Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree43Likes

my situation is confused please help me

Discussions on "my situation is confused please help me" in "In-Laws" forum.

  1. #11
    meenavan is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    New Jersey
    Posts
    1

    Re: my situation is confused please help me

    கொஞ்சம் ஆழ யோசித்த பின்னே இந்தக் கருத்தைப் பதிகிறேன். உண்மை உங்களின் நிலைமை உங்களைவிட வேறு யாருக்கும் புரியப்போவதில்லை. திருமணம் பண்ண பண வசதிகள் அதிகம் இல்லாத தந்தையில்லாத ஒரு குடும்பம். தம்பிகளைவேறு படிக்கவைக்க வேண்டும். வேறு ஒரு பெண்ணை மாமா மணமுடிப்பதற்க்கு பதிலாக நீங்கள் செல்வது..எல்லாமே நிச்சயமாக உங்களது கருத்துகளை நியாயப்படுத்துகிறது.

    இங்கே கருத்தெழுதும் எங்களைப்போன்றவர்கள் கைகொடுக்கப்போகிறாமா? தெரியாது.....இவ்வளவும் யோசித்துவிட்டு உங்களை அக்கா கணவனை மணந்து கொள்ளச் சொல்லலாம் என்று எழுதலாம் என்றுதான் இருந்தேன். நினைக்க மறந்த ஒன்றை நினைத்தபோது எல்லாமே மாறியது. ஒரு பேச்சுக்கு இப்படிவைப்போம்..

    உங்கள் அக்கா கணவருக்கு ஆண்மைக்குறைவு. உங்கள் அக்காவுடன் தாம்பத்யம் கொள்ள முடியாது. உங்கள் அக்கா உங்களின் அத்தானின் மனைவியாக இருந்து கொண்டே உங்கள் அத்தானின் தம்பியையோ அண்ணனையோ உடலுறவுக்காகவோ இல்லை குழந்தை வேண்டியோ உங்கள் அக்கா திருமணம் செய்வதிலோ இல்லை வேறுவிதமான உறவுகள் வைத்துக்கொள்வதிலோ உங்களுக்கு சம்மதமா? உங்கள் அத்தானுக்கு சம்மதமா? இல்லை உங்கள் அக்காவுக்குத்தான் சம்மதமா? சொல்லுங்கள்."சீ" என்று தோன்றுகிறதல்லவா? ஏன் அதையே ஒரு ஆண் செய்தால் அது "சீ" இல்லையா? ஒரு ஆணின் இடத்தில் பெண்ணை வைத்து யோசியுங்கள்.பெண்களை யாரம்மா அடிமைப்படுத்துகிறார்கள்? ஆண்களா? பெண்களும்தானே...இல்லையா? ஒரு நிமிடம் நன்றாக நினைத்துப்பாருங்கள். ஒரு பொருளாதார அடிப்படைக்காக மட்டும் ஒருவரைச் சார்ந்து வாழ முடிவெடுத்து உங்கள் படிப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் நீங்கள் சொல்லும் பதில் இதுதானா? எத்தனையோ ஆண்கள் உடலுறவு கொள்ள இயலாத குறையுடன் வாழ்கிறார்கள்.விவாகரத்தாகியிருக்கிறார்கள்.அவர்களில் ஒருவரை உங்கள் அக்கா மணமுடிக்கலாம்.
    உங்களின் தம்பியின் படிப்புச் செலவு என்ன என்று ஒரு கணக்குப் போடுங்கள். அதற்கு வேறு எந்த வகையில் உதவிதேடலாம் என்று பாருங்கள். உங்கள் அக்கா இன்னொரு குடும்பத்திற்கு வேலைக்காரியாக வாழ்க்கை நடத்துவதற்ககுப் பதில் உங்கள் குடும்பத்திற்குள் மீண்டும் வரட்டும். உங்களின் கல்வியை சரியாக உபயோகப்படுத்தி சரியான வேலை தேடுங்கள். உங்கள் அக்காவிற்கு நான் சொன்ன ரீதியில் மாப்பிள்ளை பாருங்கள். இதையெல்லாம் செய்யுமுன் அவரது குறை செக்ஸைப் பாதிக்காது என்பதை அவரை உணரவையுங்கள்.அது சரியாகும் பட்சத்தில் மேற்சொன்ன எந்த ஆலோசனைகளுமே தேவையில்லாமல் எல்லாமே நார்மலாக நடக்கும் வாய்ப்புகள் அதிகம். கடந்த இரண்டு வருடமாகத்தானே அவருக்கு இந்த பிரச்னை அதன் முன்பு மூன்று வருடவாழ்வில் ஏன் குழந்தைகள் இல்லை. உங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை உங்கள் அக்காவின் வாழ்க்கையில் ஒருகாலும் இடைபடவிடாதீகள். நடு நிலைமையில் யோசியுங்கள். உங்கள் தம்பி என்ன படிக்கிறார்? என்ற விபரங்கள் எழுதுங்கள். ஒன்று மறவாதீர்கள் உங்கள் உங்களின் இன்றைய சிறிய பிரச்னைகளை தீர்க்க நீங்கள் எடுக்கும் முடிவில் நாளைய பெரிய பிரச்னைகளை மறந்துவிடாதீர்கள்.

    பிரச்னைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா வேகமாக :

    அக்காவின் உடல் நிலை - மருத்துவ மற்றும் மனம் சம்பந்தப்பட்டது,குறைகளில்லை என்பதுதான் எனது எண்ணம்.
    தம்பியின் கல்வி - பல வழிகள் உள்ளன.
    உங்களின் திருமணம் - உங்கள் கையில்.
    திருமணத்திற்கு பின் சம்பளம் வீட்டிற்கு கொடுக்க - எவ்வளவு கொடுக்கவேண்டும்என்று நிர்ணயம் செய்யுங்கள். உங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயலுங்கள்.
    இப்போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள். எவ்வளவு மதிப்பெண் எடுத்தீர்கள் விபரங்கள் சொல்லுங்கள்.. பின்னால் வழிகளை ஆராய்வோம்.

    நட்புடன் மீனவன்

    Sponsored Links

  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: my situation is confused please help me

    Quote Originally Posted by meenavan View Post

    Miga miga nalla padhivu. Arputhamaaga solli irukinga.

    oru aanmaganaaga irundhu kondu ippadipatta padhivai solli irupadhu migavum varaverka thakkadhu.

    Ungal karuthukkalai matra thread galilum aavaludan ethirpaarkirom. Vaazhthukkal. Indha karuthai, thozhi kandippaga yetrukondu seyal paduvaar endru nambuvom.

    sumathisrini likes this.
    Jayanthy

loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter