Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree132Likes

Summer games -சம்மர் விளையாட்டு!


Discussions on "Summer games -சம்மர் விளையாட்டு!" in "Kids Zone" forum.


  1. #11
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    இன்றைய குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் தொலைக்காட்சியை பார்த்தபடி ஏதாவது சாப்பிட்டுக்கொண்டு நேரத்தை கழிக்கிறார்கள். இவ்வாறுமந்தமாகவே நேரத்தை போக்கினால் எப்படி சுறுசுறுப்பாக இருக்க முடியும் நன்கு விளையாடினால் தான் இரத்தஓட்டம் சீராக இயங்கும்,கை, கால்கள் வலுவுடன் இருக்கும் என்பதை விளையாடி மகிழ்ந்த பெற்றோர்களே அதை மறந்து விடுகிறார்கள். ..

    "ஓடிவிளையாடுபாப்பா, - நீ
    ஓய்ந்திருக்கலாகாதுபாப்பா,
    மாலைமுழுதும்விளையாட்டு - என்று
    வழக்கப்படுத்திக்கொள்ளுபாப்பா.

    இப்படி மறந்து போய் விடுமோ விளையாட்டுகள் என்பதை அறிந்துதான் அப்போதே இந்த பாடலை பாரதியார் பாடியுள்ளார்.

    பச்சைக்குதிரைவிளையாட்டுன்னுசொன்னாபலருக்கும்தெரிவதில்லை. அதுவும் நிலாவெளிச்சத்தில் தான் அதிகம் விளையாடுவார்கள். பக்கத்து வீட்டுபசங்க, அவர்களின் நண்பர்கள் என எல்லாரும் கூட்டமாக சேர்ந்து சின்னபையனில் இருந்து பெரியவர் வரை வரிசையாக நின்று கொண்டு, அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து குனியவைத்து வரிசையாக தாண்டுவதும், தாண்டமுடியாமல் கீழேவிழுபவர்களைக் குனியவைத்து விடுவதுமே பச்சைக்குதிரையாட்டம்..

    குனிந்துஇருப்பவர்கள், தாண்டுபவர்கள் சொல்லும் பாடலை பொருத்து கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தை அதிகரித்து குனிந்து நிற்பார்கள். குனிந்து நிற்பவரின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்கு தாண்டி செல்லவேண்டும். ஓடிவந்து தாண்டுபவர் குனிந்து இருப்பவரின் முதுகில் கைகளை வைத்து குதித்து தாண்ட வேண்டும். அவ்வாறு தாண்டும் போது உடலின் எந்த தசைகளும் குனிந்து இருப்பவரின் மேல் படாமல் தாண்டவும், தாண்டும் போது தசைகள் ஏதேனும் பட்டுவிட்டால் அவரை பிடித்து குனியவைத்து விடுவார்கள். எல்லோரும் சரியாக தாண்டி விட்டால் மீண்டும்அவரே குனிய நேரும்.

    இன்றைய குழந்தைகளிடம் பச்சைக்குதிரை விளையாடலாம் வாங்க என்று சொல்லிப் பார்த்தால் பேந்தபேந்த விழிக்கின்றனர் இதைப்போன்ற பல விளையாட்டுக்களை அவர்கள் அறியாமலே இருக்கின்றனர் என்பதுதான் வருத்தமான செய்தி.

    குழந்தைக்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தாலும் பெற்றோர்கள் இதுபோன்ற பழைய விளையாட்டுக்களை சொல்லித் தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை..



    Sponsored Links
    Last edited by Dangu; 8th May 2015 at 12:48 PM.

  2. #12
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,543

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    மிகவும் அருமை அங்கிள், இதில் சொல்லியிருக்கிற அனைத்து விளையாட்டுக்களுமே நான் சிறு வயதில் விளையாடி இருக்கிறேன்.

    அது தவிர கொந்தல் என்று ஒரு விளையாட்டும் உண்டு. சூடு கொட்டை அல்லது புளியங்கொட்டை வைத்து விளையாடுவது. அது தான் எங்களிடையே மிகவும் பிரபலம்.


  3. #13
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    Superb Uncle!

    Intha Games lam theriyum, But En veetla Jasthi vilayandathillai.. Paati veetukku Pona, adikra Veyil ellam enga thalai lla than.. Anga than intha Games lam Round katti adippom..

    Ithula Paathi En thambi, ennai Serthukka Mattan.. Kenjitte Suthuven, atlast Paati tta Recommendation poi, Moththama namam Pottu Amma rendu Perayum Iluthuttu vanthuruvanga :( Semma Memories.. Many Thanks for this thread!


  4. #14
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    Kaa, Ithu Sand ah Parappi,, athulla Kottai ah hide Panni vachu Place Kandu Pidikra Game ah..??


    அது தவிர கொந்தல் என்று ஒரு விளையாட்டும் உண்டு. சூடு கொட்டை அல்லது புளியங்கொட்டை வைத்து விளையாடுவது. அது தான் எங்களிடையே மிகவும் பிரபலம்.




    Read more: Summer games -சம்மர் விளையாட்டு!



  5. #15
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,543

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    Quote Originally Posted by gkarti View Post
    Kaa, Ithu Sand ah Parappi,, athulla Kottai ah hide Panni vachu Place Kandu Pidikra Game ah..??
    அது இல்ல டா கார்த்தி. கிட்டத்தட்ட கல்லாங்காய் விளையாடோவோமே அது மாதிரி. ஆனால் இதுல நிறைய சூடு காய் பரப்பி, கைல ஒரு காய் மட்டும் வெச்சுக்கிட்டு, அத மேல போட்டு, கீழ பரப்பி வெச்சு இருக்கிற கைகளை ஒன்னொன்னா பொறுக்கி எடுக்கறது. சில நேரம் ஒரு காயை மேல போட்டு கீழ இருக்கிற கைகளை மொத்தமா வழிச்சு எடுக்கறதும் உண்டு.

    இந்த விளையாட்டு இங்க எத்தனை பெருக்கு தெரியும்னு தெரியலை. ரொம்ப சுவாரசியமா இருக்கும்.

    thenuraj, gkarti and Dangu like this.

  6. #16
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!


    குலை
    குலையா முந்திரிக்கா

    இது ஒரு விளையாட்டு பேர்தான்...

    வட்டம் கட்டி ஆடனும்..எத்தனை பேர் வேணும் என்றாலும் ஆடலாம்.. இது பிறந்தநாள் விழாக்களில் பார்ட்டி கேம் ஆக அறிமுகபடுத்தலாம். பசங்க சந்தோஷமா விளையாடுவாங்க.

    வட்டமா உக்கார சொல்லணும் அத்தனை பேரையும்..நான்கு பேர் மேல் இருந்தா நல்லது.
    பொதுவா சுருட்டி வச்ச துணி இல்ல சின்ன துண்டு..வைத்து கொண்டால் போதும். அவ்வளவுதான் ......

    ஒருவர் வட்டத்தை சுத்தி,சுத்தி வரணும் ,துண்டை கையில வச்சிக்கிட்டு..
    அப்போ வட்டமா உக்கார்ந்து இருக்கிறவங்க கை தட்டிகிட்டே பாட்டு பாடனும்..

    குலையா குலையா முந்திரிக்காய் (சுற்றுபவர் பாடும் பாடல்)
    நரியே நரியே சுற்றி வா (அமர்ந்திருப்பவர் அனைவரும் )
    கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான் (சுற்றுபவர் பாடும் பாடல்)
    கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி (அமர்ந்திருப்பவர் அனைவரும் ) இதான் பாட்டு.

    அப்போ ரகசியமா துண்டை யார் பின்னாடியாவது போட்டுடனும்..திரும்பி பார்த்து உக்கார்ந்திருந்த அந்த நபர் துண்டை கையில வச்சு அவரை பிடிக்க ஓடணும்.

    அந்த நபர் எழுந்த இடைவெளில காலி எடத்துல உக்கார்ந்தா எழுந்து கொண்ட நபர் திரும்ப சுற்றி வரணும்.

    இல்லாமல் எழுந்த நபர் இவங்களை பிடித்து துண்டை கொடுத்துட்டா திரும்பவும் சுத்தி வந்து ஆட்டத்தை தொடரணும்.

    துணியை பார்க்காமல் உக்கார்ந்திருந்தால் துணியாலையே ஒரு போடு ..முதுகுல சின்னதா..அவர் உடனே ஓடி ஒரு சுத்து சுத்தி உக்காரணும்.

    எத்தனை நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம்..நல்லா ஓடவும் குழு குணங்களை வளர்துக்கவும் உள்ள விளையாட்டு.. ஒரு தடவை மியுசிக்கல் நாற்காலிக்கு பதில் ஆடி பாருங்களேன்..



  7. #17
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    YEs Yes Kaa, athukku theriyum But Name thaan theriyaathu En cousins lam antha Kottai ah nalla theichu Sudu vaikren nnu Varuvanunga..

    sumathisrini and Dangu like this.

  8. #18
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!


    பரமபதம்!:

    தாயம் விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பாரம்பரியமாக ஒரு பரமபத படம், அக்காலத்தில் எல்லார் வீட்டிலும் இருக்கும். அதில், சொர்க்கம் செல்ல வைகுண்டம் இருக்கும். இது, ஆன்மிகத்தன்மையுடன் இணைந்த விளையாட்டு இதுவும் உள்ளரங்க விளையாட்டு தான்.
    இப்போது, 'ஸ்னேக் அண்ட் லேடர்' என்ற போர்ட் விளையாட்டுகள் இருந்தாலும், பரம பதத்தின் சுவாரசியமே தனி தான். பரபரவென்று முன்னேறிச் சென்றாலும், நிறுத்தி, நிதானமாக வாழ்க்கைப் படிக்கட்டுகளில் ஏறினாலும், வாழ்க்கையில் சில சறுக்கல்களை தவிர்க்கவே முடியாது என்று, குழந்தைகளுக்கு அழகாக சொல்லிக் கொடுக்கும் இவ்விளையாட்டு. வெற்றி, தோல்விகள் நிறைந்த வாழ்க்கையும், ஒரு பரமபத விளையாட்டு தான்!

    இங்கு தாயம் போட்டுத் தான், ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். தாயக்கட்டையில் விழும் எண்ணிக்கைக்கு ஏற்ப, நம் ஆட்டக் காய்களை நகர்த்த வேண்டும்.
    நடுவில், தாண்டும் கட்டத்திற்கு ஏற்ப, ஏணி வந்தால் ஏறவோ, பாம்பு வந்தால் இறங்கவோ நேரிடும். கடைசியாக சொர்க்கவாசல் என்ற இடம் அடைந்தவுடன், அங்கிருந்து தாயங்கள் மட்டுமே போட்டு பத்து கட்டங்களைத் தாண்ட வேண்டும். கடைசியாக முக்தி எனப்படும் கட்டத்தை அடைய வேண்டும்.

    இரு கைகளால், தாயக்கட்டையை உருட்டுவதால் கைகளுக்கு நல்ல பயிற்சி. இதன் மூலம், இரு கைகளும் செயல்படுவதால், இரு பக்க மூளைகளுக்கு வேலை இருக்கும்; இது, விரல்களுக்கும், கைகளுக்குமான பயிற்சி. பலர் சேர்ந்து விளையாடும்பொழுது, குழு மனப்பான்மையும் வளரும்.


    jv_66, thenuraj and Sriramajayam like this.

  9. #19
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!



    சடுகுடு!:

    கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் இவ்விளையாட்டு, இன்றும் பரவலாக விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுள் ஒன்று! 'ஒவ்வொரு அணியிலும், ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம், 40 நிமிடங்கள். இவ்விளையாட்டு விளையாட (ஆடுகளம்) நீள்சதுரமான இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை, ஒரு நடுக்கோட்டில் இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்போதுமே, புறஎல்லைக் கோடுகளைத் தாண்டி செல்லக் கூடாது. இந்த விளையாட்டுக்கு, நடுவர் ஒருவர் தேவை.
    ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு, நடுக்கோட்டைத் தொட்டு ஒரே மூச்சில், 'கபடி கபடி' (சடுகுடு) என்று விடாமல் கூறியபடியே எதிரணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று, எதிரணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டு, எதிரணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி, தம் அணியிடம் திரும்பி வர வேண்டும்.
    தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால், எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல், 'கபடி கபடி' என்று சொல்லியபடியே, எதிராளியிடம் அகப்படாமல் திரும்பி வர வேண்டும். அகப்பட்டால் ஆட்டம் இழப்பார்.


    Last edited by Dangu; 10th May 2015 at 04:08 PM.
    jv_66, thenuraj and Sriramajayam like this.

  10. #20
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!


    பல்லாங்குழி!:

    பொதுவாக, பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு பல்லாங்குழி. பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன, ஒரு விளையாட்டுச் சாதனம். அதில், இரு வரிசைகளில், ஏழு குழிகள் இருக்கும். அவற்றுள் புளியங்கொட்டைகளை, 5, 5 ஆகப் போட்டு ஆட்டத்தை துவக்க வேண்டும். பின், ஒரு குழியில் இருப்பதை எடுத்து, ஒவ்வொன்றாக அடுத்த அடுத்த குழிகளுள் போட வேண்டும். முடிந்தவுடன், அதற்கடுத்த குழியில் உள்ளதை எடுத்து, அப்படியே போட்டு வர வேண்டும். முடிந்தவுடன், ஒரு வெறுங்குழி வருமாயின், அதைத் தடவி அடுத்த குழியில் இருப்பதை தனக்குரியதாக்க வேண்டும். ஒரு குழியில், நான்கு இருந்தால், அதையும், 'பசு' எனச் சொல்லி தனதாக்க வேண்டும். புளியங்கொட்டை அதிகம் வைத்திருப்பவர் வெற்றியாளர்.
    பொதுவாக புளியங்கொட்டை, பெரிய விதைகள், சோழிகள் இவற்றில், ஏதாவது ஒன்றை ஆடு பொருளாக வைத்து, இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.

    பல்லாங்குழி விளையாட்டினால், கூர்ந்து கவனிக்கும் திறன், மனதை ஒருமுனைப்படுத்தும் திறன், ஞாபக சக்தி, கண் - கை ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை போன்றவை விருத்தியடைகின்றன. கை விரல்களின் பைன் மோட்டார் தசைகள் வலிமையடைகின்றன.

    கூர்ந்து கவனித்தால், பல்லாங்குழி விளையாடும்போது, இடமிருந்து வலமாக கடிகார முட்களின் திசையில் தான் சோழிகளைப் போடுவோம். இதனால், திசைகளைப் பற்றி அறிந்து கொள்வதுடன், 'டிஸ்லெக்சியா' என்னும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.


    jv_66, thenuraj and Sriramajayam like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter