Diabetes for Pregnant Ladies
Discuss here on Diabetes for Pregnant Ladies within the Labor & Delivery forums, part of the Pregnancy forum; மனிதர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபுவழிக் காரணிகளில் முக்கியமான ஒன்றாக கருவுற்ற தாய்மார்களுக்கு வரும் நீரிழிவுநோய் இருக்கக்கூடும் என்று சமீபகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, கருவுற்ற தாய்மார்களுக்கு ...
-
3rd Nov 2011, 03:38 PM #1
Diabetes for Pregnant Ladies
மனிதர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபுவழிக் காரணிகளில் முக்கியமான ஒன்றாக கருவுற்ற தாய்மார்களுக்கு வரும் நீரிழிவுநோய் இருக்கக்கூடும் என்று சமீபகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது, கருவுற்ற தாய்மார்களுக்கு கர்ப்பகாலத்தில் இயற்கையிலேயே சுரக்கும் சில ஹார்மோன்கள் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துவிடும்.
அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, கருவுற்றதாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்துவிடும். இது வழமையாக நடக்கும் இயற்கையான சுழற்சி முறையிலான நடைமுறை. ஆனால் ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம் இந்த கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை. இத னால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இதுவே கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அறியப்படுகிறது.
இத்தகைய கர்ப்பகால நீரிழிவுநோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை என்பது கருவில் இருக்கும்
குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தை தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்யும்.
இப்படி கருவில் இருக்கும்போதே குழந்தையின் கணையம் இன்சுலின் சுரப்பது தவறு. அப்படி சுரப்பதன் மூலம் கருப்பைக்குள்ளேயே குழந்தையின் எடை மிக அதிகமாகி, இயற்கையான முறையில் பிரசவம் நடக்கமுடியாமல் போய் பிரசவகாலத்தில் தாய் சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம்.
அது மட்டுமல்லாமல், குறைப்பிரசவம் நடப்பது, குழந்தையின் உள்ளுறுப்புக்களில் குறைபாடு ஏற்படுவது போன்ற பல பிரச்சினைகள் இதனால் உருவாகக்கூடிய ஆபத்துக்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நீரிழிவுநோய் உருவாவதற்கான சாத்தியங்களும் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன
மேற்குலக நாடுகளைச் சேர்ந்த பெண்களோடு ஒப்பிடும்போது, இந்தியாவைச் சேர்ந்த பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் பதினோறு சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருவுற்ற நான்காவது மாதம் முதல் தாயின் ரத்த பரிசோதனைகள் மூலம் கர்ப்பகால நீரிழிவுநோயை கண்டுபிடிக்க முடியும். கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களில் தொண்ணூறு சதவீதமானவர்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டின் மூலமே அவர்களின் நீரிழிவை கட்டுப்படுத்திவிட முடியும். மற்றவர்களுக்கு இன்சுலின் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம்.
இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான ரத்த பரிசோதனையை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த முயற்சி கருவுற்ற தாய்மார்கள் மற்றும் அவர்தம் குழந்தைகள் மத்தியிலான நீரிழிவுநோய் பரவலை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தும், கர்ப்பகால நீரிழிவுநோய் தொடர்பில் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆய்வுகள் குறித்தும் இந்த பகுதியில் விரிவாக விளக்கப்படுகிறது.
அன்பு தோழி!
Positive Thought gives us the Energy to struggle in our life......
Similar Threads
-
Best Ladies Tailor in Coimbatore
By Penmai in forum CoimbatoreReplies: 1Last Post: 27th Dec 2011, 11:00 AM -
Black Tea may fight diabetes
By sumathisrini in forum General Health ProblemsReplies: 0Last Post: 26th Oct 2011, 11:45 AM -
DIABETES natural treatment
By Kousalya bala in forum General Health ProblemsReplies: 0Last Post: 3rd Oct 2011, 11:30 PM -
Home Remedies for Diabetes
By kausalya in forum Nature CureReplies: 1Last Post: 18th Sep 2011, 11:12 PM -
Type 2 Diabetes: What Is It?
By Kavibhanu in forum General Health ProblemsReplies: 0Last Post: 22nd Jul 2011, 08:04 PM


2Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks