நன்றி குங்குமம் தோழி

நீர்த் தொட்டிக்குள் சுகப்பிரசவ முறை சென்னையில் அறிமுகம்! தற்போது மக்கள் இயற்கை உணவுகள், பாரம்பரிய வாழ்க்கை முறை என மீண்டுக் கொண்டிருக்கும் வேளையில், சுகப்பிரசவத்தின் மீதான விழிப்புணர்வும் பெருகி வருகிறது. இதனால், பெண்களின் உடல் நலம் பேணப்படுகிறது. இதற்காக, சென்னையில் உள்ள ப்ளூம் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவமனையில், இயற்கை முறை பிரசவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் பெண்கள் கருத்தரித்தது உறுதி செய்யப்பட்ட உடனேயே, சுகப்பிரசவத்தின் நன்மைகளைச் சொல்லி அவர்களை சுகப்பிரசவத்திற்கு மன ரீதியாகத் தயார்படுத்துகின்றனர். மேலும், எளிதான பயிற்சிகளையும் செய்ய வைக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக நீருக்குள் பாதி மூழ்கியபடி, சில பயிற்சிகள் செய்ய வேண்டும்.

இந்த பயிற்சிகளைச் செய்வதன் மூலம் எலும்புகள் பிரசவம் ஆவதற்கு ஏற்ப, வளைந்து கொடுக்கத் தயாராகும். தவிர, பிரசவத்தின் போது வலி தெரியாமல் இருக்க, வெதுவெதுப்பான நீர் நிரம்பிய தொட்டியில் அமர வைத்து பிரசவம் பார்க்கப்படும். இதனை அறிமுகப்படுத்தும் விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஓட்டல் ஹில்ட்டனில் நடைபெற்றது. அப்போது, நீச்சல் குளத்தில் கர்ப்பிணிகளுக்கு பயிற்சிகள் கொடுத்து, செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ப்ளூம் குழந்தையின்மைக்கான மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் கே.எஸ். கவிதா கவுதம் தலைமை வகித்தார். மூத்த மகப்பேறு மருத்துவர் சுதந்திர தேவி, இயற்கை முறை பிரசவ பயிற்சியாளர் ஜெயஸ்ரீ, வினோதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவின் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 6ல், உலக தாய்ப்பால் வாரத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் தாய்ப்பால் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியை, ப்ளூம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கவுதம் சிகாமணி தொடங்கி வைத்தார்.


Similar Threads: