Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree45Likes

மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறவ&#


Discussions on "மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறவ&#" in "In-Laws" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறவ&#



    உங்கள் மகனுக்கு கல்யாணம் ஆனவுடன் நீங்கள் ஒரு புதிய அவதாரத்துக்குள் நுழைகிறீர்கள் அந்த அவதாரத்திற்குப் பெயர்தான் மாமியார் .

    இந்தப் பதவியானது நீங்கள் இதை திறமையாகக் கையாண்டால் சிறப்பான ஒன்றாகவே அமையக் கூடியதாகும் .
    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் , உங்களுக்கு வரக்கூடிய மருமகளை , உங்களின் சொந்த மகளைப் போலவே கண்ணும் கருத்துமாக கவனித்து , அனைத்து விதங்களிலும் செயல்படுவதாகும் .

    கீழே உள்ள குறிப்புகள் மூலம் , உங்கள் பதவியைத் திறமையாகக் கையாளுவது எப்படி என்பதனைப் பார்ப்போம் .

    இவை , நான் இந்த
    Tips for MILs to maintain good relationship with DIL திரியில் கொடுத்துள்ள ஆங்கிலக் குறிப்புகளின் தமிழாக்கம் .

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறவ&#-mother-law.jpg  
    Jayanthy





  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறī

    **உங்கள் மகனின் திருமணத்திற்கு முன்பே , வரப்போகும் உங்கள் மருமகளிடம் நீங்கள் பேசத் துவங்கி விடலாம் . ஆனால் இது வளவளவென்ற பேச்சாக இருக்கவேண்டாம் .


    **அவருக்கு , உங்கள் வீட்டின் சார்பில் எடுக்கக்கூடிய துணிமணி , புடவைகள் , நகைகள் , அனைத்திற்கும் , அவரது விருப்பப்த்திற்கு முக்கியத்துவம் தரவும் .


    **இதனால் , உங்கள் மீதான மதிப்பு கூடும் .


    **திருமணம் முடிந்து ,உங்கள் மருமகளானவர் உங்கள் வீட்டிற்கு வரும்போது , அவருடனான உறவு சுமுகமாக இருத்தல் வேண்டுமே என்று கண்டிப்பாக உங்களுக்கும் பதட்டம் இருக்கும் .


    **ஆகவே இந்தப் பதட்டத்தை உங்கள் முகத்திலாவது காண்பிக்காமல் இருத்தல் நலம் .


    **அவர் உங்கள் வீட்டின் உள்ளே வந்து முக்கியமான சடங்குகள் முடிந்ததும் , அவரை மெல்ல அணைத்து ,”நான் உன்னை என் சொந்தப் பெண்ணாகவே நடத்துவேன் மா . நீயும் என்னை உன் இன்னொரு அம்மாவாக நினைத்துக்கொள் . இதனால் , நாம் இருவரும் சேர்ந்து இந்தக் குடும்பத்தை நல்ல விதமாக நடத்துவோம் “ என்று உங்கள் மனதின் அடி ஆழத்திலிருந்து உண்மையாகச் சொல்லவும் .


    **அவர் வீட்டிற்கு வந்த முதல் நாளில் , அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லவும் . உங்கள் வீட்டின் அனைத்து உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தி வைக்கவும் . போகப்போக இவர்கள் எல்லாம் யார்யார் என்பது எளிதாக நினைவில் இருக்கும் என்பதையும் மறக்காமல் தெரிவிக்கவும் .


    தொடரும் ........

    Jayanthy





  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறī

    **அடுத்த நாளிலிருந்து , அவர் சமையலறைக்கு வந்தால் , அவரை வெறுமே எல்லாவற்றையும் கவனித்துப் பார்க்குமாறு சொல்லவும் . சிறு சிறு உதவிகளை உங்களுக்குச் செய்யச் சொல்லவும் .


    **அவருக்குச் சமையல் செய்யத் தெரியுமா என்று கேட்டுக் கொண்டு , தெரிந்தால் , முதலில் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே செய்யச் சொல்லவும் . கூடிய விரைவில் , வீட்டிலுள்ள அனைவரது விருப்பு வெறுப்புகளை – சாப்பாடு விஷயத்தில் , அறிந்து கொண்டபிறகு , அவரது மொத்த சமையலையும் சாப்பிட அனைவரும் (நீங்கள் உட்பட) மிகவும் ஆவலாக இருப்பதாகத் தெரிவிக்கவும் . கூடவே , வீட்டிலுள்ளவர்களின் சாப்பாடு சம்பந்தமான விருப்பு வெறுப்புகளை தெரிவிக்கவும் .


    **ஒருவேளை அவருக்கு சமைக்கவே தெரியாது என்றாலோ , மற்ற எந்த ஒரு வீட்டு வேலையும் தெரியாது என்றாலோ , தயவுசெய்து அவரைத் திட்டவோ , கிண்டல் செய்யவோ வேண்டாம் . இப்படி நினைத்துக் கொள்ளுங்கள் . அவர் இப்போது ஒரு புத்தம்புது களிமண் . உங்களுக்கு – அதாவது உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவாறு அவரை நன்கு உருவம் கொடுத்து செயல்பட வைக்கலாம் . ஒருபோதும் மற்றவர் எதிரில் இவைகளுக்காக அவரை மட்டம்தட்டிப் பேசவே வேண்டாம் .


    **அவரது விருப்பப்படியும் சமைக்கச் சொல்லவும். குடும்பத்தினருக்கும் மாற்றுச்சுவை தேவை . ஒருவேளை அவரது சமையலை , வீட்டிலுள்ளோர் பாராட்டிப் பேசினால் , பொறாமை கொள்ளாமல் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (இதை உங்கள் பெண்ணுக்குக் கிடைத்த பாராட்டாக நினைத்துக் கொள்ளவும் ).


    **அவருக்கத் தனித்திறமைகள் ஏதேனும் இருப்பின் , அவசியம் அவற்றை ஊக்குவிக்கவும் .


    ** அவர் வேலைக்குச் செல்பவராக இருப்பின் , காலை சமையலை மட்டும் அவரைச் செய்யச் சொல்லவும் . நீங்களும் கூடமாட உதவுங்கள் . மாலையில் வேலையிலிருந்து அவர் திரும்பி வரும்போது, சூடான காபியுடன் அவரை வரவேற்கவும் . இது ஒன்றே அவரைத் திருப்தி கொள்ள வைக்கும் . இரவு சமையலை வேண்டுமானால் நீங்கள் கவனித்துக் கொள்ளலாம் .


    தொடரும் ......


    Jayanthy





  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறī

    **நீங்கள் ஒன்றை கவனத்தில் கொள்ளுதல் அவசியம் . நீங்கள் மருமகளாக இருந்த காலமும் இப்போது அவர் மருமகளாக இருக்கும் காலமும் வேறானவை .தலைமுறை வித்தியாசங்கள் கொண்டவை. ஒருவேளை அவருக்கு , சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாவிட்டால் , பழைய முறைப்படியே அனைத்தையும் செய்யும்படி அவரை வற்புறுத்தாதீர்கள் . அதே சமயம் , அவற்றில் எல்லாம் விருப்பமுடையவராக அவர் இருப்பின் , பழைய சாஸ்திர சம்பிரதாயங்களை , உங்கள் வீட்டில் கடைபிடிப்பவைகளை , அவருக்குத் தெரியப்படுத்துங்கள் .


    ** அவர் அணியும் உடைகளில் உங்கள் மூக்கை நுழைத்து , குற்றம் கண்டுபிடிக்காதீர்கள். ஒருவேளை அவருக்கு , இடத்திற்கும், சமயத்திற்கும் தகுந்தாற்போல உடைகள் அணிவதில் குழப்பம் இருப்பதாகத் தெரிந்தால் , அவற்றை மட்டும் நீங்கள் விளக்கிச் சொல்லவும் .


    **ஒருபோதும் , உங்கள் மகன் –மருமகள் , அந்தரங்க அல்லது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடவே வேண்டாம் .


    **அவர்கள் இருவரும் வார இறுதி நாட்களில் தனியாக வெளியே சென்று அனுபவிக்க ஆசைப்பட்டால் , இதில் குறிக்கிடாமல் மனமார அனுமதியுங்கள் .


    **திருமணத்திற்குப் பிறகு , அதுவரை உங்கள் மகனிடம் நீங்கள் செலுத்திவந்த , அவர் உங்களிடம் செலுத்தி வந்த அன்பிலிருந்து பெருமளவாக விலகியிருங்கள். இனிமேல் அவரது அன்பும் பாசமும் பெருமளவு , அவரது மனைவி , குழந்தைகள் மீதே பாயும் . அதை மனதார அனுமதியுங்கள் . இதுவரை நீங்கள் அனுபவித்ததை , இனிமேல் அவர்கள் அனுபவிக்க வேண்டியது அவசியம் என்பதை உளமார நினையுங்கள் .


    **உங்கள் மருமகளிடம் ஒருபோதும் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம் . அவர் திருத்திக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் ஏதேனும் இருப்பின் , அவற்றை உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் அணுகுமுறைகள் மூலம் மட்டுமே எளிதாக மாற்றிவிடலாம் என்பதை நடைமுறைப் படுத்துங்கள் .


    **உங்கள் உறவினர் , அக்கம்பக்கத்தினர் யாரிடமும் ,அவர்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் , உங்கள் மருமகளைப் பற்றி ஒருபோதும் குறையாகச் சொல்லாதீர்கள் .


    **உங்கள் மருமகளது நடவடிக்கைகள் ஏதேனும் உங்களுக்குத் திருப்தி அளிக்காவிடில் , அவற்றைப் பற்றி , உங்கள் கணவர் மற்றும் உங்கள் மகளிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளவும் . அவர்கள் உங்களை , உங்கள் ஆசாபாசங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடப்பார்கள் , அதே சமயம் வெளியிலும் சொல்லி குடும்ப மானத்தை வாங்க மாட்டார்கள் .


    தொடரும் .......

    Jayanthy





  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறī

    **அவரது பெற்றோருக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் தகுந்த மரியாதையை அளிக்கத் தவறாதீர்கள் .


    **ஒருபோதும் அவருடைய வீட்டினரிடமிருந்து , பணம் , நகை போன்ற எதையும் தருமாறு நிர்பந்திக்காதீர்கள்.


    **ஒருவேளை அவர் குறைவான சீர் செனத்தியுடன் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தால் , அதைப் பற்றி உங்களது உறவினர் யாரேனும் கேள்விக் கேட்டோ , அல்லது கேலியாகவோ பேசினாலும் , தயவுசெய்து அதை ஊக்குவிக்காமல் , முளையிலேயே அத்தகைய பேச்சைக் கிள்ளிஎறிந்து விடவும் . அவர்களிடம் , உங்கள் மகன் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளுமளவுக்கு திறமை உள்ளவர் என்பதைச் சொல்லிவிடவும் .


    **அவர் கர்ப்பமாக இருக்கும்போது , எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகளைச் செய்து , கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளவும் .


    **அவர் கர்ப்பமாக இருக்கும்போதோ , பின்னர் குழந்தைகளை வளர்க்கும்போதோ , வழிவழியாக கடைபிடிக்கும் முறைகளைச் சொல்லி அவரைக் கட்டாயப் படுத்தாதீர்கள் . ஓரிரு முறைகள் சொல்லவும் . அவர் காதில் வாங்கிக் கொள்ளாவிட்டால் , பெருந்தன்மையுடன் விட்டுவிடுங்கள் . அதற்காகப் பொருமிக்கொண்டு இருக்காதீர்கள் .


    **ஒருவேளை அவர் உடனே கர்ப்பமடையாவிட்டால் , அவரை ஒருபோதும் குறை கூறாதீர்கள் . இதற்கு உங்கள் மகனும் கூடப் பொறுப்பானவர் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் . இந்த இடத்தில் உங்கள் மகள் இருந்தால் , நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்களோ அப்படியே நடந்துகொள்ளவும் . அவர்களுக்குத் தேவையான , மருத்துவ ஆன்மீக உதவிகளைச் செய்யவும் , அவர்கள் விருப்பபட்டால் .


    தொடரும் ......

    Jayanthy





  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறī

    **அடுத்ததாக , உங்கள் பேரப்பிள்ளைகளை வளர்க்கும்போதும் , நீங்கள் தூர இருந்தே மட்டுமே கண்காணிக்க வேண்டும் . அவர்களை வளர்க்கும் முழு பொறுப்பும் உங்கள் மருமகளுடையது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . அவ்வப்போது தேவையான அறிவுரைகளை மேலோட்டமாக மட்டுமே சொல்லவும் . அவைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று நீங்கள் உணர்ந்தால் , மீண்டும் எப்போதும் சொல்லாதீர்கள் . சிறியவர்கள் தாங்களே பட்டுத் தெரிந்து கொள்வார்கள் . குழந்தைகளை பார்த்துக் கொண்டு , விளையாடிக்கொண்டு, அவர்களின் பெற்றோருக்கு உதவி புரிவது மட்டுமே , இனிமேல் உங்கள் கடமை என்பதை நன்கு புரிந்துகொள்ளவும் .


    ** அடுத்த முக்கியப் பிரச்சனையானது , தொலைக்காட்சிப் பெட்டி . இதற்குத்தான் வீட்டிலுள்ளோருக்கு அதிக அளவில் மனஸ்தாபம் வருகிறது . இதனால் , உங்கள் அறையில் ஒரு தனி தொலைக்காட்சிப்பெட்டியை வாங்கி வைத்துக்கொண்டு சண்டைக்கு வழி வகுக்காமல் இருக்கவும் .


    **ஒரு கட்டத்தில் , உங்கள் மருமகள் , தானே குடும்பத்தின் வரவு செலவு கணக்குகளைக் கையாள விரும்பினால்(இதை நீங்கள் அவரது நடவடிக்கைகள் மூலமே அறிந்து கொள்ளலாம்) , அதைத் தடுக்காமல் , முழு மனதுடன் பொறுப்புகளை ஒப்படையுங்கள் . அதே சமயம் , நீங்களும் உங்கள் கணவரும் , உங்கள் செலவுகளுக்கு , உங்களுக்கு வரும் வருமானத்தின் மூலம் (பென்ஷன் , வாடகை போன்றவை ) உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம். அப்படி வருமானம் ஏதேனும் இல்லாமலிருந்தால் , உங்கள் மகனிடம் தனியாகப் பேசி , உங்கள் இருவருக்குமான செலவுகளுக்குத் தனியாக ஓரளவு பணம் தரும்படி கேட்டு வாங்கி , வாழ்க்கையை பொறுப்புகளின்றி இனிமையாக ஓட்டலாம் .


    **ஒருவேளை உங்கள் மருமகள் தனிக்குடித்தனம் செல்ல விரும்பினால் , உடனே ஒத்துக்கொண்டு , அவர்களைத் தனியாகச் செல்ல அனுமதியுங்கள் .இதற்காக ஒருபோதும் மனத்தாங்கல் கொள்ள வேண்டாம் . வார இறுதிகள் , நாள் கிழமைகளில் அவர்களை உங்கள் வீட்டிற்கு குடும்ப சகிதமாக வரச்சொல்லி சந்தோஷப்படுங்கள் .


    **மேற்கண்ட இரண்டு சந்தர்ப்பங்கள் ஏற்படுமாயின் , உடனே அதற்காக ஒரு பெரிய அமர்க்களம் எல்லாம் செய்யாமல் , இதை முன்னரே எதிர்பார்த்து (எதுவும் எப்போதும் நடக்கலாம் என்று ) அதற்கேற்ப சமயோசிதமாக செயல்பட்டு , விட்டுக்கொடுத்து, கடுமையான பொறுப்புகளிலிருந்து விடுபட்டு , வயதான காலத்தை இனிமையாக உங்கள் கணவருடன்(அல்லது தனியாகவோ) பிக்கல் பிடுங்கல் இல்லாமல் அனுபவியுங்கள் .


    **நான் இதைச் சொல்வது உங்களுக்குப் பிடிக்காமலும் இருக்கலாம் . ஆனால் தற்காலத்தில் இவைகளும் நடைமுறைகளில் இருப்பவைதான் என்பதை மனதில் கொள்ளவும் . நீங்கள் இருவருமோ அல்லது ஒருவரோ உங்கள் மகன் வீட்டில் இருப்பதை உங்கள் மருமகள் விரும்பவில்லை என்ற பட்சத்தில் , உடனே முழுமனதுடன் நீங்கள் இருவரும் தனியாகச் சென்று விடுங்கள் . இப்போதெல்லாம் , நல்ல வசதியுடன் கூடிய பற்பல முதியோர் இல்லங்கள் உள்ளன . அவற்றில் சிறந்ததை தேர்வு செய்து இருக்கலாம் . அல்லது காட்டேஜ் போன்றவை உள்ளன . அங்கே நீங்கள் இருவரும் தனியாக இருக்கலாம் . தகுந்த பணத்தைக் கட்டிவிட்டால் ,உங்களுக்குத் தேவையானவை எல்லாமே மற்றவர்கள் செய்து தருவார்கள் . நீங்கள் உடல் வருந்தத்தேவையில்லை . உங்கள் குழந்தைகள் , பேரப்பிள்ளைகளும் இங்கே அவ்வபோது வந்து தங்கிச் செல்லலாம் . இவ்விடங்களில் உங்கள் வயதினர்களுடன் இனிமையாகப் பொழுதுகளைக் கழிக்கலாம் .இப்படியும் நீங்கள் திருப்தியுடன் மீதி வாழ்க்கையைக் கழிக்கலாம் .

    தொடரும் ........

    Jayanthy





  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறī

    ஆகவே எதையும் நல்ல எண்ணத்துடனே அணுகி ,நல வாழ்க்கை வாழுங்கள் .


    மொத்தத்தில் உங்கள் மகனிடம் உள்ள உரிமைகளை ஓரளவோடு நிறுத்திக் கொண்டும் , பேரப்பிள்ளைகளிடம் விளையாடுவது , சேட்டைகளை அனுபவிப்பது , கதைகள் சொல்வது , அவர்களுக்கு சிறு சிறு உதவிகளைச் செய்வது ,இதோடு மட்டுமே உங்கள் உரிமைகளை நிறுத்திக் கொண்டால் , அவர்கள் எல்லாருடனான உறவு அருமையானதாக அமைந்து விடும் .


    Jayanthy





  8. #8
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறī

    மேற்கூறிய ஆலோசனைகளைக் கடைபிடித்தால் , மாமியார் –மருமகள் உறவு மேன்மையான உறவாக, மதிப்புடன் அமைவது திண்ணம் .

    thenuraj and Sriramajayam like this.
    Jayanthy





  9. #9
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறī

    ஒருவேளை நீங்கள் உங்கள் மகள் வீட்டிற்குச் சென்று அங்கேயே இருக்கவேண்டி வந்தால் , அப்போது உங்கள் மகள் –மருமகனுடைய எந்த ஒரு உள் விவகாரங்களிலும் தலையிடாமல் , வெறுமே அவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்துகொண்டு , குழந்தைகளுடன் இனிமையாகப் பொழுதுகளை கழித்துக் கொண்டு , வாழ்வை ரசித்து வாழுங்கள் .

    thenuraj, gkarti and Sriramajayam like this.
    Jayanthy





  10. #10
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Re: மாமியார்கள் மருமகள்களுடன் மதிப்பான உறī

    Wonderful suggestion Jayanthy, very useful thread.

    jv_66 and Sriramajayam like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter