Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By meenasenthilkumar

Reason for early puberty - இப்போது ஏன் சிறுவயதில் பூப்படைகின்


Discussions on "Reason for early puberty - இப்போது ஏன் சிறுவயதில் பூப்படைகின்" in "Kids Zone" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Reason for early puberty - இப்போது ஏன் சிறுவயதில் பூப்படைகின்

    இப்போது ஏன் சிறுவயதில் பூப்படைகின்றனர் பெண் குழந்தைகள்

    பள்ளிச் சிறுமிகள் இப்போதெல்லாம் பத்துப் பதினொரு வயதுகளிலேயே தங்களது குழந்தைமை கடக்கும் முன்பாகவே வெகு விரைவாகப் பூப்படைந்து விடுகிறார்கள். இ ன்றைய இளம் அம்மாக்களை வெகு வாகக் கவலை கொள்ளச் செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று.

    ஏன் இப்படி ஆகிறது?!

    குடும்ப வாகு, மரபியல் காரணங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் இவை யெல்லாம் தாண்டி இந்த விஷயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பூதம் ஒளிந்து கொண்டு சமீப காலங்களாக பெண் குழந்தை களைப் பெற்ற அம்மாக்கள் எல்லோரையும் அச்சுறுத்தி வருகிறது.அதைப் பற்றியதான விழிப்புணர்வும் எச்சரிக்கையும் பொது மக்களில் எத்தனை பேருக்கு உண்டோ தெரியவில்லை!

    அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நேர்ந்தாலும் சரி அல்லது குழந்தைக்குப் தாய்ப்பால் போதவில்லை என்றாலும் சரி சிலர் குழந்தை பிறந்த அன்றே கூட தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட ஃபீடிங் பாட்டில்கள் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

    மகப்பேறு மருத்துவர்கள் பலர் இதை அனுமதிப்பதில்லை. ஆனாலும் குழந்தை பசியால் அழுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் இப்படிச் செய்ய நேர்கிறது. குழந்தையின் பசி தீர்ப்பதில் தவறுகள் இல்லை. ஆனால் பயன்படுத்தப்படும் பொருளில் தான் பெரும் ஆபத்து ஒளிந் திருக்கிறது.

    பிறந்த குழந்தைகளின் ஃபீடிங் பாட்டில் கள் மட்டும்தான் என்றில்லை. பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்கள் ட்ரான்ஸ்பரன்ட் ஸ்நாக்ஸ் டப்பாக்கள் இவை எல்லாமும் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக்குகள் பாலி கார்பனேட் பிளாஸ் டிக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் குகளில் இருக்கும் பிஸ்ஃபீனால்கி எனும் மூலக்கூறு ஃபீடிங் பாட்டில்கள் மூலம் குழந்தைகளின் உடலுக்குள் ஊடுருவி ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பை அதிக மாக்குகிறது. இதே மூலக்கூறு ஆண் குழந்தைகளின் உடலுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா? ஆண் குழந்தைகள் வளர வளர அவர்களது விந்தணுக் களின் எண்ணிக்கையை குறைக்கிறது.

    வழக்கத்தை விட ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாவதால் தான் இன்றைக்குப் பெண் குழந்தைகள் பத்து, பதினொரு வயதுகளி லேயே தங்களது விளையாட்டுப் பருவத்தை, பேதைமையை தொலைத்து அதிவேகமாக பூப்படைந்து விடுகிறார்கள். அதற்கு காரணம் உள்ளிருந்து மிரட்டும் மாயபூதம் இந்த பிஸ்ஃபீனால்கி தான் என்பது பொது மக்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

    அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக இந்த இதழில் காண்போமா!

    குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக் கான உபயோகப் பொருட்களில் இந்த பாலிகார்போனேட் பிளாஸ்டிக்குகள் அதிக மாகப் பயன்படுத்தப் படுகின்றன, ஏனெனில்;

    மிகவும் லேசானது, எடையற்றது. தரமான பிளாஸ்டிக், உறுதியானது; தோற்றத்தில் துல்லியமான கண்ணாடி போன்றது; ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது மின்சாரமோ, வெப்பமோ தாக்க இயலாதது; போன்ற லாபகரமான பிரதான காரணங்கள் இருக்கை யில் இந்தப் பிளாஸ்டிக்குகளை தயாரிப் பாளர்களும் சரி நுகர்வோர்களும் சரி எப்படி தவிர்ப்பார்கள்?

    பாலி கார்பனேட் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் வேறு பொருட்கள்
    வீடியோ சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், எலக்ட்ரானிக் கருவிகள், ஆட்டோமேடிக் விளையாட்டுப் பொருட்கள், விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு சாதனங்கள், மருத்துவ சாதனங்கள் etc... etc.

    இதன் நீடித்த உழைப்பு; உடையாத் தன்மை; வெப்பம் தாங்கும் தன்மை யினால் இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும் பொரு ட்கள் தயாரிக்கவும் பயன் படுகிறது.

    பிஸ்ஃபீனால் (கி) என்றால் என்ன?

    பிஸ்ஃபீனால் கி என்பது பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கின் மிக முக்கியமான கட்டு மானப் பொருள். இது ஒரு வேதிப் பொருள், இதன் பெயர் 22 பிஸ் 4 ஹைட்ராக்சி ஃபினைல் ப்ரோபேன் (22 Bis4 Hydroxy pheyl propae ).

    பாலி கார்பனேட் பிளாஸ்டிக்கின் பிஸ் பினால்கி மிக மிக குறைந்த அளவில் நழுவி கரைந்து அது வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் குளிர் பானங்களில் ஊடுருவி நிற்கிறது என்று உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கை களும் ஆராய்ச்சி முடிவுகளும் தகவல் தெரிவிக்கின்றன.

    அப்படி உணவுப் பொருட்களில் கரைந்து ஊடுருவி நிற்கும் பிஸ்ஃபீனால் எவ்வளவு தெரியுமா?
    0?.000000005 (5/100000000) மில்லிகிராம் அளவு அதாவது கோடியில் 5 மடங்கு தான். ஒருநாளில் நம் எடையின் ஒரு கிலோவுக்கு 0.0000125 மில்லி கிராம் அளவு.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: இப்போது ஏன் சிறுவயதில் பூப்படைகின்றனர&

    தற்காலப் பெண்கள் விரைவாக பூப்படைவதற்கான காரணம் என்ன?
    மனிதனும் பூமியும் ஒன்றுதான். பூமியில் நீர் ஊற்று உள்ளதைப்போல் மனித உடலும் கார்மன் சுரப்பிகளைக் கொண்டது. அந்த சுரப்பிகளை சுரக்க செய்வது அவன் எண்ணங்களே. எண்ணங்கள் கார்மோன் சுரப்பிகளை தூண்டசெய்து "எண்ணங்களைப் போல் வாழ்க்கை" என மானிடனை தூண்டி விடுகிறது.

    ஆதிமனிதன் உடலுறுப்பு மீது அதிக காமப்பார்வை செலுத்தவில்லை. ஆனால் நாகரிக மனிதனோ சுற்று சூழலால் அதிக அளவில் சிறு வயது முதலே அவனின் கார்மோன்கள் தூண்டபட்டுவிடுவதால் தான் உடலுறவுக்கு விரைந்து முதுர்ச்சி அடைந்துவிடுகிறான். உதாரணமாக ஒரு பெண் பூப்படைந்த பின்னர்தான் பெண்ணிற்கேற்ற அம்சங்களை பெற துவங்குகிறாள்.

    பொதுவாக பூப்படையும் வயது என்பது அவர்களின் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கைச் சூழல் மற்றும் பரம்பரையை பொறுத்தது. ஆனால் சமீப காலங்களில் பெண்கள் பூப்படையும் வயது நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது. 19-ஆம் நூற்றாண்டில் பெண்ணின் பருவ வயது 16 வயதாகவும், ஆண்களுக்கு 18 வயதாகவும் இருந்தது. அறிவியல் வளர்ச்சியும், மருத்துவ வளர்ச்சியும் இணைந்து பருவ வயதை குறைத்துவிட்டது.

    தற்போது பெண்களுக்கு 14 வயதாகவும், ஆண்களுக்கு 16 வயதாகவும் உள்ளது. ஆனால் அந்த கணக்கை மீறி பல்வேறு பூப்படைதல்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, அதிகமாக மருந்து உட்கொள்ளும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தையின் பருவ வயது மிகவும் குறைவாக உள்ளது.

    லண்டனில் பிறந்த "லூசியாரீட்"என்ற சிறுமிதான் இதுவரை குறைந்த வயதில் பூப்படைந்ததாக கருதப்படுகிறது. அவளுக்கு தற்பொழுது வயது 14, அவள் 6 வயதிலேயே பூப்படைந்துவிட்டாள். அதன் பின், அவள் சந்தித்த பிரச்சனைகளை அவளே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறாள். "நான் பூப்படைந்து விட்டேன் என்பதே எனக்கு தெரியாது, என்னை பார்த்த என் தாய் தான் அதை கண்டுபிடித்தார். சில நாட்கள் வீட்டில் இருந்தேன். பின்னர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள்ள ஆசிரியர்களிடம், எனது பிரச்சனையை பற்றி ஏற்கனவே எனது தாய் கூறி இருந்தார்.

    ஒவ்வொருமுறையும் எனக்கு மாதவிடாய் வரும் போதும், நான் தனியாக இருப்பதாக உணர்வேன். என்னை சுற்றியுள்ள மாணவிகளுக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. எப்படியோ எனது பள்ளி வாழ்வை கடந்து வந்துவிட்டேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறாள்.

    பெண்கள் விரைவாக பூப்படைவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தவர்கள், அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்கின்றனர். அதில் ஒன்று "டாக்சிக் அமிலம்" அடங்கிய மருந்துகளை தாயார் உட்கொல்வதுதான் முக்கிய காரணம். இதை தவிர மன ரீதியிலான காரணங்களும் உள்ளனவாம்.

    பெற்றோர்களிடையே பிரச்சனை இருந்தால் அந்த குழந்தைகள் விரைவில் பூப்படைகின்றன. குறிப்பாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்தால் குழந்தைகள் விரைவாக பூப்படைகின்றனர். பெற்றோர்கள் பிரச்சனை குழந்தைகளின் மனநலத்தை பாதித்து மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன்கள் சுரப்பில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடல் வளர்ச்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு அது குழந்தையை பூப்படையச் செய்துவிடுகிறது.

    மேலும் தந்தை இல்லாத, தந்தை வெளியூரில், வெளிநாட்டில் வசிக்கும் குழந்தைகளும் விரைவில் பூப்படைகின்றார்களாம். இதற்கு காரணம் தந்தை என்ற ஆணின் பாசமான அரவணைப்பு இல்லாததால் கார்மோன்களின் செயல்பாடு குழப்பமடைகிறது. இதனால் சீக்கிரம் குழந்தைகள் பூப்படைகின்றனர் என்கிறார்கள்.

    இது தவிர தொலைக்காட்சியும் ஒரு முக்கிய காரணியாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தினமும் 3 மணி நேரம் டி.வி பார்க்கும் குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் விரைவில் பூப்படைகின்றனர் என்று இத்தாலிய அறிஞர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    காரணம் எதுவாக இருந்தாலும் பெண்கள் விரைவில் பூப்படைவது நல்லதுக்கு அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள். உடலும், மனமும் சேர்ந்து ஒன்றாக வளர வேண்டும். மனதளவில் குழந்தையாக இருப்பவர், உடல் அளவில் பெண்ணாக இருப்பது பல ஆபத்துகளை விளைவிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உரிய வயதில் பெண் பூப்படை வேண்டும் என்றால், அவரது தாயானவர் உணவு பழக்கத்தை முறைபடுத்த வேண்டும். டாக்சிக் அமிலம் அதிகமுள்ள மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.


    குழந்தை பிறந்த பின்னர்,அந்த குழந்தை பருவ வயதும் வரும் வரை, அந்த குழந்தையின் பெற்றோர் இடையில் அமைதியான சூழல் நிலவ வேண்டும். தந்தை, அண்ணன் என்று பாச மிகு ஆண்கள் உடன் இருப்பது நல்லது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுற்றுச்சூழல் சரி இல்லை எனில் தவறான எண்ணங்கள் உடலின் கார்மோன்களை தவறுதலான எண்ணங்களுக்கு தூண்டப்படுகிறது என்பதே உண்மை



    Last edited by chan; 19th Feb 2015 at 02:49 PM.

  3. #3
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    madurai
    Posts
    6

    Re: Reason for early puberty - இப்போது ஏன் சிறுவயதில் பூப்படைகின்

    use panna kudatha porul mattum sonnal podhuma atharku mattra yenna use seyya vendum sollunga tablet doctor prescribe seyyuranga water bottle news shock.school ku yenna seyyurathu?

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter