத் தூக்கிக் குளத்தில் வீசினான் ஒருவன்.
    குளத்திற்குள் பாய்ந்து சென்று ஒளிந்துகொண்டது இரண்டாவது மீன்.
    அய்யய்யோநான் மட்டும்தான் மாட்டிக்கிட்டேனா என்று மூன்றாவது மீன் புலம்புவது உங்கள் காதுகளில் கேட்கிறதா?

    **The Hindu***


    Similar Threads:

    Sponsored Links

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  2. #2
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    உலகின் பெரிய்ய இலை








    உலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது நீரில் வளரும் இலை. உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால்கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. இன்னும் தெரியவில்லையா? அதன் பெயர் ‘விக்டோரியா ரிஜியா’.
    பார்ப்பதற்குப் பெரிய தாம்பாளத் தட்டு போல காணப்படும் இது, அல்லி வகையைச் சார்ந்தது. இந்த இலை 3 மீட்டர் விட்டம் வரைகூட வளரும். சராசரியாக இலையின் குறுக்களவு 1.85 மீட்டர். வட்ட வடிவமான இலை மட்டுமே மேல்நோக்கி நீரில் காணப்படும். இதன் அடிப்பகுதியில் வளரும் தண்டு 7 முதல் 8 மீட்டர் நீளத்தில் இருக்கும். தண்டுப் பகுதி முழுவதும் தண்ணீருக்குள்ளேயே இருக்கும். இது மிகவும் வலுவாக இருக்கும். எனவேதான் இலையின் மேல் குழந்தை உட்கார்ந்தால்கூட இலையால் தாங்கிக் கொள்ள முடிகிறது!
    இதன் பிறப்பிடம் இங்கிலாந்துதான். இந்த இலையைக் கண்ட விக்டோரியா மகாராணி, இதை ‘விக்டோரியா ரிஜியா’ என்று அழைத்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், இதன் உண்மையான பெயர் அமேசானிகா. ஆனாலும், இதை இப்போதும் விக்டோரியா ரிஜியா அமேசானிகா என்றே பலரும் அழைக்கிறார்கள். இங்கிலாந்தைத் தவிர்த்து பிரெஞ்சு கயானா, அமெரிக்காவிலும் இது அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக அமேசான் காட்டில் இந்த அல்லி வகை இலை அதிகம் உள்ளது. இந்தியாவிலும்கூட தாவரத் தோட்டங்கள் பராமரிக்கப்படும் சில இடங்களில் இந்த அல்லி இலையைப் பார்க்கலாம்.

    *** The hindu





    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  3. #3
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    உயிரினம்: புல்லுக்குள் வீடு


    • shutterstock / Lightspring





    • அணில் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. கொறித்து உண்ணும் பழக்கமுடையது.
    • முதுகில் இருக்கும் மூன்று கோடுகள்தான் தென்னிந்திய அணிலின் அடையாளம்.
    • ‘இந்திய அணில்கள்’ என்றழைக்கப்படும் அணில்கள், இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படுகின்றன.
    • அணிலின் வாலில் புதர் போல ரோமம் அடர்த்தியாக இருக்கும். வால் அதன் உடலை விடச் சற்று நீளம் குறைவானது. அணிலின் வாலில் வெள்ளையும் கறுப்புமான ரோமங்கள் கலந்திருக்கும்.
    • அணில் குஞ்சுகள் வெளுத்தும் பழுப்பாகவும் காணப்படும். வளரும்போது அதன் நிறம் அடர்த்தியாக மாறும்.
    • பழங்கள், கொட்டைகள், மலர்கள், முளைகள், பூச்சிகள் ஆகியவற்றைச் சாப்பிடும். சில வேளைகளில் பறவைக் குஞ்சுகளையும் சாப்பிடும்.
    • ஒரு பெரிய அணிலின் எடை சராசரியாக 100 கிராம் மட்டுமே இருக்கும்.
    • பெண் அணிலின் கர்ப்பக் காலம் ஒரு மாதத்தைவிடக் கொஞ்சம் அதிகம். 34 நாட்கள்தான். இலையுதிர் காலத்தில் புல்,மென்மையான பொருட்கள் மூலம் கூடுகளை அமைத்து பெண் அணில் குட்டி போடும்.
    • ஒரே சமயத்தில் இரண்டு முதல் மூன்று குட்டிகளை அணில் போடும்.
    • அணில்கள் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் பழக்கமுடையவை. நகரங்களில் மனிதர்கள் சாப்பிடும் உணவு வகைகளைச் சாப்பிட சீக்கிரமே பழகிவிடும்.
    • அணில்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகக் காணப்படும். உணவு ஆதாரங்களை மற்ற உயிர்கள் மற்றும் சகாக்களிடம் இருந்து பாதுகாப்பதில் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்படும்.
    • அணில்கள் சராசரியாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள்வரை உயிர் வாழும்.


    jv_66, sumitra and banumurali like this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  4. #4
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    தேனீ செய்ய ஆசையா?

    தோட்டத்தில் ரீங்காரமிட்டுப் பறக்கும் தேனீயைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தத் தேனீயை நீங்கள் வீட்டிலேயே செய்ய ஆசையா? சில பொருள்கள் இருந்தால் போதும், அழகான தேனீயைச் செய்து மகிழலாம்.
    தேனீ செய்ய ஆசையா?
    தேவையான பொருள்கள்:
    மஞ்சள் & கறுப்பு களிமண், எக்ஸ்ரே ஃபிலிம், குண்டூசி, கம்பி
    செய்முறை:
    1 சிறிது களிமண்ணை எடுத்து உங்கள் கைகளில் வைத்து நன்கு உருட்டிக்கொள்ளுங்கள்.

    2 படத்தில் காட்டியுள்ளபடி நான்கு வடிவங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். பின்னர் கறுப்பு களிமண் உதவியால் தேனியின் கண்களை உருவாக்குங்கள்.

    3 இவற்றை ஒன்று சேர்த்து தேனீயின் உடம்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

    4 இப்போது இரண்டு இறக்கை வடிவங்களை எக்ஸ்ரே ஃபிலிமிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

    5 இறக்கைகளை உடம்புடன் பொருத்திக்கொள்ளுங்கள். குண்டூசியை வளைத்து அதை இறக்கைகள் இரண்டுக்கும் நடுவில் சொருகிக்கொள்ளுங்கள். கம்பி ஒன்றை குண்டூசியின் தலைப்பகுதியில் கட்டித் தொங்கவிடுங்கள். இப்போது காற்றடிக்கும்போது இறக்கைகளை அசைத்து தேனீ ஆடும் காட்சி அது பறப்பது போலவே இருக்கும்.




    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  5. #5
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    உலகின் குட்டிப் பறவை









    # அமெரிக்காவில் உள்ள ஓசனிச்சிட்டு ரகத்தைச் சேர்ந்த பறவை இனம் தேன்சிட்டு.
    # தேன்சிட்டுகளில் 132 வகையினங்கள் உள்ளன.
    # இப்பறவைகள் உருவத்தில் சிட்டுக்குருவியைவிடச் சிறியவை. ஓசனிச்சிட்டைவிடப் பெரியவை.
    # தேன்சிட்டு மலர்களில் உள்ள தேனை உணவாக உட்கொள்ளும். பூச்சிகளையும் சாப்பிடும்.
    # ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் தேன்சிட்டுகள் காணப்படுகின்றன.
    # தேன்சிட்டுகளின் அலகு மலர்களில் உள்ள தேனை எடுப்பதற்கு ஏற்றவாறு நீண்டதாய் வளைந்திருக்கும்.
    # பெரும்பாலான தேன்சிட்டுகள் கிளைகளில் அமர்ந்து மலர்களில் தேனை எடுக்கும். சில தேன்சிட்டுகள் மலருக்கு இணையாக ஹெலிகாப்டரைப் போல காற்றில் பறந்துகொண்டே அலகை மலரில் வைத்து தேன் குடிக்கும்.
    # ஆண் தேன்சிட்டுகள் ஆபரணங்களைப் போல மின்னும் வண்ணங்களை உடலில் கொண்டிருக்கும். பெண் தேன்சிட்டுகளின் நிறம் ஆண் தேன்சிட்டுகளைவிட பழுப்பாக இருக்கும்.
    # தேன்சிட்டுகள் பகலில் உற்சாகமாக இருக்கும்.
    # செடிகள் மற்றும் மரங்களில் தேன்சிட்டுகள் கூடு கட்டும். தேன்சிட்டுகளின் கூடுகள் மணிபர்ஸைப் போலவே இருக்கும். காய்ந்த சருகு, வேர்களைக் கொண்டு கூடுகளைக் கட்டும். சிலந்தி வலையைக் கொண்டு சருகு, வேர்களை ஒட்டவைத்து விடும்.
    # கூட்டின் வாயிலில் மூன்று அல்லது நான்கு சென்டிமீட்டர் அளவிலான துவாரம் இருக்கும். துவாரத்திற்கு நம் வீடுகளில் அமைப்பதைப் போல சிறிய வாயில் இருக்கும்.
    # ஆண் தேன்சிட்டுதான் கூடுகட்டும் இடத்தை முதலில் தேர்வு செய்யும். கூடு கட்டப்படும் கிளை வலுவுள்ளதாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கும். பின்னர் பெண் தேன்சிட்டு அந்த இடத்தைப் பரிசோதிக்கும். அதற்கும் இடம் பிடித்துவிட்டால் பெண் தேன்சிட்டு அங்கே கூட்டைக் கட்ட மூன்று வாரங்கள் தேவைப்படும். கூடு கட்டப்பட்ட பின்னர் ஆண் தேன்சிட்டு வந்து வீட்டைப் பரிசோதித்துப் பார்க்கும். குறைபாடுகள் இருந்தால் சரி செய்யப்பட்டு, இரண்டு பறவைகளுக்கும் மனநிறைவு ஏற்பட்டால் மட்டுமே இரண்டும் அதில் வசிக்கும்.
    # ஆண் தேன்சிட்டுதான் கூடுகட்டும் இடத்தை முதலில் தேர்வு செய்யும். கூடு கட்டப்படும் கிளை வலுவுள்ளதாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கும். பின்னர் பெண் தேன்சிட்டு அந்த இடத்தைப் பரிசோதிக்கும். அதற்கும் இடம் பிடித்துவிட்டால் பெண் தேன்சிட்டு அங்கே கூட்டைக் கட்ட மூன்று வாரங்கள் தேவைப்படும். கூடு கட்டப்பட்ட பின்னர் ஆண் தேன்சிட்டு வந்து வீட்டைப் பரிசோதித்துப் பார்க்கும். குறைபாடுகள் இருந்தால் சரி செய்யப்பட்டு, இரண்டு பறவைகளுக்கும் மனநிறைவு ஏற்பட்டால் மட்டுமே இரண்டும் அதில் வசிக்கும்.
    # கூட்டில் தங்கிப் போதுமான உணவை எடுத்துக்கொண்ட பின்னர் பெண் தேன்சிட்டு முட்டைகளை இடும். ஒரு சமயத்தில் ஒன்று முதல் மூன்று முட்டைகளை இடும்.
    # முட்டைகளை அடைகாக்க ஆகும் காலம் மூன்று வாரங்கள். உணவுச் சேகரிக்க மட்டுமே கொஞ்சம் நேரம் வெளியே செல்லும். பெண் பறவை வெளியே செல்லும்போது ஆண் பறவை அருகில் உள்ள மரத்திலிருந்து முட்டைகளைப் பாதுகாக்கும். ஏதாவது அபாயம் தென்பட்டால் பெண் பறவையை சத்தமிட்டு அழைக்கும்.
    # முட்டைகளை அடைகாக்க ஆகும் காலம் மூன்று வாரங்கள். உணவுச் சேகரிக்க மட்டுமே கொஞ்சம் நேரம் வெளியே செல்லும். பெண் பறவை வெளியே செல்லும்போது ஆண் பறவை அருகில் உள்ள மரத்திலிருந்து முட்டைகளைப் பாதுகாக்கும். ஏதாவது அபாயம் தென்பட்டால் பெண் பறவையை சத்தமிட்டு அழைக்கும்.
    # முட்டை பொரித்த பின்னர் சில நாட்கள் ஆண் பறவை உணவைச் சேகரிப்பதற்கு உதவும். தேன்சிட்டின் குஞ்சுகள் இரண்டு வாரங்களிலேயே வளர்ந்துவிடும். அடுத்து ஒரு வாரம் பெற்றோருடன் இருக்கும். பிறகு தன் வழியைத் தேடத் தொடங்கிவிடும்.
    # 5 கிராம் எடை அளவே கொண்ட கரும் வயிறு தேன்சிட்டுதான் மிகவும் சிறியது. 45 கிராம் அளவுள்ள சிலந்திவேட்டை தேன்சிட்டுதான் மிகப்பெரியது. தேன்சிட்டு உலகின் மிகச் சிறிய பறவையினம்.
    # ஆண் தேன்சிட்டுகளின் வால் நீளமாக இருக்கும்.
    # தேன்சிட்டுகளின் ஆயுட்காலம் சராசரியாக ஐந்து ஆண்டுகள்.


    jv_66, sumitra and saveetha1982 like this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  6. #6
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    படப் புதிர்

    சாலைகளில் காணப்படும் அடையாளக் குறிகள் அருகே கொடுக்கப்பட்டுள்ளன. அவை எவற்றைக் குறிக்கிறது என்பதைச் சொல்லுங்கள்.
    விடை:
    1. குழந்தைகள் விளையாடும் பகுதி, மெதுவாகச் செல்லுங்கள்
    2. குறுகிய பாதை
    3. இருப்புப் பாதை
    4. தலைகீழ் திருப்பம் (யூ டர்ன்)
    5. இருவழிப் பாதை
    6. குகைப்பாதை



    jv_66, sumitra and saveetha1982 like this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  7. #7
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Kutties Corner

    லேகா நல்ல முயற்சிடா எங்க வீட்டு வாண்டுக்கு சொல்லலாம்....


    sumitra and lekha20 like this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  8. #8
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Kutties Corner

    Quote Originally Posted by saveetha1982 View Post
    லேகா நல்ல முயற்சிடா எங்க வீட்டு வாண்டுக்கு சொல்லலாம்....
    Thank you savi akka....

    saveetha1982 likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  9. #9
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Kutties Corner

    Very nice! thank you!

    lekha20 likes this.

  10. #10
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Kutties Corner

    ரொம்ப நல்ல தகவல்கள் குட்டீஸ்க்கு. தொடருங்க லேகா .

    lekha20 likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter