Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree159Likes

Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்&am


Discussions on "Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்&am" in "In-Laws" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்&am

    Hi Friends,

    Please share here about the Good practices which you learnt from your in-laws (whoever they may be).


    தோழிகளே ,

    உங்கள் புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட நல்லப் பழக்கங்கள் , நல்ல வார்த்தை பிரயோகங்கள் , இல்லை வேறு ஏதும் இருந்தாலும் அவற்றை இங்கே பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    புகுந்த வீட்டினர் எனும்போது , மாமியார் , மாமனார் , நாத்தனார், அவர்களின் கணவர்கள் , மைத்துனர் , அவர்களின் மனைவிகள் ,இல்லையென்றால் மாமியார் மாமனாரின் மற்ற உறவினர் யாரேனும் ..என இவர்கள் யாராக இருப்பினும் , இன்னும் கேட்கப்போனால் , இந்த உறவுகளில் உள்ள சிறு வயதினரிடம் இருந்து கூட நீங்கள் ஏதேனும் கற்றிருக்கலாம் .

    அவை எதுவாக இருந்தாலும் இங்கே நீங்கள் பகிரலாம் .


    இங்கே tag செய்யப் படாத தோழிகளும் தாங்கள் விருப்பப்பட்டால் சொல்லலாம்

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by jv_66; 10th Mar 2016 at 01:01 PM.
    Jayanthy





  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    முதலில் என்னைப்பற்றி:


    என் மாமியாரிடமிருந்து :

    எப்போதும் பாசிட்டிவாகவே யோசிக்க வேண்டும் .

    எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் .

    வீட்டை விட்டு வெளியே கிளம்புபவர்களை நல்ல மனநிலையில் அனுப்ப வேண்டும் .

    எனக்கு ஏற்கனவே என் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட பழக்கமான , அனைத்து உறவினருக்கும் , அவர்களின் பிறந்தநாள் , திருமணநாள் வாழ்த்துக்களை மறக்காமல் தெரிவிப்பதை , மேன்மேலும் ஊக்குவித்தவர் என் மாமியாரே .

    என் மாமனாரிடமிருந்து :

    எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதை பெர்பெக்ட்டாக முடிக்க வேண்டும் .

    அதை முடிக்கும் வரை பாதியில் விட்டுவிடக்கூடாது.

    எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முனைய வேண்டும் .

    எப்போதும் பாஸிடிவ் அப்ரோச் தான் .

    என் நாத்தனார்களிடமிருந்து :

    யாராவது புதிதாக ஏதேனும் வாங்கித் தந்தால் , வீட்டிற்கு சென்ற பிறகு அவர்களுக்கு போன் செய்து , அந்தப் பண்டம் (புடவையோ இல்லை வேறு எதுவாக இருந்தாலும் ) அது மிகவும் நன்றாக இருக்கிறது . நமக்குப் பிடிக்கிறது என்று சொன்னால் , வாங்கித் தந்தவருக்கு மிக்க சந்தோஷம் உண்டாகும் .

    அதே போல , அவர்கள் வாங்கித் தந்த உடையை ஏதேனும் சந்தர்ப்பத்தில் உடுத்திக்கொண்டு அதை அவர்களுக்கு சொன்னால் , அதிலும் அவர்களுக்கு சந்தோஷம் உண்டாகும் .

    ஒரு நாத்தனார் பெண்ணிடமிருந்து :

    நான் கல்யாணம் முடித்து வந்தபோது சிறு பெண்ணாக இருந்த இவளிடமிருந்துதான் , கோலம் போடும் ஆர்வம் அதிகமாகிற்று .

    நாத்தனார் கணவர் (அனைவரிடமிருந்தும் ):

    ஒருவர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டால் , உடனே அந்த சாப்பாட்டை பாராட்டி சொல்லிவிட வேண்டும் .

    மைத்துனரிடமிருந்து :

    மற்றவர் வீட்டில் சாப்பிடும்போது சாப்பாட்டில் குறைகள் ஏதும் இருந்தால் , கண்டிப்பாக அதைச் சொல்லக் கூடாது .

    ஒரு நாத்தனாரிடமிருந்து :

    அனைவரிடமும் எப்போதும் இன்முகமாகவே பேசவேண்டும் .

    ஒரு நாத்தனாரிடமிருந்து :

    அவரும் நிறைய கைவேலைகள்(craft work) , தையல் வேலைகள் செய்வார் . நான் செய்வதையும் ஊக்குவிப்பார் . எனக்கு நிறைய கைவேலைகளை கற்றுத் தந்துள்ளார் (அவர் செய்ததை விளக்குவார் . அதைப் பார்த்து நான் செய்வேன் ). அதை செய்ததில் மீந்திருந்த raw productsகளை எனக்குத் தந்து என்னைச் செய்யச் சொல்லுவார்.



    Last edited by jv_66; 10th Mar 2016 at 12:52 PM.
    Jayanthy





  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    இங்கே tag செய்யப் படாத தோழிகளும் தாங்கள் விருப்பப்பட்டால் சொல்லலாம்

    ஒரே தடவையில் எல்லாரைப் பற்றியும் ஞாபகம் வராமல் , அவ்வப்போது வந்தாலும் , எப்போது வேண்டுமானாலும் இங்கே வந்து நீங்கள் சொல்லலாம் .


    Jayanthy





  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    Nice Thread Jayanthy .

    என் மாமியார் எதையும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசமாட்டார். எதுவாக இருந்தாலும் நேரிடையாக சொல்லிவிடுவார். ஒளிவு மறைவின்றி பேசுவதால், சற்று ஆளுமை குணம் போல தெரிந்தாலும், யோசித்து பார்த்தால் இது ஒரு நல்ல பழக்கமாகவே தெரிகிறது. இது நான் அவரிடமிருந்து தெரிந்து கொண்டது தான்.

    மாமனார் - பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையால் எப்படி அனைவரின் அன்பையும் சம்பாதிக்கலாம் என்பதை வாழ்ந்து காட்டி கற்ப்பித்தவர். இவர் தற்போது உயிருடன் இல்லையென்றாலும், அவரைப் பற்றி பேச்சு வந்தால் அவரின் இந்த சீரிய குணம் பற்றி பேசாத உறவினர்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர். அவர் அளவுக்கு பொறுமையை கடைபிடிக்க முடியாவிட்டாலும், வார்த்தைகளை விடாமல் அந்த மாதிரித் தருணங்களை கடந்து வர அவரின் அணுகுமுறை உதவியதை சொல்லியே ஆகவேண்டும்.

    நாத்தனார்களிடம் கற்றுக் கொண்டது: காரியங்கள் செய்வதில் நேர்த்தி. எதை செய்தாலும் சிந்தாமல், சிதறாமல் பக்குவமாக செய்வது. கோலம் போடுவதில் என் நாத்தனார்கள் மூவருமே expert.



  5. #5
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    டியர் jv

    என் மாமியார் மட்டுமல்ல என் கணவர் ஊரில் எங்கள் இனத்தவர்கள் அனைவர் வீட்டிலும் குழந்தைகளை வசதியாக வளர்பதை விட ,குழந்தைகளிடம் பேசும் போது கண்ணே ,பொன்னே என்று இனிக்க இனிக்க பேசுவார்கள்.

    அதிலும் முக்கியமாக ஆண் குழந்தைகளிடம் ,அதனால் குழந்தைகளும் இறுதி வரை பெற்றோகளிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள் .பெண் குழந்தைகளிடம் சிறு வயது முதல் வீட்டு வேலை செய்ய நன்றாக பழகி விடுவார்கள்.

    பெண் குழந்தைகள் திருமணம் ஆகி போகும் போது புகுந்த வீட்டில் கணவரை எளிதில் தன் பக்கம் கொண்டு வந்து விடும் திறமை பெற்று இருக்கும்.
    ஆக மொத்தம் அவர்கள் எல்லோரும் மகன் ,மகள் இருவரையும் இறுதிவரை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்கிறார்கள்.

    இது எனக்கு கவர்ந்த விசயம் பெற்றோர்களே பிள்ளைகள் இறுதிவரை உங்களை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்களிடம் உங்கள் பாசத்தை வார்த்தைகளாக வெளிபடுத்துங்கள் .உங்கள் இறுதி காலம் இனிமையாக இருக்கும்.

    என் மாமியார் மிகவும் சிக்கனமாக இருப்பார்கள் .என்னால் எவ்வளவு முயன்றாலும் இதுவரை முடியவில்லை.நான் அள்ளி அள்ளி குடுக்கும் குணம் உடையவள்.

    என் மாமனார் இப்போது இல்லை. என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். எனக்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கி தயாராக தினமும் வைத்து விடுவார்.நான் ஊருக்கு சென்ற உடன் வீட்டில் நடந்த விசயம் அனைத்தையும் என்னிடம் கூறி விடுவார் .என் மாமியார் கூட கிண்டலாக கூறுவார் .அதற்குள் மருமகளிடம் கூறி விடிர்களா என்று.

    என் கணவர் தம்பியும் என்னிடம் மரியாதையாக இருப்பார்கள்.என் கணவர் உறவினர்கள் அனைவரும் என்னிடம் பிரியமாக இருப்பார்கள்.

    Last edited by chan; 10th Mar 2016 at 02:02 PM.

  6. #6
    gowrymohan's Avatar
    gowrymohan is online now Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,962
    Blog Entries
    380

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    எங்கள் நாட்டில் திருமணம் முடித்து பெண்ணின் தாய் தந்தையரோடு தான் வசிப்பார்கள்.
    என் கணவர் வீடு அருகில் என்பதால் நாங்கள் அடிக்கடி அங்கே செல்வோம்.
    என் மாமியார் ரொம்ப ரொம்ப நல்லவர். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் - ஒருவரின் குறைகளை அடுத்தவரிடம் கூறி விமர்சிக்க கூடாது.
    என் கணவருக்கு ஒரு அக்கா, மூன்று அண்ணாக்கள், இரண்டு தம்பிகள். மருமகள்களிடம் சிறு சிறு குறைகள் இருப்பது எனக்கு தெரியும். ஆனாலும் ஒரு முறையேனும் அவர்களின் குறைகள் சொன்னதேயில்லை. அவர்களைப்பற்றி மிகவும் நன்றாகவே சொல்வார்கள். அப்படி ஒரு நல்ல குணம். எனக்கு அவர்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர்கள் இறந்து நீண்ட காலமாகிவிட்டது.


    இணைத்தமைக்கு மிகவும் நன்றி ஜெயந்தி .


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #7
    spv
    spv is offline Friends's of Penmai
    Real Name
    s. punithavathi
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    chennai
    Posts
    122

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    மாமியார்- அன்றாட பழகிய சமையல் தான் செய்வார்.எப்போதும் சிறிதும் பிசறாமல் மிகுந்த சுவையாக செய்வார்.எப்போதும் neatஆக வீட்டிலிருந்தாலும் இருப்பார்.அவரை hospitalயில் இருந்ந போது மட்டும் தான்(27 வருடங்களிள்) வாராத தலையுடனும்,சீர் செய்யாத முகத்துடனும் பார்த்திருக்கிறேன் .மாமனார் :-சிக்கனம்.கணக்கு எழுதி பாதுகாக்கும் பழக்கம். tag செய்தமைக்கு நன்றி

    Last edited by spv; 10th Mar 2016 at 02:27 PM.

  8. #8
    nithya mani's Avatar
    nithya mani is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    erode
    Posts
    240

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    This is a nice tag, i would like to share few things about my mother and father in laws,
    என் மாமியரைப்பற்றி நான் எப்போதும் நினைப்பது அன்னபூரணி என்றே. ஏனெனில் வீட்டிற்கு வருபவர்க்கெல்லாம் உணவு அளித்தே அனுப்புவர், சலித்துக்கொள்ளவே மாட்டார், அது யார் ஆயினும் சரி. எந்த உணவு பொருளையும் வீண் செய்ய மாட்டார்கள். என் மாமனார் குறிப்பறிந்து செயலாற்றுவார்.
    என் மாமனாரைப்பற்றி சொல்ல வேண்டுமெனில், நாங்கள் எந்த ஒரு நற்செயல் செய்யும் போதும் எங்களை உற்சாக படுத்துவார். நெகட்டிவாக சொல்லமாட்டார்.
    அவர்கள் இருவரும் அனைவரையும் கண்ணு என்று அடைமொழி கொடுத்தே அழைப்பர். அந்த சொல் அனைவரையும் கவர்ந்துவிடும். மொத்தத்தில் உறவுகளுக்கு மதிப்பளிப்பர், இந்த குணங்களே அவர்களை எல்லோரிடத்திலும் நன் மதிப்பை வாங்கித்தந்துவிடும்.
    இந்த குணநலன்களை என் குழந்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு.

    Last edited by nithya mani; 10th Mar 2016 at 02:46 PM.
    ramyaraj, kvsuresh, jv_66 and 4 others like this.

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்

    Nice discussion Jayanthy ka. Thanks for tagging.

    Enga MIL kita irunthu katthkitathu thevai illama tension aga kudathu nu. Sudden guests vantha naa udane tension aiduven munnadi but now I have learnt to tackle it.

    Enga FIL kita katthkitathu think & decide. Entha oru vishayama irunthalum nalla analyse panni mudivu eduka solluvaanga.

    And next my husband I learnt how to keep the home neat and clean from him I used to be a lasy bug but he likes perfection in everything. So ippa enga vittuku varavanga ellorum vitta neat aa vacchu irukkenga appadi nu sollum podhu perumaiya irukkum. All credit goes to my husband.

    Finally I have to mention my daughter also. I learnt how to be patient and tolerable from her. Mmm antha kalathula oru vittula ethana pullainga irunthalum super aa valathu vittanga Naanga oru pullai ya valarka ve Vadivelu slang la ippave kanna kattuthe But she is such a beautiful princess who gives a meaning to the lives of our 4

    Thanks for the thread Jayanthy ka


  10. #10
    Durgaramesh's Avatar
    Durgaramesh is offline Minister's of Penmai
    Real Name
    Durga Devi
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Puducherry
    Posts
    2,996

    Re: Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங&#

    Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்&am-images-1-.jpg Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்&am-images-2-.jpg Good Practices learnt from your In-Laws - புகுந்த வீட்டினரிடமிருந்து நீங்&am-images-3-.jpg

    முதலில் என் மாமனார் மிகவும் நல்லவர், பொறுமையானவர், மிகவும் அமைதியானவர். நேரம் தவறாமை அவரிடம் எனக்கு பிடித்தது. அதிலும் சுறுசுறுப்பு அதிகம். வேலைக்கு சென்று வந்ததும் வீட்டு வேளையும் பகிர்ந்து செய்யும் நல்ல குணம் உடையவர். ஆனால் இப்போழுது என் மாமனார் இல்லை ஆனால் அவருடைய நல்ல குணம் என் பிள்ளைகளுக்கு வர விரும்பிகிறேன்.

    அடுத்தது என் மாமியார் அவர்களை அப்படி சொல்வதை விட அம்மா என்றே சொல்லலாம். அவர்களுக்கு பெண் குழந்தை இல்லை மருகள்களை மகள்கள் போல் பாவிக்கும் குணம் . சேமிக்கும் பழக்கம் பிடிக்கும். தேவையில்லாத பொருட்களை வாங்க மாட்டார்கள் ஆனால் நான் அப்படியே எதிர்மறை நிறைய பொருள் வாங்குவேன். அடுத்தது அவர்களிடம் பிடித்தது சுத்தம் பாத்திரங்கள் புதிது போல் இருக்கும் இன்றைக்கும் வீட்டை வார வாரம் கழுவுவார்கள் துடைக்க மாட்டார்கள். என்னை ஒரு வேளையும் செய்ய விட மாட்டார்கள் .

    என் கொழுந்தனார் இரண்டு பேர் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள். இரண்டு பேரிடமும் சேமிக்கும் பழக்கம் மிகவும் பிடிக்கும். என் மாமனாருக்கு மூன்று மகன்கள் என் கணவர் தான் மூத்தவர் மூன்று பேறும் நிறைய பேச மாட்டார்கள் ஆனால் அப்படியொரு ஒற்றுமை, விட்டு கொடுக்காத குணம். மூன்று பேரும் எந்தவித கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் (Tea Totler) என்று சொல்வார்களே அது போல.

    அடுத்தது என் இரண்டு தங்கைகள் அதாவது கொழுந்தனாரின் மனைவிகள். ஒரு தங்கை மிகவும் பக்தியானவர் நல்ல குணம் உடையவள். கோலம் நன்றாக போடுவாள் வீட்டு வேளைக்கு அசர மாட்டார். மற்றொரு தங்கை துறுதுறுன்று பேசுவார் மனதில் எதுவும் வைத்து கொள்ள மாட்டார். எல்லோரிடமும் அன்பாக இருப்பாள்.

    இதுதான் எங்கள் மகிழ்ச்சியான குடும்பம்
    .

    Last edited by Durgaramesh; 10th Mar 2016 at 06:26 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter