Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree132Likes

Summer games -சம்மர் விளையாட்டு!


Discussions on "Summer games -சம்மர் விளையாட்டு!" in "Kids Zone" forum.


  1. #31
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    ஒரு குடம் தண்ணி ஊத்தி, ஒரு பூ பூக்கும்!

    இரண்டு பேர் எதிரெதிரே நின்று, கை கோர்த்து உயர்த்திப் பிடித்திருப்பர். மற்றவர்கள் வரிசையாக அந்த கைகளுக்குள் நுழைந்து வளைந்து, நெளிந்து ஓடுவர். முதல் முறை நுழையும்போது, 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்...' என்று பாடுவர். அடுத்த முறை நுழையும்போது, 'இரண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம்...' என்று பாடுவர். இப்படியே, 10 முறை பாடி முடிக்கும்போது கைகளுக்குள் யார் இருக்கின்றனரோ, அவர்களைப் பிடித்து நிறுத்தி விடுவர். அவர், 'அவுட்!'

    இவ்விளையாட்டு, பிள்ளைகளுக்கு எண்களை கற்றுக் கொடுப்பதோடு, தோழமையையும் வளர்க்கும்.



    Sponsored Links
    jv_66, Sriramajayam and ramina like this.

  2. #32
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    வட்டத்தில் கல்!

    முதலில், ஒரு நேர்க்கோட்டை போட வேண்டும். அதிலிருந்து ஐந்து அடி தள்ளி, ஒரு ஆள் நிற்கக் கூடிய அளவுக்கு, வட்டம் போட வேண்டும். பின், அதே வரிசையில் மேலும் ஐந்து வட்டங்கள் போட வேண்டும். ஒவ்வொரு வட்டத்திற்கு இடையிலும், சமமான இடைவெளி இருக்க வேண்டும்.

    விளையாடுபவர்கள் அனைவரும் வரிசையாக கோட்டின் மேல் நின்று, ஒருவர் பின் ஒருவராக ஒரு அடி முன்னே சென்று, ஒரு கல்லை எடுத்து, முதல் வட்டத்துக்குள் போட வேண்டும். கல்லை வட்டத்திற்குள் போட்டாலும், போடா விட்டாலும், மீண்டும் வரிசையின் கடைசியில் சேர்ந்து கொள்ள வேண்டும்.

    அடுத்தது, இரண்டாமவர் முறை. முதல் சுற்றில் வட்டத்துக்குள் கல்லைப் போட்டவர்கள், அடுத்த வட்டத்தில் கல்லைப் போட வேண்டும். போடாதவர்கள் முதல் வட்டத்தில் போட முயற்சிக்க வேண்டும். முதலில், ஆறு வட்டங்களிலும் போட்டு முடிப்பவரே வெற்றியாளர்!


    jv_66, Sriramajayam and ramina like this.

  3. #33
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    மெல்ல வந்து கிள்ளிட்டு போ...

    இரண்டு அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பர். இரு அணி தலைவர்களும், தங்கள் அணியினருக்கு பழத்தின் பெயர், சினிமாவின் பெயர், பூவின் பெயர் என, ஏதாவது ஒரு பிரிவை தேர்வு செய்து ஒவ்வொரு பெயர் வைப்பர். உதாரணமாக, பூவின் பெயர் என்றால், தன் அணியினருக்கு மல்லிகை, ரோஜா, சாமந்தி என்று பெயர் வைப்பர்.

    பின், அணித்தலைவர், எதிரணியில் உள்ள ஒருவரின் கண்களை இறுக மூடி, தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார். (உதாரணத்துக்கு ரோஜாப்பூவே... ரோஜாப்பூவே... மெல்ல வந்து கிள்ளிட்டு போ...) ரோஜாப்பூ என பெயர் சூட்டப்பட்டவர் சத்தமில்லாமல் வந்து கண்னை மூடியுள்ளவரை, கிள்ளி விட்டு போய் அமர்ந்து விட வேண்டும். பின், அணித்தலைவர், 'எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க...' என்று ஆணையிடுவார். எல்லாரும் கீழே குனிந்து கொள்வார். அதன்பின், கண்களைத் திறந்து விடுவார் அணித்தலைவர். இப்போது கிள்ளு வாங்கியவர், ரோஜாப்பூ பெயர் உள்ளவர் யாரென கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், 'அவுட்!'
    மொத்த பிள்ளைகளில், பெரியவர்களாக இருக்கும் இருவர், அணித்தலைவராக தேர்வு செய்யப்படுவர்.


    jv_66, Sriramajayam and ramina like this.

  4. #34
    ramina is offline Friends's of Penmai
    Real Name
    Ramina
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    chennai
    Posts
    207

    Re: சம்மர் விளையாட்டு!

    Hai...
    Anaithum arumai frnds....
    Meendum vilayada aasaiyaga ullathu...palaiya ninaivum varugirathu...
    Enga ooril kalangal vilaiyatai" sutikal "endru soli vilayaduvom...

    jv_66, Sriramajayam and Dangu like this.

  5. #35
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    Nice Vaathiyaarey.


    @Dangu


    Dangu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #36
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    புளியங்கொட்டை விளையாட்டு!

    வீட்டில் அம்மா ரசம் வைக்கும்போது, தட்டுப்படும் புளியங்கொட்டைகளை சேகரித்து விளையாடுகிற விளையாட்டு இது! தரையில் பெரியதாக ஒரு வட்டம் வரைந்து, அதனுள், இக்கொட்டைகளை பரப்பி, ஊதி ஊதி ஒவ்வொன்றாக வட்டத்துக்கு வெளியே தள்ளி எடுக்க வேண்டும்.

    மூச்சை உள்ளிழுத்து ஊதுவதால், நுரையீரலுக்கு நல்ல பயிற்சி; ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது, சிறந்த விளையாட்டு. ஒரு காயை ஊதி எடுக்கும்போது அது, மற்றவற்றின் மேல் பட்டு விடாமல் எடுக்க வேண்டும் என்பதால், இவ்விளையாட்டு, மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.



  7. #37
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!


    நொண்டி!

    'நொண்டி' என்பது பகலிலும், நிலவொளியிலும், தெருவிலோ அல்லது பொட்டலிலோ, திறந்தவெளி நிலத்திலோ, பெரும்பாலும் சிறுவர்களும், சிறுமியர்களும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு.

    இந்த ஆட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொள்கின்றனரோ, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போன்று, நிலத்தில் ஒரு பெரிய வட்டம் ஒன்றைக் கீறிக் கொள்வர். இருவருக்கு மேற்பட்டவர்கள், இரு சம அணிகளாகப் பிரிந்து கொள்வர். யார் வட்டத்திற்குள் இறங்குவது என்று முடிவு செய்து, ஒரு அணியினர் வட்டத்திற்கு உள்ளேயும், மற்றொரு அணியினர் வெளியே நின்று, ஒவ்வொருவராய் வட்டத்திற்குள் நொண்டியடித்தபடியே சென்று, உள்ளே நிற்பவர்களில் ஒருவரையோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ தொட முயல்வர்.

    நொண்டியடித்து வருபவர், தங்களைத் தொடாதவாறு வட்டத்திற்குள் அங்குமிங்கும் ஓடுவர். அப்படி ஓடும்போது, கோட்டை மிதித்தாலும், கோட்டுக்கு வெளியே கால் வைத்தாலும் அவர்கள், 'அவுட்!'

    நொண்டியடிப்பவர் களைத்துவிடும் பட்சத்தில், அவர்கள் கோட்டுக்கு வெளியே சென்று, காலை ஊன்றி ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

    ஆனால், நொண்டியடிப்பவர் காலை ஊன்றி விட்டால், மீண்டும் உள்ளே வரக்கூடாது. அத்துடன், நொண்டியடிப்பவர் கோட்டை மிதித்தாலும், கோட்டின் மேல் காலை ஊன்றினாலும், அவர் ஆட்டம் இழப்பதோடு, வெளியேறியவர்கள் அனைவரும் வட்டத்திற்குள் வந்து விடுவர். மீண்டும், அவரைத் தொட வேண்டும்.

    ஒருவர் நொண்டி ஆடியபின், அடுத்தவர் நொண்டியடித்து வருவார். வெளியேறி நிற்கும் அணியினருள் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ நொண்டியடிப்பவர் ஒருவரே உள்ளே நிற்பவர் எல்லாரையும் தொட்டு விடுவது உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைத் தொடுவதுண்டு; தொடாதிருப்பதும் உண்டு.

    வெளியில் நிற்கும் அணியினர் அனைவரும் நொண்டியத்து முடிந்த பின் அல்லது உள் நிற்கும் அனைவரும் தொடப்பட்ட பின், ஒரு ஆட்டம் முடிவிற்கு வரும். அதில், வென்றவர்களே அடுத்த ஆட்டத்திலும், வட்டத்திலும் நிற்பர்.



  8. #38
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    உள்ளே வெளியே!

    ஒரு வட்டம்; சுற்றிலும் நெருக்கமாக பிள்ளைகள் நிற்பர். நடுவில், ஒருவர் நின்று, 'உள்ளே' என்று சொன்னதும், அதற்கு எதிர்மறையாக, வட்டத்தில் நிற்பவர்கள், கோட்டை விட்டு வெளியே குதிக்க வேண்டும். 'வெளியே' என்றால், கோட்டின் உள்ளே குதிக்க வேண்டும். 'வெளியே' சொல்லும்போது, உள்ளே குதித்தால் அவர், 'அவுட்!'



  9. #39
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    பச்சைக் குதிரை!

    சிறுவர்கள் குதிரை போல் குனிந்து விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று தான் பச்சைக் குதிரை விளையாட்டு. சிறுவன் ஒருவன் குனிந்து நிற்கும்போது, குதிரை போன்று காட்சி அளிப்பதால், இதற்கு பச்சைக் குதிரை என்று பெயர் ஏற்பட்டது.

    இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும், சாட் பூட் த்ரீ போட்டு தோல்வியுற்ற சிறுவனில் இருந்து விளையாட்டை ஆரம்பிப்பர். தோல்வியுற்ற சிறுவன் காலை நீட்ட, மற்ற சிறுவர்கள் அனைவரும் தாண்டிச் செல்வர். அடுத்து, அவன் கால் மேல் கால் வைத்து உட்கார்ந்திருப்பான். அதையும் ஒவ்வொருவராக தாண்டிச் செல்வர். அதற்கு பின், கால்களுக்கு மேல் ஒரு கையை நீட்டுவான். அதையும் அவர்கள் தாண்டிச் செல்ல வேண்டும். பின், மற்றொரு கையை வைப்பான். இவ்வாறு முறையே உட்கார்ந்தும், குனிந்தும், நிமிர்ந்தும், எழுந்தும் நின்று குனிந்து படிப்படியாக உயர்ந்தும் நிற்க வேண்டும். எந்நிலையிலும் ஒருவன் தாண்ட முடியாமல் போனால், அவன் முன்னவன் போலவே காலை நீட்டி படிப்படியாக உயர்ந்தபடியே ஆட்டம் தொடரும்.

    இதில், இன்னொரு வகை ஆட்டமும் உண்டு.

    இடைவெளி விட்டு பலர் வரிசையாக குனிந்து நிற்பர். அவர்கள் ஒரு கோடியில் இருப்பவன், மற்றவர்களைத் தாண்டித் தாண்டி மறுகோடியில் போய்க் குனிந்து நிற்பான். இவ்வாறு வரிசைப்படி தாண்டிப் போய் நிற்பர். ஆட்டம் தொடரத் தொடர இடம் பெயர்ந்து கொண்டே இருப்பர்.



  10. #40
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    ஆடும், புலியும்!

    பலர் வட்டமாய் கை கோர்த்து நிற்க, ஒருவர் உள்ளேயும், மற்றொருவர் வெளியேயும் நிற்பர். உள்ளே நிற்பவர் ஆடாகவும், வெளியே நிற்பவர் புலியாகவும் கருதப்படுவர். புலிக்கும், வட்டமாய் நிற்பவர்களுக்கும் இடையே பின்வருமாறு உரையாடல் நிகழும்:
    புலி: சங்கிலி புங்கிலி கதவைத் திற!
    பிள்ளைகள்: நான் மாட்டேன் வேங்கைப்புலி!
    புலி: வரலாமா? வரக் கூடாதா?
    பிள்ளைகள்: வரக் கூடாது!
    பிள்ளைகள் இப்படி வழி மறித்த பின், எப்படியாவது உள்ளே நுழையப் பார்க்கும் புலி. பிள்ளைகள் அதற்கு இடம் விட மாட்டார்கள். பலமுறை அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்த பின், புலி திடுமென்று ஓரிடத்தில் வலிந்து புகும். அச்சமயம், ஆடு உடனே வெளியே விடப்பட்டுவிடும். ஆட்டைப் பிடிக்கப் புலி மீண்டும் வெளியேறும்போது, ஆடு மீண்டும் உள்ளே விடப்படும். இப்படி மாறி மாறி இரண்டொரு முறை நிகழ்ந்த பின், இறுதியில், புலி ஆட்டைப் பிடித்துக் கொள்ளும்.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter