Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree132Likes

Summer games -சம்மர் விளையாட்டு!


Discussions on "Summer games -சம்மர் விளையாட்டு!" in "Kids Zone" forum.


  1. #1
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Summer games -சம்மர் விளையாட்டு!


    சம்மர் விளையாட்டு!


    உடல் நலத்திற்கும், அறிவுக் கூர்மைக்கும் சமூக ஒற்றுமையை வளர்க்கவும், உதவுவன நம் பாரம்பரிய விளையாட்டுக்கள். காலப்போக்கில் மற(றை)ந்து போன சில விளையாட்டுக்களை பற்றி பார்ப்போம்.


    பாண்டி:

    இந்த விளையாட்டை இருவரோ அல்லது நால்வரோ விளையாடலாம். பெரிய செவ்வகம் வரைந்து, அதில் எட்டு கட்டங்களை பிரித்துக் கொள்ளவும். மண்பானையின் சில்லு தான் இதன் விளையாட்டுப் பொருள்.

    முதலில், சில்லை ஒவ்வொரு கட்டமாக போட்டு நொண்டியபடியே, ஒரு காலால் அந்த சில்லை தட்டி, ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்கு தள்ள வேண்டும். நான்கு கட்டங்களையும் தாண்டியபின், கை, புறங்கை, கால் மற்றும் தலையில் சில்லை வைத்து கட்டங்களை தாண்ட வேண்டும். பின், செவ்வக கட்டத்திற்கு முதுகை திரும்பி நின்றபடி, ஏதாவது ஒரு கட்டத்தில், சில்லை வீச வேண்டும்.

    சில்லு விழுந்த கட்டத்திலிருந்து அதை கட்டத்துக்கு வெளியே காலால் தள்ளி வெளிக் கொணர வேண்டும். அப்படி வெளியே கொண்டு வந்து விட்டால், அந்த கட்டத்துக்கு சொந்தக்காரராக மாறி, பழம் வைத்துக் கொள்ளலாம்.

    எதிராளி விளையாடும் போது, அந்த கட்டத்தை மிதிக்காமல் தாண்டி செல்ல வேண்டும்.

    இந்த விளையாட்டு கற்றுக் கொடுக்கும் பாடம்: சில்லை சரியாக கட்டத்தில் எறியும் போது, வெற்றி இலக்கை அடைய, எவ்வளவு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது.

    பூப்பறிக்க வருகிறோம்!:

    இரு குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பர். ஒருவரோடு ஒருவர் கை கோர்த்தபடி, எதிரணியினரை நோக்கி குதித்தபடி, பாட்டுப்பாடி வருவர். இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும்.

    பூப்பறிக்க வருகிறோம்... பூப்பறிக்க வருகிறோம்....
    எந்த மாதம் வருகிறீர்... எந்த மாதம் வருகிறீர்...
    டிசம்பர் மாதம் வருகிறோம்... டிசம்பர் மாதம் வருகிறோம்...
    யாரைத் தேடி வருகிறீர்... யாரைத் தேடி வருகிறீர்...
    பூவைத் தேடி வருகிறோம்... பூவைத் தேடி வருகிறோம்...
    எந்தப் பூவை தேடுவீர்... எந்தப் பூவை தேடுவீர்...
    மல்லிகையை தேடுவோம்...

    - இப்படிப் பாடியதும், மல்லிகை என்று பெயர் வைத்த பெண்ணை பிடித்து இழுப்பர். அந்தப் பெண் எதிரணிக்கு சென்று விடாமல் இந்த அணி இழுக்க, ஒரே கலாட்டா தான்!

    கயிறு துள்ளல்! (ஸ்கிப்பிங்):

    பெண்களுக்கு ஸ்கிப்பிங் ஆடுதல் மிகவும் முக்கியம். ஒரு விதத்தில் இது, உடல் எடையை குறைக்கவும், மேலும் எடை அதிகரித்து விடாமலிருக்கவும், பாதுகாப்பான பயிற்சியாக விளங்குகிறது. ஆண்களுக்கும் இவ்விளையாட்டு நல்லதுதான். ஸ்கிப்பிங் ஆடுவதால், பின்னங்கால்களின் தசைகள் வலுவடைகின்றன.

    ஸ்கிப்பிங்கால் ஏற்படும் பலன்கள்:

    *கை, கால் மற்றும் மூளை ஒருங்கிணைந்து செயல்படும் திறன், ரிப்ௌக்ஸ் ஆக் ஷன் மற்றும் சட்டென்று செயல்படும் திறன், ஸ்கிப்பிங் செய்வதால் விருத்தியடைகின்றன.

    *இரண்டு பேர் சேர்ந்து ஒன்றாக கயிற்றைத் தாண்டும் போது, அடுத்தவருடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் ஏற்படுகிறது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்ற பல உடல் இயக்கங்களால் நல்ல பலன் ஏற்படுகிறது.

    கிட்டிப்புள்!:

    தமிழரின் பழமையான விளையாட்டுகளில் ஒன்று, கிட்டிப்புள். பொதுவாக, சிறுவர்கள் மட்டுமே இவ்விளையாட்டை விளையாடுவர். இது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு பெயர்களுடன், 1970ம் ஆண்டு வரையில், விளையாடப்பட்டு வந்தது.

    ஆட்ட அரங்காக, குதிகாலால் திருகிய குழி அல்லது ஒரு முழம் நீளத்தில் செய்யப்பட்ட குழி அமைக்கப்படும்.

    குழியின் இரு முனையையும் ஒட்டியபடி கிடை மட்டமாக கிட்டிப்புள் வைக்கப்படும். இந்தப் புள்ளை கிட்டிக்கோலால் தட்டி விடுவர். இதற்கு, 'தெண்டுதல்' என்று பெயர்.
    புள் பறக்கும் போது கிட்டிக் கோலால் அடிப்பர். புள் தொலைதூரம் செல்லும். எதிரில் உள்ளவர் அல்லது எதிரணியினர் பறந்து வரும் புள்ளைப் பிடிக்க வேண்டும். இவ்வாறு தடியால் (கிட்டிக்கோலால்) குழியிலிருந்து தெண்டி (கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டு.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: சம்மர் விளையாட்டு!

    மறந்து போன விளையாட்டுக்களை மீண்டும் நியாபகப்படுத்தி விட்டீர்கள் அங்கிள்..... திரும்ப விளையாடணும் போல இருக்கு....!


  3. #3
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: சம்மர் விளையாட்டு!

    தட்டாமாலை, பல்லாங்குழி, கல்லாங்காய் மறந்துட்டேன் தேனு.

    Last edited by Dangu; 8th May 2015 at 12:47 AM.

  4. #4
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: சம்மர் விளையாட்டு!

    Quote Originally Posted by Dangu View Post
    தட்டாமாலை, பல்லாங்குழி, கல்லாங்காய் மறந்துட்டேன் தேனு.


    அதானே....!! அதை பற்றியும் போடுங்க அங்கிள்...
    அதிலும் பல்லாங்குழி சூப்பர் ஆச்சே....!!


  5. #5
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: சம்மர் விளையாட்டு!

    Will Post a seperate thread shortly.


  6. #6
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: சம்மர் விளையாட்டு!




  7. #7
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: சம்மர் விளையாட்டு!

    All Credit goes to my wife.

    மறந்து போன விளையாட்டுகள்



    முட்டாள் பெட்டி என்று சொல்லப்படும் தொலைக்காட்சி, வீடியோ கேம்ஸ், கிரிக்கெட், கணிப்பொறி, இணையம் மற்றும் பல புதிய வரவுகளால் நாம் இழந்துவிட்ட மறந்துவிட்ட விளையாட்டுகள் பல.

    அதில் எனக்கு பிடித்த பல விளையாட்டுகளில் ஒன்றுதான் கல்லாங்காய். வீடு கட்ட உதவும் ஜல்லி என்று சொல்லப்படும் கற்களை நூற்று கணக்கில் வைத்து விளையாடும் வகை மிகவும் பிரசித்தம். இது தவிர ஐந்து அல்லது ஏழு கற்களை மட்டும் வைத்து விளையாடுவார்கள். ஒரு கல்லை மேலே தூக்கிப்போட்டு அதற்குள் கீழே இருக்கும் கற்களை எடுத்துக்கொண்டு மேலிருந்து வரும் கல்லையும் லாவகமாக பிடிக்க வேண்டும். ஆஹா என்ன ஒரு அருமையான விளையாட்டு.

    என் சிறு வயதில் பள்ளி விடுமுறைகளில் எல்லோருடனும் சேர்ந்து விளையாடியது நன்றாக நினைவிருக்கிறது. நேரம் போவதே தெரியாமல் நாள் பூராவும் விளையாடுவோம். சென்னையில் கல்லாங்கா என்று சொல்லப்படும் இந்த விளையாட்டு கல்லாங்கல், கல்லாங்காய், பொதக்காய், கொத்துக்காய், கல் விளையாட்டு என்று பல பெயர்களில் பல ஊர்களில் அழைக்கப்படுகிறது.

    தாயக்கட்டை, தாயபாஸ் (சென்னையில்) ஆஹா! என்னஒரு அருமையான விளையாட்டு. இந்த விளையாட்டைப் பற்றி மட்டும் ஒரு தனி பதிவே எழுதாலாம். தொடர் கட்டங்களாக வரைந்து தாயக்கட்ட்டையில் விழும் எண்ணுக்கேற்ப காய்களை நகர்த்தி விளையாடுவார்கள். முதலில் யார் தன் எல்லாக்கய்களையும் பழம் என்று சொல்லப்படும் கடைசிக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி. பொதுவாக கூட்டல் குறி போல் வரைந்து விளையாடுவது பிரபலம். இதில் நாண்கு அணிகள் வரை விளையாட முடியும். சென்னையில் ஏரோபிளேன் என்றொரு ஆட்டம் ஆடுவார்க்கள். ஆம். பார்பதற்கு விஞ்ஞான படங்களில் வரும் விமானம் போலவே வரைந்திருப்பார்கள். இதில் கூட்டல் கட்டம் ஆட்டத்தைப் போல் காய்களை மற்ற அணிகளின் காய்களை பின்தொடர்ந்து நகர்த்தாமல் எதிர் திசையில் நகர்த்தி விளையாடுவார்கள். கும்பகோணம் பகுதியில் (எனக்கு தெரிந்த வரையில்!) சோணாலு என்றொரு வகையில் விளையாடுவார்கள். தாயகட்டத்தில் கட்டை உருட்டும் போது இரண்டு கட்டைகளிலும் இரண்டு இருந்தால் அது சோனாலு எனப்படும். அதன் மதிப்பு நான்கு அல்ல, எட்டு. மேலும் சாதாரணமாக நான்கு விழுந்தால் மறு உருட்டல் கிடையாது. ஆனால் சோனாலுக்கு தாயம் ஐந்து ஆறு மற்றும் பண்ணிரெண்டைப் போல இன்னொரு உருட்டலும் உண்டு. சதுரங்கம் போலவே இருந்தாலும் 9*9, 11*11, 13*13 போன்ற எண்ணிக்கைகளில் கட்டங்கள் அமைந்திருக்கும். இதில் காய் நகர்த்துவது கொஞ்சம் குழப்பமாக இருக்கும். வெளியிலிருந்து ஆரம்பித்து சுற்றி சுற்றி நடுவில் சென்று முடிக்க வேண்டும். இந்த முறையில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஜோடி ஜோடியாகவும் காய்களை நகர்த்த முடியும். உதாரணமாக ஆறு விழுந்தால் ஜொடிக் காய்களை மூன்று கட்டங்கள் நகர்த்தலாம். அப்படி ஜோடியாக நகர்த்தப்படும் காய்களை ஜோடி காய்களை வைத்தே வெட்ட முடியும். இதிலும் நாண்கு அணிகள் வரை விளையாடலாம்.

    புளியங்கொட்டைகளை வைத்து விளையாடும் ஒரு விளையாட்டும் எனக்கு பிடிக்கும். புளியங்கொட்டைகளை குவித்து வைத்து அதை ஊதி கலைத்து ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். எடுக்கும்போது மற்ற கொட்டைகள் அசையாமல் அலுங்காமல் எடுக்க வேண்டும். இதைப்போலவே புளியங்கொட்டைகளுக்கு பதிலாக தென்னங்குச்சிகளை வைத்தும் விளையாடலாம். சற்று விதிகள் மாறும். தென்னங்குச்சிகளை ஒரே நீளத்தில் வெட்டி ஒன்றாக வைத்து ஊதி கலைத்துவிட வேண்டும். அவற்றை மற்றொரு குச்சியால் ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டு. புளியங்கொட்டைகளை வைத்து ஒத்தயா ரெட்டையா என்ற மற்றொரு விளையாட்டும் விளையாடுவோம். இருக்கும் புளியங்கொட்டைகளை சமமாக பிரித்துக் கொள்ளவேண்டும். பிறகு கை நிறைய எடுத்து வைக்க வேண்டும் மற்றவர் அதில் உள்ள எண்ணிக்கை ஒத்தயில் உள்ளதா ரெட்டையில் உள்ளதா என்று சொல்ல வேண்டும். சரியாக இருந்தால் அதை அவர் எடுத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் அதே அளவு மற்றவருக்கு கொடுக்க வேண்டும்.

    சிறு வயதில் நான் மிகவும் ரசித்து விளையாடிய மற்ற விளையாட்டுக்கள் கோலியும் பம்பரமும் பட்டமும். இவற்றையும் பல வகைகளில் விளையாடுவோம். ஒரு சமயத்தில் எட்டடி தூரத்தில் உள்ள கோலிகளையும் குறி பார்த்து அடிக்கும் திறமை பெற்றிருந்தேன். அதேபோல் பம்பரத்தையும் அந்தரத்தில் எய்து கையில் லாவகமாக ஏந்துவேன். நூலில் மாஞ்சா போட்டு பட்டம் விடுவது என்றால் சாப்பாடு தூக்கம் எதுவும் வேண்டாம். இப்பவும் எங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு பட்டம் செய்யவும் பரக்க விடவும் கற்றுத் தருகிறேன்.

    கண்ணாமூச்சியும் திருடன் போலிஸ் விளையாட்டையும் என்னால் மறக்கவே முடியாது. நாண்கு ஐந்து தெருக்களில் சுற்றி சுற்றி துரத்தி துரத்தி பிடிக்கும் திருடன் போலிஸ் விளையாட்டு எங்களை மிகவும் சுறுசுறுப்பாக வைத்தது. அப்போதெல்லாம் மாலை நேரத்தில் கரண்ட் கட் என்றால் நொண்டி விளையாட்டுத்தான் (பாண்டி, சில்லு என்றும் சொல்லுவார்கள்). அதிலும் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லொரும் சேர்ந்து விளையாடுவது ஒரு தனிச்சுவைதான்.

    இது தவிர பல்லாங்குழி, கல்லா மண்ணா, ராஜா ராணி, வளையல், கிச்சி கிச்சி தாம்பாலம், பரமபதம், கொருக்கலிக்கா முந்திரிக்கா, ஒரு பானை தண்ணி ஊத்தி என்று பல விளையாட்டுகளை அப்போது விளையாடினேன். ஆனால் இன்று உள்ள சிறுவர்களுக்கு இதில் ஏதாவது ஒன்றையாவ்து விளையாட அல்லது தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா?



  8. #8
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    நல்ல ஒரு டாபிகல் thread அங்கிள் .

    ரொம்ப நன்றி .....உங்க மனைவிக்கும் நன்றியை சொல்லிடுங்க .

    பல தாய்மார்களுக்கும் உதவியா இருக்கும் . இதெல்லாம் அவங்க பசங்களுக்கு சொல்லித் தரலாம் .

    Jayanthy





  9. #9
    riyaraj is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2014
    Location
    sattur
    Posts
    36

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    wow sir..... childhood days ku poitu vanthachu thanks to you.......


  10. #10
    Priyathozhi's Avatar
    Priyathozhi is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    coimbatore
    Posts
    451
    Blog Entries
    1

    Re: Summer games -சம்மர் விளையாட்டு!

    வணக்கம் தோழரே

    உங்கள் மனைவிக்கு நன்றி.

    பழைய விளையாட்டுக்களை நினைவுபடுத்தியதற்கு,

    கல்லாங்காய் விளையாட்டை நாங்க உட்டின்னு சொல்வோம்

    இதே போல் பூ பறிக்க வருகிறோம், டீன் டீன் யாரது ? , நாள்கா ரெண்டு நல்லெண்ணெய் ................................நெறைய விளையாட்டு மறைஞ்சே போச்சு

    thenuraj, Sriramajayam and Dangu like this.




    நிமிர்ந்த நன்னடை

    நேர்கொண்ட பார்வை
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்
    திமிர்ந்த ஞானச்செருக்கு

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter