கருவுற்றிருக்கும்போது பெண்கள் தங்களது நிறை மாதகாலத்தில் எந்நேரமும் எதற்கும் தயாராக இருப்பது நல்லது மனதில் நிறைந்த தைரியத்துடன் நல்லதே நடக்கும் என்ற பாஸிட்டிவ் எண்ணத்துடன் இருப்பது மிகவும் முக்கியம் .டாக்டர் அறிவுரைத்த நாளுக்கு ஒருமாதம் முன்பாகவே ஆஸ்பத்திரிக்கு எடுத்துசெல்லும் பொருட்களை ஒரு பையில் போட்டு ரெடியாக வைத்துக்கொண்டால் கடைசி நேரம் டென்ஷன் இருக்காது இதோ கர்பிணி பெண்களுக்கான லேபர் லிஸ்ட்

 1. சின்னதும் ,பெரியதுமான இரண்டு டர்க்கி டவல்கள்
 2. முன்னால் பட்டன் /ஜிப் வைத்திருக்கும் நைட்டிகள்(புதியதை தவிர்த்து அலசியதை உடுத்தவும் )
 3. குழந்தைகளுக்கு பால் கொடுக்க பயன் படும் நர்சிங் ப்ராக்கள்
 4. துவைத்து வெயிலில் காயவைத்த காட்டன் வெள்ளை வேட்டைகள்
 5. டெட்டோல்,டார்ச் லைட்
 6. பிளாஸ்க் சுடுநீருக்கும் ,பாலுக்குமாக ரெண்டு
 7. சானிடரி நாப்கின்கள்
 8. பல்தேய்க்கும் பிருஷ் மற்றும் பேஸ்ட் ௯.முகம் அலம்ப சோப்பு (வாஷ்)
 9. முக்கியமானவர்களின் டெலி போன் நம்பர்கள்
 10. குழந்தையை வெளியே எடுத்துசெல்ல டவல்
 11. ஸ்வட்டர்


Similar Threads: